பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
நாள் :27.01 . 2020. திங்கட்கிழமை .
🌸திருக்குறள் : அதிகாரம்: புறங்கூறாமை .
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்னின்று பின்நோக்காச் சொல். 🌸பொருள்:
🌻🌻🌻🌻🌻
நேருக்கு நேராக ஒருவரது குறைகளைக் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம், ஆனால் பின் விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் நேரில் இல்லாத ஒருவரைப் பற்றி குறை கூறுவது தவறு.
🌸 பொதுஅறிவு:
🌻🌻🌻🌻🌻🌻🌻
1. வைரம் பிரகாசமாக ஒளிரக் காரணம்?
விடை : உயர்ந்த ஒளிவிலகலெண் மற்றும் குறைந்த மாறுநிலை கோணம்.
2. மிகப்பெரிய இந்திய மாநிலம்?
விடை : மத்திய பிரதேசம்.
3. இந்தியாவில் மகாத்மா காந்தியின் முதல் சத்தியாகிரகம் எங்கு நடந்தது?
விடை : அகமதாபாத்.
4. காக்கைகள் இல்லாத நாடு எது?
விடை : நியூஸிலாந்து
5 . சணல் அதிகம் ஏற்றுமதி விளைவிக்கும் மாநிலம் எது ?
விடை : மேற்கு வங்காளம் .
பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🌸 Honour thy father and mother.
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.
🌸 A broken apothecary a new doctor.
ஆயிரம் பெயரைக்கொன்றவன் அரை வைத்தியன்.
இரண்டொழுக்கப் பண்பாடு:
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🌸 முயற்சியும் தொடர்ச்சியான பயிற்சியும் மட்டுமே வெற்றிக்கு வழி வகுக்கும் என்பதை நான் அறிவேன். 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் எனது வேலைகளில் முயற்சியும் தொடர்ச்சியான பயிற்சி எடுத்து வெற்றி பெறுவேன்.
நீதிக்கதை :
🌼🌼🌼🌼🌼
ஒரு நாட்டு ராஜாவிடம் முத்தன் வேலை செய்து வந்தான். அந்த ராஜாவுக்கு மிருகங்கள் பறவைகள் பேசும் பாஷை தெரியும். முத்தனுக்கு ஒரேய ஆச்சரியம், எப்படி ராஜா விலங்குகள் பேசுவதை அறிந்து கொள்கிறார் என்பது அவனுக்கு வியப்பாக இருந்தது, முத்தன் தான் அந்த ராஜாவுக்கு தினமும் உணவு கொண்டு கொடுப்பான். ராஜாவின் உணவில் ஒரு பகுதி மட்டும் தனியாக தனிப் பெட்டியில் ராணியே சமைத்துத் தருவாள்.
ஒரு நாள் முத்தன் அந்தப் பெட்டியைத் திறந்து பார்த்தான். அந்த பெட்டிக்குள் ஏதோ துண்டு தூண்களாக சமைத்து வைக்கப்பட்டிருந்தன. இது என்னவாக இருக்கும் என்று ஒரு துண்டை எடுத்து சாப்பிட்டுப் பார்க்கிறான். அதைச் சாப்பிட்டதும் முத்தனுக்கு பறவை மிருகங்களின் பேசும் பாஷை புரிய ஆரம்பிக்கிறது. புதிய சக்தி கிடைத்ததும் அவன் அரண்மனையில் இருந்து அப்படியே புறப்பட்டு கிளம்பி விடுகிறான்.
அவன் குதிரையில் கிளம்பிச் செல்லும் வழியில் எறும்புகள் சாரை சாரையாக போவதை பார்த்தான், எறும்பின் தலைவன் இவனிடம் குதிரையை எறும்புகளை மிதிக்காத வண்ணம் செலுத்தும் படி வேண்டிக் கொண்டது. அவனும் அப்படியே செய்தான். எறும்புகள் நன்றி தெரிவித்து, என்றேனும் உங்களுக்கு உதவுவேன் என்று கூறியது.
அடுத்து, அவன் செல்லும் வழியில் குளம் இருந்தது அங்கு மூன்று மீன்கள் அழும் குரல் கேட்டது. அவை புதருக்குள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தன. குளத்தில் தாவிக் குதிக்கும் போது அவை தவறிப் புதரில் விழுந்திருந்தன.
அத்தனையும் காப்பாற்றி தண்ணீருக்குள் மீண்டும் எடுத்துவிட்டு கிளம்பினான். மீன்களும் நன்றி தெரிவித்தது.
அவன் கொஞ்ச தூரம் ஒரு காட்டைத் தாண்டிப் போய்க் கொண்டிருந்தான். சின்னஞ்சிறு காகங்களின் குரல் கேட்டது. தாய் காக்கை அவைகளிடம் “நீங்களே உங்கள் உணவைத் தேடிக் கொள்ளுங்கள் ” என்று கூறி மரத்தில் இருந்து கீழே தள்ளி விட்டிருந்தது. அவைகளுக்கு தானியங்களை உணவாக கொடுத்துவிட்டு கிளம்பினான். அவை மிகுந்த மகிழ்ச்சியுடன் நன்றி கூறின.
அதன் பின் காட்டைக் கடந்து அவன் வேறு ஒரு நாட்டுக்குள் நுழைந்தான். ஊரே கோலாகலமாக இருந்தது.
அந்த நாட்டு இளவரசி தன் கணவனைத் தேர்ந்தெடுக்கும் சுயம்வரம் நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தாள். வேலைக்காரனுக்கு ஆசை, எப்படியும் இந்தப்போட்டியில் கலந்துகொண்டு நாம் இந்த நாட்டின் அரசனாக வேண்டும் என ஆசைப்பட்டான்.
போட்டியில் கலந்து கொண்டான். போட்டியில் வெற்றி பெறவில்லை என்றால் சிறையில் தள்ளிவிடுவார்கள்.
போட்டி ஆரம்பம் ஆனது, அவனை ஒரு குளத்திற்குக் கூட்டிப் போனார்கள். குளத்திற்குள் ஒரு மோதிரத்தை போட்டு அதனை எடுக்க வேண்டும் என கட்டளையிட்டார்கள் . அவன் பயந்து மலைத்து நின்றான்.
குளத்திற்குள் நீந்த ஆரம்பித்த அவனுக்கு ஆச்சரியம்....! “இதோ உங்கள் மோதிரம்” என்று ஒரு குரல் கேட்டது. ஒரு மீன் தன் வாயில் மோதிரத்தைக் கவ்விக்கொண்டு வந்திருந்தது. அது அவன் புதலிருந்து காப்பாற்றிய மீன்.
இளவரசி அடுத்த போட்டி வைத்தாள். ஒரு மூட்டை அரிசி முழுவதும் தோட்டத்தில் கொட்டப்பட்டு விடிவதற்குள் ஒரு அரிசி விடாமல் சேகரிக்க வேண்டும். ஆகா இது நடக்கவே நடக்காது நமக்கு சிறை தான் என்று முடிவு செய்து அவன் தூங்கி விட்டான். அவன் உதவி இருந்த எறும்புகள் ஒவொன்றாக பொருக்கி ஒரு மூட்டையில் வைத்திருந்தது. அதனால் அதிலும் ஜெயித்து விட்டான்.
இறுதியான போட்டி ஒரு தங்க ஆப்பிள் காய்க்கும் மரம் காட்டில் இருக்கிறது- அதைக் கண்டுபிடித்து ஆப்பிளை எடுத்து வர வேண்டும்.
அவன் இருட்டும் வரை தேடினான் பசுமை மரங்கள் மட்டுமே இருந்தன. தங்க மரத்தைக் காணவே இல்லை. கவலையுடன் இருட்டியபிறகு தூங்கிவிட்டான். காலையில் எழுந்து பார்க்கிறான் அவன் அருகில் தங்க ஆப்பிள் இருந்தது. அவனிடம் உதவி பெற்ற காகங்கள் அந்த ஆப்பிளைத் தேடிக் கொண்டு வந்து அவனிடம் போட்டிருந்தன. அவன் அவைகளுக்கு நன்றி தெரிவித்தான்.
எல்லா போட்டியிலும் ஜெயித்ததால் அவனை இளவரசி மணந்து கொண்டாள். அவன் ராஜாவாக அவளுடன் அந்த நாட்டை மகிழ்ச்சியுடன் வெகு நாள் ஆட்சி செய்தான்.
நாம் செய்த உதவி வீணாகாது. அது நமக்கு ஏதாவதொரு வகையில் எப்போதாவது பயன்தரும். நாம் யாரேனும் ஒருவருக்கு உதவி செய்துவிட்டு மறந்து விட்டாலும்கூட அது பின்னொருநாளில் நமக்கு யார் வாயிலாகவாவது கிடைக்கும்.
‘‘செஞ்ச உதவியும் இட்டுவைத்த விதையும் வீணாகப்போகாது’’
மிக மிக அவசியமான நேரத்தில் செய்யப் படும் உதவி இந்த உலகை விட மிகப் பெரியது.
இன்றைய முக்கிய செய்திகள் :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🌸 இந்தியாவின் பன்முகத் தன்மையை பறைசாற்றும் வகையில் டெல்லியில் குடியரசு தின விழா கோலாகல கொண்டாட்டம். பிரம்மாண்டமான வாகன வகுப்புகள். ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய கொடிக்கு மரியாதை.
🌸 மறைந்த யாகேஷ் மற்றும் நண்பர்களுக்கு வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம் முதல்வர் பழனிசாமி வழங்கினார் .
🌸 திமுக முதன்மைச் செயலாளராக கே என் நேரு நியமனம்.
🌸 திருச்சி உள்பட 6 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிகள் தொடக்கம் என தெற்கு ரயில்வே பொதுமேலாளர் அறிவிப்பு.
🌸 பார்சல் வேனில் குரூப்-4 விடைத்தாள்கள் திருத்தம் . டிஎன்பிஎஸ்சி ஊழியர் கைது.
🌸 கோயில் குடமுழுக்கு விழாவுக்காக நிலத்தை சீர் படுத்திய போது திருச்சி அருகே இரண்டு பழங்கால கற்சிலைகள் கண்டுபிடிப்பு.
🌸 துறையூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒரே நாளில் ரூ 1.03 கோடிக்கு விற்பனை.
🌸 ஓய்வூதிய பலன் தாமதத்துக்கு 12 சதவீத வட்டி வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவு.
🌸 இந்தியா இ - காமர்ஸ் துறையை தவறாக புரிந்து இருக்கிறது என இங்கிலாந்து இந்தியா பிசினஸ் கவுன்சில் கருத்து.
🌸 நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி அரை சதம் விளாசினார் கே எல் ராகுல்
Today English news:
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🌸 India showcases A - SAT missile prowess.chinook heavy lift and Apache helicopters Make their debut during the Republic Day fly past.
🌸 Villages use grama sabha to oppose hydrocarbon INO projects.They fear the ventures will affect fertility of their land.
🌸 TNPSC scam accused remarked scripts any moving vehicle and replaced them.
🌸 PNR advocate general stumbles upon his office history dating back 1828.
🌸 Toll plaza in chengalpattu vandalised after altercation. Dispute between plaza staff and government bus crew.
🌸 Insurgency in northeast down, says PM. Singing of Bru - reang agreement is one of the biggest achievements of my government
🌸 Rahul and Shreyas call the shots after bowlers super show. Jadeja bumarh and shami impress ; New Zealand putss up an insipid performance to fall short of par core ; India cruises to a 2-0 lead in five match series.
இனிய காலை வணக்கம் ....✍
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
R. MANIKANDAN. BT ASST IN TAMIL.
இரா மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
வலையூர்
திருச்சிராப்பள்ளி மாவட்டம்-621005
அலைபேசி எண்: 9789334642 .

No comments:
Post a Comment