Monday, January 20, 2020

                         பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
நாள் : 21.01 . 2020செவ்வாய்க்கிழமை .
🌸திருக்குறள் : அதிகாரம்:   காலமறிதல் .
ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின்.                                                                                                                                       🌸பொருள்:
   ( செயலை முடிப்பதற்கு ஏற்ற)காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால் உலகமே வேண்டும் எனக் கருதினாலும் கைகூடும்.
🌸 பொதுஅறிவு:
1. கடிகார ஊசலின் இயக்கம் என்பது ?
விடை  :    கால ஒழுங்கு மாற்றம்.
2.  மனித உடலில் இருந்து வெளியேறும் சிறுநீரின் சராசரி அளவு?
விடை  :  1.5 லிட்டர். 
3. ஒரு சதுரப் பொருளின் புவியீர்ப்பு மையம் எங்கு காணப்படும்?
விடை  :  மூலைவிட்டங்கள் ஒன்றையொன்று சந்திக்கும் புள்ளி.
4. ராஜ்ய சபா உறுப்பினர்களின் எண்ணிக்கை?
விடை   : 250
5 . ஒரு ஒளியாண்டு என்பது?
விடை    : 9.46 ×10 .12 கி.மீ .
பழமொழிகள் (proverbs) :
1. Little strokes fell great oaks
🌸 அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் ன .
2. Look before you leap ..
🌸 ஆழம் தெரியாமல் காலை விடாதே  .
இரண்டொழுக்கப் பண்பாடு:
🌸         பொறுமையும் பணிவும் நன்மதிப்பை உண்டாக்கும் என்பதை நான் அறிவேன்.                                                  🌸 எனவே நான் ஒவ்வொருவரிடமும் எப்பொழுதும்  பொறுமையாகவும் பணிவாகவும் நடந்து கொள்வேன்.பொறுமைக்கும் பணிவுக்கு எடுத்துக்காட்டாய் பிறர் போற்றும் வகையில் நடந்து கொள்வேன்.
 நீதிக்கதை :
கடலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் செருப்பு காணாமல் போய்விட்டது. அவன் உடனே கடற்கரையில், “இந்தக் கடல் மாபெரும் திருடன்...!” என எழுதிவிட்டான்.
கொஞ்சம் தூரத்தில் ஒருவர் அதிகமாக மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அவர் நினைத்ததை விடவும் அதிகமாக மீன்கள் வளையில் சிக்கின. அவர் அக்கடற் கரையில், “இக்கடல் பெரும் கொடையாளியப்பா...!” என எழுதிவிட்டார்.
அதே கடலில் ஒருவன் நீந்தச் சென்று மூழ்கிவிட்டான். மகன் மீது அதிக பிரியமுடன் இருந்த அவன் தாய் இக்கடல் மக்களை கொன்று குவிக்கின்றதே...!” என கரையில் எழுதினாள்.
ஓர் வயது முதிர்ந்த மனிதர் கடலுக்குச் சென்று முத்துக்களை வேட்டையாடிக்கொண்டு வந்தார். அவர் மிக்க மகிழ்ச்சியோடு அக்கரையில், “இந்தக் கடல் ஒன்றே போதும். நான் ஆயுள் முழுக்க மகிழ்ச்சியோடு இருக்கலாம்...!” என எழுதினார்.
பின்னர் ஓர் பெரும் அலை வந்து இவர்கள் அனைவரும் எழுதியவற்றை அழித்துவிட்டுச் சென்றது.
பிறர் கூறுவதை காதில் வாங்கிக் கொள்ளாதே.
இவ்வுலகை ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் பார்க்கின்றனர்.
உன் நட்பும், சகோதரத்துவமும் நிலைக்க வேண்டுமானால் நீ பிறரின் தவறுகளை உன் மனதிலிருந்து அழித்துவிடு. தவறுக்காக உன் நட்பையோ, சகோதரத்துவத்தையோ
அழித்துவிடாதே.
நீ ஓர் கெடுதியை சந்திக்க நேர்ந்தால் அதை விடவும் பலமாக அதற்கு பதிலடி கொடுக்க வேண்டுமென ஒரு போதும் எண்ணாதே.
சிறிது சிந்தித்து, நலினமாக அதை கையாளு.

இன்றைய முக்கிய செய்திகள் :

🌸  ஹைட்ரோ கார்பன் திட்டம் பிரதமருக்கு முதல்வர் கடிதம். தூத்துக்குடியில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தமிழக அமைச்சரவை ஒப்புதல்.
🌸   திருவள்ளுவர் திருநாள், சித்திரை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு 45  தமிழ் அறிஞர்களுக்கு விருதுகள். முதல்வர் பழனிசாமி வழங்கி கவுரவித்தார்.
🌸   பாஜக தேசியத் தலைவராக ஜே.பி . நட்டா போட்டியின்றி தேர்வு. பிரதமர் மோடி அமைச்சர் அமித்ஷா வாழ்த்து.
🌸  தோல்விகளில் இருந்து மாணவர்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தேர்வுகள் மட்டுமே வாழ்க்கை அல்ல என பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை.
🌸   பிரதமரின் கலந்துரையாடல் மிகுந்த தன்னம்பிக்கையை அளித்தது என பள்ளிகளில் பார்த்து ரசித்த மாணவர்கள் கருத்து.
🌸   தேர்வு வாரியத்தால் புதிதாக 2000 அரசு மருத்துவர்களை நியமிக்க திட்டம்.
🌸   சிபிஎஸ்சி 10 12ம் வகுப்பு பொதுத்தேர்வு : தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகள்  வெளியீடு.
🌸   நாட்டுடமையாக்கப்பட்ட ஏழுபேரின் நூல்களுக்கு தலா ரூ 5 லட்சம் முதல்வர் பழனிசாமி வழங்கினார் .
🌸   மூன்று தலைநகரங்கள் ஆந்திர சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்.
🌸   இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 4.8 சதவீதமாக இருக்கும் மதிப்பீட்டை குறைத்தது ஐ எம் எஃப்.
🌸   தமிழக அரசின் இலவச பயிற்சி வகுப்புகள் முறையாக நடத்தப்படாததால் நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பாதிக்கப்படும். மருத்துவப் படிப்பும் எட்டாக்கனியாகி விடும் என ஆசிரியர்கள் வேதனை.
🌸   வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைக்கு  நடவடிக்கை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.
🌸   தஞ்சாவூர் விமானப்படை தளத்தில் 'சுகோய் 30' படைப்பிரிவு தொடக்கம் முப்படை தளபதி பிபின் ராவத் தொடங்கி வைத்தார்.
🌸   ரஞ்சிக் கோப்பை இரண்டாவது நாளிலேயே தமிழகம் அபார வெற்றி.
🌸  பிபிஎல் - 5 சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் அணி அபாரம்.




Today English news:  
🌸  Supreme court declines to stay poll bond scheme . It is being used to fill the coffers of ruling party: petitioners.
🌸   IMF lowers India's growth forecast 4.8 % slowdown to impact global economy .
🌸   Tamil Nadu opposes amendment exempting hydrocarbon project from consultations. CM writes to PM.Environment minister seeking Restoration of status  quo ante .
🌸   Plea in SC against welfare schemes for minorities. Government cannot promote minorism.
🌸  VAOs  challenge court order on grievance cell .
🌸  TNSEC   to take decisions on poles within a week

 🌸   AP assembly clears bills for three capitals .
🌸   Rahul has sealed his spot as a wicketkeeper -  batsman.

இனிய காலை வணக்கம் ....✍     
இரா மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
வலையூர்
திருச்சிராப்பள்ளி மாவட்டம்-621005
அலைபேசி எண்: 9789334642 .                                       



No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...