Wednesday, August 24, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (25/08/2022)

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 25.08.2022.    வியாழக்கிழமை .
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: 
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌷🌷🌷🌷🌷

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்.
                                                                                                                                                                                                                 
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

         சொல்லும் போது கேட்டவரைத் தன் வயப்படுத்தும் பண்புகளுடன், கேட்காதவரும் கேட்க விரும்புமாறு கூறப்படுவது சொல்வன்மையாகும்.
       
   

🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1."திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்" என்ற நூலின் ஆசிரியர் யார்?

*விடை* : கால்டுவெல்

2.ஐக்கிய நாடுகளவை தினம்?

*விடை* : அக்டோபர் 24

3. அறிவியல் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

*விடை* : பிப்ரவரி 28

4. எந்த தட்பவெப்பத்திலும் உறையாத தனிமம் எது?

*விடை* : ஹீலியம்

5.சந்திராயன் 1 எந்த நாளில் நிலவுக்கு ஏவப்பட்டது?

*விடை* : 2008 அக்டோபர் 22


பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌹 Young calf knows not fear
🌹 இளங்கன்று பயமறியாது

🌷 Youthful impression last through life
🌷 இளமையில் கல்வி சிலை மேல் எழுத்து


இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

காலமறிதலும், கடின உழைப்பும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து குறித்த நேரத்தில் எனது பணிகளை செய்வேன்.
" உழைப்பே உயர்வு தரும்" என்ற பழமொழிக்கேற்ப கடுமையாக உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்
.



 நீதிக்கதை
🍁🍁🍁🍁🍁🍁🍁

உலகம் அதிசயிக்கத்தக்க செயல் புரிந்தவர்

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

ஒருவர் இளமையில் மந்தமாகவோ, விளையாட்டுத் தனமாகவோ இருப்பதைக் கண்டு அவர்களுடைய பிற்காலத்தைப் பற்றி எவ்விதமாகவும் முடிவு கட்டமுடியாது. ஏதோ சில சமயங்களில்தான் அப்படிப்பட்டவர்கள் பிற்காலத்திலும்கூட இளமையிலிருந்ததைப் போலவே இருப்பார்களே அல்லாமல் எல்லோரும் அப்படியே இருக்கமாட்டார்கள். இதற்கு உதாரணமாக ரேடியோவைக் கண்டு பிடித்த பிரபல விஞ்ஞானி மார்கோனியின் வாழ்க்கையை உதாரணமாகச் சொல்லலாம்.

மார்கோனி சிறுவனாக இருந்த சமயம், அவருக்கு உலகத்தில் உள்ள பலவகைப்பட்டவர்களையும் பார்க்க வேண்டும், அவர்கள் பேசுவதைக் கேட்க வேண்டும் என்ற அவா அதிகமாக இருந்தது. ஆனால், பல இடங்களுக்குச் சென்று பலரைப் பார்க்க அவருக்கு வசதிதான் இல்லாமல்

இருந்தது. அதனால் அவர் தாம் இருக்கும் உருக்கு அருகிலிருக்கும் இடங்களுக்கு அடிக்கடி போய் வருவார். இப்படி அவர் வீணே சுற்றி வருவதைக் கண்டு அவருடைய தகப்பனார் மனம்வருந்தினார். பையன் இப்படித் திரிந்து கொண்டிருந்தால் பிற்காலத்தில் எப்படிப் பிழைக்கப் போகிறான் என்று பெரிதும் கவலைப்பட்டார். அதே சமயம் பையனுடைய மனதிலும் ஒரு யோசனை தோன்றியது. பணவசதி இல்லாததால் வெளி நாடுகளுக்குச் செல்ல முடியவில்லை. அங்குள்ளவர்களின் பேச்சைக் கேட்க முடியவில்லையே. ஆனால் ஆசையோ விட்டபாடில்லை. இதற்கு ஏதாவது ஒரு வழி கண்டுபிடிக்க வேண்டுமே என்று கருதினார். தேசங்களைப் பார்க்காவிட்டாலும் ஒரு நாட்டிலிருப்பவன் வேறு நாட்டிலிருப்பவனுடைய பேச்சையாவது கேட்க வழி கண்டுபிடிக்க முயற்சி செய்தார்.

மின்சாரத்தின் மூலம் ஒரு கருவியைச் செய்து அதன் மூலம் எல்லா நாடுகளிலும் பேசுவதைக் கேட்கலாம் என்று அவர் மனதிற்குத் தோன்றியது அதற்கு இணங்க தம்முடைய ஆராய்ச்சியைத் தொடங்கினார். ஆனால், அவர் ஆராய்ச்சியில் வெற்றி கானும் வரை, தம்முடைய எண்ணம் ஈடேறும் என்று நம்பவே இல்லை. அவருடைய தகப்பனாரும் அவருடைய முயற்சி வீண் என்றே கூறிவந்தார். வெகு நாட்களுக்குப்பிறகு, மார்கோனியின் ஆராய்ச்சியில் வெற்றி கிடைத்தது. வெற்றியைக் கண்டதும் மார்கோனிக்கு, அதைத் தம் வீட்டின் கூரைமீது ஏறிநின்று உரத்த குரலில் எல்லோருக்கும் சொல்ல வேண்டும் என்று தோன்றியது. ஆனால் அவருக்குத் தைரியம்தான் வரவில்லை. மக்கள் அவர் சொல்வதை நம்புவார்களா என்று சந்தேகப்பட்டார். அவர் சந்தேகப்பட்டது போலவே, மக்களும் முதலில் நம்பவில்லை, நிதர்சனமாகக் காட்டிய பிறகே நம்பினர். அப்பொழுதும் கூட மார்கோனியின் தகப்பனாருக்கு தம்முடைய பிள்ளையின் ஆராய்ச்சியின் மீது சந்தேகமே இருந்து வந்தது. பிரிட்டிஷ் அரசாங்கத்தார் மார்கோனி கண்டுபிடித்த ரேடியோ சாதனத்தின் உரிமைகளை 50,000 பவுன்களுக்கு வாங்கிய பிறகே அவருடைய சந்தேகம் தீர்ந்து மகிழ்ச்சி அடைந்தார்.

மார்கோனி தம்முடைய ஆவலைப் பூர்த்தி செய்து கொள்ள ரேடியோ சாதனத்தை கண்டுபிடித்தார். அதன் மூலம் தகப்பனார் கொண்டிருந்த கவலைகளையும் போக்கினார். ஆனால் ரேடியோவை கண்டுபிடித்த பிறகு அவருக்கு பல அபாயங்கள் தோன்றாமல் இல்லை. ரேடியோ இயங்குவதால் தங்களுடைய உடலில் மின்சாரம் பாய்வதாக பலர் குற்றம்சாட்டி, பயமுறுத்திக் கடிதங்கள் எழுதினார்கள். அதில் ஒரு ஜெர்மானியன் இங்கிலாந்துக்கே வந்து அவரைக் கொல்லப் போவதாகவும் கடிதம் எழுதியிருந்தான். ஆனால், அக்கடிதம் ரகசியப் போலீசாரிடம் ஒப்படைத்தல் மூலம் அவன் பிடிக்கப்பட்டு பின்னர் காவலில் வைக்கப்பட்டான்.


இன்று மார்கோனியால் உலகத்தில் நடக்கும் பல நிகழ்ச்சிகளையும் செய்திகளையும் நாம் கேட்கிறோம். அவரைப் புகழ்ந்து பேசுகிறோம். பிற்காலத்தில் மார்கோனி இப்படிப் பிரபலம் அடைவார் என்று அவருடைய தகப்பனாரோ, மற்றும் அவரை இளமையில் கண்டவர்களோ கனவு கூடக் கண்டிருக்க மாட்டார்கள். ஏன், அவரே கூட கற்பனை செய்து பார்த்திருக்கமாட்டார் அல்லவா?

.

இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯 இனி பள்ளிகளில் பணிப் பதிவேடுகளை ஆசிரியர்கள் பராமரிக்க தேவையில்லை என பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு

🎯 பி.இ பொதுப்பிரிவு கலந்தாய்வு ஒத்திவைப்பு என அமைச்சர் பொன்முடி அறிவிப்பு.

🎯 விண்ணப்பதாரர் ஒருமுறை பதிவு என யுஜிசி அறிமுகம்

🎯 அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்க திட்ட அறிக்கை தயார்.

🎯நாடு முழுவதும் சுங்கச் சாவடிகள் அகற்றம்; ‘பாஸ்டேக்’ வசூல் முறையை ரத்து செய்ய முடிவு? ‘நம்பர் பிளேட் ரீடர்’ திட்டம் வருகிறது

🎯அமெரிக்காவின் ஆட்சி அதிகாரத்தில் 130 இந்திய வம்சாவளிக்கு முக்கிய பதவி; ஒபாமா, டிரம்பை விட அசத்தும் ஜோபைடன்

🎯டிஎஸ்பியாக பதவி உயர்வின்றி ஓய்வுபெறும் காவல் ஆய்வாளர்கள் - 11 ஆண்டு ‘ஜூனியர்’களுடன், ஒரே ரேங்க்கில் பணி செய்யும் நிலை

🎯 இரண்டு கிலோ சமையல் கேஸ் சிலிண்டர் அங்காடிகளில் விற்க முடிவு

🎯ஆசிய கோப்பை | இந்திய அணியின் இடைக்கால பயிற்சியாளராக விவிஎஸ் லஷ்மண் நியமனம்

🎯உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: 3-வது சுற்றில் நுழைந்தார் சாய்னா


TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

🎯Tamil Nadu engineering counselling for general category to be held after NEET results, says Higher Education Minister Ponmudi

🎯Regional language important in early learning: UGC Chairman

🎯Wind project addition to peak by 2024, says report

🎯Army: Soldiers donated blood to Pak terrorist injured in J&K

🎯Biden announces relief for indebted U.S. university graduates

🎯Asia Cup | V.V.S. Laxman takes charge as interim head coach of Team India in Dravid’s absence

🎯ICC ODI Rankings | Shubman Gill jumps 45 places to 38th; Virat Kohli remains static in fifth

🎯Badminton | Lakshya Sen enters pre-quarters of BWF World Championships
 





இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.

No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...