Monday, October 2, 2023

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (03-10-2023)

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 03.10.2023.    செவ்வாய்க்கிழமை  .
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்:  வான் சிறப்பு

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌷🌷🌷🌷🌷

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது

                                                                                                                 
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

 வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது
       

   

🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1.இந்தியாவில் தேசிய வருமானத்தை கணக்கீடு செய்யும் அமைப்பு எது?

*விடை* : மத்திய புள்ளியல் அமைப்பு

2.இந்தியாவில் தேசிய மனித உரிமைகள் ஆனணயம் எப்பொழுது ஏற்படுத்தப்பட்டது?

*விடை* : 12 அக்டோபர் 1993

3.இந்தியாவில் மிகக்குறைந்த மக்கள்தொகை உள்ள மாநிலம்?

*விடை* : சிக்கிம்

4.இந்தியாவில் எந்த மாநிலத்தில் அதிகமான எண்ணிக்கையில் பருத்தி நெசவுத் தொழிற்சாலைகள் உள்ளன?

*விடை* : தமிழ்நாடு

5. வெள்ளி புரட்சி என்றால் என்ன?

*விடை* : முட்டை உற்பத்தி


பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌷அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
🌷Face is the index of mind.

🌹அடிக்கிற கைதான் அணைக்கும்
🌹The hand that beats alone will embrace


இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

ஊக்கமும்  உழைப்பும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து ஊக்கமுடன்  உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்
.




 நீதிக்கதை
🍁🍁🍁🍁🍁🍁

நரியும் அதன் நிழலும் 

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

   ஒரு நரி🦊 அதிகாலையில் எழுந்து மேற்கு திசை நோக்கி வேட்டைக்கு சென்றது. கிழக்கே இருந்து வந்த சூரிய ஒளியில் அதன் நிழல் வெகு நீளமாய் தெரிந்தது. நரிக்கே குதூகலமாயிற்று. "நான் ஆள் போல  அதுவும் இந்த காட்டின் ராஜாவாக இருக்கும் சிங்கத்தை விடவும் பெரியவனாக இருக்கிறேன் போல"என நினைத்துக் கொண்டே வேட்டைக்கு சென்றது. செல்லும் வழியில் நரி🦊 ஒரு சிங்கத்தை கண்டது. சிங்கமோ அது சற்று முன்னர்தான் ஒரு மானை வேட்டையாடி அதை உண்ட களைப்பில் மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தது. நரியும் தான் மிகப்பெரியவன் என நினைத்துக் கொண்டு சிங்கம்🦁 வரும் வழியில் நடந்து சென்றது. சிங்கமும் நரியை ஒன்றும் செய்யாமல் நடந்து சென்றது. நரிக்கோ மிகவும் சந்தோஷம். நாம் சிங்கத்தை விடவும் பெரியதாக இருப்பதனால் சிங்கம் 🦁 தன்னை கண்டு பயந்து சென்றது என நினைத்துக் கொண்டு அன்று மாலை தன்னுடைய வீட்டிற்கு சென்றது.


மாலை தன் குகைக்குச் சென்றதும் நரி காட்டில் உள்ள மிருகங்களை அழைத்தது. அனைத்து மிருகங்களும் நரியின் அழைப்பிற்கு வருகை தந்தன. நரி அனைத்து மிருகங்களிடமும்"இனிமேல் நான் தான் இந்த காட்டிற்கு ராஜா"என்று கூறியது. யானையோ இதை நாங்கள் ஏற்க முடியாது என்றது. உடனே நரி காலையில் நடந்ததை கூறி 'சிங்கமே என்னை பார்த்து பயந்தது' என்றது. கூட்டத்தில் இருந்த மானோ "சிங்கத்தை உன் முன்னால் மண்டியிடச் சொல் பிறகு உன்னை இந்த காட்டிற்கு ராஜாவாக்குவோம்" என்றது. அடுத்த நாள்நரி 🦊 அந்த சிங்கத்தை தேடிச் சென்றது. செல்லும் வழியில் சிங்கம் தன்னுடைய பாதையை நோக்கி வருவதை கண்டு நரி கர்வத்துடன் நின்றது. சிங்கம் வந்தவுடன் சிங்கத்தைப் பார்த்து "என் முன்னாள் மண்டியிடு"என்று நரி கூறியது. சிங்கமோ மிகவும் கோபம் கொண்டு ஏளனமாக பேசிய நரியைப் பார்த்து உன்னை மன்னித்து விடுகிறேன். உடனே இங்கிருந்து செல் என்றது. கண்டு பயந்து விட்டது என நினைத்து "முடியாது" என்று பதில் கூறிக் கொண்டே தன்னுடைய நிழலைப் பார்த்தது.


அது மதிய நேரம் அல்லவா? நிழல் உண்மையான அளவில் இருந்தது. இப்போதுதான் நரிக்கு புரிந்தது சூரிய ஒளியில் தான் தன்னுடைய நிழல் பெரிதாக இருந்தது என்று. இதை பொறுத்துக் கொள்ள முடியாத சிங்கம்🦁 ஒரே அடியினால் நரியை கொன்றது. பாவம் அந்த முட்டாள் நரி🦊.


நீதி: முட்டாள் தனமாக இருந்தால் உன் உயிரை கூட இழக்க நேரிடும்.


இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯 தமிழகத்திலிருந்து விண்வெளி துறையில் முத்திரை பதித்த 9 விஞ்ஞானிகளுக்கு தலா ரூ 25 லட்சம். முதுநிலை பொறியியல் படிக்கும் 9 அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்க ரூ 10 கோடி தொகுப்பு நிதியம் உருவாக்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

🎯 மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு. டெல்லியில் அண்ணாமலைக்கு பாஜக மூத்த தலைவர்கள் அறிவுரை.

🎯 சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு அரசின் இட ஒதுக்கீடு கொள்கை பொருந்தாது என சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு.

🎯 திருச்சி, புதுகை, கரூர், பெரம்பலூர், அரியலூரில் உள்ள காதி கிராப்ட் அங்காடிகளில் தீபாவளி கதர் சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்கம்.

🎯 அனைத்து வசதிகளும் கொண்ட தன்னிறைவு கிராமங்களை உருவாக்க அரசு உழைக்கும் என கிராம சபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் உறுதி.

🎯 பள்ளிக்கல்வி அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி உண்ணாவிரதம் தொடரும் என ஆசிரியர்கள் அறிவிப்பு.

🎯 முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில் சென்னையில் இன்றும் நாளையும் ஐஏஎஸ் ஐபிஎஸ் மாநாடு.

🎯 நாட்டின் சிறந்த மாநிலங்களில் ஒன்றாக மத்திய பிரதேசத்தை உருவாக்குவோம் என பிரதமர் மோடி அறிவிப்பு.

🎯 பீகாரில் 63 சதவீதம் பிற்படுத்தப்பட்டோர்; சாதிவாரி கணக்கெடுப்பு விபரம் வெளியிடு.

🎯மருத்துவத்துக்கான நோபல் பரிசு | கரோனா தடுப்பூசி கண்டுபிடிப்புக்கு காரணமான காடலின் கரிகோ மற்றும் ட்ரூவ் வைஸ்மேன் தேர்வு

🎯 ஆசிய விளையாட்டுப் போட்டி பருல் சவுத்ரி, அன்சி வெள்ளி வென்று அசத்தல்.

🎯சச்சின் டெண்டுல்கரைப் போல் விராட் கோலியை தோளில் சுமந்து வலம்வர வேண்டும் - சேவாக் விருப்பம்

🎯 பயிற்சி ஆட்டம் இங்கிலாந்துக்கு 189 ரன்கள் இலக்கு நிர்ணயித்த வங்க வங்கதேசம்.

🎯Asian Games 2023 | இந்தியாவுக்கு ஒரே நாளில் 3 தங்கம்

🎯Asian Games 2023 | ஸ்பீட் ஸ்கேட்டிங் 3000 மீட்டர் ரிலேவில் 2 வெண்கலம் வென்றது இந்தியா

🎯Asian Games 2023 | 50 பதக்கங்களைக் கடந்தது இந்தியா!

TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

 🎯 medicine Noble 2023 goes to duo who paved the way for mRNA COVID vaccines.

🎯 At 30%, EBCs largest group in Bihar; shows caste study.

🎯 Stalin announces rupees 25 lakh each to 9 ISRO scientists.

🎯 Water level in mettur dam stands at 36 feet.

🎯NAHI plans to build vehicular underpass at entry point to city on Chennai - Trichy highway.

🎯 India reiterates demand for nationwide caste census.

🎯Bihar caste survey may throw a challenge of 50% quota limit.

🎯Hangzhou Asian Games | Long jumper Ancy Sojan follows her own process to achieve success

🎯Cricket World Cup 2023 | Australia’s bowling is not as well settled as it would like it to be

🎯Parul steels the spotlight, Lands a silver in 3000m steeplechase.

🎯Hangzhou Asian Games | Swapna’s ‘outburst’ tweet leaves Nandini upset and fuming





இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி, கோவில்பட்டி 
திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 621305.
அலைபேசி எண் : 9789334642.

No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...