பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮நாள் : 05.10.2023. வியாழக் கிழமை .
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
திருக்குறள்: அதிகாரம்: இல்வாழ்க்கை 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.
பொருள்:
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
1. இந்தியாவின் இணைப்பு மொழியாக உள்ளது?
விடை: ஆங்கிலம்
2. தர்ம சக்கரத்தின் இடப்புறம் அமைந்துள்ள விலங்கு?
விடை: குதிரை
3. மத்திய மாநில உறவுகளை விசாரிக்க சர்க்காரியா குழுவினை நியமித்தவர்?
விடை: இந்திராகாந்தி
4. இந்திய கட்டுப்பாட்டு தணிக்கை அலுவலரை நியமனம் செய்பவர்?
விடை: குடியரசுத் தலைவர்
5. இந்தியாவில் முதன் முதலாக வானொலி ஒலிபரப்பு துவங்கப்பட்ட ஆண்டு?
விடை: 1927
பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து ஊக்கமுடன் உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்.
நீதிக்கதை
.உலகத்தையே ஜெயிக்க நினைத்த *பிரான்ஸ் மாவீரன் நெப்போலியன் கடைசி காலத்தில் பிரிட்டனிடம் தோல்வி அடைந்தார்.* தோல்வி அடைந்த நெப்போலியனை பிரிட்டிஷ் ராணுவம் அவரை சிறை பிடித்து
ஆப்பிரிக்க தனிச்சிறையில் தனிமையில் வைத்தது. சிறையில் மன உளைச்சலில் அவரின் கடைசி காலம் கழிந்தது.* அவரை பார்க்க வந்த அவரின் *நண்பர் ஒருவர் அவரிடம் ஒரு சதுரங்க அட்டையை கொடுத்து “இது உங்களின் சிந்தனையை செயல்பட வைக்கும் தனிமையை போக்கும்” என்று கூறி அவரிடம் கொடுத்தார்.*
ஆனால் சிறை படுத்தி விட்டார்களே என்ற மன உளைச்சலில் இருந்த மாவீரனுக்கு சிந்தனை செயல்படாமல் *அதன் மீது கவணம் போகவில்லை. சிறிது காலத்தில் இறந்தும் போனார்.* பிற்காலத்தில் பிரான்ஸ் அருங்காட்சியகம் *மாவீரன் நெப்போலியனிடம் இருந்த சதுரங்க அட்டையை ஏலம் விட அதை ஆய்வு செய்த போது அந்த அட்டையின் நடு பக்கத்தில் சிறிய அளவில் ஒரு குறிப்பு இருந்தது. அதில் அந்த சிறைச்சாலையில் இருந்து தப்பிப்பதற்க்கான வழியை அந்த குறிப்பு சொல்லி இருந்தது.
ஆனால் அவரின் மன உளைச்சலும்,பதட்டமும் அவரின் சிந்தனையை செயல்படாமல் ஆக்கி வைத்து அவரின் தப்பிக்கும் வழியை மூடி மறைத்தது.
_அதைப் போல் உறுதியான *சிமெண்ட் தரையையும், மரபெட்டியையும் தன் கூர்மையான் பற்களாலும், நகத்தாலும் குடைந்து ஓட்டை போடும் எலி*....அதே *மரத்தால் செய்யப்பட்ட எலிப்பொறியில் சிக்கி கொண்டால் அதற்கு ஏற்படும் மன உளைச்சலாலும், பதட்டத்தாலும் அந்த எலி பொறியை உடைக்கும் வழியை விட்டு விட்டு அந்த பொறியின் பின்னால் இருக்கும் கம்பிக்கு முன்னால் பின்னாலும் பதட்டத்துடன் சென்று சிந்தனை செய்யாமல் மனிதர்களிடம் மாட்டிக்கொண்டு விடும்.
மாவீரனுக்கும் சரி.. சாதாரண எலிக்கும் சரி... *பதட்டமும், மன உளைச்சலும் அவர்களின் சிந்தனையை செயல்படாமல் வைத்து* முன்னேற்றத்திற்கான வழியை அடைத்து விடுகிறது...
*#மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம்,* *#மனஉளைச்சல் தான்!
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🎯 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தமிழக வீரர் உட்பட 3 பேருக்கு தங்கம். இந்தியா 81 பதக்கங்களை குவித்து சாதனை.
🎯 சிக்கிம் மாநிலத்தில் மேக வெடிப்பு நதிகள் வெள்ளம் 40 பேர் உயிரிழப்பு. ராணுவ முகாம் அடித்துச் செல்லப்பட்டது 23 வீரர்கள் உட்பட 120 பேரை காணவில்லை.
🎯 போராட்டம் தொடரும் என ஆசிரியர்கள் அறிவிப்பு.
🎯 பதவி இறக்கம் செய்யக்கூடாது என தலைமை ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தல்.
🎯 வயதுவரம்பு அதிகரிப்பு. பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு உட்பட ஐந்து அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ். முக்கிய கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என தகவல்.
🎯4,5-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு எண்ணம் எழுதும் திட்ட பயிற்சி.
🎯 மாற்றுத்திறன் மாணவர்களுக்கு அக்டோபர் 19ஆம் தேதி வரை ஒன்றியம் வாரியாக மருத்துவ மதிப்பீட்டு முகாம்.
🎯 திருச்சி என் ஐ டி- யில் 'பெஸ்டம்பர்' என்று தொடக்கம்.
🎯 அரசு திட்ட தன்னார்வலர்களுக்கு மதிப்பூதியம், சான்றிதழ்கள்.
🎯 விஐடி சென்னை 'இந்து தமிழ் திசை- தேசம் காக்கும் நேச பணிகள்' அரசு வேலை வாய்ப்பு, உயர் கல்வி வெப்பினார் அக்டோபர் 7,8-ல் இணைய வழியில் நடைபெறுகிறது.
🎯 கரூரில் 2-ம் ஆண்டு புத்தகத் திருவிழா நாளை தொடங்குகிறது.
🎯 சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அரசுக்கு உத்தரவிட முடியாது என தமிழக உயர்நீதிமன்றம் திட்டவட்டம்.
🎯 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவது குறித்த மருத்துவ ஆணைய அறிவிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.
🎯 புதுக்கோட்டையில் இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்.
🎯 பால் பொருட்கள் தயாரிப்பு குறித்து திருச்சியில் நாளை இலவச பயிற்சி.
🎯 ஏழை, எளிய மக்களுக்கான நலத்திட்டங்களில் தொய்வு தாமதம் இன்றி பணியாற்றுங்கள் என மாவட்ட ஆட்சியருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்.
🎯 மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் ரூ 17, 600 கோடிக்கு வளர்ச்சி திட்டங்கள் இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி.
🎯 எல் இ டி விளக்கு, அறுவை சிகிச்சைக்கு உதவும் குவான்ட்டம் துகள்களை கண்டுபிடித்த 3 விஞ்ஞானிகளுக்கு வேதிகளுக்கான நோபல் பரிசு.
🎯 உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா என்று தொடக்கம். தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து- நியூசிலாந்து மோதல்.
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
இனிய காலை வணக்கம் ....✍
இரா . மணிகண்டன் முதுகலைத்தமிழாசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 621305.
அலைபேசி எண் : 9789334642.
No comments:
Post a Comment