பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 03/08/2022 புதன் கிழமை
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
திருக்குறள்: அதிகாரம்: அறன் வலியுறுத்தல்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
திருக்குறள்: அதிகாரம்: அறன் வலியுறுத்தல்
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷.
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்
ஆகுல நீர பிற.
🌸 பொருள்:
🍀🍀🍀🍀🍀
ஒருவன் தன்மனதில் குற்றம் இல்லாதவானாக இருக்க வேண்டும். அறம் அவ்வளவே: மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
1.பாலில் செறிந்துள்ள வைட்டமின்கள் என்னென்ன?
விடை : வைட்டமின் B2,B4,B12 .
2. தாவர செல்களில் உணவைச் சேமிப்பது எது?
விடை : பிளாஸ்டிடுகள்
3.இந்தியாவின் கடற்கரையின் நீளம் சுமார்?
விடை : 7600 கி.மீ
4.காடுகளின் பரப்பை அதிகமாக கொண்டுள்ள மாநிலம்?
விடை : மத்திய பிரதேசம்
5.சுதந்திர இந்தியாவின் முதல் வரவு-செலவு திட்டத்தை அளித்தவர் யார்?
விடை : ஆர்.கே.சண்முகம் செட்டியார்
பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🌷As is the king, so are the subjects
🌷அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி
🌹Too much of anything is good for nothing
🌹அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும்
இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🌸 நேர்மையும் உண்மையும் மனிதனை உயர்த்தும் என்பதை அறிவேன்.
🌸எனவே எப்பொழுதும் நேர்மையுடனும் உண்மையுடனும் வாழ்ந்து என்றும் வாழ்வில் வெற்றி பெறுவேன்
🍁🍁🍁🍁🍁🍁
காது கேட்காத தவளை 🐸
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
மூன்று தவளைகள் ஒரு மலையின் உச்சிக்கு ஏறுவதற்கு தயாராகின.
அவை மலையேற ஆரம்பிக்கும் போது பார்வையாளராக இருந்த ஒருவர் "இவளவு உயரமான மலையில் ஏறும்போது வழியில் கற்கள் தடக்கி விழுந்தால் அவ்வளவுதான்" என்றார்.
உடனே ஒரு தவளை மலை ஏறுவதை நிறுத்தி விட்டது.
சிறுது தூரம் சென்றவுடன் இன்னொருவர் "மேலே செல்லும்போது பாம்புகள் பிடித்து விட்டால் என்ன செய்யப் போகின்றன " என்றார்.
உடனே இரண்டாவது தவளையும் கீழிறங்கிவிட்டது.
ஆனால் யார் என்ன சொன்னாலும் கேட்காத மூன்றாவது தவளை மட்டும் மலை உச்சியை சென்றடைந்தது.
பின்னர் கீழிறங்கிய அந்தத் தவளையிடம் அங்கிருந்த ஒருவர் "உன்னால் மட்டும் எப்படி இவர்கள் எல்லோரும் எதிர்மறையாக கூறியும் துணிந்து சிகரத்தை அடைய முடிந்தது" என்று கேட்டார்.
அதற்கு அந்தத் தவளை "எனக்குக் காது கேட்காது " என்றது.
நாமும் வாழ்வில் இந்த தவளையை போல இருந்தால் தான் சில நேரங்களில் முன்னேற முடியும்.
இன்றைய முக்கிய செய்திகள்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🎯தட்டச்சு தேர்வு முறையை மாற்றக்கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு
🎯கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா கோலாகலம்: சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த மலர் கண்காட்சி
🎯இந்திய பொருளாதாரம் நல்ல நிலையில் உள்ளது - மாநிலங்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில்
🎯மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பணியை மாநில அரசுகளிடம் ஒப்படைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசு
🎯தஞ்சையில் பொது விமான சேவை அமைக்க நடவடிக்கை: மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்
🎯கலை, அறிவியல் படிப்பு : ஆக.,5 முதல் கவுன்சிலிங்
🎯CWG 2022 | இந்தியாவுக்கு 5-வது தங்கம்: பட்டத்தை தக்கவைத்தது ஆடவர் டேபிள் டென்னிஸ் அணி
🎯செஸ் ஒலிம்பியாட் | இந்திய அணிகள் வெற்றி - மகளிர் பிரிவில் தலா ஒரு வெற்றி, தோல்வி, டிரா
TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
🎯Chennai’s second airport to cost nearly Rs. 20,000 crore, says CM Stalin
🎯Tamil Nadu to unveil new Startup and Innovation policy soon: CM MK Stalin
🎯UPSC CSE 2021 | IAS Toppers from Rau’s IAS share their coaching experience
🎯Parliament proceedings | No one is denying price rise, constant efforts on to control it: Nirmala Sitharaman
🎯Commonwealth Games 2022 | India bags historic gold in women's four lawn bowl event
🎯Commonwealth Games 2022: Table-tennis | India beats Singapore; retains men's team gold
இனிய காலை வணக்கம் ....✍
இரா . மணிகண்டன் முதுகலை தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர் , புதுக்கோட்டை மாவட்டம்-622 502
அலைபேசி எண் : 9789334642.
No comments:
Post a Comment