Tuesday, August 9, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (10/08/2022)

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 10/08/2022         புதன்கிழமை 
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: நிலையாமை.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷.

.நெருந லுளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை யுடைத்திவ் வுலகு.

🌸 பொருள்:
🍀🍀🍀🍀🍀

      நேற்று இருந்தவன் ஒருவன் இன்று இல்லாமல் இறந்து போனான் என்று சொல்லப்படும் நிலையாமைஆகிய பெருமை உடையது இவ்வுலகம்

   
   
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 

1.இந்தியாவில் தேசிய மனித உரிமைகள் ஆனணயம் எப்பொழுது ஏற்படுத்தப்பட்டது?

விடை : 1993 அக்டோபர் 12

2.பிளாசி போர் நடைபெற்ற ஆண்டு?

விடை : 1757 ஆம் ஆண்டு.

3.எந்த கல்வி கொள்கையானது நமது நாட்டில் ஒரே மாதிரியான கல்வி திட்டத்தை (10 + 2 + 3) அறிமுகபடுத்தியது?

விடை : தேசிய கல்விக் கொள்கை 1986.

4."தென்னிந்திய வரலாற்றில் சுதந்திரப் போராட்டத்தை துவக்கியவர்" என் கருதப்படுபவர் யார்?

விடை : பூலித்தேவர்

5.தக்கோலம் போரில் சோழர்களை வென்று தஞ்சையைக் கைபற்றியது யார்?

விடை : மூன்றாம் கிருஷ்ணர்




பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

.🌷 HUMILITY OFTEN GAINS MORE THAN PRIDE
🌷 அடக்கம் ஆயிரம் பொன் தரும்

🌹HUNGER BREAKS STONE WALLS 
🌹 பசி வந்தால் பத்து பறந்து போகும் 



 இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

    🌸 நேர்மையும் உண்மையும் மனிதனை உயர்த்தும் என்பதை அறிவேன்.

     🌸எனவே எப்பொழுதும் நேர்மையுடனும் உண்மையுடனும் வாழ்ந்து என்றும் வாழ்வில் வெற்றி பெறுவேன்



 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁

முயலின் தன்னம்பிக்கை
--------------------------------------------

ஒரு முயல் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தது..

அதற்கு காரணம்?!!!.

ஒருபக்கம் வேடன் விரட்டுகிறான்.
இன்னொரு பக்கம் நாய்.... மறுபக்கம் புலி..
என எந்தப்பக்கம் திரும்பினாலும் முயலுக்கு எதிரிகள்....!!.


சரி நாம் வாழத்தகுதியற்ற விலங்கு என்று முடிவெடுத்தது.
எப்படியெல்லாம் தற்கொலை செய்யலாம் என்று சிந்தித்துப்பார்த்தது.

இறுதியாக....
.
குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொள்வோம் என்று சென்றது முயல்
.
அப்போது முயலின் வருகைக்கு அஞ்சி அங்கு குளத்தின் கரையில் இருந்த தவளைகள் குளத்துக்குள் தாவிகுதித்ததை முயல் பார்த்தது .

உடனே முயல் சிந்தித்தது...

அட!! நம்மையும் பார்த்து பயப்பட இந்த உலகில் உயிரினங்கள் உள்ளனவா??

என்று தன் தற்கொலை முடிவை மாற்றிக்கொண்டு தன்னம்பிக்கை கொண்டால் நாமும் வாழலாம் என்று மனமாற்றம் கொண்டது .....
“தற்கொலை செய்து கொள்வதற்கும் வலிமையான மனம் வேண்டும்" என உணர்ந்தது

அவ்வளவு வலிமையான மனமிருக்கும் நாம் ஏன் ?சாகனும்
வாழ்ந்துதான் பார்ப்போமென்று ..”காட்டுக்குள் மீண்டும் ஓடி ஒளிந்தது".

கதை சொல்லும் நீதி மரணத்தை தேடி நீ ஓடாதே !மரணம் உன்னை தேடும் வரை வாழ்ந்துவிடு ! மரணமே வந்தாலும் எதிர்க்க துணிந்து விடு !

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

  

இன்றைய முக்கிய செய்திகள்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯முதல்வர் தலைமையில் ஆட்சியர்கள், எஸ்பி.க்கள் கூட்டம்: கலைவாணர் அரங்கில் இன்று நடைபெறுகிறது

🎯ஆக.15-ல் அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் - மாவட்ட ஆட்சியர்களுக்கு ஊரக வளர்ச்சி ஆணையர் அறிவுறுத்தல்

🎯கூடங்குளம் | முழு மின்சாரத்தையும் தமிழகத்துக்கே வழங்க வேண்டும் - மத்திய மின் துறைக்கு தமிழ்நாடு மின்வாரியம் கடிதம்

🎯44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி - இந்திய மகளிர் அணி வெண்கலம் வென்று சாதனை, ஓபன் பிரிவில் வெண்கலம் கைப்பற்றியது

🎯ஆர்ஜேடியுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கிறார் நிதிஷ் - இன்று மாலை பதவியேற்பு; துணை முதல்வராகிறார் தேஜஸ்வி யாதவ்

🎯தனிநபர் பிரிவில் டி.குகேஷ், நிஹால் சரினுக்கு தங்கம் - 7 பதக்கங்களை அள்ளியது இந்தியா




TODAY'S ENGLISH NEWS: 

🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

🎯Chennai Chess Olympiad closing ceremony | Updates

🎯T.N. govt increases financial assistance for publishing literary works by SC/ST authors

🎯Mullaperiyar dam is safe; flood regulation done as per rule curve, says Stalin

🎯Nitish Kumar dumps BJP for RJD, set to form government afresh

🎯Taiwan holds exercises as China continues drills

🎯CHENNAI CHESS OLYMPIAD 
Gold for Gukesh and Nihal; silver for Arjun

🎯Brave women from Ukraine put a smile on world’s face








இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன்  முதுகலை தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர் , புதுக்கோட்டை மாவட்டம்-622 502
 
அலைபேசி எண் : 9789334642.

No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...