பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮நாள் : 17.10.2023. செவ்வாய்க்கிழமை .
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
திருக்குறள்: அதிகாரம்: பண்புடமை 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀
🍀🍀🍀🍀🍀
அன்புடையவராக இருத்தல், உயர்ந்த குடியில் பிறந்த தன்மை அமைந்திருத்தல் ஆகிய இவ் விரண்டும் பண்பு உடையவராக வாழும் நல் வழியாகும்
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
இனிய காலை வணக்கம் ....✍
இரா . மணிகண்டன்
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
1.செயற்கை பட்டு என்று அழைக்கப்படுவது?
விடை : ரேயான்
2.காஸ்மிக் வருடங்கள் என்பது எத்தனை ஆண்டுகள்?
விடை: 25 ஆண்டுகள்
3.இரும்பைப் போல் காந்த சக்தி கொண்ட மற்றொரு உலகம்?
விடை : நிக்கல்
4.மனிதனின் சராசரி உடல் வெப்பநிலை?
விடை : 94.4 °F - 96.8 °F
5.இந்தியாவின் மிக நீளமான சாலை?
விடை: கிராண்ட் ட்ரங்க் சாலை
பழமொழி (proverbs ) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🌷True beauty consists in purity of heart
🌷இதயத்தூய்மையே உண்மை அழகு.
🌹Beauty without bounty avails not
🌹கருணை இல்லா அழகு பயனற்றது.
இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
பண்பும் பணிவும் வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.
🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் அன்புடனும் பணிவுடனும் நடந்து ஊக்கமுடன் உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்.
நீதிக்கதை
நீதிக்கதை
🍁🍁🍁🍁🍁🍁
முக்கியமான முடிவை வரைந்து எடுக்க வேண்டும்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஒரு நாள் சிறுத்தை பசியுடன் உணவைத் தேடியது. அப்போது ஒரு கறுப்பு மானையும் புள்ளி மானையும் கண்டது. அவை இரண்டும் மலையடிவாரத்தில் மேய்ந்து கொண்டிருந்தன. சிறுத்தை மிகுந்த எச்சரிக்கையுடன் மலையடிவாரத்தருகே சென்றது. ஆனால் எதனைத் தாக்குவது என அது முடிவு செய்யவில்லை.அதே நேரத்தில் சிறுத்தையைப் பார்த்த மான்கள் இரண்டும் வேகமாக ஓடின. பிறகு அவை இரண்டும் ஒரு இடத்தில் இடது வலது பாதைகளில் ஓடின.சிறுத்தை அந்த இடத்துக்கு வந்தது. 'எதைத் துரத்தலாம்' என்று தயங்கி நின்றது. பிறகு, 'சரி.. கறுப்பு மானைத் துரத்தலாம். அதன் இறைச்சிதான் சுவையாக இருக்கும்' என்று முடிவு செய்து கறுப்பு மானைத் துரத்தத் தொடங்கியது. ஆனால் அதற்குள் அது தொலைதூரம் ஓடிப் போய் விட்டது.உடனே சிறுத்தை "அது வேகமாக ஓடக் கூடிய மான். அதைப் பிடிக்க முடியாது. பசி வேறு அதிகமாகி விட்டது. சரி... புள்ளி மானைப் பிடிக்கலாம்" என்று தீர்மானித்து மற்ற பாதையில் ஓடியது. ஆனால் புள்ளிமான் எப்போதோ பஞ்சாய்ப் பறந்துவிட்டிருந்தது.
நீதி : முக்கியமான நேரத்தில் முக்கியமான் முடிவை விரைவாக எடுக்க வேண்டும்.
.
இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🎯 பள்ளிக்கல்வித்துறையில் அதிரடி: 9 இணை இயக்குனர்கள் மாற்றம். 6 துணை இயக்குனர்களுக்கு பதவி உயர்வு வழங்க குமரகுருபரன் உத்தரவு.
🎯 அரசு பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் திறனறித் தேர்வு.
🎯 மாற்றுத் திறனாளிகளுக்கான காலி பணியிடங்கள். ஓராண்டில் நிரப்ப நடவடிக்கை. ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி.
🎯 அரசு, உதவி பெறும் கல்லூரி மாணவ மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என திருச்சி மாவட்ட கலெக்டர் அழைப்பு.
🎯 ஜம்மு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மாணவர்கள் படிக்கும் தஞ்சாவூர் வேளாண் கல்லூரிக்கு எம் எஸ் சுவாமிநாதன் பெயர் சூட்டல் .. தரவரிசையில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்.
🎯 வணிகர்களுக்கான சமாதான திட்டம் தொடக்கம். வரி நிலுவை ரத்து சான்றை முதல்வர் வழங்குகினார்.
🎯 கனமழையால் வெள்ளப்பெருக்கு புளியஞ்சோலை ஆற்றில் குளிக்க தடை வனத்துறை உத்தரவு.
🎯 தமிழகம் முழுவதும் 50 துணை ஆட்சியர்கள் பணியிட மாற்றம் தமிழ்நாடு அரசு உத்தரவு.
🎯 போக்குவரத்து விதி மீறினால் நிச்சயம் அபராதம் உண்டு. புதிய சட்டம் குறித்து போக்குவரத்து போலீஸ் மீண்டும் விழிப்புணர்வு.
🎯2,000 ஏக்கர் நிலம் ஒதுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குலசேகரபட்டினத்தில் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் தயார். முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தபின் இஸ்ரோ தலைவர் பேட்டி.
🎯 அரசு வழக்கறிஞர்களின் கட்டணம் இரு மடங்கு உயர்வு என முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசாணை வழங்கினார்.
🎯 கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் ஒரு நாள் முன்பே பயனாளிகளின் வங்கி கணக்கில் ரூ 1000 வரவு என தமிழ்நாடு அரசு தகவல்.
🎯 வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோர் தகுதி சான்று பெற விண்ணப்பிக்கலாம்.
🎯4 மாவட்ட வளர்ச்சி பணிகள் முதல்வர் நாளை முதல் ஆய்வு.
🎯 இலங்கை ஹாட்ரிக் தோல்வி. முதல் வெற்றியை பதிவு செய்தது ஆஸ்திரேலியா.
🎯 முஷடாக் அலி டி20 மழையால் தமிழ்நாடு, புதுச்சேரி ஆட்டம் ரத்து.
🎯 சென்னையில் இன்று முதல் இரண்டாவது தென் மண்டல இளையோர் ஹாக்கி.
TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
🎯Israel-Hamas war, day 11 LIVE updates | Biden to visit Israel on Wednesday
🎯Biden to head to Israel, Jordan as concerns mount that Israel-Hamas conflict will spread
🎯India and U.K. discuss Indo-Pacific and trade at ‘2+2’ Foreign and Defence Dialogue
🎯182 teachers from Tamil Nadu districts transferred to Greater Chennai Corporation schools
🎯T.N. government likely to issue administrative sanction for Parandur airport within 2 weeks
🎯Central Crime Branch of Chennai police to now investigate cyber crimes against women, children
🎯Loan disbursement for Indian students to study in Canada went up five times over past three years
🎯Journalist bodies seek President Murmu’s intervention for protection of media freedom
🎯Cricket World Cup 2023 ENG vs AFG | The tournament, despite its ‘early days’ caveat, has finally come alive!
🎯Cricket World Cup 2023 | Zampa triggers Sri Lanka’s fall before Marsh, Inglis hand Aussies first win
🎯Cricket, squash among 5 sports included in 2028 Los Angeles Olympic programme
இனிய காலை வணக்கம் ....✍
இரா . மணிகண்டன்
முதுகலைத் தமிழாசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
அரசு மேல்நிலைப்பள்ளி
கோவில்பட்டி
திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 621305
அலைபேசி எண் : 9789334642.
திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 621305
அலைபேசி எண் : 9789334642.
No comments:
Post a Comment