Wednesday, August 3, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (04/08/2022)

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 04/08/2022         வியாழக்கிழமை  
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: நடுவுநிலைமை
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷.

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல்.


🌸 பொருள்:
🍀🍀🍀🍀🍀
      
தீமை பயக்காமல் நன்மையே தருவதானாலும் நடுவு நி‌லைமை தவறி உண்டாகும் ஆக்கத்தை அப்போதே கைவிட வேண்டும்.
   
   
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 

1.சென்னை பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட வருடம்?

விடை : 1857

2.சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தின் மொத்த நீளம்?

விடை : 150 கி.மீ

3.மும்மொழித்திட்டம் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு?

விடை : 1965

4.இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடையாள அட்டை என அழைக்கப்படுவது எது?

விடை : முகப்புரை 

5.இந்திய அரசியலமைப்புச்சட்டத்தின் எந்தப் பகுதி குடியுரிமை பற்றி கூறுகின்றன?

விடை : பகுதி -2




பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌷 work while your work play while you play
🌷 காலத்தே பயிர் செய் 

🌹 Time is gold
🌹 காலம் பொன் போன்றது



 இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

    🌸 நேர்மையும் உண்மையும் மனிதனை உயர்த்தும் என்பதை அறிவேன்.

     🌸எனவே எப்பொழுதும் நேர்மையுடனும் உண்மையுடனும் வாழ்ந்து என்றும் வாழ்வில் வெற்றி பெறுவேன்



 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁

வறுமை :

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

  சோம்பலால் வறுமையில் வாடிய ஒருவன் ஒருமகானைச் சந்தித்து, தனது வறுமையைப் போக்கும்படி வேண்டினான்.


அவனது சோம்பலை உணர்ந்த அந்த மகான் அவனுக்கு அதை உணர்த்த ஒரு கதையைக் கூறினார் -


ஒரு மரங்கொத்திப் பறவை, தன் கூரிய அலகால் டொக் டொக்கென்று மரத்தைக் கொத்திக் கொண்டே அந்த மரத்தின் மேல் தாவித் தாவி ஏறியது. அதைப் பார்த்த ஒரு மனிதன், ""மூடப் பறவையே, எதற்காக மரம் முழுவதையும் கொத்திக் கொண்டிருக்கிறாய்? இது வீண் வேலையல்லவா?'' என்று கேட்டான்.


அதற்கு அந்தப் பறவை, ""மனிதனே நான் என் உணவைத் தேடுகிறேன். தேடினால் கிடைக்கும்...'' என்றது.


அவன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, தொடர்ந்து மரத்தைக் கொத்தி, மரத்தில் ஓட்டை போட்டு, அதற்குள் பதுங்கியிருந்த புழுக்களை எடுத்து உண்ண ஆரம்பித்தது.


தனது உணவைச் சாப்பிட்டு முடித்த பிறகு, அந்த மனிதனைப் பார்த்து, ""மனிதனே, நீயும் தேடு... மரத்திலும், மண்ணிலும், நீரிலும் ஏன் எல்லா இடங்களிலும் தேடு. உனக்கும் ஏதாவது கிடைக்கும்'' என்றது.


கதையைச் சொல்லி முடித்த மகான், ""நீயும் இந்தப் பரந்த உலகத்தில் தேடு. உனக்கும் ஏதாவது கிடைக்கும். சோம்பேறியாக இருந்தால் வறுமைதான் கிட்டும்'' என்றார்

இன்றைய முக்கிய செய்திகள்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯மக்கள் நலப் பணியாளர்களின் பணிப் பாதுகாப்பு உறுதி செய்யப்படுமா? - தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

🎯அரசு விரைவுப் பேருந்துகளில்  பார்சல் சேவை தொடக்கம்: ரூ.210 முதல் ரூ.390 வரை கட்டணம்

🎯தண்டோரா’ போட கடுமையான தடை... மீறினால் நடவடிக்கை... - மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலர் கடிதம்

🎯வீட்டுவசதி, போக்குவரத்து துறை சார்பில் ரூ.32 கோடி மதிப்பில் புதிய கட்டிடங்கள் - முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

🎯அக்னிபத் திட்டத்தில் சேர 9.55 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.: இந்திய கடற்படை தகவல்

🎯வானிலை முன்னறிவிப்பு | தமிழகத்தில் 3 நாட்களுக்கு பரவலாக மழை வாய்ப்பு

🎯 செஸ் ஒலிம்பியாட் ஆடவர் ஏ அணி ஹரி கிருஷ்ணா வெற்றி.

🎯 செஸ் ஒலிம்பியாட் மகளிர் ஏ அணி வைஷாலி வெற்றி.

🎯காமன்வெல்த் போட்டி!: பளுதூக்குதலில் 109 கிலோ எடைப்பிரிவில் வெண்கலம் வென்றார் இந்தியாவின் லவ்பிரீத் சிங்..!!

🎯CWG 2022 | தடகளத்தில் முதல் பதக்கம் - உயரம் தாண்டுதலில் வெண்கலம் வென்றார் இந்தியாவின் தேஜாஸ்வின் சங்கர்

🎯CWG 2022 | ஜூடோவில் இந்தியாவுக்கு மேலும்  ஒரு பதக்கம் - வெள்ளி வென்றார் துலிகா மான்




TODAY'S ENGLISH NEWS: 

🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

🎯TN Chief Secretary directs Collectors to ban practice of beating ‘thandora’

🎯University Grants Commission calls for refund of full fee against withdrawal of admission

🎯How Mr. Shubhankar Pathak secured AIR 11 in his very first attempt in Civil Services Exam 2021

🎯Parliament proceedings | Gadkari promises to eliminate toll plazas on National Highways

🎯Union Cabinet approves India’s climate pledges

🎯India set for Agnipath, worry in Nepal over Gorkha recruits

🎯UPSC Key-August 3, 2022: Why you should read ‘Ninja Missile’ or ‘One China Policy’ or ‘Supreme Court Collegium’ for UPSC CSE

🎯Tamil Nadu rains: IMD issues red alert for several districts

🎯Indian mixed 4x400m relay team wins silver with Asian junior record in World U20 Athletics

🎯CWG 2022, Day 6 Highlights: Tejaswin Shankar wins historic Bronze, Silver for Judoka Tulika

🎯CWG 2022: Raised by single mother, a cop, Tulika Maan battles odds to win judo silver medal












இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன்  முதுகலை தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர் , புதுக்கோட்டை மாவட்டம்-622 502
 
அலைபேசி எண் : 9789334642.

No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...