Thursday, August 25, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (26/08/2022)

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 26.08.2022.    வெள்ளிக்கிழமை .
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: நாடு
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌷🌷🌷🌷🌷

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு
                                                                                                                                                                                                                 
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

         மிக்க பசியும், ஓயாத நோயும் (வெளியே வந்து தாக்கி) அழிவு செய்யும் பகையும் தன்னிடம் சேராமல் நல்ல வகையில் நடைபெறுவதே நாடாகும்.
       
   

🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1. கவிஞர் பூமணி எந்த நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றார்?

*விடை* : 'அஞ்ஞாடி 'என்னும் புதினம் ( 2014)

2. "மஞ்சள் குளிப்பாட்டி மையிட்டு முப்பாலும்
மிஞ்சப் புகட்ட மிக வளர்ந்தாய்"  - என்னும் வரிகள் இடம்பெற்ற நூல் எது?

*விடை* :  தமிழ்விடுதூது

3. கவிஞர் சுரதாவின் இயற்பெயர் யாது?

*விடை* : இராசகோபாலன்

4. கம்பரின் காலம் என்ன?

*விடை* : 12-ஆம் நூற்றாண்டு

5. கருப்பு மலர்கள் என்ற நூலின் ஆசிரியர்?

*விடை* : நா. காமராசன்


பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌹 Young calf knows not fear
🌹 இளங்கன்று பயமறியாது

🌷 Youthful impression last through life
🌷 இளமையில் கல்வி சிலை மேல் எழுத்து


இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

காலமறிதலும், கடின உழைப்பும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து குறித்த நேரத்தில் எனது பணிகளை செய்வேன்.
" உழைப்பே உயர்வு தரும்" என்ற பழமொழிக்கேற்ப கடுமையாக உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்
.



 நீதிக்கதை
🍁🍁🍁🍁🍁🍁🍁

பொன்குடமும் மண்குடமும்

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

ஓர் ஊரில் இரண்டு பெண்கள் இருந்தார்கள் இருவரும் தோழிகள். அவர்கள் ஒன்றாகவே இருப் பார்கள்.

பள்ளிக்கூடம் போகும்போதும், சந்தைக்குப் போகும்போதும், ஊருணிக்கு நீர் மொண்டுவரச் செல்லும்போதும் இருவரும் ஒன்றாகவேச் செல்வார்கள்.

நீர் மொள்ளச் செல்லும்போது ஒருத்தி பொன்குடம் எடுத்து வருவாள். மற்றொருத்தி மண்குடம் எடுத்து வருவாள். நீர் மொண்ட பின் பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் வீட்டுக்குத் திரும்பி வருவார்கள்.

ஒருநாள் இருவரும் நீர் தூக்கிக்கொண்டு தத்தம் வீட்டுக்குத் திரும்பிச் சென்று கொண்டிருந்தார்கள். வழியில் சாலையோரத்தில் ஒரு கால்வாய் வெட்டிக் கிடந்தது.

அந்தக் கால்வாயைக் கண்டவுடன் ஒருத்தி கேட்டாள்: "தலையில் உள்ள குடத்தோடு இந்தக் கால்வாயைத் தாண்டவேண்டும். உன்னால் முடியுமா?”

அதற்கு மற்றொருத்தி பதில் சொன்னாள்: ‘'என்னால் முடியும். உன்னால்தான் முடியாது.”


"ஏன் முடியாது? வேண்டுமானால் இருவருமே தாண்டிப் பார்த்துவிடுவோம்" என்றாள் முதலில் கேட்டவன்.

இருவரும் அந்தக் கால்வாயைத் தாண்ட அதன் அருகில் சென்றார்கள்.

முதலில் ஒருத்தி தாவினாள். அவள் கால்வாயைத் தாண்டிவிட்டாள். ஆனால் அவள் தலையில் இருந்த பொன்குடம் கீழே தரையில் விழுந்து தண்ணிர் கொட்டிவிட்டது. குடமும் ஒரு பக்கம் நெளிந்துவிட்டது.

தொடர்ந்து தாவிய மற்றொருத்தியும் கால்வாயைத் தாண்டிவிட்டாள். அவள் தலையில் இருந்த மண்குடம் கீழே விழுந்து உடைந்து விட்டது. சுற்றிலும் தண்ணிர் சிந்தியது.

முதல் பெண் நெளிந்துபோன பொன்குடத்தை எடுத்துக்கொண்டு மீண்டும் தண்ணிர் மொண்டுவர ஊருணிக்குச் சென்றாள். இரண்டாவது பெண், தாயார் கோபிப்பாளே என்று பயந்து அழுது கொண்டே வெறுங்கையோடு வீட்டுக்குத் திரும்பினாள்.


கருத்துரை : - பொன்குடம் உடைந்தால் பொன்னாகவேயிருக்கும். மண் குடம் உடைந்தால் மண்ணாகிவிடும். உயர்ந்த குணம் படைத்தவர்கள் வறுமையடைந்தாலும் பயனுள்ளவர்களாகவே இருப்பார்கள். இழிந்த குணம் படைத்தவர்கள் வறுமையுற்றால் எவ்விதப் பயனும் அல்லாதவர்களாகி விடுவார்கள்.

.

இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯 நிரப்பப்படாத முதுகலை ஆசிரியர் பணியிடங்கள்; தவிப்பில் மாணவர்கள்.

🎯 பழைய காப்பீட்டு அட்டை மூலம் சிகிச்சை பெறலாம் என ஓய்வூதியர்களுக்கு அரசு அறிவிப்பு.

🎯 அண்ணா பல்கலைக்கழகத்தில் இளநிலை திட்டமிடல் படிப்பு என வீட்டு வசதி துறை உத்தரவு

🎯 உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் ஆய்வியல்  நிறைஞர்  படிப்பு விண்ணப்ப பதிவு தொடக்கம்.

🎯அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் செப்.15-ல் தொடங்க முடிவு - வழிகாட்டுதல் வெளியீடு

🎯வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்கும் பணி: பல்வேறு துறை அலுவலர்களை ஈடுபடுத்த சென்னை மாநகராட்சி முடிவு

🎯மக்கள் உணர்வை புரிந்து சேவையாற்ற வேண்டும்: ஐஏஎஸ்.களுக்கு முர்மு அறிவுரை

🎯மாறி வரும் சூழலுக்கேற்ப மாற்றிக்கொள்ள வேண்டும் - தொழிலாளர் மாநாட்டில் பிரதமர் அறிவுரை

🎯தேர்தலின் போது மாணவர்களுக்கு அளித்த வாக்குறுதிப்படி10,000 டாலர் கல்வி கடன் தள்ளுபடி - ஜோ பைடன் அறிவிப்பு

🎯BWF உலக சாம்பியன்ஷிப்: லக்‌ஷயாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார் பிரனாய்

🎯டெஸ்ட் கிரிக்கெட்டில் தனித்துவ சாதனை படைத்த இங்கிலாந்து வீரர் ஆண்டர்சன்!

🎯தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு


TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

🎯Tamil Nadu government notifies rules for employment, rehabilitation of manual scavengers

🎯Nepal stalls recruitment of Gorkhas in Indian Army under Agnipath scheme

🎯Delhi, Dhaka discuss sharing river water

🎯Smart India Hackathon 2022: PM calls for making research, innovation a ‘way of life

🎯India limits wheat flour export to curb price rise

🎯Labour Codes empower workers: PM Modi

🎯In a first, India votes against Russia in UNSC during procedural vote on Ukraine

🎯T20 World Cup 2022 | ICC releases standing tickets for India-Pakistan clash

🎯Anderson, Broad star as England bowls out South Africa for 151

🎯Djokovic misses U.S. Open due to lack of COVID-19 vaccination
 





இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.

No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...