Wednesday, August 10, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (11/08/2022)

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 11.08. 2022.       வியாழக்கிழமை.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: கல்லாமை.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின்..                                                                                                                                                                                                                                         
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀
கற்றவரின் முன்னிலையில் ஒன்றையும் சொல்லாமல் அமைதியாக இருக்கப் பெற்றால் கல்லாதவர்களும் மிகவும் நல்லவரே ஆவார்.
   
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
1.தேசியக் கொடியிலுள்ள காவி நிறம் எதனைக் குறிப்பிடுகிறது?
விடை  :  தியாகம்.
 2.முதன் முதலில் இந்தியாவில் யார் காலத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது? ?
விடை : ரிப்பன் பிரபு..                   
3. சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல்?
விடை : ராஜகோபாலாச்சாரியார்..
4.சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் எண்ணிகை எத்தனை?
 விடை : 26.
5.  இந்திய அரசியலமைப்பில் மொத்தம் எத்தனை அட்டவணைகள் உள்ளன??
விடை    : 12..
பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

 🌸Union is strength

🌸ஒற்றுமையே பலம்

 🌸 United we stand ; divided we fall

🌸 ஒன்று பட்டால் உண்டு வாழ்வு




 இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
காலமறிதலும், கடின உழைப்பும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து குறித்த நேரத்தில் எனது பணிகளை செய்வேன்.
" உழைப்பே உயர்வு தரும்" என்ற பழமொழிக்கேற்ப கடுமையாக உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்.



 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁
ஒரு நாள் சிறுத்தை பசியுடன் உணவைத் தேடியது. அப்போது ஒரு கறுப்பு மானையும் புள்ளி மானையும் கண்டது.

அவை இரண்டும் மலையடிவாரத்தில் மேய்ந்து கொண்டிருந்தன. சிறுத்தை மிகுந்த எச்சரிக்கையுடன் மலையடிவாரத்தருகே சென்றது. ஆனால் எதனைத் தாக்குவது என அது முடிவு செய்யவில்லை.

அதே நேரத்தில் சிறுத்தையைப் பார்த்த மான்கள் இரண்டும் வேகமாக ஓடின. பிறகு அவை இரண்டும் ஒரு இடத்தில் இடது வலது பாதைகளில் ஓடின.

சிறுத்தை அந்த இடத்துக்கு வந்தது. 'எதைத் துரத்தலாம்' என்று தயங்கி நின்றது. பிறகு, 'சரி.. கறுப்பு மானைத் துரத்தலாம். அதன் இறைச்சிதான் சுவையாக இருக்கும்' என்று முடிவு செய்து கறுப்பு மானைத் துரத்தத் தொடங்கியது. ஆனால் அதற்குள் அது தொலைதூரம் ஓடிப் போய் விட்டது.

உடனே சிறுத்தை "அது வேகமாக ஓடக் கூடிய மான். அதைப் பிடிக்க முடியாது. பசி வேறு அதிகமாகி விட்டது. சரி... புள்ளி மானைப் பிடிக்கலாம்" என்று தீர்மானித்து மற்ற பாதையில் ஓடியது. ஆனால் புள்ளிமான் எப்போதோ பஞ்சாய்ப் பறந்துவிட்டிருந்தது.

நீதி : முக்கியமான நேரத்தில் முக்கியமான் முடிவை விரைவாக எடுக்க வேண்டும்
​​​


இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯ஆகஸ்ட் 13 முதல் 15-ம் தேதி வரை வீடுதோறும் தேசியக் கொடி ஏற்ற மக்களை ஊக்குவிக்க வேண்டும் - மாநிலங்களுக்கு அறிவுறுத்தல்

🎯தென் தமிழகத்தில் முதல் முறை... மதுரை அரசு மருத்துவமனையில் அமைகிறது ‘கட்டண வார்டு’கள்

🎯சட்டக்கல்வித் துறையின் முதல்பெண் இயக்குநராக பேராசிரியர் விஜயலட்சுமி நியமனம்

🎯ஆன்லைனில் தேசியக் கொடி வாங்க நாளை நள்ளிரவு வரை முன்பதிவு - அஞ்சல் துறை அறிவிப்பு

🎯பிஹார் முதல்வராக நிதிஷ் குமார் மீண்டும் பதவியேற்பு; துணை முதல்வர் ஆனார் தேஜஸ்வி

🎯வீட்டில் சூரியசக்தி மின்நிலையம் அமைக்க மத்திய அரசு மானியம் - பயனாளியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்

🎯உச்ச நீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நியமனம்: 27ம் தேதி பதவியேற்பு

🎯காமன்வெல்த் வாள்வீச்சு போட்டியில் தங்கம் வென்று அசத்தினார் தமிழக வீராங்கனை பவானிதேவி..!!








TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

🎯Stalin instructs authorities to crack down on drug peddlers

🎯Mini-stadiums to come up in all constituencies of the State: Stalin

🎯Centre says buying flag is voluntary

🎯Nitish Kumar, Tejashwi Yadav take oath, Cabinet expansion soon

🎯Justice U.U. Lalit appointed 49th Chief Justice of India

🎯Sri Lanka's ousted president Gotabaya Rajapaksa seeks entry to Thailand after weeks in Singapore

🎯ICC T20 Rankings: Yadav stays no. 2, Iyer moves up; Bishnoi, Kuldeep also see remarkable rise

🎯FIFA looks to start World Cup in Qatar 1 day earlier











🌸இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.

No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...