பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮நாள் : 10.10.2023. செவ்வாய்க்கிழமை .
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
திருக்குறள்: அதிகாரம்: 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🍀🍀🍀🍀🍀
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
1. இந்தியா மயிலை தேசியப்பறவையாக அறிவித்த ஆண்டு எது?
விடை: 1964
2.உறுப்பு மயக்கமூட்டியாக பயன்படுவது?
விடை: பென்சைல் ஆல்கஹால்
3.உயிரினங்களில் கண்கள் இல்லாத உயிரினம் எது?
விடை: மண்புழு
4.இந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுவது எது?
விடை: மும்பை
5.தொல்பொருளியலின் புதையல் நகரம் என்று அழைக்கப்படுவது?
விடை : புதுக்கோட்டை
பழமொழி (proverbs ) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🌷A single tree doesn’t make an orchard.
🌷தனி மரம் தோப்பு ஆகாது
🌹Empty vessels make the most noise.
🌹நிறைகுடம் நீர் தளும்பாது. குறைகுடம் கூத்தாடும்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
நீதிக்கதை
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஒரு ஊரில் ஒரு விவசாயி இருந்தான். அவன் ஒரு பேராசை பிடித்தவன். அவன் நிறைய வாத்துக்கள் வளர்த்து வந்தான். அந்த வாத்துகளில் ஒன்று ஒவ்வொரு நாளும் தங்க முட்டை இட்டு வந்தது. அந்த விவசாயி அந்த தங்க முட்டைகளை விற்றுப் பணக்காரன் ஆனான்.
வாத்து ஒவ்வொரு நாளும் ஒரு தங்க முட்டை தானே இடுகிறது. இதற்காக ஒவ்வொரு நாளாக காத்திருக்க வேண்டுமா? வாத்தின் வயிற்றுக்குள் தான் நிறைய தங்க முட்டைகள் இருக்கும் என யோசிக்கத் தொடங்கினான்.
எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக எடுத்து விற்றால் ஒரே நாளில் மிகப் பெரிய பணக்காரன் ஆகலாம் என நினைத்தான்.
அடுத்த நாள் விவசாயி எல்லா தங்க முட்டைகளையும் ஒன்றாக எடுப்பதற்காக, ஒரு கத்தியை எடுத்தான்.
வாத்தின் வயிற்றைக் கீறினான். வாத்து துடிதுடித்து இறந்தது. அதன் வயிற்றினுள் அன்றைய தினம் போட வேண்டிய ஒரே ஒரு தங்க முட்டை மட்டும் இருந்தது.
வாத்து இறந்ததினால் ஒவ்வொரு நாளும் கிடைத்து வந்த தங்க முட்டையும் அவனுக்கு கிடைக்காமல் போய்விட்டது.
விவசாயி தான் செய்த முட்டாள்தனமான செயல எண்ணி கவலைப்பட்டு வருந்தி"பேராசை பெருநஷ்டம் கொடுக்கும்"என உணர்ந்தான்.
நீதி: பேராசை பெருநஷ்டம்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
இனிய காலை வணக்கம் ....✍
இரா . மணிகண்டன் முதுகலைத்தமிழாசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 621305
அலைபேசி எண் : 9789334642.
No comments:
Post a Comment