பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮நாள் : 23.08.2022. செவ்வாய்க்கிழமை .
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
திருக்குறள்: அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல்
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀
.
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
1.'வருதல்' என்ற தொழிற்பெயரின் வேர்ச்சொல் ______?
*விடை* : வா
2."கலகல" வென – இலக்கணக் குறிப்பு தருக?
*விடை* : இரட்டைக்கிளவி
3.கிணற்றுத் தவளைப் போல – இவ்வுவமையின் பொருள் யாது?
*விடை* : அறியாமை
4.எந்த செல் 300 முதல் 500 நாட்களில் செல்களை புதுபிக்கின்றன?
*விடை* : கல்லீரல் செல்கள்
5.தொலைபேசிக் கம்பிகள் தயாரிக்க உதவுவது எது?
*விடை* : சிலிகோ வெண்கலம்
பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
காலமறிதலும், கடின உழைப்பும் வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.
🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து குறித்த நேரத்தில் எனது பணிகளை செய்வேன்.
" உழைப்பே உயர்வு தரும்" என்ற பழமொழிக்கேற்ப கடுமையாக உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்.
நீதிக்கதை
*மணல் எழுத்தும் கல்லெழுத்தும்!*
இரு நண்பர்கள்…
பாலை மணல் வெளியில் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள்.
ஒரு கட்டத்தில் இருவருக்கும் ஒரு விஷயம் குறித்து வாதம் ஆரம்பித்தது. அது வாய்ச்சண்டையாக மாறியது. நண்பனின் கன்னத்தில் அறைந்துவிட்டான் மற்றொருவன்.
அறை வாங்கியன் கோபிக்கவில்லை. அமைதியாக ஒதுங்கிப் போய் மணலில் அமர்ந்தான்.
விரல்களால் இப்படி எழுதினான்:
“இன்று என் உயிர் நண்பன் என் கன்னத்தில் அறைந்துவிட்டான்!”
மற்றவனுக்கு ஒன்றும் புரியவில்லை. இருவரும் நடையைத் தொடர்ந்தார்கள்.
வழியில் ஒரு பாலைவன ஊற்றைக் கண்டார்கள்.
நடந்ததை மறந்து, அந்த ஊற்றில் வெக்கை தீர குளிக்க ஆரம்பித்தார்கள்.
கன்னத்தில் அறை வாங்கியவன் காலை திடீரென்று யாரோ இழுப்பது போன்ற உணர்வு. ஆஹா.. புதைகுழியில் சிக்கிக் கொண்டான் அவன்.
நண்பன் நிலை கண்டதும், பெரும் பிரயத்தனப்பட்டு காப்பாற்றி கரை ஏற்றினான் அவனை அறைந்தவன்.
உயிர் பிழைத்த நண்பன் ஊற்றை விட்டு வெளியில் வந்ததும், அருகில் இருந்த ஒரு கல்லின் மீதமர்ந்தான். ஒரு கல்லை எடுத்து தட்டித் தட்டி எழுத ஆரம்பித்தான்.
“இன்று என் உயிர் நண்பன் என் உயிரைக் காப்பாற்றினான்”
இதையெல்லாம் பார்த்த மற்றவன் கேட்டான்..
“நான் உன்னை அறைந்தபோது, மணலில் எழுதினாய். இப்போது காப்பாற்றியிருக்கிறேன். கல்லில் எழுதுகிறார். ஏனிப்படி? இதற்கு என்ன அர்த்தம் நண்பா?”
நண்பனின் பதில்…
“ *யாராவது நம்மை காயப்படுத்தினால், அதை மணலில் எழுதிவிடு. மன்னிப்பு எனும் காற்று அதை அழித்துவிட்டுப் போய்விடும். ஆனால் யாராவது நல்லது செய்தால் அதை கல்லில் எழுது… காலத்தைத் தாண்டி அது நிலைத்திருக்க வேண்டும்!”*
இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
இனிய காலை வணக்கம் ....✍
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.
No comments:
Post a Comment