Thursday, October 5, 2023

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (06-10-2023)

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 06.10.2023.    வெள்ளிக்கிழமை .
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்:   காலமறிதல்

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌷🌷

ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து


பொருள்:

🍀🍀🍀🍀🍀

 ஊக்கம் மிகுந்தவன் (காலத்தை எதிர்பார்த்து) அடங்கியிருத்தல் போர் செய்யும் ஆட்டுக்கடா தன் பகையைத் தாக்குவதற்க்காகப் பின்னே கால் வாங்குதலைப் போன்றது


🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹
🌹🌹🌹🌹🌹🌹


1. இந்தியாவிலுள்ள மிகவும் முக்கியமான சிறுதொழில் எது?

 *விடை* :  கைத்தறிகள்

2. தமிழ் நாடு அதிக மழைப் பொழிவைப் பெறக்கூடிய மாதங்கள்?

 *விடை:*  அக்டோபர்-டிசம்பர்

3. ஜனாதிபதி பதவிக்கான தேர்தலை நடத்துபவர் யார்?

 *விடை* :  இந்தியத் தேர்தல் ஆணையம்

4. மன்னர் திருமலை நாயக்கரின் தலைநகர் எது?

 *விடை* :  தஞ்சாவூர்

5. பல்லவ மன்னர்களின் சித்திரகார புலி என்ற அடைமொழியை பெற்றவர்?

 *விடை* :  மகேந்திரவர்மன்

பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌷True beauty consists in purity of heart
🌷இதயத்தூய்மையே உண்மை அழகு. 


🌹Beauty without bounty avails not
🌹கருணை இல்லா அழகு பயனற்றது.

இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

ஊக்கமும்  உழைப்பும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து ஊக்கமுடன்  உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்
.




 நீதிக்கதை
🍁🍁🍁🍁🍁🍁

பார்வை ஒன்றே போதுமே !

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

ஒரு காட்டில் ஒரு துறவி ஒருவர் அமர்ந்திருந்தார். அவருக்குப் பார்வை கிடையாது.

அந்த வழியாக வந்த ஒருவன் " ஏ கிழவா, இந்த வழியாக சற்று முன் யாராவது சென்றார்களா? என்று அதிகாரத்தோடு  கேட்டான்.

அதற்குத் துறவி , "இதற்கு முன் இந்த வழியாக யாரும் சென்றதாகத் தெரியவில்லை." என்றார்.

சிறிது நேரத்தில் மற்றொருவன் வந்து, " ஐயா, இதற்கு முன் யாராவது இப்பக்கமாகச் சென்றார்களா? என்று கேட்டான்.

அதற்கு அத்துறவி, சற்று முன் இந்த வழியாகச் சென்ற ஒருவன் இதே கேள்வியைக் கேட்டு விட்டுச் சென்றான்." என்றார்.

மேலும் சிறிது நேரம் கழித்து இன்னொருவன் வந்தான். அவன் "துறவியாரே, வணங்குகிறேன். இதற்கு முன்பு இந்த வழியாக யாராவது செல்லும் சத்தம் தங்களுக்குக் கேட்டதா? தயவு செய்து கூறுங்கள்" என்று பணிவோடு வினவினான்.

உடனே துறவி, " மன்னர் பெருமானே, வணக்கம். இந்த வழியாக முதலில் ஒரு வீரன் சென்றான். அடுத்து ஓர் அமைச்சர் சென்றார். இருவருமே நீங்கள் கேட்ட இதே கேள்வியைத்தான் கேட்டனர்." என்றார்.

மிகவும் வியந்து போனான் அரசன், " துறவியாரே, தங்களுக்குப் பார்வை இல்லை. அப்படி இருந்தும் நான் அரசன் என்றும், முன்னால் சென்றவர்கள் வீரன், அமைச்சர் என்றும் எப்படி அறிந்தீர்கள்? என்று கேட்டான்.

"அரசே, இதைக் கண்டறிய பார்வை தேவையில்லை. அவரவர் பேசுவதை வைத்தே அவர் யார், அவர் தகுதி என்ன என்பதை எல்லாம் அறிய முடியும்."

முதலில் வந்தவர் சிறிதும் மரியாதையின்றி கேள்வி கேட்டார்.

அடுத்து வந்தவர் பேச்சில் அதிகாரம் தெரிந்தது.

ஆனால் தாங்களோ மிகவும் பணிவாகப் பேசுகிறீர்கள்." என்று விளக்கினார் அந்த பார்வையற்ற துறவி...!

இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯 வள்ளலார் காட்டிய வழியில் மத்திய அரசு பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்.


🎯 சென்னை டி பி ஐ வளாகத்தில் தொடர்ந்து போராடிய இடைநிலை ஆசிரியர்கள் வலுக்கட்டாயமாக கைது. சமூகநல கூடங்களில் அடைப்பு. விடுவித்த பிறகும் போராட்டம்.


🎯 ஐந்து மாநில தேர்தல் பார்வையாளர்களுடன் ஆணையம் இன்று முக்கிய ஆலோசனை.


🎯 நார்வே எழுத்தாளருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு.


🎯 சென்னையில் ஆசிரியர்கள் கைதை கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம்.


🎯 இடைநிலை ஆசிரியர்கள் 1562 பேர் கைது. பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்.


🎯 கைது, ஒழுங்கு நடவடிக்கைகளை கைவிட்டு ஆசிரியர்கள் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு என தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை.


🎯 தொழிற்சாலைகளின் உரிமங்களை இணைவழியில் புதுப்பிக்க அக்டோபர் 31 கடைசி நாள்.


🎯 கூட்டுறவு தேர்தலில் வெற்றி பெறாவிட்டால் கட்சி பதவியில் நீடிக்க முடியாது என திமுகவினருக்கு அமைச்சர் கே என் நேரு எச்சரிக்கை.


🎯 வேளாண்மை பல்கலைக்கழக விஞ்ஞானிகளுக்கு காப்புரிமை.


🎯 வார விடுமுறை நாட்கள் 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.


🎯 தமிழகத்தில் உறுப்பு தான விழிப்புணர்வு அதிகரிப்பு 10 நாள்களில் 1616 பேர் பதிவு.


🎯 தமிழக முதல்வர் என்று திருச்சி வருகை.


🎯 மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் வெளியேற்றம் 4000 கனஅடியாக குறைப்பு.


🎯 தமிழகத்தில் அக்டோபர் 11 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு.


🎯 ஆசிய விளையாட்டுப் போட்டி ஸ்குவாஷில் தங்கம் வென்றார் தமிழகத்தின் தீபிகா பல்லிகல்.


🎯 நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை 9 வித்தியாசத்தில் வீழ்த்தி  அபார வெற்றி வெற்றியுடன் பயணத்தை தொடங்கியது நியூசிலாந்து.


🎯 ஒலிம்பிக்கில் தங்கம் பதங்கம் வெல்வார் ஆசிய போட்டியில் தங்கம் வென்ற ராஜேஷ் ரமேஷின் தாய் உறுதி.


🎯 நெதர்லாந்துடன் இன்று மோதல் எளிதான வெற்றியை எதிர்நோக்கும் பாகிஸ்தான்.

TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

 🎯 Sikkim flood death count rises to 14 ; over 100 people missing.

🎯 Hitachi energy's innovation Centre opens in Chennai

🎯 Norway play right Fosse wins literature Nobel.

🎯 Over 1000 protesting teachers arrested; political leaders condemn government action.

🎯 Stalin announces compensation of Rs.13500 per hectare for kuruvai crops.

🎯 After 11 years Tamil Nadu governments realisation during Southwest monsoon less than 50 TMC feet.

🎯 IIT-B din says vegetable policy made by student body calls stir incentive.

🎯 India expanding censorship regime, creating uneven playing field; study

🎯 Noble laureate Yunus appears before graft watch dog over multiple charges.

🎯 Deepika HarinderPal ad d More golden Lustre to India's campaign

🎯 Indian compound archery teams domination complete.

🎯 India women come a cropper against China in the semi finals.

🎯 Antim adds  bronze to her Kitty, wrestling gets its second medal.

🎯 Convey Ravindra's tons leave England bettered.

🎯 Ravindra underline the efforts of the bowlers in restricting England.

🎯 Pakistan eyes giant start against Netherlands after warm-up debacle



இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் 
முதுகலை தமிழ் ஆசிரியர்
அரசு  மேல்நிலைப்பள்ளி
கோவில்பட்டி 
திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 621305.
அலைபேசி எண் : 9789334642.

No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...