Thursday, August 11, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (12/08/2022)

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 12.08. 2022.       வெள்ளிக்கிழமை.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல்
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌷🌷🌷🌷🌷

 இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்
.                                                                                                                                                                                                                          

🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

   கடிந்து அறிவுரைக் கூறும் பெரியாரின் துணை இல்லாதக் காவலற்ற அரசன், தன்னைக் கெடுக்ககும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான்.

🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1.இந்தியாவில் ஒரு புதிய மாநிலமானது எதன் மூலம் உருவாக்கலாம்?

*விடை* :பாராளுமன்றத்தில் சாராதணப் பெரும்பாண்மை

2.இந்தியாவில் மத நல்லிணக்கத்திற்காண தேசிய அமைப்பு எப்பொழுது உருவாக்கப்பட்டது?

*விடை* : 1992

3. 'சுதேசி' மற்றும் 'இந்தியா இந்தியற்கே' போன்ற முழக்கங்களை முதன் முதலில் முழங்கிய இந்தியர் யார்?

*விடை* : தயானந்த சரஸ்வதி

4.. "வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம்" என்னும் பாடல் வரி இடம் பெற்ற நூல்?

*விடை* : நன்னூல்

5.இயற்கையின் கொடை" எனப் போற்றுவது

*விடை* : ஆழ்கடல்


பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌹An artist Lives everywhere
🌹 கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு.

☘️ All things are difficult before they are easy
☘️ சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்




 இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

காலமறிதலும், கடின உழைப்பும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து குறித்த நேரத்தில் எனது பணிகளை செய்வேன்.
" உழைப்பே உயர்வு தரும்" என்ற பழமொழிக்கேற்ப கடுமையாக உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்
.



 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁
உழைப்பால் வெற்றியை உருவாக்கு
(இன்றைய சிந்தனை)

​​​உழைப்பால் வெற்றியை உருவாக்கு.
முயற்சியை அதற்கு எருவாக்கு.
வாழ்க்கை ஒரு கணிதம்...

“கணிதம் ஒரு புதிர் – வாழ்க்கையும் ஒரு புதிர்”. சிலருக்கு விடை கிடைத்து விடுகிறது. சிலருக்கு விடை கிடைக்காமலேயே போகிறது. அதற்காக ஒரு போதும் சோர்ந்து விடாதீர்கள். கீழ்கண்ட குறியீட்டை பயன்படுத்திப் பாருங்கள்.

நல்லனவற்றைக் கூட்டிக் கொள் --------> +
தீயவற்றைக் கழித்துக் கொள் ----------> -
அறிவைப் பெருக்கிக் கொள் -----------> x
நேரத்தை வகுத்துக் கொள் ------------> /
வெற்றி, தோல்வியை சமமாக கொள் --> =

வெற்றியை எவ்வாறு சாதனையாக்குவது? தோல்வியை எப்படி தோற்கடிப்பது என்பதை நூலகத்தில் உள்ள நூல்களைப் படித்தால் ஆயிரக்கணக்கான நுட்பம் நிறைந்த வழிகள் புதையலாக புதைந்திருக்கின்றன. நல்ல புத்தகங்களை நேசித்து வாசிப்பதற்கு ஆகும் நேரத்தை விட, அதை யோசித்து தேர்ந்தெடுப்பதற்கு ஆகும் நேரத்தை நீட்டிக் கொள்ளுங்கள். “எட்டு மணி நேரத்தில் ஒரு மரத்தை வெட்ட வேண்டும் என எனக்கு கட்டளையிடப்பட்டால், அதில், ஆறு மணி நேரத்தை கோடாரியை கூராக்குவதிலேயே செலவிடுவேன்” என்றார் சரித்திர நாயகன் ஆபிரகாம் லிங்கன்.

கண்கள் தூக்கத்திற்கு சொந்தமானவை
கனவுகள் நம் வாழ்க்கைக்கு சொர்க்கமானவை...

“ஒரு பவுண்ட் தேனை சேகரிக்க, தேனீ இருபது லட்சம் மலர்களைத் தேடிச்செல்கிறது”. அது போல காலத்தால் அழிக்க முடியாத கனவு சுவடுகளைப் பதிக்க நினைக்கின்ற எனதருமை இளைஞர்களே! நம் நாட்டில் சுமார் இருபது கோடி இளைஞர்கள் இருக்கின்றீர்கள். உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் ஓராயிரம் கனவு தொழிற்சாலைகள். இந்த கனவுகளுக்கெல்லாம் காரணம் டாக்டர் அப்துல் கலாம் அவர்களே! உங்கள் மீது கடலளவு நம்பிக்கை வைத்திருக்கிறார். இந்த கலாமின் நம்பிக்கைக்கு ஒரு சலாம் சொல்லுங்கள்.


இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯பெற்றோர் பாதி ஆசிரியர்களாகவும், ஆசிரியர்கள் பாதி பெற்றோராகவும் இருந்து மாணவர் சமுதாயத்தை வளர்த்தால் போதை பழக்கத்தில் யாரும் ஈடுபட மாட்டார்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

🎯காஷ்மீரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

🎯இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் தொடரும்: தமிழக அரசு உறுதி

🎯அண்ணா பல்கலை பாடத்திட்டம் மாற்றப்படும்: துணைவேந்தர் வேல்ராஜ் அறிவிப்பு

🎯கிரிப்டோகரன்சியில் இந்தியாவுக்கு 7வது இடம்

🎯நாட்டின் 14-வது குடியரசு துணைத் தலைவராக ஜெகதீப் தன்கர் பதவியேற்பு

🎯இல்லந்தோறும் தேசியக்கொடி திட்டம் - மக்களின் உற்சாகத்துக்கு பிரதமர் பாராட்டு

🎯 தில்லியில் மீண்டும் முகக் கவசம் கட்டாயம் மீறுவோருக்கு ரூபாய் 500 அபராதம்

🎯ஜிம்பாப்வே தொடரில் இந்திய அணியை கே.எல்.ராகுல் வழிநடத்துவார்: தவான் துணை கேப்டனாக நியமனம்

🎯காமன்வெல்த் போட்டியில் பதக்கங்கள் வென்று: தமிழகம் திரும்பிய வீரர்களுக்கு விமான நிலையத்தில் வரவேற்பு

🎯 ஜிம்பாவே தொடருக்கு ராகுல் கேப்டனாக நியமனம்

🎯நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்





TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

🎯Tamil Nadu CM MK Stalin warns police officials against abetting drug peddlers

🎯Senior citizen concession: Loss to Railways lowest in lower classes

🎯An anomaly for two seconds led to SSLV mission’s underperformance: ISRO chief

🎯No more Atal Pension Yojana benefits for Income Tax payers from October 1

🎯Monsoon to remain active over central India till August 15: IMD

🎯With grants and promises, Nepal minister Khadka returns from China

🎯Gotabaya Rajapaksa leaves Singapore for Thailand after short-term visit pass expires, says report

🎯Ukraine ‘preparing for tragedy’ at nuclear plant, U.N. chief calls for demilitarised zone

🎯KL Rahul named India for the three-match ODI series against Zimbabwe

🎯Indian football team to play against Vietnam, Singapore in September











இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.

No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...