பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮நாள் : 19.10.2023. வியாழக்கிழமை .
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
திருக்குறள்: அதிகாரம்: காலம் அறிதல்🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
ஞாலங் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்.
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀
🍀🍀🍀🍀🍀
செயலை முடிப்பதற்கு ஏற்ற காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால், உலகமே வேண்டும் எனக் கருதினாலும் கைகூடும்.
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
இனிய காலை வணக்கம் ....✍
இரா . மணிகண்டன் முதுகலைத்தமிழாசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
1.என்.எச்.47 கீழ்க்காணும் இடங்களை இணைக்கிறது?
விடை: கன்னியாகுமரி- சேலம்.
2.நிலநடுக்கோட்டால் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள கண்டம்?
விடை : ஆப்ரிக்கா
3.நிலநடுக்கோட்டுப் பகுதியில் புவியின் விட்டம்
விடை: 12754 கி.மீ
4.இந்தியாவின் காளான் பாறைகள் எங்கு காணப்படுகிறது?
விடை : இராஜஸ்தான்
5.இந்தியாவின் மொத்தப் பரப்பளவில் தமிழ்நாட்டின் சதவீதம்
விடை : 4%
பழமொழி (proverbs ) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🌹 Every cloud has a silver lining
🌹 தீமையிலும் நன்மை உண்டு
🌷 Every man is his own doctor
🌷 தன் நோய்க்கு தானே மருந்து
இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
பண்பும் பணிவும் வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.
🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் அன்புடனும் பணிவுடனும் நடந்து ஊக்கமுடன் உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்.
நீதிக்கதை
நீதிக்கதை
🍁🍁🍁🍁🍁🍁
மனமே மாமருந்து
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஒரு ரயில் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தது, அப்போது அதில் ஒரு பெரியவர் ஏறினார். தலையில் ஒரு மூட்டையை வைத்திருந்தார்.
மூட்டையை சுமந்துகொண்டே உள்ளே வந்தார். மூட்டையை சுமந்துகொண்டே இருக்கையில் அமர்ந்தார்.
ரயில் புறப்பட்டது.
இவர் தன் தலையில் இருந்த மூட்டையை இறக்கி கீழே வைகனும்மல்ல? வைக்கவில்லை.
எதிரில் அமர்ந்திருந்தவர் கேட்டார், ஏங்க மூட்டைய தலை மேலேயே வெச்சிருகீங்க, கீழே இறக்கி வைக்கவேண்டியதுதானே ??
வேண்டாங்க பாவம்; தலையில் இருக்கிற மூட்டைய எறக்கி வெச்சா ரயிலுக்கு பாரம் அதிகமாயிடும், நான் தலைலயே வெச்சிருகிறேன் அப்படின்னு அந்த பெரியவர் சொன்னார்.
இந்த மாதிரி ஆட்கள பாத்தா நமக்கு சிரிப்பு தான் வரும். ஏன்னா, ரயில் இப்பவே அந்த மூட்டையையும் சேர்த்துதான் சுமந்துகிட்டு போகுது. அவர் அந்த மூட்டையை தலையில் வெச்சிருந்தாலும் ஒன்னு தான் தரையில் வெச்சிருந்தாலும் ஒன்னு தான். இதனால ரயிலுக்கு எந்த மாற்றமும் ஏற்பட போவதில்லை.
அதே மாதிரி தான் நம்மோட மனமும், இதுவும் ஒரு தேவை இல்லாத ஒரு சுமை. அனாவசியமா சுமந்த்துகிட்டு இருக்கிறோம். இதையும் கீழே இறக்கி வெச்சிட்டா வாழ்க்கை பிரயாணம் சுகமாக இருக்கும்.
ரயில் பிரயாணம் செய்யும் அந்த பெரியவர் மூட்டையை சுமக்கிறார். வாழ்க்கை பிரயாணம் செய்யும் நாம் மனதை சுமக்கிறோம். இவை இரண்டிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
மனதை கீழே இறக்கி வெச்சிட்டா பாரம் இல்லாமல் வாழலாம். பறவைகள் மாதிரி பறக்கலாம் குழந்தை மாதிரி கள்ளங்கபடம் இல்லாமல் வாழலாம். இந்த வெளி உலகத்தில் நாம் நிலைபெற்று வேரூன்றி இருக்கனும் அதே சமயம் நம் உள்வெளியில் பாரமில்லாமல் இருக்கனும். அப்படின்னா பறக்கனும், நதியை போல ஓடனும், மிதக்கனும் பயனம் சுகமாக இருக்கும் களைப்பு தெரியாது; கவலை தெரியாது.
ஒரு சீடன் போதி தருமரை நாடி வந்தான். குருவே நீங்கள் என்னை வெறுமையாக இருக்க சொன்னீங்க நான் இப்பொழுது வெறுமையானவன் ஆகிவிட்டேன், இப்பொழுது நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான்.
உடனே அந்த குரு பக்கத்தில் இருந்த ஒரு குச்சிய எடுத்து சீடன் தலையில் தட்டி , போய் அந்த வெற்று தன்மையையும் வீசிவிட்டு வா என்று கூறினார்.
ஒருத்தன், இப்பொ நான் காலியா இருக்கென்னு சொன்னான்னா அவன் காலியா இல்லைனு அர்த்தம், ஏன்னா அதில் இன்னும் “நான்” என்ற சொல்(எண்ணம்) இருக்கின்றது.
எந்த சிந்த்தனையும் இல்லாமல் இருப்பது கடினம் தான் ஆனாலும் மனிதன் அதனுள் இருக்கும் நுட்டபத்தை புரிஞ்சிகிட்டானா இவ்வளவு தூரம் தூக்கி சுமந்த மனதின் முட்டாள் தனத்தை எண்ணி அவனே சிரிப்பான்.
“ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இறகை போன்ற மனம் வேண்டும்”
இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🎯 ஆசிரியர்கள் கோரிக்கைக்கு இணைய வழியில் தீர்வு என பள்ளிக்கல்வி துறை திட்டம்.
🎯 விளையாட்டு வீரர்கள் உதவிகள் பெற சாம்பியன்ஸ் அறக்கட்டளை இணையதளம் மூலமாக விண்ணப்பம்.தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவிப்பு.
🎯 காமராஜர் துறைமுக நிறுவனம், 'இந்து தமிழ் திசை' சார்பில் கண்காணிப்பு விழிப்புணர்வு வார போட்டிகள். பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் பங்கேற்க அழைப்பு .
🎯 செல்போன்களில் நேரத்தை செலவிட்டால் கவனிக்கும் திறன் இல்லாமல் போய்விடும் என மாணவ, மாணவிகளுக்கு திருச்சிராப்பள்ளி கலெக்டர் அறிவுரை.
🎯 பள்ளி கல்வித்துறையின் முழு ஒத்துழைப்புடன் புத்தாக்க மேம்பாட்டு திட்டம் சிறப்பாக செயல்படுகிறது என திருச்சி மாவட்ட கலெக்டர் பாராட்டு.
🎯 ஒரே நாடு ஒரே அடையாள அட்டை நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு தனித்துவ எண் ஆதார் போல் வழங்க மத்திய அரசு திட்டம்.
🎯 யூனிட்டுக்கு ரூ.8ல் இருந்து ரூ 5.50 ஆக குறைப்பு. அடுக்குமாடி குடியிருப்புக்கு மின் கட்டண சலுகை. நாவலூர் சுங்கச்சாவடியில் இன்று முதல் கட்டணம் ரத்து. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
🎯 நாகையிலிருந்து இலங்கை செல்லும் பயணிகள் கப்பல் நாளையுடன் நிறுத்தம்.
🎯 அரசு நிலங்களில் வீடுகளை கட்டி குடியிருப்போருக்கு ஒருமுறை வரன்முறை செய்யும் திட்டத்தின் கீழ் 16,496 பேருக்கு பட்டா முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
🎯 முதலீடுகளை அதிகரிப்பதில் ஆற்றிய சிறப்பான பணி தமிழ்நாடு அரசுக்கு ஐ.நா அமைப்பின் முதலீட்டு ஊக்குவிப்பு விருது. முதல்வர் மு க ஸ்டாலின் பாராட்டு.
🎯 பிறப்பு இறப்பு சான்றிதழ்களை டிஜிட்டல் முறையில் வழங்கலாமா? ஒன்றிய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்.
🎯 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தரைக் கடைக்கு 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என திருச்சி மாவட்ட கலெக்டர் தகவல்.
🎯 தொடர் விடுமுறையையொட்டி கும்பகோணம் கோட்டம் சார்பில் 500 பேருந்துகள் இயக்கம்.
🎯 ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட நிரந்தர அடிப்படைகளான செவிலியர் பணியிடங்கள் உருவாக்க நடவடிக்கை.
🎯 மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு.
🎯 காசா மருத்துவமனையில் ராக்கெட் கொண்டு வீசியதில் 500 பேர் உயிரிழப்பு. ஹமாஸ் தீவிரவாதிகள் மீது குற்றச்சாட்டு. வீடியோ ஆதாரங்களை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது. அதிபர் பிரதமரை சந்தித்து ஆதரவு தெரிவித்த ஜோ பைடன், தீவிரவாத தாக்குதலை கடுமையாக கண்டித்தார்.
🎯 வங்கதேசத்துடன் புனேவில் இன்று மோதல். நான்காவது வெற்றியை எதிர் நோக்கும் இந்திய அணி.
🎯 நியூசிலாந்து அணியின் வெற்றி நடை ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது.
🎯 கிரிக்கெட் தர வரிசையில் ரோஹித் முன்னேற்றம்.
🎯 நெதர்லாந்து அணிக்கு சச்சின் புகழாரம்.
TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
🎯 No toll collection at naduvalur: power tariff to be cut says Stalin.
🎯 Government ke liye bonanza of Rs15,000cr for employees
🎯 Farmers association calls upon government to hike compensation for crop loss.
🎯 Green schools plan to be implemented in 5 schools in Pudukkottai.
🎯 CBSE schools under radar for alleged violation of norms.
🎯 Despite having unicode membership Tamilnadu Government shuns open standard.
🎯 Israel and Hamas trade blame over hospital blast.
🎯 Israel to allow aid to move into Gaza from Egypt: Biden.
🎯 India finds itself in perfect space but Bangladesh can be a tricky customer.
🎯 Kiwis continue to soar; send sloppy Afghanistan tumbling down to earth.
🎯 Knock, knock... Who's there? The world cup, we are back in Pune.
இனிய காலை வணக்கம் ....✍
இரா . மணிகண்டன் முதுகலைத்தமிழாசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
கோவில்பட்டி
திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 621305.
அலைபேசி எண் : 9789334642.
திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 621305.
அலைபேசி எண் : 9789334642.
No comments:
Post a Comment