Tuesday, August 16, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (17/08/2022)

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 17.08.2022.    புதன் கிழமை.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல்
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌷🌷🌷🌷🌷

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னு முயிர்க்கு.
                                                                                                                                                                                                                 
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

   அயலாருடைய குற்றத்தைக் காண்பது போல் தம் குற்றத்தையும் காண வல்லவரானால், நிலைபெற்ற உயிர் வாழ்க்கைக்குத் துன்பம் உண்ட‌ோ?

🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1.தமிழக அரசினால் ‘இயல், இசை, நாடக மன்றம்’ என்ற அமைப்பு எப்பொழுது துவக்கப்பட்டது?

*விடை* : 1955

2.தமிழ்நாடு மாநில திட்டக்குழுவின் தலைவர்?

*விடை* : முதலமைச்சர்

3.காவேரியாற்றின் மிக நீளமான கிளை நதி எது?

*விடை* : பவானி

4.வைகை ஆறு தோன்றுமிடம்?

*விடை* : அகஸ்தியர் குன்றுகள்

5.தமிழ்நாட்டின் 32-வது மாவட்டமாக திருப்பூர் அறிவிக்கப்பட்ட ஆண்டு?

*விடை* : 2008


பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌹An artist Lives everywhere
🌹 கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு.

☘️ All things are difficult before they are easy
☘️ சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்




 இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

காலமறிதலும், கடின உழைப்பும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து குறித்த நேரத்தில் எனது பணிகளை செய்வேன்.
" உழைப்பே உயர்வு தரும்" என்ற பழமொழிக்கேற்ப கடுமையாக உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்
.



 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁

கரடு முரடான மலைப்பாதை... மலைப்பாதையை கரடு முரடு எனும் அடைமொழி சேரக் காரணமாய் கூரிய வளைவுகளும், மேடு பள்ளங்களும்... வளைவிலே இரண்டு வண்டிகள் ஒரே நேரத்தில் பாதையை கடப்பதென்பது மலையிலிருந்து குதிப்பதற்கு சமம்.பேருந்தில் பயணிக்கும்போது, "விழுந்துடுவோமோ..... விழுந்தா அவ்வளவுதான்.....ச்சே..ச்சே...விழாது....." இப்படியெல்லாம் பலவாறு எண்ணங்கள் பயணிகளின் உள்மனதில் 1%விழுக்காடாவது வந்துவிட்டு செல்லும்.அப்படியொரு பாதை..... சரி....சரி....கதைக்கு வந்து விடுகிறேன்.

இந்த மாதிரியான பாதையில் இளைஞன் ஒருவனுக்கு,இரவில் பயணம் செய்யவேண்டிய நிர்பந்தம். மனித வர்க்கத்திற்கே உரித்தான ஒரு வார்த்தைதான் நிர்பந்தம். ஆம்.... காலையில் கூட்டிலுருந்து செல்லும் பறவைக்கு, மாலையில் கூடு திரும்பாமலிருக்கவும், சென்ற இடத்திலேயே தங்கி விடவும் எந்த நிர்பந்தமும் ஏற்படுவதில்லை. இரவிலே தூங்காமல்,பகலைப் போல் சுற்றித்திரிய விலங்குகளுக்கு எந்த நிர்பந்தமும் ஏற்படுவதில்லை.எனவே இந்த சொல் அவைகளுக்கு சொந்தமில்லை.அதற்க்கு சொந்தக்காரன் மனிதன் மட்டுமே.

அப்படி அந்த இளைஞன் செல்லும்போது, திருப்பத்தில் ஏற்பட்ட லேசான தடுமாற்றம்., அவனை பெரிய பாதிப்புக்குள்ளாகியது. "ஆ.....அம்மா" என்று அலறியவனாய் காரிலிருந்து தூக்கி வீசப்பட்டவன் மலைப்பாதையில் உருண்டான். உருண்டவன் பாதையின் ஓர தடுப்பைக் கடந்து சருகினான். அத்தனை வேகமாய் சருகும்போதும்.... வேட்டையாடும் புலி நகங்களை பதிப்பதுப்போல் கல்லின் மீதும்,மண்ணின் மீதும் விரல்களை வைத்து பதித்துக் கொண்டே உருண்டான். வாழ்க்கையில் அவன் செய்த அத்தனைப் புண்ணியங்களுக்கும் பலனாக.. கடைசியாக அவனுக்கு கிடைத்தது ஒரு சிறிய மரக்கிளை. போன உயிர் முதல் வானம் வரை சென்று திரும்பியது போல் ஒரு படபடப்பு மனதில்...எங்கிருக்கிறோம்..என்னவாகப் போகிறோம்...என்று யோசித்து பார்க்கவே முடியாத அளவுக்கு மனதிற்கும் ,கண்ணிற்கும் திரையாய் கும்மிருட்டு..திக்...திக்...திக்....இதயத்தின் துடிப்பு தெளிவாக உணர்ந்தான்.

மூன்று ஆடுகளில், பலிகொடுக்கப்பட்ட இரண்டு ஆடுகளின் துடிப்பைக்கண்ட மூன்றாவது ஆட்டின் நிலைமையிலிருந்தான் அவன்.மரண பீதி, இதுவரை கேள்விப்பட்டிருந்த வார்த்தை இப்போது நேரில். காப்பாற்றுவார் யாருமில்லையா? "காப்பாத்துங்க...காப்பாத்துங்க... "அழுகுரலுடன் ஒரு அபயக்குரல்.

திடீரென்று எங்கிருந்தோ ஒரு அசரீரி, "மனிதா பயப்படாதே...நான் உன்னை காப்பாற்றுகிறேன்.நீ பற்றியிருக்கும் மரக்கிளையை விட்டுவிடு".

கடுமையான தாகத்திற்கு தண்ணீரை விஷம் கலந்து கொடுத்ததைப்போல் ஒரு உணர்வு. என்ன ஆனாலும் சரி மரக்கிளையை விட மாட்டேன் என்பதாய் மனதிற்குள் ஒரு சபதம். மரண பயம்.அதிகப் பசி. மயக்கத்தின் உச்ச நிலை.. கீழே விழாமல் தடுத்திருந்தது மரண பயத்தோடு கூடிய பிடிகள். வியர்வையில் குளியல்.... இப்படியும் அப்படியுமாக இரவை விரட்டிக் கொண்டு மெல்ல கதிரவன் தன் காலை பூமியில் பதிக்க தொடங்கியதும்... முக்கால் மயக்கத்தில் கண் திறந்து பார்த்தான் எங்கிருக்கிறோம் என....

கீழே பார்த்தவனுக்கு பெருமகிழ்ச்சியுடன் கூடிய பேரதிர்ச்சி.ஆம்.. அவன் தொங்கிக் கொண்டிருந்த இடத்திற்கும் பாறையாலான ஒரு தளத்திற்கும் ஒரு முழமே இடைவெளி.

விடிந்தது பொழுது மட்டுமல்ல.அவனின் உள்ளத்தின் நம்பிக்கையும்தான்.அசரீரியின் வார்த்தைகளின் உண்மையையும், தன்னுடைய அவநம்பிக்கையினால் ஏற்பட்ட பேரிழப்புகளையும் எண்ணி மனம் நொந்தான்..தன் மீது தானே சினம் கொண்டான்.

இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் வெளியீடு: 25ம் தேதி பொது கவுன்சலிங் துவக்க

🎯இன்று பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

🎯ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்களுக்கு அக்னிபாதை வாய்ப்பு - ஹரியாணாவில் ஆள்சேர்ப்பு தொடக்கம்

🎯அரசு பேருந்துகளில் பணமில்லா பரிவர்த்தனையில் டிஜிட்டல் டிக்கெட்: தமிழக போக்குவரத்துத் துறை அசத்தல் திட்டம்

🎯மூத்த குடிமக்களுக்கு உதவும் 'Goodfellows' ஸ்டார்ட்-அப்: முதலீடு செய்த ரத்தன் டாடா

🎯மத்திய அரசின் மின்னணு சந்தையில் 2.36 கோடி தேசியக் கொடி ரூ.60 கோடிக்கு விற்பனை

🎯இந்திய எதிர்ப்புகளையும் மீறி இலங்கை அம்பன்தோட்டா துறைமுகம் வந்தது சீன உளவுக் கப்பல்

🎯BWF உலக ஜூனியர் பேட்மிண்டன் தரவரிசை: முதலிடத்தில் இந்திய வீரர் சங்கர் முத்துசாமி






TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎


🎯1.58 lakh candidates in fray for 1.48 lakh government quota engineering seats in Tamil Nadu

🎯Stalin hands over incentives to medal-winning sportspersons

🎯Chennai: CM Stalin opens Independence Day Park on banks of Buckingham Canal

🎯No ideological compromise with BJP, says Stalin before Delhi visit

🎯Chinese vessel Yuan Wang 5 reaches Sri Lanka’s Hambantota port

🎯Scotland becomes first country to make period products free for all

🎯If youngsters reach out to me, I am there to answer their queries: Dhawan

🎯Women's cricket FTP 2022-25 | Team India to play 2 Tests, 27 ODIs, 36 T20Is

🎯Sport turbulence: FIFA suspends All India Football Federation, court panel for Olympic body










இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.

No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...