Tuesday, January 28, 2020

                                                  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
நாள் : 29.01 . 2020.  புதன்கிழமை  .
  திருக்குறள்: அதிகாரம்:   கல்வி. 
உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்.                                                                                                                                                                                                                                                   
🌸பொருள்:
         செல்வர் முன் வரியவர் நிற்பதுபோல் (கற்றவர் முன்) ஏங்கித் தாழ்ந்து நின்றும் கல்வி கற்றவரே உயர்ந்தவர். கல்லாதவர் இழிந்தவர்.
🌸 பொதுஅறிவு:
1. அரசியலமைப்பின் ஆன்மா மற்றும் இதயம் என வர்ணிக்கப்படும் உரிமை ?
விடை  : அரசியல் பரிகார உரிமை .
2.  சராசரியாக ஒரு நாளைக்கு மனிதனுக்கு தேவையான கலோரி அளவு?
விடை : 2800 கலோரி . 
3. எவரால் நாளந்தா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது?
விடை  : குமார குப்தர் .
4. விரைவு தபால்(speed post) அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு?
விடை   : 1986.
5 .கருட சக்தி III எனப்படும் ராணுவ பயிற்சி இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையே நடைபெற்றது?
விடை    :     இந்தோனேஷியா.
பழமொழிகள் (proverbs) :
1. Desire is the root of all evil.
🌸 ஆசையே எல்லாத் தீங்கிற்கும் காரணம்.
2. Do good and have good.
🌸 நன்மை செய்து நன்மை பெற வேண்டும் . 
இரண்டொழுக்கப் பண்பாடு:
🌸 கல்வி, கேள்வி இரண்டுமே மனிதனை உயர்த்தும் கருவிகள் என்பதை நான் அறிவேன்.                                                               🌸    எனவே நான் எனது கல்வியை தானாகவும் , அறிவுசார் சான்றோர்களின் கற்பித்தலை கேட்டல் மூலமும் வளர்த்துக் கொள்வேன் .
நீதிக்கதை:
**************
தலைக்கனம் பிடித்த ஒரு பண்டிதர் இருந்தார். அடர்த்தியான புருவம் , பெரிய மீசை , அடிக்கடி மொட்டை போட்டுக் கொள்ளுவதால் ஈர்க்குச்சி போல் காணப்படும் முடிகளுடன் கூடிய தலை. இதுவே அவரது அடையாளம் .
வீதியில் அவரைக் கண்டுவிட்டாலே மக்கள் ஓடி ஒளிந்து கொள்வார்கள். ஏனென்றால் கண்ணில் படும் யாராயிருந்தாலும் ஏதாவது கேள்வி கேட்டு மடக்கித் தமது வாதத்திறமையால் மட்டந்தட்டிவிடுவார். இதில் சிலர் அழுதுவிடுவது கூட உண்டு.
ஒரு நாள் அவருக்கு மட்டந்தட்ட யாருமே கிடைக்கவில்லை. ஊர் எல்லை வரை வந்து விட்டார். அங்கே ஒரு மரத்தடியில் தொழில் செய்து கொண்டிருந்த ஒரு நாவிதரைப் பார்த்து விட்டார்.
அவரது உடைகள் நைந்து போய் அவரது வறுமையைக் காட்டினாலும், அதை அவர் சுத்தமாய்த் துவைத்து , நேர்த்தியாய் உடுத்தியிருந்த விதம் அவருக்கு ஒரு தனி கம்பீரத்தைக் கொடுத்தது. இது பண்டிதருக்கு எரிச்சலை மூட்டியது. இன்று இந்த மனிதனைக் கதறி அழவைத்தே ஆகவேண்டுமென்று முடிவெடுத்து அவரது கடையை நெருங்கினார்.
" என்னப்பா ! முடி வெட்ட எவ்வளவு ? சவரம் பண்ண எவ்வளவு ?" என்றார். அவரும் "முடிவெட்ட நாலணா , சவரம் பண்ண ஒரணா
சாமி ! " என்று பணிவுடன் கூறினார். பண்டிதர் சிரித்தபடியே ,
"அப்படின்னா என் தலையை சவரம் பண்ணு " என்று கூறிவிட்டு வெற்றிப் புன்னகையோடு அமர்ந்தார் .
வயதில் பெரியவர் என்பதால் நாவிதர் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை . வேலையை ஆரம்பித்தார் .
பண்டிதருக்கு சற்று ஏமாற்றந்தான். நாவிதர் கோபப்படுவார் என்று எதிர்பார்த்திருந்தார். அவர் அமைதியாக இருக்கவே அடுத்த கணையைத் தொடுத்தார் .
" ஏன்டாப்பா ! உன் வேலை முடி வெட்டுறது . உன் கைகளைத்தான் பயன்படுத்தி வெட்டுறே. அப்புறம் எதுக்கு சம்மந்தமில்லாம உன்னை நாக்கோட சம்மந்தப் படுத்தி நாவிதன்னு சொல்றாங்க ? " இந்தக் கேள்வி அவரை நோகடிக்குமென்று நம்பினார். ஆனால் நாவிதர் முகத்திலோ புன்னகை.
"நல்ல சந்தேகங்க சாமி . நாங்க தொழில் செஞ்சா மாத்திரம் பத்தாது. முன்னால உக்காந்து இருக்கறவங்களுக்கு அலுப்புத் தட்டாம இருக்க நாவால இதமா நாலு வார்த்தை பேசுறதனாலதான் நாங்க நாவிதர்கள். எங்க பேச்சைக் கேக்குறதுக்குன்னே எத்தனை பேர் எங்களைத் தேடி வராங்க தெரியுமா? "
இந்த அழகான பதில் பண்டிதரை மேலும் கடுப்பேற்றியது. அடுத்த முயற்சியைத் துவங்கினார் .
" இதென்னப்பா , கத்தரிக் கோல்னு சொல்றீங்க. கத்தரி மட்டுந்தானே இருக்கு . கோல் எங்கே போச்சு ?''
இந்தக் கேள்விக்கு பலமான சிரிப்பு மட்டுந்தான் பதிலாக வந்தது.
"சாமி ரொம்ப சிரிப்பா பேசுறிங்க " என்று சொல்லி நிறுத்திக் கொண்டார் .
இதிலும் பண்டிதருக்கு ஏமாற்றம் . கொஞ்சம் கடுமையாகவே ஆரம்பித்தார் .
" எப்பப் பாத்தாலும் வெட்டித் தள்ளிக்கிட்டே இருக்குற . ஊர்லயே நீ தான் பெரிய வெட்டிப் பய போலருக்கு " .
இந்த வார்த்தை நாவிதர் மனதைக் கொஞ்சம் காயப்படுத்திவிட்டது . அவர் முகத்தில் கொஞ்சம் வித்தியாசம் .
இதைத்தானே பண்டிதரும் எதிர்பார்த்தார். கொஞ்சம் உற்சாகமாகி அடுத்த நக்கலை யோசித்துக் கொண்டிருந்தார்.
இப்போது நாவிதர் பேச ஆரம்பித்தார். பண்டிதரின் பிரியமான மீசையைத் தொட்டுக் காட்டிக் கேட்டார் ,
"சாமிக்கு இந்த மீசை வேணுங்களா?"
பண்டிதர் உடனே ஆமாம் என்றார்.
கண்ணிமைக்கும் நேரத்தில் பண்டிதரின் மீசையை வழித்தெடுத்து அவர் கையில் கொடுத்தார்.
"மீசை வேணுமுன்னிங்களே சாமி. இந்தாங்க " . பல வருடங்கள் ஆசையாய் வளர்த்த மீசை இப்போது வெறும் மயிர்க் கற்றையாய். அதிர்ச்சியில் உறைந்து போனார்.
நாவிதரோ அடுத்த நடவடிக்கையில் இறங்கினார் . அவரது அடர்த்தியான புருவத்தில் கை வைத்தபடிக் கேட்டார்,
"சாமிக்கு இந்தப் புருவம் வேணுங்களா ?"
இப்போது பண்டிதர் சுதாரித்தார்.
"வேணும்னு சொன்னா வெட்டிக் கையிலல்ல குடுத்துடுவான் " . உடனே சொன்னார்.
"இந்தப் புருவம் எனக்கு வேண்டாம் . வேண்டவே வேண்டாம்".
நாவிதர் உடனே பண்டிதரின் புருவங்களையும் வழித் தெடுத்தார் .
"சாமிதான் புருவம் வேண்டாம்னு சொன்னீங்கள்ல? அதைக் குப்பைல போட்டுடுறேன். சாமி பேச்சுக்கு மறுபேச்சே கிடையாது ". என்றபடி கண்ணாடி அவர் முகத்துக்கு முன்பாகக் காட்டினார்.
நாற்பது வருஷமாய் ஆசை ஆசையாய் வளர்த்த மீசையில்லாமல் , முகத்துக்கு கம்பீரம் சேர்த்த அடர்த்தியான புருவமும் இல்லாமல் , அவருடைய முகம் அவருக்கே மிகுந்த கோரமாக இருந்தது.
கண்கள் கலங்கக் குனிந்த தலை நிமிராமல் ஒரணாவை அவர் கையில் கொடுத்து விட்டு நடையைக் கட்டினார்.
செல்லமே! நம்முடைய அறிவும் திறமையும் மற்றவர்களுக்கு உதவுவதற்கே தவிர மட்டம் தட்ட அல்ல. இதை உணராதவர்கள் இப்படித்தான் அவமானப்பட நேரும்.

இன்றைய முக்கிய செய்திகள் :
🌸  பாகிஸ்தானை வீழ்த்த 10 நாள்களே போதும் என பிரதமர் நரேந்திர மோடி கருத்து.
🌸 அரசு மருத்துவமனைகளில் ரூ 52 கோடியில் கதிரியக்க சிகிச்சை மையங்கள் முதல்வர் எடப்பாடி கே.  பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.
🌸 கடவுச் சீட்டை புதுப்பிக்க குறுஞ்செய்தி வசதி.
🌸 சாலை ஆய்வாளர் பணி விண்ணப்பங்கள் வரவேற்பு.
🌸 அரியலூர் , கள்ளக்குறிச்சியில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள். பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் பழனிசாமி நன்றி. ஓரிரு வாரங்களில் அடிக்கல் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்.
🌸 ஊரக உள்ளாட்சித் தேர்தல்வாக்கு எண்ணிக்கை கேமராப் பதிவுகள் பாதுகாப்பாக உள்ளன என தேர்தல் ஆணையம் தகவல்.
🌸 குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கு: மேலும் இரு தேர்வர்கள் கைது.
🌸 மோட்டார் வாகன ஆய்வாளர் நேர்முகத் தேர்வு : டிஎன்பிஎஸ்சி பட்டியல் ரத்து.
🌸 தஞ்சை பெரிய கோயிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு உயர்நீதிமன்றத்தில் அறநிலையத் துறை தகவல்.
🌸 மத்திய பட்ஜெட் தயாரிப்பில் 5 உயரதிகாரிகள்.
🌸 புதிதாக விண்ணப்பித்த 90 ஆயிரம் பேருக்கு புதிய குடும்ப அட்டை வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தகவல்.
🌸 கரோனா வைரஸ் : 100 - ஐ தாண்டியது பலி எண்ணிக்கை.
🌸 அமெரிக்காவுக்கான இந்திய தூதராக தரன்ஜித் சிங் நியமனம்.
🌸 மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்.
🌸 ஹாமில்ட்டனில் இன்று மூன்றாவது டி-20 ஆட்டம் தொடரை கைப்பற்றி சாதனை படைக்கும் முனைப்பில் இந்தியா. நெருக்கடியில் வில்லியம்சன் குழுவினர்.
🌸 ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் ஜோகோவிச் - பெடரர் மோதல்.
🌸 19 வயதுக்குட்பட்டோர் உலககோப்பை அரையிறுதியில் இந்தியா.



TODAY'S ENGLISH NEWS:
🌸 NPR in new format can create confusion : Nitish. Bihar CM reiterates that state will not implement NRC.
🌸 CA is meant to correct historical injustices : Modi. PM slams critics for spreading rumours.
🌸 Block level teachers' meetings under way  in Trichy district. Exercise being held ahead of
public exams for levels 5th 8th.
🌸 'Temple event will be held in Tamil, Sanskrit'  HR & CE department in forms court.
🌸 Passport holders to receive SMS alert before expiry date.
🌸 'one nation holding up SAARC'Pakistan use of terror as a foreign policy tool has promoted radicalism : Rajnath.
🌸 India looks to seal first T20 I series win in New Zealand. Kiwis will be relying on their healthy record at Hamilton.
🌸 Tyagi's spell takes India to the semifinals.Jaiswal atharva and Aakash chip in to  help defeat Australia convincingly  U - 19 world cup .
🌸 Tennis looks on in awe as Federer does a Houdini.



🌸இனிய காலை வணக்கம் ....✍        
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
வலையூர்
திருச்சிராப்பள்ளி மாவட்டம்-621005
அலைபேசி எண்: 9789334642 .                                       




No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...