Sunday, October 8, 2023

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (09-10-2023)

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 09.10.2023.    திங்கள்கிழமை   .
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்:  குற்றம் கடிதல்

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌷🌷🌷🌷🌷

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.

                                                                                                                 
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

  குற்றம் நேர்வதற்கு முன்னமே வராமல் காத்துக் கொள்ளாதவனுடைய வாழ்க்கை, நெருப்பின் முன் நின்ற வைக்கோல் போர் போல் அழிந்துவிடும்.
       

   

🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1. 2023-ல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் யார்?

விடைஈரான் நாட்டைச் சேர்ந்த-நர்கீஸ் முகமதி

2. 2023-ல் மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்றவர்கள் எத்தனை பேர்? அவர்கள் யார்?

விடை:  இரண்டு பேர் 

ஹங்கேரி நாட்டின் - கட்டாலின் கரிக்கோ

அமெரிக்காவின் - ட்ரு வெய்ஸ்மேன்

3. 2023-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள் எத்தனை பேர்? அவர்கள் யார்?

விடைமூன்று பேர்.

அமெரிக்காவின் - பியர்லி ஆகோஸ்டினி

ஜெர்மனியின் - பெரன்க் க்ரவுஸ் 

ஸ்வீடனின் - ஆனி ஹூலியர் 


4. 2023-ல் வேதியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள் எத்தனை பேர்? அவர்கள் யார்?

விடை மூன்று பேர்

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த-மவுங்கி ஜி பவெண்டி

அமெரிக்காவின் - லூயிஸ் இ புரூஸ்

ரஷ்யாவைச் சேர்ந்த - அலெக்சி ஐ எகிமோவ்

5. 2023-ல் 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டி எங்கு நடைபெற்று வருகிறது?

விடைசீனாவின் ஹாங்ஷௌ நகரில்.

பழமொழி (proverbs ) :

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌹What won’t bend at five will not bend at fifty 

🌹ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது



🌷Fire lasts only as long as it heats. The earth lasts only as long as it revolves. Man lasts only as long as he tries. You are man 

🌷சுடும் வரை நெருப்பு, சுற்றும் வரை பூமி, போராடும் வரை மனிதன். நீ மனிதன்.



இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

ஊக்கமும்  உழைப்பும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து ஊக்கமுடன்  உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்
.




 நீதிக்கதை
🍁🍁🍁🍁🍁🍁

சேவலும் நரியும்

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

   காட்டில் உள்ள மரத்தின் மேல் சேவல் ஒன்று வாழ்ந்து வந்தது. அது காட்டு சேவல் ஆனதால் கண்டதை எல்லாம் தின்று உடல் கொழுத்துத் திரிந்தது; நல்ல பலசாலியாகவும் இருந்தது. அது, "கொக்கரக்கோ' என்று கத்தினால் காடே அதிரும்.

அது இருந்த மரத்தின் வழியாக தினந்தோறும் நரி ஒன்று செல்லும். போகும் போது வரும்போது ""எப்படியாவது இந்தக் கொழுத்த சேவலைப் பிடித்து, ஒருநாள் உணவாக்கிக் கொள்ள வேண்டும்,'' என்று எண்ணியவாறு ஆசையுடன் சேவலைப் பார்க்கும். சேவலுக்கு நரியின் பார்வை புரிந்தது. அதனால் தனக்கு என்றேனும் ஆபத்து நேரிடலாம் என்று கருதி அது எச்சரிக்கையுடன் இருந்தது.

சேவல் அந்த மரத்தை விட்டு இறங்காத காரணத்தினால், தன் எண்ணத்தை ஈடேற்ற முடியாமல் தவித்துப் போயிற்று நரி.

இந்தச் சேவலைத் தந்திரத்தால்தான் வளைத்துப் போட்டு, தனக்கு விருந்தாக்கிக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தது. ஆகவே, ஒருநாள் நரி அவ்வழியே வரும்போது அது மரத்தின் கீழ் அமர்ந்து சேவலிடம் பேச ஆரம்பித்தது.

"அழகிய சேவலே! உனக்கு விஷயமே தெரியாதா? இன்று நம்முடைய சிங்கராஜா ஒரு உத்தரவு போட்டிருக்கிறார். இன்று முதல் ஒரு வருடத்துக்கு யாரும், யாருக்கும் பகை கிடையாது. இது சமாதான ஆண்டு. எந்த விலங்குக்கும், மற்ற விலங்கால் பிரச்னை வரக் கூடாது. பிரச்னை வந்தால் கடும் தண்டனை தரப்படும்.

""எனவே, எதிரிகளாக இருந்த விலங்குகள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து விட்டன. அவை காட்டோர அருவிப் பகுதியில் நிலா வெளிச்சத்தில் ஊலல்லல்லா பாட்டுப் பாடி ஆடிக் கொண்டிருக் கின்றன. எல்லா விலங்குகளும் ஆளுக்கு ஒன்றை ஜோடி சேர்த்துக் கொண்டன. எனக்குத்தான் யாரும் இல்லை என்று நினைத்தபோது, நீ என் ஞாபகத்துக்கு வந்தாய். வா, நாமிருவரும் சேர்ந்து அருவிக் கரைக்குப் போய் மற்ற விலங்குகளுடன் சேர்ந்து ஜாலியாக இருக்கலாம்,'' என்றது.

நரி பேசப் பேச சேவல் அதைப் பற்றிச் சிறிதும் கவனிக்காமல் வேறு ஒரு உயர்ந்த கிளைக்குச் சென்று தலையை இங்குமங்குமாக ஆட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது.

அதைப் பார்த்த நரிக்கு எரிச்சலாக இருந்தது.

""நான் எவ்வளவு இனிய செய்தியைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நீ என்னவென்றால் மரக்கிளைக்கு மேலே சென்று எதையோ வேடிக்கைப் பார்க்கிறாயே,'' என்றது.

நரியாரே, நீங்கள் சொன்னதைக் கேட்டேன். ஆனால், அதைவிட முக்கியமான சமாசாரத்தை நான் கவனித்துக் கொண்டிருக்கிறேன்,'' என்றது.

""அதை விட முக்கியமான சமாசாரமா? அது என்ன.....?'' என்றது நரி.

""வெகு தூரத்தில் இரண்டு உருவங்கள் ஓடி வந்து கொண்டிருக்கின்றன!'' என்றது சேவல்.

""அவை எப்படி இருக்கின்றன?'' என்று பயத்துடன் கேட்டது நரி.

""இரண்டும் நாக்கை தொங்க விட்டிருக்கின்றன. அதன் கண்கள் பளபளவென ஜொலிக்கின்றன. அங்கும், இங்கும் பார்த்து எதையோ மூக்கால் முகர்கின்றன. அதற்கு நான்கு கால்கள் இருக்கின்றன. உங்களை விட உயரமாக இருக்கின்றன. ஆ... இப்போது கூர்மையான கோரைப் பற்களும் தெரிகின்றன. ஒருவேளை அவை ஓநாய்களோ,'' என்றது சேவல்.

""நாசமாப் போக, அவை ஓநாய்களில்லை. வேட்டை நாய்கள். பார்த்தால் கடித்துக் குதறி விடும்,'' என்று கூறியவாறு ஓட்டமெடுத்தது நரி.

நரி ஓடுவதை பார்த்து சேவல் சிரித்தது


இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯 பள்ளி சுற்றுச்சூழல் மன்ற போட்டிகள்: மாணவர் விவரங்களை பதிவு செய்ய உத்தரவு.
.
🎯 தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது. காவிரி குறித்து தீர்மானம் கொண்டு வருகிறார் முதல்வர் ஸ்டாலின்.

🎯 6 மணி நேரத்தில் "டெங்கு ரிசல்ட்" ஆய்வகங்களுக்கு அரசு உத்தரவு.

🎯 ஆதித்யா எல்-1 விண்கலத்தின் பயணப் பாதை மாற்றம் என இஸ்ரோ அறிவிப்பு.

🎯 தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.

🎯 எமிஸ் பதிவேற்ற பணிகளை மேற்கொள்ள மாட்டோம் என தொடக்க கல்வி ஆசிரியர்கள் அறிவிப்பு.

🎯 வங்கிகளில் காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி டிசம்பர் 4 முதல் ஜனவரி 20 வரை வேலைநிறுத்தம் என அகில இந்திய வங்கியை ஊழியர் சங்கம் அறிவிப்பு.

🎯 முக்கிய வழித்தடங்களில் 1396 கிலோ மீட்டர் ரயில் பாதையை மேம்படுத்தி 110 கிலோமீட்டர் வேகத்தில் ரயில்களை இயக்கத் திட்டம். 2023-24-ம் நிதியாண்டுக்குள் செயல்படுத்த தெற்கு ரயில்வே நடவடிக்கை.

🎯 மூத்த விஞ்ஞானி சிவதாணுப்பிள்ளை வழிகாட்டுதலில் ரஷ்யாவுக்கு கல்விச் சுற்றுலா சென்று வந்த அரசு பள்ளி மாணவர்கள். விண்வெளி வீரர்கள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடினர்.

🎯 மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு 2000 கன அடியாக குறைப்பு.

🎯 விண்வெளிக்கு மனிதர்களை அழைத்துச் செல்லும் திட்டம். சுகன்யான் புகைப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ.

🎯 ஆசிய விளையாட்டுப் போட்டி: இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு.

🎯 14ஆம் தேதி வரை ஏர் இந்தியா சேவை ரத்து. பாதுகாப்பாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்.

🎯 இந்திய விமானப்படைக்கு புதிய கொடி அறிமுகம்.

🎯 தெற்கில் ஹமாஸ், வடக்கில் ஹிஸ்புல்லா தீவிரவாத குழுக்கள் இருமுனை தாக்குதல். இஸ்ரேல் எல்லைகளில் போர் உச்சகட்டம்.

🎯 இஸ்ரேலுக்கு உறுதியான ஆதரவு. அமெரிக்க அதிபர் பைடன்.

🎯 சிக்கிய 27 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு.

🎯 ஆப்கான் பூகம்பத்தில் 2060 பேர் உயிரிழப்பு. பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம்.

🎯 ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 200 ரன்கள் இலக்கை போராடி வென்றது இந்திய அணி.கே.எல்.ராகுல் 97, விராட் கோலி 85 ரன்கள் விளாசல்.

🎯 100 கிராம் மாஸ்டர்களை உருவாக்க ஆயத்தமாகும் தமிழ்நாடு செஸ் சங்கம்.ஐஎம் நார்ம்ஸ்களை அடைவதற்காக வருடத்திற்கு 50 தொடர்களை நடத்த முடிவு.

🎯 ஆசிய விளையாட்டு போட்டி நிறைவு. 107 பதக்கங்களுடன் இந்தியா 4-ம் இடம்.

🎯 சீனா ஓபன்; ஸ்வியாடெக் சாம்பியன்.

TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

🎯 Israeli air strikes pound Gaza as death toll climbs.

🎯Tamil Nadu Assembly to convene on October 9 amid Cauvery issue

🎯 Passenger ferry service between Tamilnadu and Sri Lanka to begin tomorrow.

🎯 Tax collection up state sees marginal rise in total revenue receipts.

🎯 Chief Minister MK Stalin hails India's performance in Asian games.

🎯 Indian Air force unveils new ensign as it marks it's 91st anniversary.

🎯 GST council clear few measures to boost foreign trade.

🎯 ISRO performs trajectory correction for Aditya- L1.

🎯 Students can choose to take board exams once or twice a year.

🎯Tanzanian President Hassan begins four-day visit to India

🎯Govt. ready for ‘any emergency situation’ in Israel, says Union Minister

🎯 Biden orders U.S ships, warplanes to move closer to Israel, sends munitions.

🎯 Earthquake death toll rises to 2000 as rescuers search flattened Afghan villages.

🎯India vs Australia | Rahul and Kohli master the situation and Australia

🎯Jeakson Singh, the heart of Kerala Blasters’ midfield, looks to return the love of Manjappada with an ISL title

🎯Hangzhou Asian Games | Medals across 21 events; Indian sportspersons make big strides

🎯ODI World Cup | England’s Ben Stokes unlikely to play against Bangladesh

 



இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன்  
முதுகலைத் தமிழ் ஆசிரியர்
அரசு  மேல்நிலைப்பள்ளி, கோவில்பட்டி
திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 621305.
அலைபேசி எண் : 9789334642.

No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...