Wednesday, October 11, 2023

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (12-10-2023)

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 12.10.2023.    வியாழக்கிழமை   .
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்:   அமைச்சு

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌷🌷🌷🌷🌷


கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்ட தமைச்சு.  
                                                                                                                 
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

  செயலுக்கு உரிய கருவியும், ஏற்றக் காலமும், செய்யும் வகையும் செய்யப்படும் அறியச் செயலும் சிறப்படையச் செய்ய வல்லவன் அமைச்சன் 
   

🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1.தமிழ்நாட்டின் நுழைவாயில்?

விடை: தூத்துக்குடி

2. தமிழ்நாட்டில் குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படுவது?

விடை: சிவகாசி

3.தமிழ்நாட்டின் சரித்திரம் உறையும் பூமி என்று அழைக்கப்படுவது?

விடை: சிவகங்கை

4. தமிழ்நாட்டில் "குட்டி இங்கிலாந்து"என்று அழைக்கப்படுவது?

விடை: ஓசூர்

5.தமிழில் வெளிவந்த முதல் நாவல்?

விடை : பிரதாப முதலியார் சரித்திரம்


பழமொழி (proverbs ) :

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌷Fortune favours fortune

🌷செல்வம் செல்வத்தோடு சேரும். 


🌹After a storm there is a calm

🌹புயலுக்குப்பின் அமைதி. 


இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
      பண்பும் பணிவும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் அன்புடனும் பணிவுடனும் நடந்து  ஊக்கமுடன்  உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்.



 நீதிக்கதை
🍁🍁🍁🍁🍁🍁

வெற்றியைத் தீர்மானிப்பது கடவுளா?* 

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

இரு நாட்டுப் படைகளுக்கும் இடையே வெகு மும்முரமாக சண்டை நடந்து கொண்டிருந்தது.
எதிரி நாட்டுப் படையிடம் கிட்டத்தட்ட தோற்றுவிட்ட நிலை. ஆனாலும் தாய்நாட்டுப் படைத் தளபதிக்கு போரை இழக்கமாட்டோம் என்ற அசாத்திய நம்பிக்கை. ஆனால் துணைத் தளபதி உள்ளிட்ட அவன் வீரர்களுக்கு அந்த நம்பிக்கை கிஞ்சித்தும் இல்லை. எல்லோரும் ஓடுவதில் குறியாக இருந்தனர்.

என்னதான் நம்பிக்கை இருந்தாலும், வீரர்களில்லாம் தனி ஆளாய் என்ன செய்ய முடியும்?
கடைசி நாள் சண்டை. போர்க்களத்துக்குப் போகும் வழியில் ஒரு கோயிலைக் கண்டார்கள்.

உடனே தளபதி வீரர்களை அழைத்து, “சரி வீரர்களே… நாம் ஒரு முடிவுக்கு வருவோம். இதோ இந்தக் கோயிலுக்கு முன் ஒரு நாணயத்தைச் சுண்டிவிடுகிறேன். அதில் தலை விழுந்தால் வெற்றி நமக்கே. பூ விழுந்தால் நாம் தோற்பதாக அர்த்தம். இப்படியே திரும்பிவிடுவோம்…வெற்றியா தோல்வியா.. நமக்கு மேல் உள்ள சக்தி தீர்மானிக்கட்டும்… சரியா?”
“ஆ.. நல்ல யோசனை… அப்படியே செய்வோம்…”
நாணயத்தைச் சுண்டினான் தளபதி. காற்றில் மிதந்து, விர்ரென்று சுழன்று தரையில் விழுந்தது நாணயம்.
தலை…!
வீரர்கள் உற்சாகத்தில் மிதந்தனர். வெற்றி வெற்றி என்று எக்காளமிட்டபடி போர்க்களம் நோக்கி ஓடினர். வெகு வேகமாக சண்டையிட்டனர் எதிரி நாட்டவர்களோடு.
அட.. என்ன ஆச்சர்யம். அந்த சிறிய படை, எதிரி நாட்டின் பெரும் படையை வீழ்த்திவிட்டது!
துணைத் தளபதி வந்தான். ‘நாம் வென்றுவிட்டோம்… கடவுள் தீர்ப்பை மாற்ற முடியாதல்லவா…” என்றான் உற்சாகத்துடன்.
“ஆமாம்… உண்மைதான்” என்படி அந்த நாணயத்தை துணைத் தளபதியிடம் கொடுத்தான் தளபதி.
நாணயத்தின் இரு பக்கங்களிலும் தலை!


  

இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯 சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம். வாகனங்களுக்கான வரி 2% உயர்வு. விலை 5 சதவீதம் அதிகரிப்பதால் இருசக்கர வாகனத்திற்கு ரூ.8000, காருக்கு ரூ.30,000 கூடுதல் செலவாகும் என தெரிகிறது.

🎯 காவிரி பிரச்சனையில் கர்நாடகா மற்றும் மத்திய அரசை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம். மறியலில்  ஈடுபட்ட 2500க்கும் மேற்பட்டோர் கைது.

🎯 தஞ்சை வேளாண் கல்லூரிக்கு வேளாண் விஞ்ஞானி எம் எஸ் சுவாமிநாதன் பெயர் சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.

🎯 அரசுடன் ஆசிரியர்கள் பேச்சுவார்த்தை தோல்வி டிபிஐ வளாகத்தில் நாளை போராட்டம்.

🎯 சட்டப்பேரவையில் 10 மசோதாக்கள் நிறைவேற்றம்.

🎯 திருச்சி- மும்பை இடையே நவம்பர் 4-முதல் தினசரி விமான சேவை தொடக்கம்.

🎯11 கோடி சிறு விவசாயிகளுக்கான பி எம் கிசான் நிதியுதவியை ரூ. 8000 உயர்த்த திட்டம். மத்திய அரசுக்கு ரூ.20 ஆயிரம் கோடி கூடுதல் செலவு.

🎯2,250 துணை கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

🎯 விஐடி சென்னை  'இந்து தமிழ் திசை தேசம் காக்கும் நேசப்பணிகள்'அரசு வேலைவாய்ப்பு, உயர்கல்வி வெப்பினார் தொடர். இணைய வழியில் வரும் 14, 15 தேதிகளில் நடைபெறுகிறது.

🎯 காவிரியில் 15 நாட்களுக்கு தமிழகத்துக்கு 3000 கன அடி நீர் திறக்க வேண்டும் என காவேரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் பரிந்துரை.

🎯 ரோஹித் சர்மா 131 ரன்கள் விளாசல். இந்திய அணி அபார வெற்றி. 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானை வீழ்த்தியது.

🎯 தென் ஆப்பிரிக்காவுடன் இன்று பல பலப்பரிட்சை. வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்பில் ஆஸ்திரேலியா.

TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

🎯 vehicles to cost more in Tamilnadu as government hikes life tax.

🎯 'Operation Ajay' set to evacuate Indian national from Israel.

🎯 Transfer orders issued to 16 IPS officers.

🎯 Waiting game: foreign medical graduates yet to get internship. An estimated 100-150 FMGs from the Philippines and China are hit as they aren't able to pursue futher studies in Tamilnadu.

🎯 Agriculture College to be named after M.S.swaminathan .

🎯 'Release 3 000 cusec to Tamilnadu till October 31'.

🎯3.21 lakh appeals pending with information commissions: report .

🎯 Israel forms emergency government for duration of war.

🎯Ind vs Afg | Rohit’s swashbuckling century makes easy work of Afghanistan

🎯ATHLETICS | Services’ Manikanta eclipses 100m National record with a perfectly run race

🎯Cricket World Cup 2023 Aus vs SA | ODIs have been tiring for me for a couple of years: South Africa’s Quinton de Kock

🎯 I look at the conditions and bowl accordingly bumrah.

🎯 Asian games state athletes facilitated by TNAA.
 



இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் முதுகலைத்தமிழாசிரியர் 
அரசு  மேல்நிலைப்பள்ளி
கோவில்பட்டி 
திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 621305.
அலைபேசி எண் : 9789334642.

No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...