Tuesday, October 31, 2023

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (01-11-2023)

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 1.11.2022.    புதன்கிழமை  .
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: கல்வி 

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌷🌷🌷🌷🌷

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்
கெழுமையும் ஏமாப் புடைத்து.
                                                                                                                 
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

   ஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் அவனுக்கு ஏழுபிறப்பிறப்பிலும் உதவும் தன்மை உடையது
       

   

🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1. சிறுநீரகத்தின் மேற்புறத்தில் அமைந்த சுரப்பியின் பெயர் என்ன?


விடை : அட்ரீனல் சுரப்பி


2. மனித உடலில் தலைமை சுரப்பி என்று அழைக்கப்படும் சுரப்பி எது?


விடை : பிட்யூட்டரி சுரப்பி


3. காலத் தூதுவர்கள் என அழைக்கப்படும் ஹார்மோன்கள் எவை?


விடை : மெலட்டோனின்


4. உடல் வெப்பநிலையை சமநிலையில் பராமரிக்க உதவும் ஹார்மோன் எது?


விடை : தைராய்டு ஹார்மோன்


5. எந்த திரவத்தில் மூளை மிதந்த நிலையில் உள்ளது?


விடை: தண்டுவடத் திரவம்


பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌹 A good beginning Makes good ending
🌹 விளையும் பயிர் முளையிலேயே தெரியும்.


🌷 A bad day never hath a good night
🌷 முதலில் கோணல் முற்றிலும் கோணல்



இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

ஊக்கமும்  உழைப்பும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து ஊக்கமுடன்  உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்
.




 நீதிக்கதை
🍁🍁🍁🍁🍁🍁

விட்டுக் கொடுத்து நடந்தால் ஒற்றுமை வளரும், நஸ்டம் ஏற்படாது

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

   ஒரு வீட்டில் இரண்டு பூனைகள் நண்பர்களாயிருந்தன….ஆனால் அவைகள் இரண்டும் ஒற்றுமையில்லாது அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டிருந்தன.


ஒரு நாள் அப்பூனைகளுக்கு ஒரு அப்பம் கிடைத்தது. அவை இரண்டும் அதை சாப்பிட முனைந்த போது அதை சரிசமமாக பிரிப்பதில் அவைகளுக்குள் பிரச்சனை ஏற்பட்டது.


அதனால் பூனைகள் இரண்டும் யாரிடமாவது சென்று அப்பத்தை சரிசமமாக பங்கிட்டு தரச்சொல்லலாம் என எண்ணி வீட்டிற்கு வெளியே வந்தன. அப்போது ஒரு குரங்கு அங்கு வந்தது.


குரங்கிடம் அப்பத்தை கொடுத்து  அதைச் சமமாக பிரித்துத் தரும்படி கேட்டன. குரங்கும் மிக மகிழ்வுடன் அதற்கு சம்மதித்து ஒரு தராசு கொண்டு வந்து, அப்பத்தை இரண்டாக பிய்த்து தராசின் ஒவ்வொரு தட்டிலும் ஒவ்வொரு அப்பத்துண்டை வைத்து நிறுத்தது.


அப்போது ஒரு அப்பத் துண்டு  பெரிதாக இருந்ததினால் அந்த அப்பத் துண்டு இருந்த தட்டு சற்று கீழே பதிந்தது. உடனே அந்தக் குரங்கு அந்த அப்பத் துண்டை எடுத்து ஒரு கடி கடித்து சாப்பிட்டு விட்டு மீதியை தட்டில் போட்டது . இப்போது மற்றத் தட்டு கீழே தாழ்ந்தது. அப்போதும் அந்த தட்டில் இருந்த அப்பத்துண்டை எடுத்து சிறிது  கடித்து விட்டு மீண்டும் போட்டது.


இப்படியே மாறி மாறி தட்டுகள் தாழ…குரங்கும் மாறி மாறி அப்பத்துண்டுகளை கடித்துச் சாப்பிட்டது.


அப்பம் குறைவதைக் கண்ட பூனைகள் இனி நீங்கள் அப்பத்தை பிரிக்க வேண்டாம் நாங்களே பார்த்துக்கொள்கிறோம்” என மீத முள்ள அப்பத்தைத் தரும்படி கேட்டன.


ஆனால் குரங்கோ, மீதமிருந்த அப்பம் ‘நான் இது வரை செய்த வேலைக்கு கூலி’ என்று சொல்லிவிட்டு அதையும் வாயில் போட்டுக்கொண்டது.


பூனைகள் ஒன்றுக்கொன்று விட்டுக்கொடுத்து ஒற்றுமையாக இருந்திருந்தால்…அப்பத்தை சாப்பிட்டு இருக்கலாம். ஒற்றுமையில்லாததால் நஷ்டம் அடைந்தன.


நாமும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அன்பாக இருந்தால், உள்ளதையும் இழக்காமல் ஒற்றுமையுடனும் இருக்கலாம்.



இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯தமிழகத்தில் காலியாக உள்ள 86 மருத்துவ இடங்களுக்கு நவ.15 வரை கலந்தாய்வு

🎯 பாரம்பரிய மருத்துவ படிப்புகள்: இன்று நிர்வாக இடங்களுக்கு கலந்தாய்வு

🎯பாரதியார் பல்கலை.யில் பிஎச்.டி. படிப்புக்கு நவ.15 வரை விண்ணப்பிக்கலாம்

🎯தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சி கையேடு: அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார்

🎯தமிழ் சிறப்பு வகுப்புக்கு வரும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு உணவளித்து பாடம் நடத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்!

🎯பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டி தேர்வு - இலவச பயிற்சி பெற நவ.10-க்குள் விண்ணப்பிக்கலாம்

🎯 ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் போட்டிகள் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு அழைப்பு.

🎯விரைவு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர் - நடத்துநர் பணியிடங்களுக்கு நவ.19-ல் எழுத்து தேர்வு

🎯 நவம்பர் 5-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் அனைத்து நியாய விலை கடைகள் இயங்கும்.

🎯அக்டோபரில் 43 சதவீதம் மழை குறைவு: இன்றும் நாளையும் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு

🎯எமிஸ் பதிவேற்ற பணியை இன்று முதல் மேற்கொள்வதில்லை: ஆசிரியர் சங்க கூட்டமைப்பு அறிவிப்பு

🎯 திருச்சி- காரைக்குடி ரயில் நேரம் மாற்றம்

🎯 தீபாவளிக்கு பிறகு பொது தேர்வு அறிவிப்பு வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு

🎯 சர்தார் படேலின் 149 ஆவது பிறந்தநாள் அரசியல் தலைவர்கள் மரியாதை.

🎯தமிழகத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த புகார்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

🎯சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதில் முதலிடம் பிடித்தது சென்னை மாநகரம்: ஒன்றிய அரசின் ஆய்வறிக்கையில் தகவல்

🎯காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை கர்நாடக அரசு பின்பற்ற வேண்டும்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி

🎯நாளை மறுநாள் நடைபெறுகிறது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்: தமிழக, கர்நாடக அதிகாரிகள் பங்கேற்பு

🎯ரூ.394 கோடியில் கிளாம்பாக்கம் நவீன பேருந்து நிலையம் தயார்: முதல்வர் பங்கேற்கும் விழா மேடையை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு.! ஒட்டுமொத்த பணிகளை விரைவில் முடிக்க உத்தரவு

🎯தாய்லாந்து செல்ல விசா தேவையில்லை

🎯இந்தியா 25 ஆண்டில் வளர்ந்த நாடாகும்: பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை

🎯தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி: வங்கதேசத்தை வீழ்த்தியது பாகிஸ்தான்

🎯ஆசிய பாரா விளையாட்டில் சாதனை படைத்த ஷீத்தல் தேவிக்கு கார் பரிசு: தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா அறிவிப்பு

🎯வான்கடே மைதானத்தில் சச்சின் சிலை இன்று திறப்பு

🎯“அடுத்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி உறுதி; டாப் 4 அணிகளில் இடம் பிடிக்கும்” - பாக். ரசிகர்

TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

 🎯 Tamil Nadu to conduct counselling for 17 vacant MBBS seats from November 7 to 15

🎯 Tamil Nadu notifies complete ban on manjha threads

🎯New registrar for law varsity

🎯Defying Higher Education secretary instruction, Periyar University conducts interviews for registrar and COE posts

🎯Supreme Court flags possibility of electoral bonds being used to trade favours

🎯India to choose between Bangladesh and Nepal candidates for WHO regional chief

🎯Biden approves largest offshore wind project in U.S. history

🎯China set to build new Sri Lanka refinery, says minister

🎯ICC World Cup | India will want other batters to replicate the prolificacy of Rohit and Kohli

🎯ICC World Cup | We are blessed in a sense that we are in a great space now, says van der Dussen

🎯ICC World Cup | New Zealand and South Africa cross swords in a key clash

🎯Shaheen Shah Afridi fastest Pakistani to reach 100 ODI wickets





இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் முதுகலைத்தமிழாசிரியர் 
அரசு  மேல்நிலைப்பள்ளி
கோவில்பட்டி 
திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 621305
அலைபேசி எண் : 9789334642.

No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...