Sunday, August 21, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் ( 22/08/2022)

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 22.08.2022.    திங்கட்கிழமை.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: கேள்வி
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌷🌷🌷🌷🌷

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வஞ்
செல்வத்து ளெல்லாந் தலை.
                                                                                                                                                                                                                 
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

           செவியால் கேட்டறியும் செல்வம், செல்வங்களுள் ஒன்றாகப் போற்றப்படும் செல்வமாகும், அச் செல்வம் செல்வங்கள் எல்லாவற்றிலும் தலையானதாகும்
.
   

🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1.முன்வேதகால முக்கிய கடவுள் எது?

*விடை* : இந்திரன் மற்றும் அக்னி

2.ஐ.நா. சபையின் முதல் பொது செயலாளர் யார்?

*விடை* : திறிகுவே இலீ

3.UNESCO என்பது

*விடை* : ஐ.நா. கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பு

4.சிந்து சமவெளி நாகரிக காலம் ?

*விடை* : கி.மு.3300 முதல் கி.மு.1900 வரை என கருதப்படுகிறது.

5.UNICEF - என்பது?

*விடை* : ஐ.நா. குழந்தைகள் நல முன்னேற்ற நிதி நிறுவனம். (நியூயார்க்)


பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌹 No honest man ever repented of his honesty.
🌹 பொய் சொல்லி வாழ்ந்தவனும் இல்லை, மெய் சொல்லிக் கெட்டவனும் இல்லை.

🌷 No rains no gains
🌷 மாரி அல்லது காரியம் இல்லை.




 இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

காலமறிதலும், கடின உழைப்பும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து குறித்த நேரத்தில் எனது பணிகளை செய்வேன்.
" உழைப்பே உயர்வு தரும்" என்ற பழமொழிக்கேற்ப கடுமையாக உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்
.



 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁

உழைப்பின் பலன் இனிது
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

மங்கூ என்றொரு குரங்கு இருந்தது. நந்தவனத்தில் வசித்த மங்கூ கூட நாள் முழுவதும் ஒரு மரத்திலிருந்து இன்னொரு மரத்திற்கு தாவி குதித்து விளையாடும். அதனிடம் இருந்த கெட்டப் பழக்கம் மற்ற மிருகங்களிடம் இருந்து உணவை பறித்துத் தின்பது தான். சரியான சோம்பேறி, மற்ற மிருகங்கள் சேமித்த உணவை பறித்துத் தின்று வந்தது. எல்லா மிருகங்களும் கோபப்பட்டன. இருப்பினும் எதுவும் செய்ய முடியவில்லை. யாராலும் அதை பிடிக்க முடியவில்லை.
    
    ஒரு நாள் டிங்கூ யானைத் தோட்டத்திலிருந்து வாழையும் மரத்தைப் பறித்தது. அதன் குழந்தைகளுக்கு வாழைப்பழம் மிகவும் பிடிக்கும் என்பதால் டிங்கூ அதை வீட்டிற்கு எடுத்துச் சென்று கொண்டிருந்தது. வழியில் அதைப் பார்த்த மங்கூ வாழைப்பழங்களை பறித்துத் தின்ன ஆரம்பித்தது. டிங்கூ மங்கூவிடம்,"என் குழந்தைகள் இரண்டு நாட்களாக எதுவும் சாப்பிடவில்லை. அவர்களுக்கும் சிறிது விட்டுவை என்றது. ஆனால் மங்கூ , எல்லா பழங்களையும் சாப்பிட்டு விட்டது
டிங்குகூ துயரத்துடன் அழுது கொண்டே சென்றது.

      இதேபோல் சிங்கி குருவியையும் தொல்லைப்படுத்தி வந்தது. மரத்தில் கூடு கட்டி தன் குழந்தைகளை வளர்த்த சிங்கி அவற்றுக்கு தானியத்தை எடுத்து வந்து வைத்து விட்டு செல்லும். மரக்கிளையில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கும் மங்கூ, அந்த தானியங்களை எடுத்து சாப்பிட்டு விடும். பலமுறை சிங்கியின் குழந்தைகளுக்கு காயமும் ஏற்பட்டது.

    நந்தவனத்தில் இருந்த எல்லா மிருகங்களும் காட்டு ராஜா சிம்பூ சிங்கத்திடம் மங்கூவைப் பற்றி புகார் செய்ய எண்ணின.  சிம்பூவிடம் கூறியதும் சிங்கம்,"சரி, நான் ஏதாவது வழி செய்கிறேன்"என்றது.

     சிம்பூ தந்திரமாக மங்கூவைப் பிடிக்க வேண்டும் என்று எண்ணி, திட்டத்தை எல்லா மிருகங்களுக்கும் கூறியது. எல்லா மிருகங்களும் சம்மதித்தன. சிம்பூ மங்கூவிடம்,"நாளை என் வீட்டில் பெரிய விருந்து; எல்லோரும் வருகிறார்கள். நீயும் வா" என்றது.

      மங்கூவும், 'நாளை நான் அதிக உணவை சாப்பிடுவேன் பிறகு சில நாள் உணவுக்கு அலைய வேண்டாம்' என்று எண்ணியது.

    எல்லா மிருகங்களும் மங்கூவிற்கு பாடம் புகட்ட தயாராகின.

     டிங்கூ  யானை மற்றும் இதர மிருகங்கள் சேர்ந்து ஆழமான பள்ளம் ஒன்றைத் தோண்டியது. பிறகு அதில் தண்ணீர் நிரப்பின. அதன் மேல் சிங்கி குருவி மற்றும் இதர மிருகங்கள் புல்லைப் போட்டு அங்கு பள்ளம் இருப்பது தெரியாதபடி மூடி வைத்தன.

    எல்லா மிருகங்களும் மாலை நேரத்தை எதிர்நோக்கி காத்திருந்தன. மாலையில் மங்கூ விருந்து சாப்பிட வந்தது. எல்லா மிருகங்களும் அங்கு இருப்பதைப் பார்த்து மகிழ்ந்தது."நண்பர்கள் எல்லோரும் வந்து விட்டார்களா? நான் விருந்துக்கு தயார், உணவு எங்கே இருக்கிறது?"என்று சிங்கத்தை கேட்டது.

       "எல்லா மிருகங்களும் முன்பே வந்து சாப்பிட்டு விட்டன. உனக்கு எதிரிலுள்ள தோட்டத்தில் நிறைய உணவு இருக்கிறது. போய் சாப்பிடு"என்றது, சிங்கம்.

       'அப்படியா?' என்ற மங்கூ தோட்டத்தை நோக்கி சென்றது. சிறிது தூரம் சென்றதும் அதன் கால் புள் மற்றும் சேறில் மாட்டிக்கொண்டது. காலை வெளியே இழுக்க முயன்ற போது தடால் என்று தண்ணீர் நிரம்பிய பள்ளத்தில் விழுந்தது.

    மங்கூவிற்கு எதுவும் புரியவில்லை. வெளியே வர முயற்சி செய்தபோது மண், தண்ணீரில் விழுந்து சேறாகி அதில் சிக்கிக் கொண்டது மங்கூ. எல்லா மிருகங்களும் அங்கு கூடிவிட்டன. மங்கூ பள்ளத்தில் விழுந்ததைப் பார்த்து தங்கள் திட்டம் பலித்ததை எண்ணி சந்தோஷப்பட்டன.

    மங்கு அழுது கொண்டே, "என்னைப் பள்ளத்திலிருந்து வெளியே எடுங்கள் மிகவும் பசிக்கிறது"  என்றது.

  சிம்பூ சிங்கம் "மங்கூ நீ எல்லா மிருகங்களையும் வருத்தமடையச் செய்தாய் . எல்லோருடைய உணவையும் பறித்து சாப்பிட்டதால் அவை பட்டினியாக இருக்க நேர்ந்தது. அதனால் நாங்கள் எல்லோரும் சேர்ந்து திட்டமிட்டோம். நீ பசியோடு இருக்க வேண்டியதுதான். நாங்கள் யாரும் உனக்கு உதவ மாட்டோம்"என்றது.

     இரண்டு நாட்கள் மங்கூ பசியோடும் தாகத்தோடும் இருந்த போது மற்ற மிருகங்களின் கஷ்டம் புரிந்தது.

    சிம்பூ சிங்கத்தின் முன்னால் காதை பிடித்துக் கொண்டு இவ்வாறு சத்தியம் செய்தது. "இனிய மற்றவர்கள் உணவை திருட மாட்டேன்" என்று. உடனே மங்குவை வெளியே எடுத்தன மற்ற மிருகங்கள். அதன் பிறகு மங்கூ உழைத்து சாப்பிட ஆரம்பித்தது. உழைப்பின் பலன் இனிமையானது என்பதை அது உணர்ந்தது.

*நீதி* : உழைத்து வாழ வேண்டும்; பிறரை உதைத்து வாழக்கூடாது.

.

இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯 தொடக்கக் கல்வித் துறையில் ஆகஸ்டு.29-ல்  ஆசிரியர் அலகு மாறுதல் கலந்தாய்வு தொடக்கம்.

🎯அரசுப் பள்ளி, கல்லூரிகளின் 25 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் பயண அட்டை: போக்குவரத்து துறை அதிகாரிகள் தகவல்

🎯ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம்: குடியரசுத் தலைவர், பிரதமரை சந்திக்கிறார்

🎯துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட குரூப் 1 பதவிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்: முதல்நிலை தேர்வு அக்.30ம் தேதி நடக்கிறது

🎯காஞ்சிபுரம் உள்பட 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக்கல்லூரி அமைக்க நடவடிக்கை; 4,038 பணியிடங்கள் அக்டோபரில் நிரப்பப்படும்.! அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

🎯உக்ரைன் மருத்துவ பல்கலைக்கழகங்களில் பயிலும் இந்திய மருத்துவ மாணவர்களின் கல்வி தொடர நடவடிக்கை: முதல்வருக்கு வெளிநாடு வாழ் தமிழர்கள் கடிதம்

🎯மதுரையில் மாபெரும் புத்தகக் காட்சி தமுக்கம் அரங்கில் செப்.2-ல் தொடக்கம்

🎯வெளிநாட்டு மாணவர் எண்ணிக்கையை உயர்த்த... அனுமதி! உயர்கல்வி நிலையங்களுக்கு யு.ஜி.சி., உத்தரவு


🎯வடமாநிலங்களில் தொடர் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: வெள்ளத்தில் சிக்கி 50 பேர் உயிரிழப்பு

🎯நாளை  5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.


TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

🎯An old city clothed in the glory of Art Deco architecture

🎯Number of women scientists up; CSIR head aims at further push

🎯Aadhaar-voter ID linking | Reports of coercion emerge

🎯India-China ties can’t be a one-way street: Jaishankar

🎯Taiwan says five Chinese aircraft crossed Taiwan Strait median line

🎯For World Championships medallists Srikanth and Sen, Tokyo 2022 will be a tougher challenge





இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.

No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...