Tuesday, October 3, 2023

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (04-10-2023)

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 04.10.2023.    புதன் கிழமை  .
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்:  நீத்தார் பெருமை

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌷🌷🌷🌷🌷

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.

                                                                                                                 
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

செய்வதற்கு அருமையான செயல்களை செய்ய வல்லவரே பெரியோர். செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யமாட்டாதவர் சிறியோர்.
       

   

🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1.பூமி எந்தத் திசையில் சூரியனைச் சுற்றி வருகிறது? 

*விடை* : மேற்கிலிருந்து கிழக்காக 

2.பூமிக்குரிய இயற்கைத் துணைக்கோள் எது?

*விடை* :சந்திரன்

3.அசோகர் அரியணை ஏறிய ஆண்டு?

*விடை* : கி.மு.273 

4.புத்தர் தனது முதல் போதனையை உத்திரபிரதேசத்தில் ___________________ எனும் இடத்தில் தொடங்கினார்? 

*விடை* : சாரநாத்

5.அக்பர் தோற்றுவித்த மதம்? 

*விடை* : தீன் – இலாஹி


பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌷A contented mind is a continual feet
🌷போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.

🌹A friend in need is a friend indeed
🌹ஆபத்தில் உதவுபவனே உண்மையான நண்பன்.


இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

ஊக்கமும்  உழைப்பும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து ஊக்கமுடன்  உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்
.




 நீதிக்கதை
🍁🍁🍁🍁🍁🍁
பூனையும் நரியும்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

ஒரு மாலை நேரத்தில காட்டுல ஒரு பூனையும் நரியும் உட்கார்ந்து பேசிகிட்டு இருந்துச்சு. “இந்த வேட்டை நாய்கள் ரொம்ப மோசமானது எனக்கு அதுங்கள பிடிக்காது”, என்று நரி சொல்லிச்சு. “ஆமா ஆமா எனக்கும் அவங்கள சுத்தமா புடிக்காது” என்று பூனையும் சொன்னது.

“அதுங்க ரொம்ப வேகமாக ஓடும். அப்படி வேகமாக ஓடினாலும் அதுங்களால என்ன புடிக்க முடியாது. ஏன்னா, அதுங்க கிட்ட இருந்து தப்பிக்க எனக்கு ஏகப்பட்ட வழிகள் தெரியும்” என்று நரி சொன்னது. “வழியா? அப்படி என்ன வழி? எனக்கும் கொஞ்சம் சொல்லு”, என்று அந்தப் பூனை கேட்டது.


அதுக்கு நரி சொல்லிச்சு, “வழியா ஏகப்பட்ட வழி இருக்கு. நான் கள்ளிச் செடிகளை எகிறி குதித்து ஓடுவேன், புதருக்கு உள்ள போய் ஒளிந்து விடுவேன்”. அப்படி எல்லாம் சொல்லி தம்பட்டம் அடித்துக்கொண்டு இருந்து அந்த நரி.

“நிஜமாகவா” என்று அந்தப் பூனை கேட்டுச்சு. அதுக்கு அந்த நரி சொன்னது, “ஆமா அதுல ஒண்ணு கூட உனக்கு சொல்லி தர முடியாது, ஏன்னா அது எல்லாமே என்னை மாதிரி புத்திசாலிங்க பண்ணக் கூடியது” என்று அந்த நரி பெருமையா பேசிக்கிட்டு இருந்து. அதற்கு பூனை “எனக்கு ஒரே ஒரு வழி தான் தெரியும்” என்று சோகமாக சொன்னது. இவ்வாறு நரியும் பூனையும் பேசிக்கொண்டிருக்கும்போது வேட்டை நாய்கள் ஓடி வர சத்தம் கேட்டது.


உடனே பூனை “என்னோட வழியை பயன்படுத்தி நான் என்ன காப்பாத்திக்க போறேன்” என்று சொல்லிவிட்டு பக்கத்திலிருந்த ஒரு மரத்துல ஏறியது. அதன்பின் “நீ எப்படி உன்னை காப்பாத்திக்க போறேன்னு நானும் பாக்குறேன்” என்று அந்த நரி கிட்ட பூனை சொன்னது. 

அந்த நரி பூனையிடம் சொன்ன எல்லா வழிகளையும் பயன்படுத்தி பாத்திச்சு ஆனா அதால அந்த வேட்டை நாய்கள் கிட்ட இருந்து தப்பிக்க முடியல. வேட்டை நாய்கள் அந்த நரியை கொன்று சாப்பிட்டுச்சாம்.


நீதி : தேவையில்லாத பல விஷயங்களை கத்துக்குறது விட, முக்கியமான ஒரு விஷயத்தை கத்துகிறது எப்பவுமே நல்லது.

இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯 அமைதியாக இருக்கும் தமிழகத்தில் குழப்பம் ஏற்படுத்துவதை தடுக்க வேண்டும். குற்றவாளிகளை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்கள் எஸ்.பி.க்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

🎯 இந்தியாவில் பணியாற்றும் 41 தூதரக அதிகாரிகளை திரும்ப பெற கனடாவுக்கு கெடு. தூதரக பாதுகாப்பு உரிமை பறிக்கப்படும் என எச்சரிக்கை.

🎯 ஊதிய முரண்பாட்டை சரி செய்ய வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் ஆறாவது நாளாக போராட்ட உடல்நல குறைவால் 250 பேர் மருத்துவமனையில் அனுமதி.

🎯 காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை. கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு. தமிழகத்துக்கு 3000 கன அடி நீர் திறப்பு.

🎯 உயர்கல்வி குறித்த அறிமுகத்திற்காக பிளஸ் டூ மாணவர்கள் கல்லூரி களப்பயணம் அக்டோபர் 25ஆம் தேதி தொடங்குகிறது.

🎯 தமிழகத்தில் அக்டோபர் 9 வரை மழைக்கு வாய்ப்பு.

🎯 425 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் எப்படி செயல்படுகிறது. பதிவாளர் நாளை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.

🎯 பீகார் மாநில நடவடிக்கைக்கு வரவேற்பு. தமிழகத்திலும் சாதிவாரி கணக்கெடுப்பு, அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்.

🎯 கூட்டுறவு சங்கங்களின் பதவிக்காலம் எப்போது தொடங்கும்? தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற உத்தரவு.

🎯 தொடக்கப்பள்ளி சார்பு விதிகளில் மாற்றம். அரசுக்கு பரிந்துரை வழங்க குழு அமைப்பு.

🎯 உயர் ரத்த அழுத்தம், அதிக ரத்தப்போக்கு முக்கிய காரணம். தமிழகத்தில் ஓர் ஆண்டில் 479 பிரசவ உயிர் இழப்புகள் என பொது சுகாதாரத்துறை ஆய்வில் தகவல்.

🎯 ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மேட்டூர் நீர்மட்டம் 35 அடியாக சரிவு

🎯 35 ஆயிரம் கோடி வளர்ச்சி திட்டங்கள் சத்தீஸ்கர், தெலுங்கானாவில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

🎯 3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியல் நோபல் பரிசு.

🎯 ஜார்கண்டின் மிகவும் பின்தங்கிய மாவட்டத்தை சேர்ந்த 25 பள்ளி மாணவிகள் இஸ்ரோவுக்கு சுற்றுப்பயணம்.

🎯 ஆசிய விளையாட்டில் பருல் சவுத்ரி, அன்னு ராணிக்கு தங்கம்.

🎯Asian Games 2023 | பருல் சவுத்ரிக்கு 5,000 மீ. ஓட்டத்தில் தங்கம்; தமிழக வீரர் பிரவீன் சித்ரவேலுக்கு வெண்கலம்

🎯Asian Games 2023 | பந்துவீச்சிலும் ஜொலித்த இந்தியா - நேபாளத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி

🎯“உலகக் கோப்பையில் ஐபிஎல் அனுபவம் கைகொடுக்கும்” - தென் ஆப்பிரிக்க வீரர் வான் டெர் டஸன்

TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

 🎯 Modi says he rejected KCR's request to join NDA in 2020.

🎯 Ensure that all complaints are registered CM tells police.

🎯 Implement 33% quota for women during 2024 lok sabha polls.

🎯 Awareness camp on October - 6.

🎯 Book fair from October-12

🎯Caste census offers a self-propagating campaign for the Opposition

🎯More than 50 lakh street vendors benefit from micro-credit scheme: Centre

🎯Canadian allegations against India ‘serious’, need to be fully investigated: U.S.

🎯 High court dismisses PIL petition against kudankulam nuclear power project.

🎯2023 Nobel Prize in physics: Seeing electrons in brief flashes of light | Explained .

🎯Kevin McCarthy becomes the first speaker ever to be ousted from the job in a U.S. House vote

🎯Hangzhou Asian Games | Tejaswin shatters decathlon national record to win silver

🎯India’s Vithya Ramraj wins bronze in women’s 400m hurdles

🎯 Parul and Annu turn back the clock to add more golden glow.

🎯 Jaiswals ton,spinners help India enter the semi finals.



இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் 
முதுகலை தமிழ் ஆசிரியர்
அரசு  மேல்நிலைப்பள்ளி,கோவில்பட்டி 
திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 621305.
அலைபேசி எண் : 9789334642.

No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...