Monday, August 15, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (16/08/2022)

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 16.08. 2022.       செவ்வாய்க்கிழமை
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்:அதிகாரம்:அறிவுடைமை.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு . 
                                                                                                                                                                                                                                 
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀
எந்த ஒரு பொருள் குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமை ஆகும்.
   
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1. இந்தியாவில் பெரிய கடல் பாலம் எது?
விடை  :  அண்ணா இந்திரா காந்தி பாலம் (தமிழ்நாடு)

 2. இந்தியாவின் மிகப்பெரிய கோளரங்கம்?
விடை : பிர்லா கோளரங்கம் (கொல்கத்தா)                 
3 ) இந்தியாவின் மிக உயரமான அணை எது?
 விடை : டெஹ்ரி அணை (உத்தரகண்ட்)

4. இந்தியாவில் மிக உயர்ந்த நுழைவாயில் வழி எது?
 விடை : புலாண்ட் தர்வாஸா

5.  இந்தியாவில் வீர தீரம் மிக்க செயலுக்கான உயர்ந்த விருது எது?
விடை    : பரம்வீர் சக்ரா.

பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

 🌸Jack of all trade is master of none

🌸 பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டான்

🌸 Justice delayed is justice denied

🌸 தாமதிக்கப்பட்ட நீதி அநீதிக்கு சமம் ஆகும்







 இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
சொல்லும் செயலும் சிறந்த மனிதருக்கான எடுத்துக்காட்டு என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் சொல் வேறு செயல் வேறு என்றில்லாமல் சொல்வது போலவே நடத்தையிலும் பிறர் போற்றும் வண்ணமே நடந்து கொள்வேன்.



 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁

ஒரு கிராமத்தில் ஒரு அறிஞர் இருந்தார். அவர் ஒரு பொருளாதார மேதையா யிருந்தார். பல மன்னர்கள் தங்கள்நாட்டுப் பொருளாதாரத்தைச் சீர்படுத்த அவர் ஆலோசனையை நாடினர்.
ஒருநாள் ஊர்த்தலைவர் அவர் முன் வந்து அவரைப் பார்த்துக் கிண்டலாகச் சொன்னார்” ஐயா! அறிஞரே! நீங்கள் பெரிய அறிஞர் என்று உலகமே பாராட்டுகிறது. ஆனால் உங்கள் பையன் ஒரு அடி முட்டாளாக இருக்கிறானே! தங்கம், வெள்ளி இவற்றுள் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது என்று அவனைக் கேட்டால் அவன் வெள்ளி என்று சொல்கிறான். வெட்கக்கேடு!”
அறிஞர் மிக வருத்தமடைந்தார். பையனை அழைத்தார். கேட்டார் ”தங்கம், வெள்ளி இவை இரண்டில் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது?”
பையன் சொன்னான்”தங்கம்”
அவர் கேட்டார் ”பின் ஏன் ஊர்த்தலைவர் கேட்கும்போது வெள்ளி என்று சொன்னாய்?”
பையன் சொன்னான்” தினமும் நான் பள்ளி செல்லும்போது அவர் ஒரு கையில் தங்க நாணயமும், மறு கையில் வெள்ளி நாணயமும் வைத்துக் கொண்டு என்னை அறிஞரின் மகனே என அழைத்துச் சொல்வார் ”இவ்விரண்டில் மதிப்பு வாய்ந்ததை நீ எடுத்துக் கொள் ”.
”நான் உடனே வெள்ளியை எடுத்துக் கொள்வேன் .உடனே அவரும் சுற்றி இருப்பவர்களும் சிரித்துக் கிண்டல் செய்வார்கள்.நான் அந்த நாணயத்துடன் போய் விடுவேன்.
இது ஓராண்டாக நடக்கிறது. தினம் எனக்கு ஒரு வெள்ளி நாணயம் கிடைக்கிறது. நான் தங்கம் என்று சொல்லி எடுத்துக் கொண்டால் அன்றோடு இந்த விளையாட்டு நின்று விடும். எனக்கு நாணயம் கிடைப்பதும் நின்று போகும். எனவே தான்…” அறிஞர் திகைத்தார்!
வாழ்க்கையில் பல நேரங்களில் நாம் முட்டாள்களாக வேடம் அணிகிறோம், மற்றவர்கள் அதைப் பார்த்து மகிழ்வதற்கு. ஆனால் நாம் தோற்பதில்லை.அவர்கள் வெல்வதாக எண்ணிக் கொண்டிருப்பார்கள். ஆனால் வேறு கோணத்தில் பார்க்கும்போது நாம் வென்றிருப்போம்! எந்தக் கோணம் நமக்கு முக்கியம் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்...











இன்றைய முக்கிய செய்திகள்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯இந்தியாவில் முதல் முறையாக தமிழில் வானொலி நாடகங்களை அறிமுகப்படுத்திய பாம்பே ஐஐடி

🎯11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முறை தொடரும்: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

🎯விருது தொகை ரூ.10 லட்சத்தை முதலமைச்சர் நிவராண நிதிக்கு வழங்கினார் “தகைசால் தமிழர்” நல்லகண்ணு 

🎯விளையாட்டு போட்டிகளோடு திறனாய்வு பணிகளையும் மேற்கொள்ள உத்தரவு பணிச்சுமையால் திண்டாடும் உடற்கல்வி ஆசிரியர்கள்: காலியிடங்கள் நிரப்பப்படுமா?

🎯ஊரக வளர்ச்சித்துறை பட்டியல் தயாரிப்பு: 99 ஓவர்சியர்களுக்கு இளநிலை பொறியாளர் பதவி

🎯மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு

🎯 உலகம் முழுவதும் சுதந்திர தினத்தை கொண்டாடிய இந்தியர்கள்.

🎯'அடுத்த 25 ஆண்டுகளை தேச வளர்ச்சிக்காக அர்ப்பணியுங்கள்' - இளைஞர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

🎯விண்வெளி நிலையத்திலிருந்து இந்தியாவுக்கு சுதந்திர தின வாழ்த்து: நாசா, ஈஸாவுக்கு இஸ்ரோ நன்றி

🎯இந்தியா @ 75: உலக நாடுகளின் பார்வையில் இந்தியா

🎯காமன்வெல்த் விளையாட்டு | பதக்கம் வென்றவர்களுக்கு ஊக்கத்தொகை

🎯சென்னையில் செப்.12 முதல் மகளிர் டென்னிஸ் போட்டி







TODAY'S ENGLISH NEWS: 
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎


🎯Stalin announces 3% hike in DA for T.N. govt. employees, pensioners

🎯27 Tamil Nadu police officers get President’s medals

🎯India at 75 | The fragility of the Northeast’s integration

🎯Putin, Biden, Macron, and other leaders send Independence Day messages

🎯Soldier’s remains found in Siachen after 38 years

🎯Address to nation on 76th I-Day: PM says women’s power key to national progress, flags nepotism and corruption

🎯Aditi finishes 31st, Maja Stark wins by five shots in Northern Ireland












இனிய காலை வணக்கம் ....✍     
         
இரா . மணிகண்டன் முதுகலைத் தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.

No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...