Friday, January 31, 2020

                         பள்ளி காலை வழிபாட்டுச்
 செயல்பாடுகள்
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
நாள் : 01.02. 2020.  சனிக்கிழமை.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
  திருக்குறள்: அதிகாரம்:
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
 சான்றாண்மை.. 

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
டைந்துசால் பூன்றிய தூண்.                                                                                                                                                                                          .
🌸பொருள்:
🌼🌼🌼🌼🌼🌼
      அன்பு நாணம், ஒப்புரவு ,கண்ணோட்டம் ,வாய்மை என்னும் ஐந்து பண்புகளும் சால்பு என்பதைத் தாங்கியுள்ள தூண்களாகும்.
🌸 பொதுஅறிவு:
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
1. இடிதாங்கியில் பயன்படும் உலோகம் எது?
விடை  : தாமிரம்.
2. மிக அதிக கல்வெட்டுகளை பாதுகாத்து வரும் இந்திய நகரம்?
விடை : மைசூர் . 
3. கதிர்வீச்சின் அலகு?
விடை  : ராண்ட்ஜன் .
4. ஒலியின் அலகு?
விடை   : டெசிபல்..
5 . முதலில் மொழிவாரியாக பிரிந்த மாநிலம் எது?
விடை    :   ஆந்திர பிரதேசம்.
பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
1. Every cock will crow upon its during hill .
🌸 தன் ஊரில் யானை அயலூரில் பூனை.
2. Example is better than precept.
🌸 சொல்வதை விட செய்வதே மேல் .
இரண்டொழுக்கப் பண்பாடு:
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🌸 பெரியோருக்கு பணிவதும், பிறருக்கு உதவுவதும் இளைஞருக்கு அழகு என்பதை நான் அறிவேன்.                                                               🌸    எனவே நான் எப்பொழுதும் என்னைச் சுற்றியுள்ள பெரியோர்களிடத்து பணிவாக நடந்து கொள்வேன் . மேலும்  முடிந்தவரை அன்றாடம் பிறருக்கு உதவுவேன்.
நீதிக்கதை:
🌼🌼🌼🌼🌼🌼
**************
ஒரு மிகப்பெரிய அரசருக்கு அவருடைய எல்லா பற்களும் விழுந்து பொக்கை வாயுடன் இருப்பதாக *ஒரு கனவு வந்தது.*

காலையில் பீதியுடன் எழுந்த அரசர் அந்தக் கனவால் என்ன விளைவுகள் நேருமோ என்று பயந்துபோய் முதல் வேலையாக ஒரு நாடி ஜோதிடரை வரவழைத்தார். அந்த நாடி ஜோதிடர் *தனது ஓலைச்சுவடியை எடுத்து, அதில் பொக்கை வாய் கனவு பற்றி விளக்கியிருந்த ஒரு ஓலையை வாசித்துவிட்டு, "அரசே ! உங்கள் மனைவி, குழந்தைகள், சொந்த பந்தங்கள் எல்லாம் உங்களுக்கு முன்பே இறந்து விடுவார்கள் "* என்று பலன் சொன்னார். உடனே அந்த அரசர் மிகவும் கோபமுற்று, *"இவரைப் பிடித்து சிறையில் தள்ளுங்கள்!"*என்று உத்தரவிட்டார்.

அதன் பிறகும் மன்னரின் மனம் சமாதானம் அடையவில்லை. *இன்னொரு நாடி  ஜோதிடரை வரவழைத்து, அவரிடம் தன் பொக்கை வாய் கனவின் அர்த்தம் என்ன என்று வினவினார்.*
அந்த ஜோதிடரும் அதே மாதிரியான ஓலைச்சுவடியைத்தான் வைத்திருந்தார். அவரும் அதைப் பார்த்துவிட்டு, *"மன்னா! உங்கள் சொந்த, பந்தங்களையெல்லாம் விட நீங்கள் நீண்ட காலம் நீடூடி வாழ்வீர்கள்"* என்று பலன் கூறினார். இதனால் மனம் குளிர்ந்த அரசர், அந்த *ஜோதிடருக்கு தகுந்த பரிசுகள் வழங்கி அனுப்பி வைத்தார்.*

*_இருவரும் அதே ஓலையைத்தான் படித்தார்கள், அதே விஷயத்தைதான் சொன்னார்கள்._*

ஒருவர் எல்லோரும் இறந்துவிடுவார்கள் என்றார், இன்னொருவர் எல்லோரையும் கடந்து வாழ்வீர்கள் என்றார். அவ்வளவுதான் வித்தியாசம் !

பேசும் வார்த்தைகளை கவனமுடன் உபயோகித்தால்  ஜெயிக்கலாம்.!!
*நாம் பேசும் வார்த்தைகள் மற்றவரை சந்தோஷப்படுத்த வேண்டுமே* தவிர எந்தவித மனகசப்பையும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வோம் !

இன்றைய முக்கிய செய்திகள் :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🌸 இன்று மத்திய பட்ஜெட்  : நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.
🌸  வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் திருச்சியில் ரூ100 கோடி வர்த்தகம் பாதிப்பு.
🌸  போலி பிஎச்.டி பட்டத்துடன் வலம் வரும் பேராசிரியர்கள்.உண்மைத்தன்மை சான்றை சமர்ப்பிக்க அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்தல்.
🌸  அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகை பதிவேடு முறை : விசாரணை பிப்ரவரி 13 - க்கு ஒத்திவைப்பு.
🌸  குரூப் 4 தேர்வு இன்று முதல் சான்றிதழ்களை பதிவேற்றலாம்.
🌸  பள்ளி - கல்லூரி மாணவர்களுக்கு 12 புதிய விடுதிக் கட்டடங்கள் முதல்வர் திறந்து வைத்தார்.
🌸  சிபிஎஸ்இ பொதுத் தேர்வு :  13, 379 ஆசிரியர்களுக்கு பயிற்சி.
🌸  அண்ணா பல்கலைக்கழகம் இணைப்பு அந்தஸ்து புதுப்பிப்பு : விண்ணப்பிக்க கால அவகாசம் மீண்டும் நீட்டிப்பு.
🌸  அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியீடு.
🌸  டான்செட் நுழைவு தேர்வு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
🌸  குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கு : அரசு பணியாளர் தேர்வாணையம், சிபிசிஐடி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு. தேர்வாணைய ஊழியர் உள்பட 2 பேர் கைது.
🌸  குரூப் 2 தேர்வு முறைகேடு சிபிசிஐடி விசாரணை தொடங்கியது.
🌸  வேளாண் துறைக்கு ரூ 100 கோடியில் புதிய கட்டடங்கள் முதல்வர் எடப்பாடி கே . பழனிசாமி திறந்து வைத்தார்.
🌸  கரோனா வைரஸ் பரவல் : சர்வதேச அவசரநிலை அறிவிப்பு. பலி எண்ணிக்கை 213 ஆக உயர்வு.
🌸  நியூசிலாந்துக்கு எதிரான நாலாவது டி-20 ஆட்டத்திலும் சூப்பர் ஓவர் இந்தியா அசத்தல் வெற்றி.
🌸  ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் இறுதிச்சுற்றில் ஜோகோவிச்சை சந்திக்கிறார் டோமினிக் தீம்.








TODAY'S ENGLISH NEWS:
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌸  CEA sees growth rebonding to 6% economic survey admits to slow down. Seeks end to norms Stifling industries global competitiveness.
🌸  CAA fulfills wish of gandhiji. President tells parliament.
🌸  Pleas to recite only Tamil verses at big temple rejected. Court asks HR&CE department to file report after the event.
🌸  Private schools appoint fresh graduates without b.Ed degree as teachers. Performance of fresh graduates with flair for teaching is better.
🌸  Most number of tamilnadu students qualify in PG  NEET.
🌸  Industry expects a rejig in personal tax rates in budget. Government needs to pay attention to rural demand says SICCI president.
🌸  GDP growth revise downwards for 2018-19.
🌸  WHO declares virus outbreak a global emergency. Our greatest concern is its potential to countries with weaker health systems, it says ; tall increases to 213.
🌸  India has the last laugh as super over Jinx haunts kiwis again.


🌸இனிய காலை வணக்கம் ....✍
      🌹 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
வலையூர்
திருச்சிராப்பள்ளி மாவட்டம்-621005
அலைபேசி எண்: 9789334642 .                                       



Thursday, January 30, 2020

                                                  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்.
நாள் : 31.01 . 2020.  வெள்ளிக்கிழமை.
  திருக்குறள்: அதிகாரம்:   பண்புடைமை.
அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண் பில்லா தவர்                                                                                                                                                                                                                                                
🌸பொருள்:
      மக்களுக்கு உரிய பண்பு இல்லாதவர் அரம் போல் கூர்மையான  அறிவுடையவரானாலும், ஓரறிவுயிராகிய மரத்தைப் போன்றவரே ஆவர். .
🌸 பொதுஅறிவு:
1. எப்போது முதல் இரயில் பாதை இந்தியாவில் நிறுவப்பட்டது?
விடை  : ஏப்ரல் 16    1853.
2. உலகின் மிகப்பெரிய ரயில் நிலையம்?
விடை : கிராண்ட் சென்ட்ரல் டெர்மினல், நியூயார்க் . 
3. இந்தியாவில் இரும்பு பாலம் முதன் முதலில் எங்கு அமைக்கப்பட்டது?
விடை  : லக்னோ .
4. பயணிகளை சுமந்துகொண்டு பறந்த முதல் விமானம் எது?
விடை   : டக்லஸ்    DC - 3.
5 . ஏற்காடு எந்த மலையில் உள்ளது?
விடை    :   சேர்வராயன் மலை.
பழமொழிகள் (proverbs) :
1. Reason rules the world.
🌸 அறிவே உலகை ஆள்கிறது.
2. Rome was not built in a day
🌸 ஒரே நாளில் கோட்டையை பிடிக்க முடியாது .
இரண்டொழுக்கப் பண்பாடு:
🌸 பெரியோருக்கு பணிவதும், பிறருக்கு உதவுவதும் இளைஞருக்கு அழகு என்பதை நான் அறிவேன்.                                                               🌸    எனவே நான் எப்பொழுதும் என்னைச் சுற்றியுள்ள பெரியோர்களிடத்து பணிவாக நடந்து கொள்வேன் . மேலும்  முடிந்தவரை அன்றாடம் பிறருக்கு உதவுவேன்.
நீதிக்கதை:
**************
ஒரு குட்டிக் கதை...!!

கடவுளிடம் ஒரு விவசாயி கடுமையாகச் சண்டைக்குப் போனான்.

”உனக்குப் பயிர்களைப் பற்றி என்ன
தெரியும்? நீ  நினைத்தபோது மழையை
அனுப்புகிறாய். தப்பான சமயத்தில் காற்றை
வீசுகிறாய். உன்னால் பெரிய தொந்தரவாக இருக்கிறது.

பேசாமல்,
இந்த வேலைகளை விவசாயி ஒருத்தனிடம் ஒப்படைத்துவிடேன்!”
என்றான்.

கடவுள் உடனே,
“ அப்படியா? சரி.  இனிமேல் வெளிச்சம், மழை, காற்று எல்லாம் உன் கட்டுப்பாட்டிலேயே இருக்கட்டும்” என்று வரம் அருளிவிட்டுப்
போய்விட்டார்.

விவசாயிக்கு சந்தோஷம் பிடிபடவில்லை.

அடுத்த விதைப்பிற்கான பருவம் வந்தது.

”மழையே பெய்” என்றான்.

பெய்தது.

நிறுத்தச் சொன்னபோது,
மழை நின்றது.

ஈரமான நிலத்தை உழுதான்.

தேவையான வேகத்தில் காற்றை வீசச் செய்து,  விதையை தூவினான்.

மழை, வெயில், காற்று எல்லாமே அவன் சொன்ன பேச்சைக் கேட்டன.

பயிர் பச்சைப்பசேல் என வளர்ந்தது.

வயல்வெளியைப் பார்க்கவே மிகவும் ரம்மியமாக இருந்தது.

அறுவடைக் காலமும் வந்தது.

விவசாயி ஒரு கதிரை அறுத்தான். அதனை உதிர்த்து, திறந்து பார்த்தான்.

அதிர்ந்தான்.

உள்ளே தானியத்தைக் காணவில்லை, மிகச் சிறிய பதர்தான் இருந்தது.

அடுத்தது, அதற்கடுத்தது என்று ஒவ்வொரு தானியக்கதிராக வெட்டி எடுத்து உடைத்துப் பார்த்தால் ஒன்றிலுமே தானியம் இல்லை.

”ஏ கடவுளே!” என்று கோபத்தோடு கூப்பிட்டான்.

“மழை, வெயில், காற்று எல்லாவற்றையுமே மிகச் சரியான விகிதங்களில்தானே பயன்படுத்தினேன்! ஆனாலும், பயிர்கள் பாழாகிவிட்டதே, ஏன்?” எனக்கேட்டான்.

கடவுள் புன்னகைத்தார்:
“என் கட்டுப்பாட்டில் இருந்தபோது காற்று வேகமாக வீசும். அப்போது பயிர்களெல்லாம், அம்மாவை இறுக்கிக்கொள்ளும் குழந்தைகளைப்போல பூமிக்குள் தங்கள் வேர்களை மிக ஆழமாக அனுப்பிப் பிடித்துக்கொள்ளும்.

மழை குறைந்தால், தண்ணீரைத் தேடி வேர்களை நாலாபக்கமும் அனுப்பும்.

போராட்டம் இருந்தால்தான் தாவரங்கள் தங்களைப் பாதுகாத்துக்கொண்டு, வலுவாக வளரும்.

எல்லாமே வசதியாக
அமைத்துக் கொடுத்ததில் உன் பயிர்களுக்கு சோம்பேறித்தனம் வந்துவிட்டது.

தளதளவென்று வளர்ந்ததே தவிர, ஆரோக்கியமான தானியங்களைக் கொடுக்க அவற்றிற்கு தெரியவில்லை!” என்றார்.

வேண்டாமய்யா, உன் மழையும் காற்றும்! நீயே வைத்துக்கொள்” என்று கடவுளிடமே அவற்றைத் திருப்பித் தந்துவிட்டான் விவசாயி.

பிரச்சினைகள் உங்களைப் போட்டு அழுத்தும்போதுதான், உங்களின் திறமை அதிகரிக்கும்.

இருட்டு என்று ஒரு பிரச்சினை இருந்ததால்தான் மின்விளக்கு கண்டுபிடிக்கப்பட்டது.

பயணம் என்பது பிரச்சினையானபோதுதான் வாகனம் உருவானது.

பிரச்சினைகளே இல்லாமல் இருந்துவிட்டால் நம் மூளையின் திறனை எவ்வாறு அறிவீர்கள்?
பிரச்சினை இல்லாத வாழ்க்கைதான் சபிக்கப்பட்ட வாழ்க்கை..
எதிர்பாராத திருப்பங்கள்தானே நம் வாழ்க்கையைச் சுவையாக அமைத்துத் தரமுடியும்...!!!

போராடித்தான் பார்ப்போமே...

இன்றைய முக்கிய செய்திகள் :
🌸 கரோனா வைரஸ் எதிரொலி: தமிழகத்தில் 78 பேர் கண்காணிப்பில் உள்ளனர் - பொது சுகாதாரத் துறை இயக்குனர் குழந்தைசாமி தகவல்
🌸  கேரள மாணவிக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் முதல் நபர்.
🌸  நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம், பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்.
🌸  அனைத்து பிரச்சினைகளையும் விவாதிக்க அரசு தயார் என பிரதமர் நரேந்திர மோடி கருத்து.
🌸  சிறு குறு தொழில்களுக்கு புதிய சலுகைகள் என முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி அறிவிப்பு.
🌸  சமயபுரம் மாரியம்மன் கோயில் தைப்பூச கொடியேற்றம்.
🌸 'அரசு அலுவலகங்களில் கோப்புகளுக்கு விரைந்து தீர்வு கண்டால்தான் பணிகள் வளர்ச்சி அடையும்'.
🌸  டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு முறைகேடு பிப்ரவரி 12-ல் விசாரணை.
🌸  இன்றும் நாளையும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்.
🌸  ஊராட்சித் தலைவர், துணைத்தலைவர் பதவி பல இடங்களில் தேர்தல் மீண்டும் நிறுத்தம்.
🌸  பிஎஸ்என்எல்: 79 ஆயிரம் பேர் இன்று ஓய்வு பெறுகின்றனர்.
🌸  5,8 - ஆம்  வகுப்பு பொதுத்தேர்வுக்கு தடை கோரிய வழக்கு : தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.
🌸 பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 21 இல் தொடங்குகிறது.
🌸  குரூப்-4 தேர்வு நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க முடிவு.
🌸  கல்லூரிகளுக்கு புதிய கட்டடங்கள் முதல்வர் எடப்பாடி கே .பழனிச்சாமி திறந்து வைத்தார்.
🌸  ஆன் - லைன்  வழிக்கல்வி தமிழகத்தில் ஒரே ஒரு கல்வி நிறுவனத்திற்கு அனுமதி. நாடு முழுவதும் 7 கல்வி நிறுவனங்கள் தகுதி.
🌸  நாடு முழுவதிலும் 5 லட்சம் காவலர் பணியிடங்கள் காலி என மத்திய அரசு தகவல்.
🌸  காங்கிரஸ் ஆதரவாளரான எனக்கு பத்மஸ்ரீ விருது அறிவித்த மத்திய அரசுக்கு நன்றி என ஒரு ரூபாய் மருத்துவர் சுஷோவன் பானர்ஜி நெகிழ்ச்சி.
🌸  இந்தியா எங்கள் மீது போரைத் தொடங்கினால் அந்தப் போரை நாங்கள் முடித்து வைப்போம் என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.
🌸  பிப்ரவரி - 4  - ல் யுனெஸ்கோ தலைவர் இந்தியா வருகை.
🌸  இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பிப்ரவரி 7 -இல் இந்தியா வருகை.
🌸  நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியதால் ஐரோப்பிய யூனியனில் இருந்து நள்ளிரவில் வெளியேறுகிறது பிரிட்டன்.

🌸  .உலக விளையாட்டின் சிறந்த வீராங்கனை (2019): விருதை வென்றாா் ராணி ராம்பால்.
🌸  ஆஸ்திரேலிய ஓபன் மகளிர் இறுதிச்சுற்றில் சோபியா கெனின் - முகுருஸா.
🌸  ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பெடரரை வீழ்த்தி இறுதிப் போட்டியில் நுழைந்தார் ஜோகோவிச் .
🌸  4 - ஆவது  டி20 சோதனை முறையில் வீரர்களை களமிறங்கிய இந்திய அணி திட்டம்.

TODAY'S ENGLISH NEWS:
🌸Country's first Corona virus infection confirmed in Kerala. Students from Thrissur district was studying in Wuhan ; hair condition is stable.
🌸  China sees 38 deaths in a day.
🌸  Public exam for classes  V , VIII  challenged.
🌸  Punchapur solar plant project functional soon.
🌸  Consecration ritual to begin on February 1.
🌸  Supreme court allows transport of minerals in Goa for 6 months. Companies get time to transport the minerals for which they had paid royalty.
🌸  4  hydro project violate Ganga flow norms:CWC 'plants violating e-flow requirements.
🌸  Divorce sealed, Brexit finally arrives today. U.K is the first nation ever to leave EU.
🌸  Series clinched, India may look to experiment. Game time for bench-warmers without compromising 'win at all times' policy India in New Zealand.
🌸  Award for Rani Rampal voted world games athlete of the year.
🌸  Djokovic brooksl no resistance from injury -hit Federer.

🌸இனிய காலை வணக்கம் ....✍     
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
வலையூர்
திருச்சிராப்பள்ளி மாவட்டம்-621005
அலைபேசி எண்: 9789334642 .                                       



.

Wednesday, January 29, 2020

                         பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
நாள் : 30.01 . 2020.  வியாழக்கிழமை  .
  திருக்குறள்: அதிகாரம்:   கல்வி. 
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்
கெழுமையும் ஏமாப் புடைத்து.                                                                                                                                                                                                                                                   
🌸பொருள்:
      ஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டுமல்லாமல் அவனுக்கு ஏழு பிறப்பிலும் உதவும் தன்மையுடையது .
🌸 பொதுஅறிவு:
1. எந்த ஆண்டில் ஒலிம்பிக் அறிமுகமானது?
விடை  : 1920 .
2. சென்னை - கொல்கத்தா ___________ தேசிய நெடுஞ்சாலை?
விடை : 2800 கலோரி . 
3. மனித உரிமைகள் தினம் என்று கொண்டாடப்படுகிறது?
விடை  : டிசம்பர் 10 .
4. 'துக்ளக்' மரபை தோற்றுவித்தவர்கள்?
விடை   : கியாசுதீன் துக்ளக்.
5 . அடிமை வம்சத்தின் முதல் அரசர் யார்?
விடை    :   குத்புதீன் ஐபக் .
பழமொழிகள் (proverbs) :
1. Be slow to promise but quick to perform.
🌸 ஆலோசித்து வாக்கு கொடு விரைந்து நிறைவேற்று.
2. Blessing are not valued till they are gone.
நிழலின் அருமை வெயிலில் தெரியும். 
இரண்டொழுக்கப் பண்பாடு:
🌸 கல்வி, கேள்வி இரண்டுமே மனிதனை உயர்த்தும் கருவிகள் என்பதை நான் அறிவேன்.                                                               🌸    எனவே நான் எனது கல்வியை தானாகவும் , அறிவுசார் சான்றோர்களின் கற்பித்தலை கேட்டல் மூலமும் வளர்த்துக் கொள்வேன் .
நீதிக்கதை:
**************
போரில் தோல்வி அடைந்த அரசன் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடி ஒளிந்தான். அரசன் மிகவும் வீரத்துடன் போரிட்டாலும் அவனின் படை மிகவும் சிறியடாக இருந்ததினால் அவனால் வெல்ல முடியவில்லை. எதிரியிடம் மாபெரும் படை இருந்ததினால் வெற்றி பெற்றன். தோல்வியுற்ற அரசனை கொலை செய்யுமாறு அவனை வென்ற அரசன் கட்டளை பிறப்பித்தான். அதனால் அவன் காட்டிற்கு ஓடிச் சென்றுஅங்கு இருந்த ஒரு குகையில் ஒளிந்து கொண்டான்.

தோல்வி கண்ட அரசன் மிகவும் மனவருத்தம் கொண்டான். மனச்சோர்வினால் துணிவு இழந்தான். ஒருநாள் சோம்பலுடன் அரசன் குகையில் படுத்திருந்தான். அந்தக் குகையினுள் ஒரு சிலந்தி வாழ்ந்து வந்தது. அந்த சிறிய சிலந்தியின் செயல் அவன் கவனத்தைக் கவர்ந்தது. குகையின் ஒரு பகுதியினுள்  ஒரு வலையைப் பின்னக் கடுமையாக முயற்சி செய்து கொண்டிருந்தது. சுவரின் மீது ஊர்ந்து செல்லும் போது வலையினில் பின்னிய நூல் அறுந்து சிலந்தி கீழே விழுந்து விட்டது.

இவ்வாறு பலமுறை நடந்தது. ஆனாலும், அது தன் முயற்சியைக் கடைவிடாமல் மறுபடியும் மறுபடியும் முயன்றது. கடைசியில் வெற்றிகரமாக வலையைப் பின்னி முடித்தது. அரசன் “இச் சிறு சிலந்தியே பல முறை தோல்வியடைந்தும் தன் முயற்சியைக் கைவிடவில்லை. நான் ஏன் விடவேண்டும்?

நானோ அரசன். நான் மறுபடியும் முயற்சி செய்ய வேண்டும்” என்று எண்ணினான் மறுபடியம் தன் எதிரியுடன் போர் புரிய தீர்மானித்தான். அரசன் தான் வசித்த காட்டிற்கு வெளியே சென்று தன் நம்பிக்கையான ஆட்களைச் சந்தித்தான்.

தன் நாட்டில் உள்ள வீரர்களை ஒன்று சேர்த்து பலம் மிகுந்த ஒரு படையை உருவாக்கினான். தன் எதிரிகளுடன் தீவிரமாகப் போர் புரிந்தான். கடைசியில் போரில் வெற்றியும் பெற்றான். அதனால் தன் அரசைத் திரும்பப் பெற்றான். தனக்கு அறிவுரை போதித்த அந்த சிலந்தியை அவன் என்றுமே மறக்கவில்லை.

இன்றைய முக்கிய செய்திகள் :
🌸 சீனாவில் இருந்து இந்தியர்களை அழைத்து வர நடவடிக்கை. கரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி.தமிழகம் வந்த 15 ஆயிரம் பேருக்கு மருத்துவ பரிசோதனை.
🌸 27 மாவட்டங்களில் ரூ.1,023 கோடிகள் புதிய துணை மின் நிலையங்கள் முதல்வர் கே பழனிசாமி திறந்து வைத்தார்.
🌸 அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ஒரு 84 கோடியில் 240 புதிய பேருந்துகள் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
🌸 குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தேர்ச்சி இடைத்தரகராக செயல்பட்ட காவலர்.
🌸 புத்தகத்தின் எந்த பகுதியிலிருந்தும் வினாக்கள் இடம்பெறும் என தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு.
🌸 பள்ளி - கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவில் கலைப் போட்டிகள்.
🌸 அரசுப் பேருந்து டிக்கெட் முன்பதிவுக்கு புதிய செயலி முதல்வர் தொடங்கி வைத்தார்.
🌸 அரசுத் துறையில் சேர விரும்புவோர் பயிற்சி பெற உதவும் செல்போன் செயலி. இளைஞர்கள் பதிவு செய்து பயன்பெற அரசு அழைப்பு.
🌸 குரூப்-4 தேர்வு முறைகேடு:பயிற்சி மையங்களை வரன்முறைப்படுத்த தனி சட்டம் என அமைச்சர் டி ஜெயக்குமார் பேட்டி.
🌸 லண்டன் பல்கலைக் கழகங்களில் இந்தியர்கள் மூன்றாம் இடத்துக்கு முன்னேற்றம்.
🌸 டையில் முடிந்த மூன்றாவது டி20  .சூப்பர் ஓவரில் ரோகித்தின் 2 சிக்ஸர்களால்  இந்தியா திரில் வெற்றி.




TODAYS ENGLISH NEWS:
🌸 Centre advices against travel to China ; indigo ,AI cut services.
🌸 Cabinet nod for raising gestation period for abortion to 24 weeks. Enhanced limit will apply to vulnerable women.
🌸 Jayakumar vows  stringent action. Government is naturally concerned: minister.
🌸 'Email accounts of government. Officials hacked'.
🌸 Rohit super sixes trump williamson's effort. India clinches maiden t20i series win in New Zealand via super over;in sensational finish.



🌸இனிய காலை வணக்கம் ....✍        
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
வலையூர்
திருச்சிராப்பள்ளி மாவட்டம்-621005
அலைபேசி எண்: 9789334642 .                                       



Tuesday, January 28, 2020

                                                  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
நாள் : 29.01 . 2020.  புதன்கிழமை  .
  திருக்குறள்: அதிகாரம்:   கல்வி. 
உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்.                                                                                                                                                                                                                                                   
🌸பொருள்:
         செல்வர் முன் வரியவர் நிற்பதுபோல் (கற்றவர் முன்) ஏங்கித் தாழ்ந்து நின்றும் கல்வி கற்றவரே உயர்ந்தவர். கல்லாதவர் இழிந்தவர்.
🌸 பொதுஅறிவு:
1. அரசியலமைப்பின் ஆன்மா மற்றும் இதயம் என வர்ணிக்கப்படும் உரிமை ?
விடை  : அரசியல் பரிகார உரிமை .
2.  சராசரியாக ஒரு நாளைக்கு மனிதனுக்கு தேவையான கலோரி அளவு?
விடை : 2800 கலோரி . 
3. எவரால் நாளந்தா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது?
விடை  : குமார குப்தர் .
4. விரைவு தபால்(speed post) அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு?
விடை   : 1986.
5 .கருட சக்தி III எனப்படும் ராணுவ பயிற்சி இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையே நடைபெற்றது?
விடை    :     இந்தோனேஷியா.
பழமொழிகள் (proverbs) :
1. Desire is the root of all evil.
🌸 ஆசையே எல்லாத் தீங்கிற்கும் காரணம்.
2. Do good and have good.
🌸 நன்மை செய்து நன்மை பெற வேண்டும் . 
இரண்டொழுக்கப் பண்பாடு:
🌸 கல்வி, கேள்வி இரண்டுமே மனிதனை உயர்த்தும் கருவிகள் என்பதை நான் அறிவேன்.                                                               🌸    எனவே நான் எனது கல்வியை தானாகவும் , அறிவுசார் சான்றோர்களின் கற்பித்தலை கேட்டல் மூலமும் வளர்த்துக் கொள்வேன் .
நீதிக்கதை:
**************
தலைக்கனம் பிடித்த ஒரு பண்டிதர் இருந்தார். அடர்த்தியான புருவம் , பெரிய மீசை , அடிக்கடி மொட்டை போட்டுக் கொள்ளுவதால் ஈர்க்குச்சி போல் காணப்படும் முடிகளுடன் கூடிய தலை. இதுவே அவரது அடையாளம் .
வீதியில் அவரைக் கண்டுவிட்டாலே மக்கள் ஓடி ஒளிந்து கொள்வார்கள். ஏனென்றால் கண்ணில் படும் யாராயிருந்தாலும் ஏதாவது கேள்வி கேட்டு மடக்கித் தமது வாதத்திறமையால் மட்டந்தட்டிவிடுவார். இதில் சிலர் அழுதுவிடுவது கூட உண்டு.
ஒரு நாள் அவருக்கு மட்டந்தட்ட யாருமே கிடைக்கவில்லை. ஊர் எல்லை வரை வந்து விட்டார். அங்கே ஒரு மரத்தடியில் தொழில் செய்து கொண்டிருந்த ஒரு நாவிதரைப் பார்த்து விட்டார்.
அவரது உடைகள் நைந்து போய் அவரது வறுமையைக் காட்டினாலும், அதை அவர் சுத்தமாய்த் துவைத்து , நேர்த்தியாய் உடுத்தியிருந்த விதம் அவருக்கு ஒரு தனி கம்பீரத்தைக் கொடுத்தது. இது பண்டிதருக்கு எரிச்சலை மூட்டியது. இன்று இந்த மனிதனைக் கதறி அழவைத்தே ஆகவேண்டுமென்று முடிவெடுத்து அவரது கடையை நெருங்கினார்.
" என்னப்பா ! முடி வெட்ட எவ்வளவு ? சவரம் பண்ண எவ்வளவு ?" என்றார். அவரும் "முடிவெட்ட நாலணா , சவரம் பண்ண ஒரணா
சாமி ! " என்று பணிவுடன் கூறினார். பண்டிதர் சிரித்தபடியே ,
"அப்படின்னா என் தலையை சவரம் பண்ணு " என்று கூறிவிட்டு வெற்றிப் புன்னகையோடு அமர்ந்தார் .
வயதில் பெரியவர் என்பதால் நாவிதர் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை . வேலையை ஆரம்பித்தார் .
பண்டிதருக்கு சற்று ஏமாற்றந்தான். நாவிதர் கோபப்படுவார் என்று எதிர்பார்த்திருந்தார். அவர் அமைதியாக இருக்கவே அடுத்த கணையைத் தொடுத்தார் .
" ஏன்டாப்பா ! உன் வேலை முடி வெட்டுறது . உன் கைகளைத்தான் பயன்படுத்தி வெட்டுறே. அப்புறம் எதுக்கு சம்மந்தமில்லாம உன்னை நாக்கோட சம்மந்தப் படுத்தி நாவிதன்னு சொல்றாங்க ? " இந்தக் கேள்வி அவரை நோகடிக்குமென்று நம்பினார். ஆனால் நாவிதர் முகத்திலோ புன்னகை.
"நல்ல சந்தேகங்க சாமி . நாங்க தொழில் செஞ்சா மாத்திரம் பத்தாது. முன்னால உக்காந்து இருக்கறவங்களுக்கு அலுப்புத் தட்டாம இருக்க நாவால இதமா நாலு வார்த்தை பேசுறதனாலதான் நாங்க நாவிதர்கள். எங்க பேச்சைக் கேக்குறதுக்குன்னே எத்தனை பேர் எங்களைத் தேடி வராங்க தெரியுமா? "
இந்த அழகான பதில் பண்டிதரை மேலும் கடுப்பேற்றியது. அடுத்த முயற்சியைத் துவங்கினார் .
" இதென்னப்பா , கத்தரிக் கோல்னு சொல்றீங்க. கத்தரி மட்டுந்தானே இருக்கு . கோல் எங்கே போச்சு ?''
இந்தக் கேள்விக்கு பலமான சிரிப்பு மட்டுந்தான் பதிலாக வந்தது.
"சாமி ரொம்ப சிரிப்பா பேசுறிங்க " என்று சொல்லி நிறுத்திக் கொண்டார் .
இதிலும் பண்டிதருக்கு ஏமாற்றம் . கொஞ்சம் கடுமையாகவே ஆரம்பித்தார் .
" எப்பப் பாத்தாலும் வெட்டித் தள்ளிக்கிட்டே இருக்குற . ஊர்லயே நீ தான் பெரிய வெட்டிப் பய போலருக்கு " .
இந்த வார்த்தை நாவிதர் மனதைக் கொஞ்சம் காயப்படுத்திவிட்டது . அவர் முகத்தில் கொஞ்சம் வித்தியாசம் .
இதைத்தானே பண்டிதரும் எதிர்பார்த்தார். கொஞ்சம் உற்சாகமாகி அடுத்த நக்கலை யோசித்துக் கொண்டிருந்தார்.
இப்போது நாவிதர் பேச ஆரம்பித்தார். பண்டிதரின் பிரியமான மீசையைத் தொட்டுக் காட்டிக் கேட்டார் ,
"சாமிக்கு இந்த மீசை வேணுங்களா?"
பண்டிதர் உடனே ஆமாம் என்றார்.
கண்ணிமைக்கும் நேரத்தில் பண்டிதரின் மீசையை வழித்தெடுத்து அவர் கையில் கொடுத்தார்.
"மீசை வேணுமுன்னிங்களே சாமி. இந்தாங்க " . பல வருடங்கள் ஆசையாய் வளர்த்த மீசை இப்போது வெறும் மயிர்க் கற்றையாய். அதிர்ச்சியில் உறைந்து போனார்.
நாவிதரோ அடுத்த நடவடிக்கையில் இறங்கினார் . அவரது அடர்த்தியான புருவத்தில் கை வைத்தபடிக் கேட்டார்,
"சாமிக்கு இந்தப் புருவம் வேணுங்களா ?"
இப்போது பண்டிதர் சுதாரித்தார்.
"வேணும்னு சொன்னா வெட்டிக் கையிலல்ல குடுத்துடுவான் " . உடனே சொன்னார்.
"இந்தப் புருவம் எனக்கு வேண்டாம் . வேண்டவே வேண்டாம்".
நாவிதர் உடனே பண்டிதரின் புருவங்களையும் வழித் தெடுத்தார் .
"சாமிதான் புருவம் வேண்டாம்னு சொன்னீங்கள்ல? அதைக் குப்பைல போட்டுடுறேன். சாமி பேச்சுக்கு மறுபேச்சே கிடையாது ". என்றபடி கண்ணாடி அவர் முகத்துக்கு முன்பாகக் காட்டினார்.
நாற்பது வருஷமாய் ஆசை ஆசையாய் வளர்த்த மீசையில்லாமல் , முகத்துக்கு கம்பீரம் சேர்த்த அடர்த்தியான புருவமும் இல்லாமல் , அவருடைய முகம் அவருக்கே மிகுந்த கோரமாக இருந்தது.
கண்கள் கலங்கக் குனிந்த தலை நிமிராமல் ஒரணாவை அவர் கையில் கொடுத்து விட்டு நடையைக் கட்டினார்.
செல்லமே! நம்முடைய அறிவும் திறமையும் மற்றவர்களுக்கு உதவுவதற்கே தவிர மட்டம் தட்ட அல்ல. இதை உணராதவர்கள் இப்படித்தான் அவமானப்பட நேரும்.

இன்றைய முக்கிய செய்திகள் :
🌸  பாகிஸ்தானை வீழ்த்த 10 நாள்களே போதும் என பிரதமர் நரேந்திர மோடி கருத்து.
🌸 அரசு மருத்துவமனைகளில் ரூ 52 கோடியில் கதிரியக்க சிகிச்சை மையங்கள் முதல்வர் எடப்பாடி கே.  பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.
🌸 கடவுச் சீட்டை புதுப்பிக்க குறுஞ்செய்தி வசதி.
🌸 சாலை ஆய்வாளர் பணி விண்ணப்பங்கள் வரவேற்பு.
🌸 அரியலூர் , கள்ளக்குறிச்சியில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள். பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் பழனிசாமி நன்றி. ஓரிரு வாரங்களில் அடிக்கல் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்.
🌸 ஊரக உள்ளாட்சித் தேர்தல்வாக்கு எண்ணிக்கை கேமராப் பதிவுகள் பாதுகாப்பாக உள்ளன என தேர்தல் ஆணையம் தகவல்.
🌸 குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கு: மேலும் இரு தேர்வர்கள் கைது.
🌸 மோட்டார் வாகன ஆய்வாளர் நேர்முகத் தேர்வு : டிஎன்பிஎஸ்சி பட்டியல் ரத்து.
🌸 தஞ்சை பெரிய கோயிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு உயர்நீதிமன்றத்தில் அறநிலையத் துறை தகவல்.
🌸 மத்திய பட்ஜெட் தயாரிப்பில் 5 உயரதிகாரிகள்.
🌸 புதிதாக விண்ணப்பித்த 90 ஆயிரம் பேருக்கு புதிய குடும்ப அட்டை வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தகவல்.
🌸 கரோனா வைரஸ் : 100 - ஐ தாண்டியது பலி எண்ணிக்கை.
🌸 அமெரிக்காவுக்கான இந்திய தூதராக தரன்ஜித் சிங் நியமனம்.
🌸 மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்.
🌸 ஹாமில்ட்டனில் இன்று மூன்றாவது டி-20 ஆட்டம் தொடரை கைப்பற்றி சாதனை படைக்கும் முனைப்பில் இந்தியா. நெருக்கடியில் வில்லியம்சன் குழுவினர்.
🌸 ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் ஜோகோவிச் - பெடரர் மோதல்.
🌸 19 வயதுக்குட்பட்டோர் உலககோப்பை அரையிறுதியில் இந்தியா.



TODAY'S ENGLISH NEWS:
🌸 NPR in new format can create confusion : Nitish. Bihar CM reiterates that state will not implement NRC.
🌸 CA is meant to correct historical injustices : Modi. PM slams critics for spreading rumours.
🌸 Block level teachers' meetings under way  in Trichy district. Exercise being held ahead of
public exams for levels 5th 8th.
🌸 'Temple event will be held in Tamil, Sanskrit'  HR & CE department in forms court.
🌸 Passport holders to receive SMS alert before expiry date.
🌸 'one nation holding up SAARC'Pakistan use of terror as a foreign policy tool has promoted radicalism : Rajnath.
🌸 India looks to seal first T20 I series win in New Zealand. Kiwis will be relying on their healthy record at Hamilton.
🌸 Tyagi's spell takes India to the semifinals.Jaiswal atharva and Aakash chip in to  help defeat Australia convincingly  U - 19 world cup .
🌸 Tennis looks on in awe as Federer does a Houdini.



🌸இனிய காலை வணக்கம் ....✍        
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
வலையூர்
திருச்சிராப்பள்ளி மாவட்டம்-621005
அலைபேசி எண்: 9789334642 .                                       




Monday, January 27, 2020

                         பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
நாள் : 28.01 . 2020.  செவ்வாய்க்கிழமை  .
  திருக்குறள்: அதிகாரம்:   நிலையாமை.
ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுப
கோடியு  மல்ல  பல.                                                                                                                                                                                                                                                 
🌸பொருள்:
         ஒரு பொழுது கூட வாழ்க்கையைப் பற்றி உண்மையைச் சிந்தித்து அறியாதவர்களே,  ஆசைக்கோர் அளவின்றி மனக் கோட்டை கட்டுவார்கள்.
🌸 பொதுஅறிவு:
1. சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் இந்திய அரசால் எப்போது இயற்றப்பட்டது ?
விடை  : 1986 .
2.  உலக சுகாதார தினம்?
விடை : ஏப்ரல் 7 . 
3. சார்லஸ் பாபேஜ் எந்த நாட்டை சேர்ந்தவர்?
விடை  : இங்கிலாந்து .
4. மனித இதயத்தில் காணப்படும் அறைகள் எத்தனை?
விடை   : நான்கு அறைகள்.
5 .தமிழ்நாட்டில் புலிகள் பாதுகாப்பகம் எங்கு அமைந்துள்ளது?
விடை    :     முண்டந்துறை.
பழமொழிகள் (proverbs) :
1. Faith is the force of life.
🌸 நம்பிக்கையே வாழ்க்கையின் உந்து சக்தி.
2. Failure are stepping stones to success.
🌸 தோல்வியே வெற்றிக்கு முதல் படி .
இரண்டொழுக்கப் பண்பாடு:
🌸 மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு என்பதை நான் அறிவேன்                                                               🌸   எனவே ஒரு போதும் ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபட மாட்டேன். எப்பொழுதும்   பகுத்தறிவோடும்  சுயமரியாதையுடனும் நடந்து கொள்வேன்.
நீதிக்கதை:
**************
"ஒரு ஆத்தங்கரையில ரெண்டு ஆலமரம் இருந்துச்சு.
ரொம்ப தூரத்தில இருந்து பறந்துவந்த
குருவி ஒண்ணு,முதல் ஆலமரத்துக்கிட்ட வந்து,'ரெண்டு மாசம்
மட்டும் உன் கிளையில தங்கி முட்டையிட்டு குஞ்சு
பொறிச்சிக்கிடட்டுமா?'ன்னு கெஞ்சிக் கேட்டுக்குச்சு.
ஆனா அந்த மரம்,'அதெல்லாம் முடியாது'னு
கண்டிஷனா சொல்லிருச்சு.
சரினு அடுத்த மரத்துக்கிட்டே போச்சு அந்தக்குருவி.
'இடம்தானே....தாராளமா இருந்துக்கோ!'னு
பெரிய மனசு பண்ணிச்சு அந்தமரம்.
ஒரே மாசம்தான்......ஆத்துல வெள்ளம்
பெருக்கெடுத்து ஓட ஆரம்பிச்சது.அந்த வெள்ளத்த
தாங்க முடியாம அந்த முதல் ஆலமரம் அடிச்சிக்கிட்டு
போக ஆரம்பிச்சது.ஆனா,குருவிக்கு இடம் கொடுத்த
ரெண்டாவது ஆலமரம் நிலையா நிலைச்சு நின்னது.
முதல் ஆலமரத்தைப்பார்த்த குருவி,'அடுத்தவங்களுக்கு
உதவி செய்யாதவனை ஆண்டவனே தண்டிச்சுட்டார்'னு
எல்லா மனுஷங்களும் நினைக்கற மாதிரி நினைச்சது.
ஆனா,வெள்ளத்துல அடிச்சுக்கிட்டுப்போகையிலே அந்த முதல் ஆலமரம் என்ன நினைச்சது தெரியுமா.....
'என் வேரோட பலம் ஒரு மழைக்குக்கூட தாங்காதுன்னு
எனக்குத்தெரியும்.....நீயும் என்னோட சேர்ந்து சாக
வேண்டாம்னுதான் உனக்கு இடம்தர மறுத்துட்டேன்...
ஏ குருவியே!நீ எங்க இருந்தாலும் உன் குடும்பத்தோட
சந்தோஷமா நல்லா இருக்கணும்!'
இப்படித்தான் உண்மையான தியாகிகள் வெளி
உலகத்துக்குத் தங்களை காட்டிக்கறது இல்லை!"
நமக்காக தியாகம் செய்யும் உறவுகளும் உண்டு;
நம் மகிழ்ச்சிக்காக நம்மையே தியாகம் செய்யும்
உறவுகளும் உண்டு!
மகன் மகிழ்ச்சிக்காக தனிக்குடித்தனம் அனுப்பும்
பெற்றோர்களும்;
மகள் மகிழ்ச்சியாக வாழ கடன்பட்டும்கூட
சீர்செனத்தி செய்யும் பெற்றோர்களும்,
சகோதரர்களும்கூட தியாகிகள் தான்!
சிலசமயம் அவர்கள் நம்மைக் கைவிடுவது போலத்
தோன்றினாலும் அது நம் நன்மைக்காகவே இருக்கும்!
ஆனால் கண்டிப்பாகத் தீமைக்காக இருக்காது!!!!

இன்றைய முக்கிய செய்திகள் :
🌸  குரூப்-4 தேர்வு முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டார் மூன்று அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம். மேலும் மூவர் கைது ; இடைத்தரகரை  பிடிக்க சிபிசிஐடி தீவிரம்.
🌸 போடோ -  மத்திய அரசு உடன்படிக்கை. புதிய ஒப்பந்தம் புதிய விடியல்.
🌸 சட்ட மேலவையை கலைக்க ஆந்திர பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்.
🌸 ஏர் இந்தியாவின் 100 சதவீத பங்குகள் விற்பனை என மத்திய அரசு முடிவு.
🌸 உயர்கல்வித் துறை செயலாளராக செல்வி அபூர்வா நியமனம். ஆறு ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.
🌸 திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆட்சிமொழி திட்ட செயலாக்க படிப்பு. வரும் கல்வியாண்டு முதல் அறிமுகம்.
🌸 நீட் தேர்வு  : விண்ணப்ப திருத்த அவகாசம் ஜனவரி 31 இல் நிறைவு.
🌸 பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லை.ஜனவரி 31 பிப்ரவரி 1 இல் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் என அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு.
🌸 நாட்டின் முதல் ஆர்எஸ்எஸ் ராணுவ பள்ளி உத்தரப்பிரதேசத்தில் வரும் ஏப்ரலில் தொடங்க திட்டம்.
🌸 தென்னாபிரிக்காவுக்கு எதிரான தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து.
🌸 ஹாக்கி தொடர் : இந்திய மகளிர் தோல்வி.

TODAY ENGLISH NEWS:
🌸 Government sweetens air India offer puts 100% stake on the table.
🌸 CAA rules expected to seek 'proof of religion' . Government documents could be sought  from applicant .
🌸 Bengal passes anti CAA resolution.
🌸 AUT demands rupees 50000 as pay for guest lectures citing UGC directive. Pay revision for this category of lecturers is long overdue who says association.
🌸 Electrification work over in in cuddalore -thiruvarur stretch. Trial run of locomotive completed successfully on electrified stretch.
🌸 LIC increases market share in first year premium income. Crosses lost fiscals figure with 67 days to pare this year.
🌸 Thought to hit bumrah. Seifert says the Indian speedster mixes it up a lot India and newzealand.



🌸இனிய காலை வணக்கம் ....✍        
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
வலையூர்
திருச்சிராப்பள்ளி மாவட்டம்-621005
அலைபேசி எண்: 9789334642 .                                       



Sunday, January 26, 2020

                          பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
நாள் :27.01 . 2020.   திங்கட்கிழமை .

🌸திருக்குறள் : அதிகாரம்:   புறங்கூறாமை . 
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்னின்று பின்நோக்காச் சொல்.                                                                                                                     🌸பொருள்:
    🌻🌻🌻🌻🌻
   நேருக்கு நேராக ஒருவரது குறைகளைக் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம், ஆனால் பின் விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் நேரில் இல்லாத ஒருவரைப் பற்றி குறை கூறுவது தவறு.
🌸 பொதுஅறிவு:
🌻🌻🌻🌻🌻🌻🌻
1. வைரம் பிரகாசமாக ஒளிரக் காரணம்?
விடை  :    உயர்ந்த ஒளிவிலகலெண் மற்றும் குறைந்த மாறுநிலை கோணம்.
2.  மிகப்பெரிய இந்திய மாநிலம்?
விடை  :  மத்திய பிரதேசம். 
3. இந்தியாவில் மகாத்மா காந்தியின் முதல் சத்தியாகிரகம் எங்கு நடந்தது?
விடை  :  அகமதாபாத்.
4. காக்கைகள் இல்லாத நாடு எது?
விடை   : நியூஸிலாந்து
5 . சணல் அதிகம் ஏற்றுமதி விளைவிக்கும் மாநிலம் எது ?
விடை    : மேற்கு வங்காளம் .
பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🌸    Honour thy  father and mother.

                 அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.
🌸   A broken apothecary a new doctor.

           ஆயிரம் பெயரைக்கொன்றவன் அரை வைத்தியன்.
இரண்டொழுக்கப் பண்பாடு:
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🌸        முயற்சியும்   தொடர்ச்சியான பயிற்சியும் மட்டுமே    வெற்றிக்கு வழி வகுக்கும் என்பதை நான் அறிவேன்.                                          🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் எனது வேலைகளில் முயற்சியும் தொடர்ச்சியான பயிற்சி எடுத்து வெற்றி பெறுவேன்.
 நீதிக்கதை :
🌼🌼🌼🌼🌼
ஒரு நாட்டு  ராஜாவிடம் முத்தன்  வேலை செய்து வந்தான். அந்த ராஜாவுக்கு மிருகங்கள் பறவைகள் பேசும் பாஷை தெரியும். முத்தனுக்கு ஒரேய ஆச்சரியம், எப்படி ராஜா விலங்குகள் பேசுவதை அறிந்து கொள்கிறார் என்பது அவனுக்கு வியப்பாக இருந்தது, முத்தன்  தான் அந்த ராஜாவுக்கு தினமும்  உணவு கொண்டு கொடுப்பான்.  ராஜாவின் உணவில் ஒரு பகுதி மட்டும் தனியாக தனிப் பெட்டியில் ராணியே சமைத்துத் தருவாள்.

ஒரு நாள்  முத்தன் அந்தப் பெட்டியைத் திறந்து பார்த்தான். அந்த பெட்டிக்குள்  ஏதோ  துண்டு தூண்களாக  சமைத்து வைக்கப்பட்டிருந்தன. இது என்னவாக இருக்கும் என்று  ஒரு துண்டை எடுத்து சாப்பிட்டுப் பார்க்கிறான். அதைச் சாப்பிட்டதும் முத்தனுக்கு பறவை மிருகங்களின் பேசும் பாஷை புரிய ஆரம்பிக்கிறது. புதிய  சக்தி கிடைத்ததும் அவன் அரண்மனையில் இருந்து அப்படியே புறப்பட்டு கிளம்பி விடுகிறான்.





அவன் குதிரையில்  கிளம்பிச் செல்லும் வழியில் எறும்புகள்  சாரை சாரையாக போவதை பார்த்தான்,  எறும்பின்  தலைவன் இவனிடம் குதிரையை எறும்புகளை மிதிக்காத வண்ணம் செலுத்தும் படி வேண்டிக் கொண்டது. அவனும் அப்படியே செய்தான். எறும்புகள் நன்றி தெரிவித்து, என்றேனும் உங்களுக்கு  உதவுவேன் என்று கூறியது.



அடுத்து, அவன் செல்லும் வழியில் குளம் இருந்தது அங்கு மூன்று மீன்கள் அழும் குரல் கேட்டது. அவை புதருக்குள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தன. குளத்தில் தாவிக் குதிக்கும் போது அவை தவறிப் புதரில் விழுந்திருந்தன.

அத்தனையும் காப்பாற்றி தண்ணீருக்குள் மீண்டும் எடுத்துவிட்டு கிளம்பினான். மீன்களும் நன்றி தெரிவித்தது.



அவன் கொஞ்ச தூரம் ஒரு காட்டைத் தாண்டிப் போய்க் கொண்டிருந்தான். சின்னஞ்சிறு காகங்களின் குரல் கேட்டது. தாய் காக்கை அவைகளிடம் “நீங்களே உங்கள் உணவைத் தேடிக் கொள்ளுங்கள் ” என்று கூறி மரத்தில் இருந்து கீழே தள்ளி விட்டிருந்தது. அவைகளுக்கு தானியங்களை உணவாக கொடுத்துவிட்டு கிளம்பினான். அவை மிகுந்த மகிழ்ச்சியுடன் நன்றி கூறின.

அதன் பின் காட்டைக் கடந்து அவன் வேறு ஒரு நாட்டுக்குள் நுழைந்தான். ஊரே கோலாகலமாக இருந்தது.


அந்த நாட்டு இளவரசி தன் கணவனைத் தேர்ந்தெடுக்கும் சுயம்வரம் நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தாள். வேலைக்காரனுக்கு ஆசை, எப்படியும் இந்தப்போட்டியில் கலந்துகொண்டு நாம் இந்த நாட்டின் அரசனாக வேண்டும் என ஆசைப்பட்டான்.

போட்டியில் கலந்து கொண்டான். போட்டியில் வெற்றி பெறவில்லை என்றால்   சிறையில் தள்ளிவிடுவார்கள்.

போட்டி ஆரம்பம் ஆனது, அவனை ஒரு குளத்திற்குக் கூட்டிப் போனார்கள். குளத்திற்குள் ஒரு மோதிரத்தை போட்டு அதனை  எடுக்க வேண்டும் என கட்டளையிட்டார்கள் . அவன் பயந்து மலைத்து நின்றான்.

குளத்திற்குள் நீந்த ஆரம்பித்த அவனுக்கு ஆச்சரியம்....! “இதோ உங்கள் மோதிரம்” என்று ஒரு குரல் கேட்டது. ஒரு மீன் தன் வாயில் மோதிரத்தைக் கவ்விக்கொண்டு வந்திருந்தது. அது அவன் புதலிருந்து காப்பாற்றிய மீன்.

இளவரசி அடுத்த போட்டி வைத்தாள். ஒரு மூட்டை அரிசி முழுவதும் தோட்டத்தில் கொட்டப்பட்டு   விடிவதற்குள் ஒரு அரிசி விடாமல் சேகரிக்க  வேண்டும். ஆகா இது நடக்கவே நடக்காது நமக்கு சிறை தான்  என்று முடிவு செய்து அவன் தூங்கி விட்டான். அவன் உதவி இருந்த எறும்புகள் ஒவொன்றாக பொருக்கி ஒரு மூட்டையில் வைத்திருந்தது. அதனால் அதிலும் ஜெயித்து விட்டான்.

இறுதியான போட்டி ஒரு தங்க ஆப்பிள் காய்க்கும் மரம் காட்டில் இருக்கிறது- அதைக் கண்டுபிடித்து ஆப்பிளை எடுத்து வர வேண்டும்.

அவன்  இருட்டும் வரை தேடினான் பசுமை மரங்கள் மட்டுமே இருந்தன. தங்க மரத்தைக் காணவே இல்லை. கவலையுடன் இருட்டியபிறகு தூங்கிவிட்டான். காலையில் எழுந்து பார்க்கிறான்  அவன் அருகில் தங்க ஆப்பிள் இருந்தது. அவனிடம் உதவி பெற்ற காகங்கள் அந்த ஆப்பிளைத் தேடிக் கொண்டு வந்து அவனிடம் போட்டிருந்தன. அவன் அவைகளுக்கு நன்றி தெரிவித்தான்.

எல்லா போட்டியிலும் ஜெயித்ததால் அவனை இளவரசி மணந்து கொண்டாள். அவன் ராஜாவாக அவளுடன் அந்த நாட்டை மகிழ்ச்சியுடன் வெகு நாள் ஆட்சி செய்தான்.


நாம் செய்த உதவி வீணாகாது. அது நமக்கு ஏதாவதொரு வகையில் எப்போதாவது பயன்தரும். நாம் யாரேனும் ஒருவருக்கு உதவி செய்துவிட்டு மறந்து விட்டாலும்கூட அது பின்னொருநாளில் நமக்கு யார் வாயிலாகவாவது கிடைக்கும்.

‘‘செஞ்ச உதவியும் இட்டுவைத்த விதையும் வீணாகப்போகாது’’

மிக மிக அவசியமான நேரத்தில் செய்யப் படும் உதவி இந்த உலகை விட மிகப் பெரியது.

இன்றைய முக்கிய செய்திகள் :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🌸 இந்தியாவின் பன்முகத் தன்மையை பறைசாற்றும் வகையில் டெல்லியில் குடியரசு தின விழா கோலாகல கொண்டாட்டம். பிரம்மாண்டமான வாகன வகுப்புகள். ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய கொடிக்கு மரியாதை.
🌸  மறைந்த யாகேஷ் மற்றும் நண்பர்களுக்கு வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம்  முதல்வர் பழனிசாமி வழங்கினார் .
🌸  திமுக முதன்மைச் செயலாளராக கே என் நேரு நியமனம்.
🌸  திருச்சி உள்பட 6 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிகள் தொடக்கம் என தெற்கு ரயில்வே பொதுமேலாளர் அறிவிப்பு.
🌸  பார்சல் வேனில் குரூப்-4 விடைத்தாள்கள் திருத்தம் . டிஎன்பிஎஸ்சி ஊழியர் கைது.
🌸  கோயில் குடமுழுக்கு விழாவுக்காக நிலத்தை சீர் படுத்திய போது திருச்சி அருகே இரண்டு பழங்கால கற்சிலைகள் கண்டுபிடிப்பு.
🌸  துறையூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒரே நாளில் ரூ 1.03 கோடிக்கு விற்பனை.
🌸  ஓய்வூதிய பலன் தாமதத்துக்கு 12 சதவீத வட்டி வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவு.
🌸  இந்தியா இ - காமர்ஸ் துறையை தவறாக புரிந்து இருக்கிறது என இங்கிலாந்து இந்தியா பிசினஸ் கவுன்சில் கருத்து.
🌸  நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி அரை சதம் விளாசினார் கே எல் ராகுல்



Today English news: 
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🌸 India showcases A - SAT  missile prowess.chinook heavy lift and Apache helicopters Make their debut during the Republic Day fly past.
🌸  Villages use grama sabha to oppose hydrocarbon INO projects.They  fear the ventures will affect fertility of their land.
🌸  TNPSC scam accused remarked scripts any moving vehicle and replaced them.
🌸  PNR advocate general stumbles upon his office history dating back 1828.
🌸  Toll plaza in chengalpattu vandalised after altercation. Dispute between plaza staff and government bus crew.
🌸  Insurgency in northeast down, says PM. Singing of Bru - reang agreement is one of the biggest achievements of my government
🌸  Rahul and Shreyas call the shots after bowlers super show. Jadeja bumarh and shami impress ; New Zealand putss up an insipid performance to fall short of par core ; India cruises to a 2-0 lead in five match series.


இனிய காலை வணக்கம் ....✍     
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
R. MANIKANDAN. BT ASST IN TAMIL.
இரா மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
வலையூர்
திருச்சிராப்பள்ளி மாவட்டம்-621005
அலைபேசி எண்: 9789334642 .                                       



Saturday, January 25, 2020

   
                  71 ஆவது குடியரசு தின  விழா  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
நாள் :26.01 . 2020.   ஞாயிற்றுக்கிழமை 
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻


🌸திருக்குறள் : அதிகாரம்:   நாடு .
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு.                                                                                                                                       🌸பொருள்:
               🌻🌻🌻🌻🌻
   . மிக்க பசியும் ஓயாத நோயும் (வெளியே வந்து தாக்கி) அழிவு செய்யும் பகையும் தன்னிடம் சேராமல் நல்ல வகையில் நடைபெறுவதே நாடாகும்.
🌸 பொதுஅறிவு:
🌻🌻🌻🌻🌻🌻🌻
1. அவசர காலங்களில் சுரக்கும் ஹார்மோன்?
விடை  :    அட்ரினலின்.
2.  நீரில் கரையும் வைட்டமின்கள்?
விடை  :  B1,B2,B6,B12. 
3. மனிதன் ஒரு நாளைக்கு சுவாசிக்கும் காற்றின் அளவு எவ்வளவு?
விடை  :  15000. லிட்டர்.
4. பாசிச கட்சியை தோற்றுவித்தவர்?
விடை   : லெனின்
5 . முதல் உலகப்போருக்குப் பின் வல்லரசாக எழுச்சி பெற்ற நாடு ?
விடை    : ஜப்பான் .
பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🌸    A pen is mightier than a sword

                 கத்தி முனையை விட பேனா முனை வலிமை வாய்ந்தது .
🌸   Sound mind in a sound body .

           உடல்வலி விட்டால் உள்ளம் வலுவுறும்.
இரண்டொழுக்கப் பண்பாடு:
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🌸        முயற்சியும்   தொடர்ச்சியான பயிற்சியும் மட்டுமே    வெற்றிக்கு வழி வகுக்கும் என்பதை நான் அறிவேன்.                          🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் எனது வேலைகளில் முயற்சியும் தொடர்ச்சியான பயிற்சி எடுத்து வெற்றி பெறுவேன்.
 நீதிக்கதை :
🌼🌼🌼🌼🌼
ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்குப் பசியெடுத்தது. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான். மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான்.

மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன. அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது அவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டது.

சட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான். குனிந்து பார்த்தால் தரை வெகு கீழே இருந்தது. ஏற்கெனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டு "யாராவது காப்பாற்றுங்கள்' என்று திரும்பத் திரும்ப அலற ஆரம்பித்தான். உள்ளங்கை வியர்த்து வழுக்க ஆரம்பிக்கும் நிலை வந்து விட்டது.

தற்செயலாக அப்போது அந்தப் பக்கம் ஒரு முதியவர் வந்தார். மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தார். அவன் மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார். கல் பட்டவுடன் வலியில் கீழே பார்த்தவனுக்கு ஆத்திரம் வந்தது. "பெரியவரே, உதவச் சொன்னால் கல்லால் அடிக்கிறீரே. அறிவில்லையா உமக்கு" என்று கோபத்துடன் கேட்டான்.

பெரியவர் பதில் பேசாமல் மற்றொரு சிறிய கல்லை எடுத்து அவன் மேல் எறிந்தார். மேலும் கோபமுற்ற இளைஞன் பெருமுயற்சி எடுத்து கையை வீசி மேலிருந்த கிளை ஒன்றை பலமாக பற்றிக் கொண்டு "நான் கீழே வந்தால் உம்மைச் சும்மா விட மாட்டேன்" என்று எச்சரித்தான்.

பெரியவர் மேலும் ஒரு கல்லை அவன் மேல் வீசினார். இளைஞன் இப்போது இன்னொரு பெருமுயற்சி எடுத்து கிளைமேல் ஏறி விட்டான். விடுவிடுவென இறங்கி வந்த அவன் நேராகப் பெரியவரிடம் வந்தான். அவரை சரமாரியாகத் திட்டினான். "ஏன் அப்படிச் செய்தீர்? உம்மை நான் உதவிதானே கேட்டேன்?" என்றான்.

பெரியவர் அமைதியாக சிரித்துக் கொண்டே "தம்பி.. நான் உனக்கு உதவிதான் செய்தேன்" என்றார். இளைஞன் திருதிருவென முழித்தான்.

பெரியவர் விளக்கினார். "நான் உன்னை முதலில் பார்த்த போது நீ பயத்தால் உறைந்து போயிருந்தாய். உன் மூளை வேலை செய்யவில்லை. நான் கல்லை விட்டு எறிந்ததும் பயம் மறைய ஆரம்பித்து நீ என்னை எப்படிப் பிடிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாய். யோசிக்க ஆரம்பித்தவுடன் நீயாகவே உன்னைக் காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கி விட்டாய். உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு முதலில் புலப்படவில்லை. உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது. அதிலிருந்து உன்னை நான் திசை திருப்பினேன்" என்று சொல்லி விட்டுத் தன் வழியே அவர் போய் விட்டார்.

பயம் ஒருவனை முட்டாளாக்கி விடும்...!
இன்றைய முக்கிய செய்திகள் :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🌸 அகிம்சை வழியை இளைஞர்கள் பின்பற்ற வேண்டும் என குடியரசுத் தலைவர் அறிவுரை.
🌸 பத்ம விருதுகள் அறிவிப்பு. அருண் ஜெட்லி ,சுஷ்மா சுவராஜ், மேரி கோம் உள்ளிட்டோருக்கு பத்மவிபூஷன். டிவிஎஸ் குழும தலைவர்  வேணு சீனிவாசனுக்கு பத்மபூஷன் விருது அளிக்கப்பட்டுள்ளது.
🌸 71 ஆவது குடியரசு தினம் இன்று கொண்டாட்டம். சென்னையில் தேசிய கொடி ஏற்றுகிறார் ஆளுநர். வீரதீர செயல்களுக்கான விருதுகளை முதல்வர் பழனிசாமி வழங்குகிறார்.
🌸 குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கு : 3 தேர்வர்கள் உட்பட 4 பேர் கைது. விரிவடையும் சிபிசிஐடி விசாரணை.சமூக ஊடகங்களினால் வெளிச்சத்துக்கு வந்த முறைகேடு.
🌸 78 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ3. 90 கோடி தொகுப்பு நிதி வழங்கல் என திருச்சி மாவட்ட ஆட்சியர் தகவல்.
🌸 பொதுத்தேர்வுகள் குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை என சிபிஎஸ்சி எச்சரிக்கை.
🌸 தேர்வுப் பணிக்கு ஆசிரியர்களை அனுப்பாவிட்டால் பள்ளிகள் மீது தொடர் நடவடிக்கைகள் என சிபிஎஸ்சி அறிவிப்பு.
🌸 பயோமெட்ரிக் மூலம் வருகைப் பதிவு செய்யாத பள்ளிகள், அலுவலகங்களுக்கு நோட்டீஸ்.
🌸 இந்தியா - பிரேசில் இடையே 15 ஒப்பந்தங்கள் கையெழுத்து.
🌸 நிலவில் சர்வதேச ஆராய்ச்சி மையம் அமைப்பதில் இந்தியர்களின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும் என இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தகவல்.
🌸 தமிழக காவல்துறையைச் சேர்ந்த 24 அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் விருது.
🌸 குடியரசு தின விழாவை முன்னிட்டு ஆளுநர் , அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து.
🌸 மின்வாரியப் பணிக்கான தேர்வு ஆன்லைனில் கட்டணம் செலுத்த 18% ஜிஎஸ்டி வரி.
🌸 டெல்லி தேர்தலில் போட்டியிடுவதில் 164 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள்.
🌸 ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் பிப்ரவரி 15, 16 இல் இந்திய மாநாடு.
🌸 காஷ்மீரில் 6 மாதங்களுக்குப் பிறகு செல்லிடப்பேசி இணையதள சேவை.
🌸 கூடுதலாக ஆறு பில்லியன் டாலருக்கு இறக்குமதி செய்தால் இந்தியாவுக்கு மீண்டும் வர்த்தக முன்னுரிமை அந்தஸ்து என அமெரிக்கா நிபந்தனை.
🌸 கரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரிக்கிறது என சீன அதிபர் ஷி ஜின்பிங் எச்சரிக்கை.
🌸 இந்தியா -  நியூசிலாந்து இடையே இன்று இரண்டாவது டி20 கிரிக்கெட்.
🌸 நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய மகளிர் ஹாக்கி வெற்றி.
🌸 ஆஸ்திரேலியன் ஓபன் மூன்றாவது சுற்றில் நடால் ,சிமோனா ஹாலெப் வெற்றி.


Today English news: 
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🌸India, brazeal ink action plan to deepen strategic partnership. 15 MoUs include deals on investment cooperation and facilitation Bioenergy.
🌸 Kashmir student back in stone age. Internet curbs deny vital resources.
🌸 Plea to ensure enough storage in mettur dam for next 'kuruvai'.
🌸 TNPSC scam : 3 candidates middleman arrested.sleuths seize answer scripts, pens with evaporating ink .
🌸 'All students of classes 5th and 8th appearing for board exams will pass'parents need not worry : Minister.
🌸 Exams : CBSE, warns against rumours.
🌸 Rock art discovered in A.P. caves. 'It belongs to the period between 6000 BC and 16th century A.D'.
🌸 Remember the gift of Ahimsa: president. Kovind urges the youth to pursue constitutional ideal keeping gandhiji  and Ambedkar in mind.
🌸 Gallantry medal for download pilots. President also approves nine shaurya chakras, four of which are posthumous.
🌸 China toll hits 41 ; virus detected in Australia, EU. The number of confirmed infection cases in China stands at 1,287 ; president Xi  jinping says country faces a grave situation
🌸 Men in blue look to keep up memorandum another high scoring match on the cards India in New Zealand.
🌸 Kyrgios sets up 4th round grudge match with Nadal. Pliskova crashes out to pavlyuchenkova on a day of carnage in the women's draw.
🌸 Apurvi wins another gold shooting.

இனிய காலை வணக்கம் ....✍     
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
R. MANIKANDAN. BT ASST IN TAMIL.
இரா மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
வலையூர்
திருச்சிராப்பள்ளி மாவட்டம்-621005
அலைபேசி எண்: 9789334642 .                                       



Friday, January 24, 2020

                         பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
நாள் :25.01 . 2020.   சனிக்கிழமை .
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🌸திருக்குறள் : அதிகாரம்:   அறிவுடைமை . 
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் மிலர்.                                                                                                                    🌸பொருள்:
      🌻🌻🌻🌻🌻
   . அறிவுடையார் (வேறொன்றும் இல்லாதிருப்பினும்) எல்லாம் உடையவர் ஆவர். அறிவில்லாதவர் வேறு என்ன உடையவராக இருப்பினும் ஒன்றும் இல்லாதவரே ஆவர்.
🌸 பொதுஅறிவு:
    🌻🌻🌻🌻🌻🌻🌻
1. மௌரிய வம்சத்தின் தலை சிறந்த மன்னர்?
விடை  :    அசோகர்.
2.  'வெள்ளைக் கண்டம்' என்று அழைக்கப்படும் கண்டம்?
விடை  :  அண்டார்டிகா. 
3. சிங்கத்தை தேசிய சின்னமாக கருதப்படும் நாடு எது?
விடை  :  பெல்ஜியம்.
4. உலகின் மிகப்பெரிய தீவு எது?
விடை   : கிரின்லாந்து
5 . உடல் வெப்பத்தை ஒழுங்குபடுத்தும் ஊட்டச்சத்து ?
விடை    : நீர்  .
பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🌸    It is easier to destroy than create

                 அழிப்பது  சுலபம் ஆக்குவது கடினம் .
🌸     Youth and age never agree .

           இளமையும் முதுமையும் என்றும் ஒத்துப் போவதில்லை.
இரண்டொழுக்கப் பண்பாடு:
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
 🌸   இனிய சொற்களே இன்பம் பயக்கும் . கடுஞ்சொற்கள் துன்பத்தை உண்டாக்கும் என்பதை நான் அறிவேன்.                           🌸 எனவே நான் ஒவ்வொருவரிடமும் எப்பொழுதும்  இனிமையான சொற்களையே பேசுவேன். ஒரு போதும் கடுஞ்சொற்களை  உச்சரிக்க மாட்டேன் அது பிறர் மனதை புண்படுத்தும் என்பதை உணர்ந்து செயல்படுவேன்.
 நீதிக்கதை :
🌼🌼🌼🌼🌼
இன்பம் துன்பம் இரண்டும் கலந்ததே
வாழ்க்கை. !

இறைவனின் சந்நதியில் மனம் உருக வேண்டி மன்றாடினான் பக்தன் ஒருவன். ‘‘ஆண்டவா! கஷ்டங்களே இல்லாத வாழ்க்கையை எனக்குக் கொடு!  சோதனைகளும், வேதனைகளும் ஒரு போதும் என் வாழ்வில் ஏற்பட்டு விடக் கூடாது. தினசரி உன் நாமத்தை ஆயிரெத்தெட்டு முறை எழுதி உன் பாத  கமலங்களில் சமர்ப்பிக்கிறேன்! என்றான். அசரீரியாக ஆண்டவன் குரல் ஒலித்தது. ‘‘ஆயிரெத்தெட்டு முறை என் நாமத்தை எழுத வேண்டாம்! ஒரே  முறை எழுதினால் போதும். ஆனால், நீ எழுதி என் காலில் சமர்ப்பிப்பது ஒரு பக்கக் காகிதமாக இருக்கவேண்டும்!’. பக்தன் திகைத்தான்.

இறைவா! இது என்ன வேடிக்கை! உலகம் முழுதும் தேடினாலும் ஒரு பக்கக் காகிதம் என்று ஒன்று இருக்காதே! அதை உருவாக்கவும் முடியாதே!  புன்னகை புரிந்தார் ஆண்டவன். காகிதம் என்றால் இரு பக்கம் இருப்பது போல் வாழ்க்கை என்றால் இன்பமும் இருக்கும்! துன்பமும் இருக்கும்!  துன்பத்தை எதிர்கொண்டு போராடி பிறகு பெறும் இன்பத்தில்தானே சுவை இருக்கும்! பகல், இரவு, வெயில், மழை, வெளிச்சம், இருட்டு, உஷ்ணம்,  குளிர், சுகம், துக்கம், வாழ்க்கை, மரணம் என மாறி மாறி வருவதுதானே உலகின் நியதி!
எந்த நிகழ்வையும் சமமாக
ஏடுத்துக்கொண்டால்
வாழ்க்கை சுலபம்தான்.
இன்றைய முக்கிய செய்திகள் :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🌸  டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் மோசடிகள் ஈடுபட்டதால் தேர்வு எழுத 99 பேருக்கு வாழ்நாள் முழுவதும் தடை. அரசு ஊழியர்கள் உட்பட மூன்று பேரை கைது செய்தது சிபிசிஐடி.
🌸  அரசியலில் குற்றப்பின்னணி: தடுக்க வழி காணுங்கள்.தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.
🌸  தேசிய அளவிலான சைக்கிள் பந்தயம். திருச்சி அரசு பள்ளி மாணவி மூன்றாம் இடம்.
🌸  டிஎன்பிஎஸ்சி போல காவல் உதவி ஆய்வாளர் தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாக புகார். விசாரணை நடத்த வலியுறுத்தல்.
🌸  பள்ளிகளில் குடியரசு தினவிழாவை சிறப்பாக கொண்டாட அரசு உத்தரவு.
🌸  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அங்கீகாரம் பெறாத பள்ளி மாணவர்களுக்கு அனுமதி இல்லை.
🌸  அகில இந்திய குடிமைப் பணி மாதிரி நேர்முகத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
🌸  வருகைப்பதிவு குறைந்த மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத சிறப்பு அனுமதி கடிதம்.
🌸  கணினி ஆசிரியர் பதவி உயர்வு பட்டியலை அனுப்ப உத்தரவு.
🌸  பள்ளி கல்வித்துறைக்கு எதிரான  12 ஆயிரம்  நிலுவை வழக்குகளை 6 மாதங்களில் முடிக்க அரசு தீவிரம்.
🌸  குடியுரிமை சட்டம் தொடர்பான அச்சத்தைப் போக்க நாடுமுழுவதும் கருத்தரங்குகள். தேசிய சிறுபான்மையினர் ஆணையம் திட்டம்.
🌸  இரும்பு தயாரிப்புகளுக்கு அதிக வரி விவகாரம். இந்தியாவுடன் சுமூக தீர்வை மேற்கொள்ள அமெரிக்கா முடிவு.
🌸  இந்தியாவின் பொருளாதார நெருக்கடியை தற்காலிகமானது.உலகப் பொருளாதார மாநாட்டில் ஐஎம்எஃப் சிஇஓ கருத்து.
🌸  நியூசிலாந்துடன் முதல் டி20 கிரிக்கெட் ஸ்ரேயஸ், லோகேஷ் அதிரடி ஆட்டத்தால் இந்தியா வெற்றி
🌸  ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் நவோமி ஒசாகா அதிர்ச்சி தோல்வி. போராடி வெற்றி பெற்றார் ரோஜர் பெடரர்.



Today English news:  
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🌸 How to crack TNPSC: use disappearing ink marked answer sheets. 99 candidates barred for life, tahsildars held for exam fraud.
🌸  Travel advisory extend to 12 more airports. Health ministry in touch with WH on Corona virus
🌸  Aspirants with criminal past should not get ticket, EC details SC.
🌸 Developing diverse interests leads to non liner learning.
🌸  Industries must be preferred for disruptive changes head.
🌸  Indian scientist must try to work on interesting subjects. Potential to do crucial work in the country: Nobel literature.
🌸  Nepal pictures for informal summit.
🌸  Direct tax collections set to drop for first time in two decades. Only rupees 7.3 lakh crore. Received as of January 23rd. Over 5.5 % below last years collection
🌸  Rahul lays the foundation, Shreyas provides the finishing touch. Munro, Williamson Taylor set up a fighting total for newzealand, but their efforts go in vain : Bumrah impresses again.

இனிய காலை வணக்கம் ....✍       
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
இரா. மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
வலையூர்
திருச்சிராப்பள்ளி மாவட்டம்-621005
அலைபேசி எண்: 9789334642 .                                       



Thursday, January 23, 2020

                         பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
நாள் : 24.01 . 2020.   வெள்ளிக்கிழமை .
🌸திருக்குறள் : அதிகாரம்:   அறிவுடைமை . 
எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.                                                                                                                                       🌸பொருள்:
   . எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும் அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்.
🌸 பொதுஅறிவு:
1. பாரசீகர்கள் இந்தியாவிற்கு கொண்டு வந்தது?
விடை  :    பார்ஸி மதம்.
2.  புதிய கற்கால மனிதன் எந்த நதிக்கரையில் பயிரிட்டான்?
விடை  :  சிந்து. 
3. ரிக் வேதம் உருவான ஆண்டு?
விடை  :  கிமு 2000.
4. கூட்டல் இயந்திரத்தை கண்டுபிடித்தவர்?
விடை   : பாஸ்கல்
5 . கடல் நீரில் இருந்து பிரித்தெடுக்கப்படும் உலோகம் ?
விடை    : சோடியம்  .
பழமொழிகள் (proverbs) :
🌸    Contentment is more than a Kingdom

                  போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து .
🌸     Constant dripping wears away the stone .

           எறும்பு ஊற கல்லும் தேயும்.
இரண்டொழுக்கப் பண்பாடு:
🌸         இனிய சொற்களே இன்பம் பயக்கும் . கடுஞ்சொற்கள் துன்பத்தை உண்டாக்கும் என்பதை நான் அறிவேன்.                                                  🌸 எனவே நான் ஒவ்வொருவரிடமும் எப்பொழுதும்  இனிமையான சொற்களையே பேசுவேன். ஒரு போதும் கடுஞ்சொற்களை  உச்சரிக்க மாட்டேன் அது பிறர் மனதை புண்படுத்தும் என்பதை உணர்ந்து செயல்படுவேன்.
 நீதிக்கதை :
கற்க கசடற’ என்கிறது திருக்குறள். கவனித்தல், கல்விக்கு அத்தனை முக்கியம். கல்வி, கலைகள், பயிற்சிகள்... எதுவாகவும் இருக்கட்டும். கூர்ந்து கவனித்துக் கற்பவன் மட்டுமே அதில் மேதையாக முடியும்; சாதனை புரியவும் முடியும். அதற்கு உதாரணம், அர்ஜூனன். ‘வில்லுக்கு விஜயன்’ எனப் பெயர் எடுத்தவன்... குரு துரோணாச்சாரியாரின் அன்புக்கு பாத்திரமானவன்... அவரின் அத்யந்த சிஷ்யன். அதனாலேயே பலரின் காழ்ப்புக்கும், சிலரின் வெறுப்புக்கும் ஆளானவன். ஒருவன் திறமைசாலியாக மிளிர கவனித்தல் திறன் எவ்வளவு அவசியம் என்பதை துரோணர், மற்றவர்களுக்கு உணர்த்திய சம்பவம் ஒன்று உண்டு.

அது, துரோணருடன் வனத்தில் இருந்த ஆசிரமத்தில் தங்கியிருந்து கௌரவர்களும் பாண்டவர்களும் அப்பியாசம் (பயிற்சி பெறுதல்) பெற்றுக்கொண்டிருந்த காலம். அங்கே வேறு சில அரச குமாரர்களும் வித்தைகள் கற்க வந்திருந்தார்கள். அஸ்திரப் பயிற்சிகளை தம் மாணவர்களுக்கு குரு துரோணர் கற்றுக்கொடுக்கும் பாங்கே அலாதியானது. ஆசிரமத்திலிருந்து மாணவர்களை வெகுதூரம் அழைத்துச் செல்வார். இருந்திருந்தாற்போல் எதையாவது சொல்வார். அவர் சொன்னதை அப்படியே பின்பற்றினால், கற்றுத் தேறிவிடலாம். 

அன்றைக்கும் அப்படித்தான். தன் சிஷ்யர்களுடன் அடர்ந்த வனத்தில் நடந்துகொண்டிருந்தார் துரோணர். உச்சிப்பொழுது நெருங்கிக்கொண்டிருந்தது. மரங்களின் மேல் இருந்த பறவைகள் மனிதர்களின் பெருத்த காலடியோசையில் அதிர்ந்து பறந்து, திரும்ப வந்து அமர்ந்தன. அணில்கள் கிளைவிட்டுக் கிளைக்குத் தாவிக் குதித்து ஓடின. புதர்களில் பதுங்கியிருந்த சிறு முயல்கள் பதறி, குதித்து ஓடின. மாணவர்களுக்கு எல்லையில்லாக் களைப்பு. அன்றைக்கு ஆதவனின் வெப்பம், வனத்தின் குளுமையையும் நீர்த்துப் போகச் செய்திருந்தது. பலருக்கும் வியர்க்கத் தொடங்கியிருந்தது.

ஓர் இடத்தில் நின்றார் துரோணர். மாணவர்களும் தேங்கி நின்றார்கள். தன் பார்வையை மாணவர்களின் மேல் அலையவிட்டார். ஓர் இடத்தில் நிலைகொண்டது அவர் பார்வை. குறிப்பறிந்து, முன்னால் வந்து நின்றான் அர்ஜூனன்.

``காண்டீபா...! வெகு தாகமாக இருக்கிறது. என்ன செய்யலாம்?’’

``ஆணையிடுங்கள் குருதேவா!’’

``ஆசிரமத்தைத் தாண்டி வெகுதூரம் வந்துவிட்டோம். அங்கு போய் நீர் கொணர்வது சாத்தியமில்லாதது. நாம் வரும் வழியில் எங்கோ ஒரு நீர்நிலை இருந்ததாக நினைவு...’’

``ஆம் குருவே! இதோ அருகேதான்... ஒரு காத தூரம்கூட இருக்காது.’’

``அப்படியானால் ஒன்று செய்! அந்தத் தடாகத்துக்குப் போ! எனக்கு நீர் கொண்டு வா!’’

அர்ஜூனன் குருவைப் பணிந்து வணங்கினான். துரோணரின் நீர்க்குடுவையை எடுத்துக்கொண்டான். வந்த வழியே திரும்பி நடந்தான்.

அர்ஜூனன் கண் பார்வையில் இருந்து மறைந்ததும், துரோணர் மாணவர்களை நோக்கித் திரும்பினார்.

``பீமா! அஸ்திரப் பயிற்சியை ஆரம்பிக்கலாமா?’’

பீமன் வாயைத் திறக்கக்கூட இல்லை.

``அர்ஜூனன் இல்லாமலா?’’ கேட்டது துரியோதனன்.

துரோணர், துரியோதனனை வெறித்துப் பார்த்தார்.

``பரவாயில்லை துரியோதனா... அதனால் என்ன?’’

துரியோதனனிடம் இருந்து மறுபேச்சு வரவில்லை. துரோணருக்கு துரியோதனனின் மனநிலை நன்கு தெரியும்.

‘அர்ஜூனனுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை, நான் மற்றவர்களுக்குக் கொடுப்பதில்லை என நினைக்கிறான். என் பிரியத்துக்கு உரியவன் என்பதாலேயே, சிறப்பு கவனம் கொடுத்து அனைத்தையும் கற்றுக் கொடுப்பதாக எண்ணுகிறான். அது தவறு என்பதை உணரச் செய்ய வேண்டும்...’ யோசனையோடு அத்தனை மாணவர்களையும் பார்த்தார் துரோணர்.

தரையில் அமர்ந்தார், ஒரு குச்சியால் மணலில் ஒரு மந்திரத்தை எழுதினார்.

``இன்றைய அஸ்திரப் பிரயோகத்துக்கான மந்திரம் இதுவே... எல்லோரும் மனனம் செய்துகொள்ளுங்கள்.``

சீடர்கள் முன்னே வந்தார்கள். துரோணர் உரக்க அந்த மந்திரத்தை ஒருமுறை சொன்னார். மந்திரத்தை மாணவர்கள் உள்வாங்கிக்கொண்டார்கள். திரும்ப அவர் எழுதி வைத்ததைப் படித்து உறுதி செய்துகொண்டார்கள். குருதேவர் சற்று அவகாசம் கொடுத்தார்.

``என்ன ஆயிற்றா?’’

``முடிந்தது குரு தேவா!’’ மாணவர்களின் குரல்கள் ஒருசேர ஒலித்தன.

``துரியோதனா உன் தனுசைக் கொடு!’’

துரியோதனன் பவ்யத்தோடு தன் வில்லை நீட்டினான். துரோணர், அவராகவே அவனுடைய அம்புராத்தூளியிலிருந்து ஓர் அம்பை எடுத்தார். வில்லில் நாண் ஏற்றினார்.

``இப்போது மனதுக்குள் அந்த மந்திரத்தைச் சொல்லி பாணத்தை விட வேண்டும். என்ன நடக்கிறதென்று பாருங்கள்!’’

அங்கே நடந்தது மாயாஜாலம். துரோணர் விட்ட அம்பு, எதிரே இருந்த ஆல மரத்தை நோக்கிப் போனது. சில விநாடிகள்தான். மரத்தில் இருந்த அத்தனை இலைகளிலும், ஒன்றுவிடாமல் துளையிட்டது. சரியாக ஓர் இலையில் ஒரு துளை! பிறகு, துரோணரிடமே திரும்பி வந்தது.

மாணவர்கள் ஆச்சர்யத்தோடு பார்த்தார்கள். அந்த மந்திரத்தைத் திரும்பத் திரும்பத் தங்களுக்குள் சொல்லி மனனம் செய்துகொண்டார்கள்.

``மேலே செல்லலாமா?’’

துரியோதனன், குருவிடம் இருந்து வில்லையும் அம்பையும் வாங்கிக்கொண்டான். எல்லோரும் குருவின் பின்னே நடந்தார்கள். 

***

அப்போது, அர்ஜூனன் குடுவையில் நீரை நிரப்பிக்கொண்டு துரோணரும் மற்றவர்களும் சென்ற பாதையில் வந்துகொண்டிருந்தான். குருவும் மற்றவர்களும் இருந்த இடத்துக்கு வந்தபோது துரோணர் மணலில் கிறுக்கியிருந்த மந்திரத்தைப் பார்த்தான்; படித்தான்; தன் காண்டீபத்தை எடுத்தான்; மந்திரத்தைச் சொல்லி அம்பு தொடுத்தான். அது துரோணர் விட்டதைப்போலவே ஆல மரத்தை நோக்கிப் பறந்தது. எல்லா இலைகளிலும் சில விநாடிகளில் மற்றொரு துளையைப் போட்டுவிட்டுத் திரும்பி வந்தது.

அர்ஜூனன் திருப்தியோடு, குருவைத் தேடிப் போனான்.

***

எல்லோரும் அன்றைய பயிற்சி முடிந்து திரும்பி வந்துகொண்டிருந்தார்கள். அர்ஜூனன் கொண்டு வந்து தந்திருந்த நீர் அவர்களின் தாகத்தைத் தணித்திருந்தது. பழைய இடத்துக்கு வந்தபோது, அனைவரின் கண்களும் துரோணர் அம்புவிட்ட மரத்தில் நிலைகுத்தி நின்றன. துரியோதனனின் விழிகள் ஆச்சர்யத்தால் விரிந்தன.

``குரு தேவரே! தாங்கள், மரத்தின் இலைகளில் ஓர் துளைதானே இட்டிருந்தீர்கள்... இந்த மர இலைகளில் மற்றொரு துளையும் சேர்ந்திருக்கிறதே!’’

``இன்னுமா உனக்குப் புரியவில்லை. இது அர்ஜூனன் எய்த அம்பில் விளைந்தது.’’

``அது எப்படி? நீங்கள் இதைக் கற்றுக் கொடுத்தபோது அவன் இல்லையே!’’

``எப்படிக் கற்றாய்... நீயே சொல் அர்ஜூனா!’’ துரோணர் அர்ஜூனனை நோக்கிச் சொன்னார்.

அர்ஜூனன், மணலில் குரு எழுதிய மந்திரத்தைப் படித்ததையும், அம்பு எய்ததையும் கூறினான்.

``இப்போது புரிந்ததா? ஒரு மாணவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் அர்ஜூனன். அவனுடைய கவனித்தல் திறனுக்கு இது ஒரு சான்று. இன்றைக்கு நான் அஸ்திரப் பிரயோகத்தில் ஒன்றைக் கற்றுக்கொடுப்பேன் என்றதுமே அவன் கவனம் எல்லாம் அதிலேயே குவிந்துவிட்டது. `எப்போது... எப்போது...’ என என் பயிற்சி குறித்தே யோசித்திருக்கிறான். அந்த கவனித்தல், அவனைத் தரையைப் பார்த்தபடியே நடந்துவரச் செய்திருக்கிறது. மந்திரத்தைப் பார்த்தான்... படித்தான்... கற்றான்...’’

எந்த விஷயத்தையும் கூர்ந்து கவனித்தல் ஒருவனை மேதையாக்கும். எந்த குருவாக இருந்தாலும், தன் சிஷ்யர்களை `கவனி... கவனி... கவனித்தல் முக்கியம்’ என அடிக்காத குறையாக வலியுறுத்துவது இதன் காரணமாகத்தான். துரியோதனன் அன்றைக்கு முக்கியமான பாடத்தைக் கற்றிருந்தான்... மண்டியிட்டு வீழ்ந்து மனதார குருவை வணங்கினான்.



இன்றைய முக்கிய செய்திகள் :

🌸 தமிழகத்துக்குள் எங்கு வேண்டுமானாலும் ரேஷன் பொருள்கள் வாங்கலாம்: அரசாணை வெளியீடு.
🌸 தமிழகத்தில் 36 புதிய தொழில் திட்டங்கள் . தரமணியில் தகவல் தொழில்நுட்ப வளாகம்: 70 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு என  முதல் முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி தகவல்.
🌸 மாநகராட்சி, நகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தோ்தலை நடத்தக்கோரி மனு: 3 வாரங்களில் பதிலளிக்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவு
🌸 ஊராட்சிமன்றத் தலைவர்களுக்கு அறிமுக பயிற்சி வகுப்பு.
🌸 திருச்சியில் நாளை தாழ்த்தப்பட்டோருக்கான வேலைவாய்ப்பு முகாம்.
🌸 60 சதவீத மானியத்தில் சூரிய சக்தி உலர்ப்பான்கள் விவசாயிகள் விண்ணப்பிக்க அழைப்பு.
🌸 பத்தாம் வகுப்பு மாதிரி வினாத்தாள் வெளியீடு .
🌸 அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு மே முதல் வாரத்தில் தேர்வு : டிஆர்பி அறிவிப்பு.
🌸 உபரியாக உள்ள 1706 ஆசிரியர் பணியிடங்கள் அரசிடம் ஒப்படைப்பு .
🌸 தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு : கால அட்டவணை வெளியீடு.
🌸 5 ,8  வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்குத் தேர்வு கட்டணம் கிடையாது.
🌸 குடியரசு தினம் : ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு அதிகரிப்பு .
🌸 காஷ்மீரில் மூன்றாவது நபா்தலையீட்டுக்கு அனுமதியில்லை: வெளியுறவு அமைச்சகம்
🌸 முதல்வருக்கும் எனக்குமான மோதல் புதுவையின் நலனுக்காகவே!: கிரண் பேடி கருத்து.
🌸 சுற்றுச்சூழல் போட்டியில் அம்பத்தூா் அரசுப் பள்ளி முதலிடம்
🌸 புதிய கரோனா வைரஸ் பாம்புகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவல்.
🌸 இந்தியாவுடனான வா்த்தகம் கணிசமாக சரிவு: பாகிஸ்தான்
🌸 டேபிள் டென்னிஸ்: ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற இந்திய அணிகளுக்கு வாய்ப்பு
🌸 ஆஸி. ஓபன்: மெத்வதேவ், நடால் முன்னேற்றம்; சானியா மிா்ஸா வெளியேற்றம்
🌸 முதல் டெஸ்ட்: இலங்கை வெற்றி


Today English news: 

🌸 Tamil Nadu rolls out ration card portability
🌸 Indian nurse tested positive for coronavirus not infected with Wuhan strain.
🌸 President’s J&K order has become fait accompli, says govt in SC .
🌸 The condemned can’t fight endlessly, says CJI
  🌸 Support Centre in bid to throw out illegal immigrants: Raj
🌸  Kaveri river to get new facade. Project approved by committee under smart city mission.
🌸 CB - CID  to investigate scam in group 4 examination .
🌸 'J&k's sovereignty was only temporary.
🌸 Upbat India hits the ground running in  New Zealand.
🌸 India's dependency on kohlii has lessened : shastri.

இனிய காலை வணக்கம் ....✍       
இரா மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
வலையூர்
திருச்சிராப்பள்ளி மாவட்டம்-621005
அலைபேசி எண்: 9789334642 .                                       



Wednesday, January 22, 2020

                         பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
நாள் : 23.01 . 2020.   வியாழக்கிழமை .
🌸திருக்குறள் : அதிகாரம்:   வாய்மை . 
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்கு
பொய்யா விளக்கே விளக்கு.                                                                                                                                       🌸பொருள்:
   . புறத்தின் இருளைப் போக்கும் விளக்குகளை விட அகத்தின் இருளைப் போக்கும் பொய்யாமை என்னும் விளக்கே ஒருவனை உயர்ந்தோன் எனக் காட்டும் ஒளிமிக்க விளக்காகும்.
🌸 பொதுஅறிவு:
1. இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது ?
விடை  :    ஞானபீட விருது.
2.  இந்தியாவில் எங்கு அதிகமாக செம்பு கிடைக்கிறது?
விடை  :  ராஜஸ்தான். 
3. உலக அளவில் அதிகமாக பேசப்படும் முதல் மொழி எது?
விடை  :  மாண்டரின்.
4. உலகிலேயே மிகப்பெரிய நூலகம் எங்கு உள்ளது?
விடை   : வாஷிங்டன் D.C  (அமெரிக்கா)
5 . பஞ்சாப் கேசரி என்று அழைக்கப்பட்ட தேசிய தலைவர் ?
விடை    : லாலா லஜபதி ராய்  .
பழமொழிகள் (proverbs) :
🌸    One good turn deserves another

            உப்பிட்டவரை உள்ளளவும் நினை .
🌸     Love your neighbour as your self

           தன்னைப்போல் பிறரை நேசி
இரண்டொழுக்கப் பண்பாடு:
🌸         இனிய சொற்களை இன்பம் பயக்கும் . கடுஞ்சொற்கள் துன்பத்தை உண்டாக்கும் என்பதை நான் அறிவேன்.                                                  🌸 எனவே நான் ஒவ்வொருவரிடமும் எப்பொழுதும்  இனிமையான சொற்களையே பேசுவேன். ஒரு போதும் கடுஞ்சொற்களை  உச்சரிக்க மாட்டேன் அது பிறர் மனதை புண்படுத்தும் என்பதை உணர்ந்து செயல்படுவேன்.
 நீதிக்கதை :

காட்டில் உள்ள மரத்தின் மேல் சேவல் ஒன்று வாழ்ந்து வந்தது. அது காட்டு சேவல் ஆனதால் கண்டதை எல்லாம் தின்று உடல் கொழுத்துத் திரிந்தது; நல்ல பலசாலியாகவும் இருந்தது. அது, "கொக்கரக்கோ' என்று கத்தினால் காடே அதிரும்.


அது இருந்த மரத்தின் வழியாக தினந்தோறும் நரி ஒன்று செல்லும். போகும் போது வரும்போது ""எப்படியாவது இந்தக் கொழுத்த சேவலைப் பிடித்து, ஒருநாள் உணவாக்கிக் கொள்ள வேண்டும்,'' என்று எண்ணியவாறு ஆசையுடன் சேவலைப் பார்க்கும். சேவலுக்கு நரியின் பார்வை புரிந்தது. அதனால் தனக்கு என்றேனும் ஆபத்து நேரிடலாம் என்று கருதி அது எச்சரிக்கையுடன் இருந்தது.

சேவல் அந்த மரத்தை விட்டு இறங்காத காரணத்தினால், தன் எண்ணத்தை ஈடேற்ற முடியாமல் தவித்துப் போயிற்று நரி.
இந்தச் சேவலைத் தந்திரத்தால்தான் வளைத்துப் போட்டு, தனக்கு விருந்தாக்கிக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தது. ஆகவே, ஒருநாள் நரி அவ்வழியே வரும்போது அது மரத்தின் கீழ் அமர்ந்து சேவலிடம் பேச ஆரம்பித்தது.

""அழகிய சேவலே! உனக்கு விஷயமே தெரியாதா? இன்று நம்முடைய சிங்கராஜா ஒரு உத்தரவு போட்டிருக்கிறார். இன்று முதல் ஒரு வருடத்துக்கு யாரும், யாருக்கும் பகை கிடையாது. இது சமாதான ஆண்டு. எந்த விலங்குக்கும், மற்ற விலங்கால் பிரச்னை வரக் கூடாது. பிரச்னை வந்தால் கடும் தண்டனை தரப்படும்.

""எனவே, எதிரிகளாக இருந்த விலங்குகள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து விட்டன. அவை காட்டோர அருவிப் பகுதியில் நிலா வெளிச்சத்தில் ஊலல்லல்லா பாட்டுப் பாடி ஆடிக் கொண்டிருக் கின்றன. எல்லா விலங்குகளும் ஆளுக்கு ஒன்றை ஜோடி சேர்த்துக் கொண்டன. எனக்குத்தான் யாரும் இல்லை என்று நினைத்தபோது, நீ என் ஞாபகத்துக்கு வந்தாய். வா, நாமிருவரும் சேர்ந்து அருவிக் கரைக்குப் போய் மற்ற விலங்குகளுடன் சேர்ந்து ஜாலியாக இருக்கலாம்,'' என்றது.


நரி பேசப் பேச சேவல் அதைப் பற்றிச் சிறிதும் கவனிக்காமல் வேறு ஒரு உயர்ந்த கிளைக்குச் சென்று தலையை இங்குமங்குமாக ஆட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது.

அதைப் பார்த்த நரிக்கு எரிச்சலாக இருந்தது.
""நான் எவ்வளவு இனிய செய்தியைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நீ என்னவென்றால் மரக்கிளைக்கு மேலே சென்று எதையோ வேடிக்கைப் பார்க்கிறாயே,'' என்றது.

 "நரியாரே, நீங்கள் சொன்னதைக் கேட்டேன். ஆனால், அதைவிட முக்கியமான சமாசாரத்தை நான் கவனித்துக் கொண்டிருக்கிறேன்,'' என்றது.

""அதை விட முக்கியமான சமாசாரமா? அது என்ன.....?'' என்றது நரி.

""வெகு தூரத்தில் இரண்டு உருவங்கள் ஓடி வந்து கொண்டிருக்கின்றன!'' என்றது சேவல்.

""அவை எப்படி இருக்கின்றன?'' என்று பயத்துடன் கேட்டது நரி.
""இரண்டும் நாக்கை தொங்க விட்டிருக்கின்றன. அதன் கண்கள் பளபளவென ஜொலிக்கின்றன. அங்கும், இங்கும் பார்த்து எதையோ மூக்கால் முகர்கின்றன. அதற்கு நான்கு கால்கள் இருக்கின்றன. உங்களை விட உயரமாக இருக்கின்றன. ஆ... இப்போது கூர்மையான கோரைப் பற்களும் தெரிகின்றன. ஒருவேளை அவை ஓநாய்களோ,'' என்றது சேவல்.

""நாசமாப் போக, அவை ஓநாய்களில்லை. வேட்டை நாய்கள். பார்த்தால் கடித்துக் குதறி விடும்,'' என்று கூறியவாறு ஓட்டமெடுத்தது நரி.
நரி ஓடுவதை பார்த்து சேவல் சிரித்தது.

இன்றைய முக்கிய செய்திகள் :
🌸 தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14-ம் தேதி வெளியிடப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.
🌸 இந்தியா என்றுமே மதச்சாா்பற்ற நாடு: என ராஜ்நாத் சிங் கருத்து.
🌸 சிஏஏ-வுக்கு தடைவிதிக்க முடியாது: அரசியல்சாசன அமா்வுக்கு மாற்றம்- பதிலளிக்க மத்திய அரசுக்கு 4 வாரம் அவகாசம்


🌸 335 தலைவா் பதவியிடங்களுக்கு ஜன. 30-இல் மறைமுகத் தோ்தல்: மாநிலத் தோ்தல் ஆணையம் அறிவிப்பு
🌸 தஞ்சை குடமுழுக்கு பிப். 5-ந்தேதி உள்ளூர் விடுமுறை - கலெக்டர் அறிவிப்பு.
🌸 தமிழில் குட முழுக்கு விவகாரம்- அறநிலையத்துறை பதில் அளிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு.
🌸 விண்வெளிக்கு மனித ரோபோ அனுப்பும் இஸ்ரோ.
🌸 குடியரசு தினம் - பிரதமர் மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சி ஒலிபரப்பு நேரம் மாற்றம்.
🌸 43வது புத்தக திருவிழா: 9ம் தேதி எடப்பாடி தொடங்கி வைக்கிறார் .
🌸 தனி சாப்ட்வேர்களை உருவாக்கி ரயில்வே டிக்கெட் முன்பதிவு: இ-டிக்கெட் மோசடியில் மாதம் ரூ.15 கோடி வருவாய்...3,000 வங்கி கிளைகளின் கணக்கில் புகுந்து கைவரிசை.
🌸 ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் இளம் வீரரான சர்பராஸ் கான் முச்சதம் அடிக்க, உத்தர பிரதேசம் அணிக்கெதிராக மும்பை முன்னிலை பெற்று போட்டியை டிரா செய்தது.
🌸 ஆஸி. ஓபன்: 3-ஆவது சுற்றுக்கு ஆஷ்லி பல்டி, ஒஸாகா, செரீனா, ஜோகோவிச், பெடரா் தகுதி
🌸 19 வயதுக்குட்பட்டோா் உலகக் கோப்பை: காலிறுதியில் நியூஸி, ஆப்கானிஸ்தான்
🌸 தேசிய முதியோா் தடகளம்: உடுமலை வீரா் சிறப்பிடம். மஞ்சள்

Today English news:  
🌸 On Valley outreach, Union Ministers promise jobs and education.
🌸 Supreme court refuse to stay citizenship law without hearing the government. CJI indicates the issue maybe eventually referred to constitution Bench.
🌸 Centre seeks guidelines on execution of convicts. MAH moves court appealing for a deadline of 7 days.
🌸 Government arts and Science colleges get full time principles.
🌸 Deadlock over rates hits distribution of of voter ID cards. Arasu cable demanding more money from the EC.
🌸 Science doesn't stop because you have received big award. Nobel literate venki ramakrishnan made history after his shift to biology.
🌸 17 dead as virus spreads to more places.
🌸  Serena and federer storm into the third round.
🌸 Sarfaraz masterminds Mumbai's coup . His unbeaten triple centry helps the host overhaul UP's gargantuan total.

இனிய காலை வணக்கம் ....✍   
    
இரா மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
வலையூர்
திருச்சிராப்பள்ளி மாவட்டம்-621005
அலைபேசி எண்: 9789334642 .                                       



Tuesday, January 21, 2020

                          பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
நாள் : 22.01 . 2020புதன்கிழமை .
🌸திருக்குறள் : அதிகாரம்:கேள்வி .
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.                                                                                                                                       🌸பொருள்:
   எவ்வளவு சிறிதே ஆயினும் நல்லவற்றைக் கேட்டறிய வேண்டும். கேட்ட அந்த அளவிற்கு அவை நிறைந்த பெருமையைத் தரும்.
🌸 பொதுஅறிவு:
1. இரு குவிய கண்ணாடியை உருவாக்கியவர் ?
விடை  :    பெஞ்சமின் பிராங்கிளின்.
2.  மனித உடலில் அமில காரச் சமநிலையை ஒழுங்குபடுத்தும் உறுப்பு?
விடை  :  சிறுநீரகம். 
3. முதல் இசைக்கருவி எது?
விடை  :  குழல்.
4. பிறந்த குழந்தைக்கு முதலில் கொடுக்கப்படும் நோய் தடுப்பூசி?
விடை   : BCG
5 . பிரஞ்சு கிழக்கிந்திய கம்பெனி தொடங்கப்பட்ட ஆண்டு?
விடை    : 1664 .
பழமொழிகள் (proverbs) :
🌸    Better bend the neck than bruise the fore head

             தாழ்ந்தது நின்றால் வாழ்ந்து நிற்பாய்.
🌸     Rome was not built in a day

           ஒரே நாளில் கோட்டையை பிடிக்க முடியாது
இரண்டொழுக்கப் பண்பாடு:
🌸         பொறுமையும் பணிவும் நன்மதிப்பை உண்டாக்கும் என்பதை நான் அறிவேன்.                                                  🌸 எனவே நான் ஒவ்வொருவரிடமும் எப்பொழுதும்  பொறுமையாகவும் பணிவாகவும் நடந்து கொள்வேன்.பொறுமைக்கும் பணிவுக்கு எடுத்துக்காட்டாய் பிறர் போற்றும் வகையில் நடந்து கொள்வேன்.
 நீதிக்கதை :
ஒரு பிரபல தொழில் அதிபரைப் பார்த்து ஒரு இளைஞர். உங்களது வெற்றியின் ரகசியம் என்ன என்று சொல்ல முடியுமா ? என்று கேட்டார் .
தொழிலதிபர் சொன்னார்: ரகசியம் என்று எதுவுமில்லை வாய்ப்புக் கிடைக்குமா என்று எதிர் பார்த்து கதவைத் தட்டிக் கொண்டேதான் இருக்க வேண்டும் .
இளைஞன் கேட்டான்: வாய்ப்பு எப்போது கிடைக்கும்?
கதவு எப்போது திறக்கும் என்று எப்படி கண்டுபிடிப்பது ?
தொழில் அதிபர் சொன்னார்: “கண்டுபிடிக்க வழியில்லை;
திறக்கும் வரையில் தட்டிக் கொண்டு இருப்பதுதான் வழி.”


இன்றைய முக்கிய செய்திகள் :
🌸 இந்தியா - நேபாளம் இடையே சோதனைச் சாவடி . இரு நாட்டு பிரதமர்கள் கூட்டாக திறந்து வைப்பு.
🌸 11 வட்டங்களிலும் ஜனவரி 24-ல் அம்மா திட்ட முகாம்.
🌸 தமிழ்ப் பல்கலைக் கழகம் சார்பில் தென்னாப்பிரிக்காவில் தமிழ் ஆசிரியர்களுக்கு பயிற்சி.
🌸 புதிய ஸ்மார்ட் செல்லிடப்பேசிகளில் இந்திய செயற்கைக்கோள் வழிகாட்டும் வசதி என இஸ்ரோ தகவல்.
🌸 அரசு மருத்துவமனைகளில் பயோமெட்ரிக்  நடைமுறைப்படுத்த மூன்று மாதங்கள் அவகாசம்.
🌸 5,8  வகுப்பு பொதுத்தேர்வு : படிக்கும் பள்ளிகளிலேயே எழுதலாம்.
🌸 வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு : இருப்பிடச் சான்று ஆவணப் பட்டியலில் ஆதார் இல்லை. புதிய வாக்காளர் பெயர் சேர்ப்பு தொடர் சிக்கல்.
🌸 அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் விரிவுரையாளர் பணி : விண்ணப்பிக்க பிப்ரவரி 12 கடைசி.
🌸 என்பிஆர் தகவல்களை தெரிவிப்பது கட்டாயம் இல்லை என மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி அறிவிப்பு.
🌸 இந்தியாவில் பிரேசில் அதிபர் நான்கு நாட்கள் சுற்றுப்பயணம் ஜனவரி 24 தொடங்குகிறார்.
🌸 ஆஸ்திரேலிய ஓபன் : நடால் அதிரடி வெற்றி . ஷரபோவா வெளியேற்றம் .

🌸 19 வயதுக்குட்பட்டோர் உலககோப்பை காலிறுதியில் இந்தியா.


Today English news: 
🌸Not enough is known about China coronavirus strain, says WHO official
🌸.JD(U)’s Pawan Varma questions tie-up with BJP in Delhi polls.
.🌸Supreme Court for curbs on powers of Speakers.
🌸Nepal PM Oli positive of resolving all 'pending issues' with India.
 🌸Why it took Kejriwal 6 hours to file nomination papers for Delhi polls.
 🌸Trump lauds US economy in Davos, says little on climate woes.
🌸Prithvi Shaw, Sanju Samson replace Shikhar Dhawan for NZ series.
🌸 India ODI squad for NZ: Dhawan ruled out, Prithvi Shaw in


இனிய காலை வணக்கம் ....✍        
இரா மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
வலையூர்
திருச்சிராப்பள்ளி மாவட்டம்-621005
அலைபேசி எண்: 9789334642 .                                       



Monday, January 20, 2020

                         பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
நாள் : 21.01 . 2020செவ்வாய்க்கிழமை .
🌸திருக்குறள் : அதிகாரம்:   காலமறிதல் .
ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின்.                                                                                                                                       🌸பொருள்:
   ( செயலை முடிப்பதற்கு ஏற்ற)காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால் உலகமே வேண்டும் எனக் கருதினாலும் கைகூடும்.
🌸 பொதுஅறிவு:
1. கடிகார ஊசலின் இயக்கம் என்பது ?
விடை  :    கால ஒழுங்கு மாற்றம்.
2.  மனித உடலில் இருந்து வெளியேறும் சிறுநீரின் சராசரி அளவு?
விடை  :  1.5 லிட்டர். 
3. ஒரு சதுரப் பொருளின் புவியீர்ப்பு மையம் எங்கு காணப்படும்?
விடை  :  மூலைவிட்டங்கள் ஒன்றையொன்று சந்திக்கும் புள்ளி.
4. ராஜ்ய சபா உறுப்பினர்களின் எண்ணிக்கை?
விடை   : 250
5 . ஒரு ஒளியாண்டு என்பது?
விடை    : 9.46 ×10 .12 கி.மீ .
பழமொழிகள் (proverbs) :
1. Little strokes fell great oaks
🌸 அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் ன .
2. Look before you leap ..
🌸 ஆழம் தெரியாமல் காலை விடாதே  .
இரண்டொழுக்கப் பண்பாடு:
🌸         பொறுமையும் பணிவும் நன்மதிப்பை உண்டாக்கும் என்பதை நான் அறிவேன்.                                                  🌸 எனவே நான் ஒவ்வொருவரிடமும் எப்பொழுதும்  பொறுமையாகவும் பணிவாகவும் நடந்து கொள்வேன்.பொறுமைக்கும் பணிவுக்கு எடுத்துக்காட்டாய் பிறர் போற்றும் வகையில் நடந்து கொள்வேன்.
 நீதிக்கதை :
கடலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் செருப்பு காணாமல் போய்விட்டது. அவன் உடனே கடற்கரையில், “இந்தக் கடல் மாபெரும் திருடன்...!” என எழுதிவிட்டான்.
கொஞ்சம் தூரத்தில் ஒருவர் அதிகமாக மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அவர் நினைத்ததை விடவும் அதிகமாக மீன்கள் வளையில் சிக்கின. அவர் அக்கடற் கரையில், “இக்கடல் பெரும் கொடையாளியப்பா...!” என எழுதிவிட்டார்.
அதே கடலில் ஒருவன் நீந்தச் சென்று மூழ்கிவிட்டான். மகன் மீது அதிக பிரியமுடன் இருந்த அவன் தாய் இக்கடல் மக்களை கொன்று குவிக்கின்றதே...!” என கரையில் எழுதினாள்.
ஓர் வயது முதிர்ந்த மனிதர் கடலுக்குச் சென்று முத்துக்களை வேட்டையாடிக்கொண்டு வந்தார். அவர் மிக்க மகிழ்ச்சியோடு அக்கரையில், “இந்தக் கடல் ஒன்றே போதும். நான் ஆயுள் முழுக்க மகிழ்ச்சியோடு இருக்கலாம்...!” என எழுதினார்.
பின்னர் ஓர் பெரும் அலை வந்து இவர்கள் அனைவரும் எழுதியவற்றை அழித்துவிட்டுச் சென்றது.
பிறர் கூறுவதை காதில் வாங்கிக் கொள்ளாதே.
இவ்வுலகை ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் பார்க்கின்றனர்.
உன் நட்பும், சகோதரத்துவமும் நிலைக்க வேண்டுமானால் நீ பிறரின் தவறுகளை உன் மனதிலிருந்து அழித்துவிடு. தவறுக்காக உன் நட்பையோ, சகோதரத்துவத்தையோ
அழித்துவிடாதே.
நீ ஓர் கெடுதியை சந்திக்க நேர்ந்தால் அதை விடவும் பலமாக அதற்கு பதிலடி கொடுக்க வேண்டுமென ஒரு போதும் எண்ணாதே.
சிறிது சிந்தித்து, நலினமாக அதை கையாளு.

இன்றைய முக்கிய செய்திகள் :

🌸  ஹைட்ரோ கார்பன் திட்டம் பிரதமருக்கு முதல்வர் கடிதம். தூத்துக்குடியில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தமிழக அமைச்சரவை ஒப்புதல்.
🌸   திருவள்ளுவர் திருநாள், சித்திரை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு 45  தமிழ் அறிஞர்களுக்கு விருதுகள். முதல்வர் பழனிசாமி வழங்கி கவுரவித்தார்.
🌸   பாஜக தேசியத் தலைவராக ஜே.பி . நட்டா போட்டியின்றி தேர்வு. பிரதமர் மோடி அமைச்சர் அமித்ஷா வாழ்த்து.
🌸  தோல்விகளில் இருந்து மாணவர்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தேர்வுகள் மட்டுமே வாழ்க்கை அல்ல என பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை.
🌸   பிரதமரின் கலந்துரையாடல் மிகுந்த தன்னம்பிக்கையை அளித்தது என பள்ளிகளில் பார்த்து ரசித்த மாணவர்கள் கருத்து.
🌸   தேர்வு வாரியத்தால் புதிதாக 2000 அரசு மருத்துவர்களை நியமிக்க திட்டம்.
🌸   சிபிஎஸ்சி 10 12ம் வகுப்பு பொதுத்தேர்வு : தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகள்  வெளியீடு.
🌸   நாட்டுடமையாக்கப்பட்ட ஏழுபேரின் நூல்களுக்கு தலா ரூ 5 லட்சம் முதல்வர் பழனிசாமி வழங்கினார் .
🌸   மூன்று தலைநகரங்கள் ஆந்திர சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்.
🌸   இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 4.8 சதவீதமாக இருக்கும் மதிப்பீட்டை குறைத்தது ஐ எம் எஃப்.
🌸   தமிழக அரசின் இலவச பயிற்சி வகுப்புகள் முறையாக நடத்தப்படாததால் நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பாதிக்கப்படும். மருத்துவப் படிப்பும் எட்டாக்கனியாகி விடும் என ஆசிரியர்கள் வேதனை.
🌸   வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைக்கு  நடவடிக்கை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.
🌸   தஞ்சாவூர் விமானப்படை தளத்தில் 'சுகோய் 30' படைப்பிரிவு தொடக்கம் முப்படை தளபதி பிபின் ராவத் தொடங்கி வைத்தார்.
🌸   ரஞ்சிக் கோப்பை இரண்டாவது நாளிலேயே தமிழகம் அபார வெற்றி.
🌸  பிபிஎல் - 5 சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் அணி அபாரம்.




Today English news:  
🌸  Supreme court declines to stay poll bond scheme . It is being used to fill the coffers of ruling party: petitioners.
🌸   IMF lowers India's growth forecast 4.8 % slowdown to impact global economy .
🌸   Tamil Nadu opposes amendment exempting hydrocarbon project from consultations. CM writes to PM.Environment minister seeking Restoration of status  quo ante .
🌸   Plea in SC against welfare schemes for minorities. Government cannot promote minorism.
🌸  VAOs  challenge court order on grievance cell .
🌸  TNSEC   to take decisions on poles within a week

 🌸   AP assembly clears bills for three capitals .
🌸   Rahul has sealed his spot as a wicketkeeper -  batsman.

இனிய காலை வணக்கம் ....✍     
இரா மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
வலையூர்
திருச்சிராப்பள்ளி மாவட்டம்-621005
அலைபேசி எண்: 9789334642 .                                       



தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...