பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்.
நாள் : 31.01 . 2020. வெள்ளிக்கிழமை.
திருக்குறள்: அதிகாரம்: பண்புடைமை.
அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண் பில்லா தவர்.
🌸பொருள்:
மக்களுக்கு உரிய பண்பு இல்லாதவர் அரம் போல் கூர்மையான அறிவுடையவரானாலும், ஓரறிவுயிராகிய மரத்தைப் போன்றவரே ஆவர். .
🌸 பொதுஅறிவு:
1. எப்போது முதல் இரயில் பாதை இந்தியாவில் நிறுவப்பட்டது?
விடை : ஏப்ரல் 16 1853.
2. உலகின் மிகப்பெரிய ரயில் நிலையம்?
விடை : கிராண்ட் சென்ட்ரல் டெர்மினல், நியூயார்க் .
3. இந்தியாவில் இரும்பு பாலம் முதன் முதலில் எங்கு அமைக்கப்பட்டது?
விடை : லக்னோ .
4. பயணிகளை சுமந்துகொண்டு பறந்த முதல் விமானம் எது?
விடை : டக்லஸ் DC - 3.
5 . ஏற்காடு எந்த மலையில் உள்ளது?
விடை : சேர்வராயன் மலை.
பழமொழிகள் (proverbs) :
1. Reason rules the world.
🌸 அறிவே உலகை ஆள்கிறது.
2. Rome was not built in a day
🌸 ஒரே நாளில் கோட்டையை பிடிக்க முடியாது .
இரண்டொழுக்கப் பண்பாடு:
🌸 பெரியோருக்கு பணிவதும், பிறருக்கு உதவுவதும் இளைஞருக்கு அழகு என்பதை நான் அறிவேன். 🌸 எனவே நான் எப்பொழுதும் என்னைச் சுற்றியுள்ள பெரியோர்களிடத்து பணிவாக நடந்து கொள்வேன் . மேலும் முடிந்தவரை அன்றாடம் பிறருக்கு உதவுவேன்.
நீதிக்கதை:
**************
ஒரு குட்டிக் கதை...!!
கடவுளிடம் ஒரு விவசாயி கடுமையாகச் சண்டைக்குப் போனான்.
”உனக்குப் பயிர்களைப் பற்றி என்ன
தெரியும்? நீ நினைத்தபோது மழையை
அனுப்புகிறாய். தப்பான சமயத்தில் காற்றை
வீசுகிறாய். உன்னால் பெரிய தொந்தரவாக இருக்கிறது.
பேசாமல்,
இந்த வேலைகளை விவசாயி ஒருத்தனிடம் ஒப்படைத்துவிடேன்!”
என்றான்.
கடவுள் உடனே,
“ அப்படியா? சரி. இனிமேல் வெளிச்சம், மழை, காற்று எல்லாம் உன் கட்டுப்பாட்டிலேயே இருக்கட்டும்” என்று வரம் அருளிவிட்டுப்
போய்விட்டார்.
விவசாயிக்கு சந்தோஷம் பிடிபடவில்லை.
அடுத்த விதைப்பிற்கான பருவம் வந்தது.
”மழையே பெய்” என்றான்.
பெய்தது.
நிறுத்தச் சொன்னபோது,
மழை நின்றது.
ஈரமான நிலத்தை உழுதான்.
தேவையான வேகத்தில் காற்றை வீசச் செய்து, விதையை தூவினான்.
மழை, வெயில், காற்று எல்லாமே அவன் சொன்ன பேச்சைக் கேட்டன.
பயிர் பச்சைப்பசேல் என வளர்ந்தது.
வயல்வெளியைப் பார்க்கவே மிகவும் ரம்மியமாக இருந்தது.
அறுவடைக் காலமும் வந்தது.
விவசாயி ஒரு கதிரை அறுத்தான். அதனை உதிர்த்து, திறந்து பார்த்தான்.
அதிர்ந்தான்.
உள்ளே தானியத்தைக் காணவில்லை, மிகச் சிறிய பதர்தான் இருந்தது.
அடுத்தது, அதற்கடுத்தது என்று ஒவ்வொரு தானியக்கதிராக வெட்டி எடுத்து உடைத்துப் பார்த்தால் ஒன்றிலுமே தானியம் இல்லை.
”ஏ கடவுளே!” என்று கோபத்தோடு கூப்பிட்டான்.
“மழை, வெயில், காற்று எல்லாவற்றையுமே மிகச் சரியான விகிதங்களில்தானே பயன்படுத்தினேன்! ஆனாலும், பயிர்கள் பாழாகிவிட்டதே, ஏன்?” எனக்கேட்டான்.
கடவுள் புன்னகைத்தார்:
“என் கட்டுப்பாட்டில் இருந்தபோது காற்று வேகமாக வீசும். அப்போது பயிர்களெல்லாம், அம்மாவை இறுக்கிக்கொள்ளும் குழந்தைகளைப்போல பூமிக்குள் தங்கள் வேர்களை மிக ஆழமாக அனுப்பிப் பிடித்துக்கொள்ளும்.
மழை குறைந்தால், தண்ணீரைத் தேடி வேர்களை நாலாபக்கமும் அனுப்பும்.
போராட்டம் இருந்தால்தான் தாவரங்கள் தங்களைப் பாதுகாத்துக்கொண்டு, வலுவாக வளரும்.
எல்லாமே வசதியாக
அமைத்துக் கொடுத்ததில் உன் பயிர்களுக்கு சோம்பேறித்தனம் வந்துவிட்டது.
தளதளவென்று வளர்ந்ததே தவிர, ஆரோக்கியமான தானியங்களைக் கொடுக்க அவற்றிற்கு தெரியவில்லை!” என்றார்.
வேண்டாமய்யா, உன் மழையும் காற்றும்! நீயே வைத்துக்கொள்” என்று கடவுளிடமே அவற்றைத் திருப்பித் தந்துவிட்டான் விவசாயி.
பிரச்சினைகள் உங்களைப் போட்டு அழுத்தும்போதுதான், உங்களின் திறமை அதிகரிக்கும்.
இருட்டு என்று ஒரு பிரச்சினை இருந்ததால்தான் மின்விளக்கு கண்டுபிடிக்கப்பட்டது.
பயணம் என்பது பிரச்சினையானபோதுதான் வாகனம் உருவானது.
பிரச்சினைகளே இல்லாமல் இருந்துவிட்டால் நம் மூளையின் திறனை எவ்வாறு அறிவீர்கள்?
பிரச்சினை இல்லாத வாழ்க்கைதான் சபிக்கப்பட்ட வாழ்க்கை..
எதிர்பாராத திருப்பங்கள்தானே நம் வாழ்க்கையைச் சுவையாக அமைத்துத் தரமுடியும்...!!!
போராடித்தான் பார்ப்போமே...
இன்றைய முக்கிய செய்திகள் :
🌸 கரோனா வைரஸ் எதிரொலி: தமிழகத்தில் 78 பேர் கண்காணிப்பில் உள்ளனர் - பொது சுகாதாரத் துறை இயக்குனர் குழந்தைசாமி தகவல்
🌸 கேரள மாணவிக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் முதல் நபர்.
🌸 நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம், பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்.
🌸 அனைத்து பிரச்சினைகளையும் விவாதிக்க அரசு தயார் என பிரதமர் நரேந்திர மோடி கருத்து.
🌸 சிறு குறு தொழில்களுக்கு புதிய சலுகைகள் என முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி அறிவிப்பு.
🌸 சமயபுரம் மாரியம்மன் கோயில் தைப்பூச கொடியேற்றம்.
🌸 'அரசு அலுவலகங்களில் கோப்புகளுக்கு விரைந்து தீர்வு கண்டால்தான் பணிகள் வளர்ச்சி அடையும்'.
🌸 டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு முறைகேடு பிப்ரவரி 12-ல் விசாரணை.
🌸 இன்றும் நாளையும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்.
🌸 ஊராட்சித் தலைவர், துணைத்தலைவர் பதவி பல இடங்களில் தேர்தல் மீண்டும் நிறுத்தம்.
🌸 பிஎஸ்என்எல்: 79 ஆயிரம் பேர் இன்று ஓய்வு பெறுகின்றனர்.
🌸 5,8 - ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தடை கோரிய வழக்கு : தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.
🌸 பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 21 இல் தொடங்குகிறது.
🌸 குரூப்-4 தேர்வு நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க முடிவு.
🌸 கல்லூரிகளுக்கு புதிய கட்டடங்கள் முதல்வர் எடப்பாடி கே .பழனிச்சாமி திறந்து வைத்தார்.
🌸 ஆன் - லைன் வழிக்கல்வி தமிழகத்தில் ஒரே ஒரு கல்வி நிறுவனத்திற்கு அனுமதி. நாடு முழுவதும் 7 கல்வி நிறுவனங்கள் தகுதி.
🌸 நாடு முழுவதிலும் 5 லட்சம் காவலர் பணியிடங்கள் காலி என மத்திய அரசு தகவல்.
🌸 காங்கிரஸ் ஆதரவாளரான எனக்கு பத்மஸ்ரீ விருது அறிவித்த மத்திய அரசுக்கு நன்றி என ஒரு ரூபாய் மருத்துவர் சுஷோவன் பானர்ஜி நெகிழ்ச்சி.
🌸 இந்தியா எங்கள் மீது போரைத் தொடங்கினால் அந்தப் போரை நாங்கள் முடித்து வைப்போம் என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.
🌸 பிப்ரவரி - 4 - ல் யுனெஸ்கோ தலைவர் இந்தியா வருகை.
🌸 இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பிப்ரவரி 7 -இல் இந்தியா வருகை.
🌸 நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியதால் ஐரோப்பிய யூனியனில் இருந்து நள்ளிரவில் வெளியேறுகிறது பிரிட்டன்.
🌸 .உலக விளையாட்டின் சிறந்த வீராங்கனை (2019): விருதை வென்றாா் ராணி ராம்பால்.
🌸 ஆஸ்திரேலிய ஓபன் மகளிர் இறுதிச்சுற்றில் சோபியா கெனின் - முகுருஸா.
🌸 ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பெடரரை வீழ்த்தி இறுதிப் போட்டியில் நுழைந்தார் ஜோகோவிச் .
🌸 4 - ஆவது டி20 சோதனை முறையில் வீரர்களை களமிறங்கிய இந்திய அணி திட்டம்.
TODAY'S ENGLISH NEWS:
🌸Country's first Corona virus infection confirmed in Kerala. Students from Thrissur district was studying in Wuhan ; hair condition is stable.
🌸 China sees 38 deaths in a day.
🌸 Public exam for classes V , VIII challenged.
🌸 Punchapur solar plant project functional soon.
🌸 Consecration ritual to begin on February 1.
🌸 Supreme court allows transport of minerals in Goa for 6 months. Companies get time to transport the minerals for which they had paid royalty.
🌸 4 hydro project violate Ganga flow norms:CWC 'plants violating e-flow requirements.
🌸 Divorce sealed, Brexit finally arrives today. U.K is the first nation ever to leave EU.
🌸 Series clinched, India may look to experiment. Game time for bench-warmers without compromising 'win at all times' policy India in New Zealand.
🌸 Award for Rani Rampal voted world games athlete of the year.
🌸 Djokovic brooksl no resistance from injury -hit Federer.
🌸இனிய காலை வணக்கம் ....✍
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
வலையூர்
திருச்சிராப்பள்ளி மாவட்டம்-621005
அலைபேசி எண்: 9789334642 .
.

No comments:
Post a Comment