Tuesday, October 17, 2023

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (18-10-2023 )

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 18.10.2023.    வியாழக்கிழமை  .
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்:  சான்றோண்மை

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌷🌷🌷🌷🌷

குணநலம் சான்றோர் நலனே பிறநலம்.
எந்நலத்து உள்ளதூஉம் அன்று 

                                                                                                                 
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

சான்றோரின்  நலன் எனக் கூறப்படுவது அவர்களின் பண்புகளின் நலமே மற்ற நலம் வேறு எந்த நலத்திலும் சேர்ந்துள்ளதும் அன்று
   

🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1.கோள்களின் இயக்கத்தை கண்டுபிடித்தவர் யார் ?

விடை: கெப்ளர்

2.திருக்குறளில் எந்த அதிகாரம் இரண்டு முறை வருகிறது ?

விடை: குறிப்பறிதல்

3.சிப்பியில் முத்து விளைய எத்தனை ஆண்டுகள் ஆகும் ?

விடை:15 ஆண்டுகள்

4.PIN Code என்பதன் விரிவாக்கம் என்ன ?

விடை: postal index code

5.மெர்குரி விளக்குகள் எந்த ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது?

விடை: 1912

பழமொழி (proverbs ) :

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌷True beauty consists in purity of heart
🌷இதயத்தூய்மையே உண்மை அழகு. 


🌹Beauty without bounty avails not
🌹கருணை இல்லா அழகு பயனற்றது.
இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
      பண்பும் பணிவும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் அன்புடனும் பணிவுடனும் நடந்து  ஊக்கமுடன்  உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்.



 நீதிக்கதை
🍁🍁🍁🍁🍁🍁

பொறுமைக்கு கிடைத்த பரிசு
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

தொடர்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யவில்லை. அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள் பசியால் வாடினர். நல்ல உள்ளம் படைத்த செல்வந்தர் ஒருவரிடம் அந்த ஊர் மக்கள் சென்றனர்.
“”ஐயா! பெரியவர்களாகிய நாங்கள் எப்படியோ பசியைப் பொறுத்துக் கொள்கிறோம். சிறுவர், சிறுமியர்கள் என்ன செய்வர்? இந்த நிலையில் நீங்கள் கட்டாயம் உதவி செய்ய வேண்டும்…” என்று வேண்டினர்.

இளகிய உள்ளம் படைத்திருந்த அவர்,”இந்த ஊரில் குழந்தைகள் யாரும் பசியால் வாட வேண்டாம். ஆளுக்கொரு ரொட்டி கிடைக்குமாறு செய்கிறேன். என் வீட்டிற்கு வந்து ரொட்டியை எடுத்துச் செல்லச் சொல்லுங்கள்!” என்றார்.

மாளிகை திரும்பிய அவர், தன் வேலைக்காரனை அழைத்தார். ”இந்த ஊரில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்துக் கொள். ஆளுக்கொரு ரொட்டி கிடைக்க வேண்டும். கூடவும் கூடாது, குறையவும் கூடாது. நாளையிலிருந்து ரொட்டிகளை கூடையில் சரியான எண்ணிக்கையில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே இரு…” என்றார்.

மறுநாள், வேலைக்காரன் ரொட்டிக் கூடையுடன் வெளியே வந்தான். அங்கே காத்திருந்த சிறுவர், சிறுமியர் அவனைச் சூழ்ந்து கொண்டனர். கூடையை அவர்கள் முன் வைத்தான் அவன்.

பெரிய ரொட்டியை எடுப்பதில் ஒவ்வொருவரும் போட்டி போட்டனர். ஆனால், ஒரே ஒரு சிறுமி மட்டும் அமைதியாக இருந்தாள். எல்லோரும் எடுத்துச் சென்றது போக, மிஞ்சி இருந்த சிறிய ரொட்டியை எடுத்துக் கொண்டு அங்கிருந்து மகிழ்ச்சியுடன் சென்றாள் அவள்.

இப்படியே தொடர்ந்து நான்கு நாட்கள் நிகழ்ந்தது. எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தார் செல்வந்தர். ஐந்தாம் நாளும் அப்படியே நடந்தது. எஞ்சியிருந்த சிறிய ரொட்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள் அந்த சிறுமி. தன் வீட்டிற்கு வந்தவள், தன் தாயிடம் அதைத் தந்தாள். அந்த ரொட்டியை பிய்த்தாள் தாய். அதற்குள் இருந்து ஒரு தங்கக்காசு கீழே விழுந்தது.

அந்தத் தங்கக் காசை எடுத்துக் கொண்டு செல்வந்தரின் வீட்டிற்கு வந்தாள் சிறுமி. “ஐயா! இது உங்கள் தங்கக் காசு. ரொட்டிக்குள் இருந்தது. பெற்றுக் கொள்ளுங்கள்!” என்றாள். அவள். ”மகளே! உன் பெயர் என்ன என்று கேட்டார் செல்வந்தர். சிறுமி தன் பெயர் கிருசாம்பாள் எனக் கூறினாள். மகளே உன் பொறுமைக்கும், நற்பண்பிற்கும் நான் அளித்த பரிசே இந்தத் தங்கக் காசு. மகிழ்ச்சியுடன் இதை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் செல்  என்றார் செல்வர். துள்ளிக் குதித்தபடி ஓடி வந்த அவள், நடந்ததை தன் தாயிடம் சொன்னாள்.

எனவே, நாமும் பொறுமையாகவும், நேர்மையாகவும் இருந்தால் வாழ்வில் பல நன்மைகளை பெறலாம்.
.

இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

 🎯 மத்திய அரசு அனுமதித்தால் திருச்சியில் சித்த எய்ம்ஸ் மருத்துவமனை என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.

🎯 உங்கள் சந்திரயான் சிறப்பு பாடத்திட்டங்கள் இணையதளம் அறிமுகம். மாணவர்கள் பங்கேற்க யுஜிசி அழைப்பு.

🎯 இளநிலை, முதுநிலை ஆராய்ச்சிக்கான யுஜிசி உதவித்தொகை அதிகரிப்பு.

🎯 சித்தா, ஆயுர்வேதா, ஓமியோபதி படிப்புக்கு அக்டோபர் 26 இல் கலந்தாய்வு தொடக்கம். தரவரிசை பட்டியலில் சேலம் மாணவி முதலிடம்.

🎯'என்எல்சி இந்தியா' நிறுவனம், 'இந்து தமிழ் திசை'சார்பில் கண்காணிப்பு விழிப்புணர்வு வார வினாடி-வினா போட்டி. அக்டோபர் 26 ஆம் தேதிக்குள் பதிவு செய்ய பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு.

🎯 அரசு துறையை செயலர்கள் உட்பட 18 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவு.

🎯 சுப முகூர்த்த தினம் என்பதால்  பத்திரப்பதிவுக்கு இன்று கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு என பதிவுத் துறை செயலர் அறிவிப்பு.

🎯 தமிழகத்தில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு.

🎯 வரும் 2040- க்குள் நிலவுக்கு மனிதனை அனுப்ப வேண்டும்.'சுகன்யான் 'ஆலோசனைக் கூட்டத்தில் விஞ்ஞானிகளிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்.

🎯 69 ஆவது தேசிய திரைப்பட விருதுகளை வழங்கினார் முர்மு . அல்லு அர்ஜுன், மாதவன் உட்பட பலர் விருதுகளை பெற்றனர்.

🎯 காசா மீதான தாக்குதல் தீவிரமாகிறது. இஸ்ரேலில் ஜோ பைடன் இன்று ஆலோசனை.

🎯 ஸ்காட் எட்வர்ட்ஸ் அதிரடி அபாரமான பந்துவீச்சால் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி சாதனை படைத்தது நெதர்லாந்து.

🎯 சேப்பாக்கம் மைதானத்தில் இன்று மோதல் நியூசிலாந்துக்கும் அதிர்ச்சி கொடுக்குமா ஆப்கானிஸ்தான்?

🎯 ஜனவரி மாதம் தமிழகத்தில் மினி ஒலிம்பிக் என ஆதவ் அர்ஜுனா தகவல்.

🎯 தென் மண்டல சப் ஜூனியர் ஹாக்கி தமிழக அணிகள் அபார வெற்றி. 

🎯 பாரா ஆசிய விளையாட்டு போட்டி இந்தியாவிலிருந்து 303 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

🎯 தென்னிந்திய இளையோர் தடகளப்போட்டி வெண்கலம் வென்றார் சரண்ராஜ்.
 

TODAY ENGLISH NEWS 
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🎯 14 killed in 2 accidents at fireworks units in virudhunagar district.

🎯 More land sought for Olympic academy.

🎯 Teachers bodies protest bharathidasan University policies.

🎯 The central crime branch of Chennai police to investigate cyber crimes against women children.

🎯 Stalin calls for stern action against police over circulation of bannded drugs.

🎯'strengthened, and human rated racket is ready for Gaganyaan '

🎯 Modi 'directs'ISRO 2 land man on moon by 2040, work towards interplanetary mission.

🎯 President gives away film awards; actor waheeda Rehman gets Phalke Award.

🎯 Modi and unveils long- term blueprint for India's Maritime economy.

🎯 Hundreds are still under the rubble of hospital hit by Israel.

🎯Israel-Hamas war | Gulf states pledge $100m in ‘urgent’ aid for Gaza

🎯 Ashutosh smashes 11-ball fifty, breaks Yuvraj's record.

🎯 Austria advances; Netherlands pips Greece in stoppage time.

🎯Cricket World Cup 2023 | Flying Dutchmen take the wind out of Proteas’ sails.

🎯Cricket World Cup 2023 | With New Zealand up next, Afghanistan will look to build on its stunning win 

🎯Cricket World Cup 2023 IND vs BAN | Indian team opts to practise at full strength


இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன்   
முதுகலைத் தமிழாசிரியர் 
அரசு  மேல்நிலைப்பள்ளி
கோவில்பட்டி 
திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 621305
அலைபேசி எண் : 9789334642.

No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...