Tuesday, October 10, 2023

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (11-10-2023)

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 11.10.2023.    புதன் கிழமை  .
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்:   தீ நட்பு 

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌷🌷🌷🌷🌷

கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு.

                                                                                                                 
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

  செய்யும் செயல் வேறாகவும் சொல்லும் சொல் வேறாகவும் உள்ளவரின் நட்பு, ஒருவனுக்கு கனவிலும் துன்பம் தருவதாகும்.
       

   

🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1. இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லிம் மன்னர்?

விடை : முகமது பின் காசிம்

2. தம்பிரான் தோழர் என்று அழைக்கப்பட்டவர்?

விடைசுந்தரமூர்த்தி நாயனார்

3. தக்கோலம் போரில் சோழ மன்னரை தோற்கடித்தவர்?

விடைமூன்றாம் கிருஷ்ணர்

4. மெகஸ்தனிஸ் எழுதிய நூல்?

விடைஇண்டிகா

5. ஜெஸியா வரியை நீக்கியவர்?

விடைஅக்பர்


பழமொழி (proverbs ) :

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌹Alternatively “Known is a drop, unknown is an Ocean”.

🌹கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு.


🌷All that glitters is not gold.

🌷மி்ன்னுவதெல்லாம் பொன்னல்ல.



இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
      பண்பும் பணிவும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் அன்புடனும் பணிவுடனும் நடந்து  ஊக்கமுடன்  உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்.



 நீதிக்கதை
🍁🍁🍁🍁🍁🍁

உழைத்தால் மட்டும் போதுமா

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

  நாள் முழுக்க வேலை தேடி அலைந்தார் ஒருவர். மாலையில் மரக்கடை ஒன்றை கண்டார். ஐயா நான் கடின உழைப்பாளி எந்த வேலை கொடுத்தாலும் நன்றாக செய்வேன் என முதலாளியிடம் உறுதி அளித்தார்.

மரம் வெட்டும் வேலை கிடைத்தது. முதல் நாள் அக்கறையுடன் வேலை செய்தார். மற்ற தொழிலாளிகளை விட வேகமாக மரம் வெட்டும் பணியை செய்து முடித்தார். புதியவரின் திறமையை கண்டு அனைவரும் வியந்தனர்.

ஆனால் விதி சதி செய்தது. அடுத்தடுத்த நாட்களில் அவரால் முதல் நாளைப் போல வேகமாக வேலை செய்ய முடியவில்லை. மற்றவர்களின் பரிகாசத்திற்கு ஆளானார். ஒரு வாரம் கடந்த பின்,” என்ன ஆச்சு முதல்நாள் ஆர்வமாக மரம் வெட்டினிர்களே இப்போது ஏன் முடியவில்லை வேகம் குறைந்துவிட்டது” என்று கேட்டார் முதலாளி.


ஏன் என்று தெரியவில்லை முதல் நாளைப் போல் அக்கறையுடன் தான் வேலை செய்கிறேன் என்றார் அவர். “அப்படியானால் கோடாரியை காட்டுங்கள் அதை எப்படி கூர்மை செய்துள்ளீர்கள் என்று பார்க்கட்டும்” என்றார் முதலாளி. கூர்மையா இதுவரை பட்டை  தீட்டவே இல்லை என்றார் அவர்.

“முதல்நாளில் பட்டை தீட்டி கொடுத்தேனே அதை வைத்தே வெட்டிக் கொண்டு இருக்கிறீர்களா” என்றார் முதலாளி. அவரும் “ஆமாம்” என்றார். இதுதான் பிரச்சனை பட்டை தீட்டாமல் வெட்டினால் கோடாரி மட்டுபட்டு விடும். கடினமாக உழைத்தும் பலன் கிடைக்காது என்றார் முதலாளி. அதன்பின் கோடாரியை கூர்மை படுத்துவதை தன் முதல் வேலையாக கொண்டார் மரம் வெட்டுபவர்.


 நீதி : உழைத்தால் மட்டும் போதுமா வெற்றிபெற புத்திசாலித்தனமும் அவசியம்.

இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯 இஸ்ரேலுடன் இந்திய மக்கள் உறுதுணையாக நிற்பர் என்று அந்த நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் உறுதி கூறினார்.

🎯 பசும்பொன் தேவர் தங்க கவசத்தை திண்டுக்கல் சீனிவாசனிடம் ஒப்படைக்க உத்தரவு .

🎯 பிரதமரின் கல்வி உதவித்தொகையை திட்டத்தின் எழுத்து தேர்வு. மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு.

🎯 பார்வையற்ற மாணவர்களுக்கான சிறப்பு பள்ளிகளுக்கு 90 ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை தொடக்கம். ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல்.

🎯 வள்ளலார் பல்லுயிர் காப்பகத் திட்டம் தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு.

🎯 குரூப் 4 தேர்வுக்கான விடைக் குறிப்புகள் இன்று அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு.

🎯 தகுதி உள்ளோருக்கு மகளிர் உரிமைத்தொகை நிச்சயம் என அமைச்சர் உதயநிதி உறுதி.

🎯 சிறு வணிகர்களுக்கான வணிகவரி சமாதான திட்டம் அறிமுகம்.ரூ.50,000 வரை வரி பாக்கி தள்ளுபடி. தமிழக வரலாற்றில் முதல் முறையாக நடைமுறை.95.502 பேர் பலன் பெறுவார்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவையில் அறிவிப்பு.

🎯 தேசிய கல்விக் கொள்கையில் மன அழுத்தத்தை குறைக்கும் பாடத்திட்டம் ஆளுநர் ஆர்.என.ரவி கருத்து.

🎯 தான்சானியாவில் சென்னை ஐஐடி வளாகம்: நவம்பரில் தொடங்கப்படும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவிப்பு.

🎯 தொடர் விடுமுறை எதிரொலி . நான்கு நாட்கள் 500 சிறப்பு பஸ்கள் இயக்கம். குடந்தை கோட்டம் ஏற்பாடு.

🎯 இந்திய செல்வந்தர்கள் பட்டியல். அதானியை முந்தினார் அம்பானி.

🎯 உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 7-வது ஆட்டத்தில் 140 ரன்கள் விலாசினார் மலான். வங்கதேசத்துக்கு எதிராகஇங்கிலாந்து அபார வெற்றி. பந்துவீச்சில் அசத்தினால் டாப்லி.

🎯இலங்கையை வென்றது பாகிஸ்தான்.

🎯 இந்தியா ஆப்கானிஸ்தான் இன்று மோதல்.

 
TODAY ENGLISH NEWS 
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯 Tamil Nadu Assembly adopts Bill to reintroduce Samadhan Scheme.

🎯Tamil Nadu Assembly | CM Stalin announces amnesty scheme for traders who have not paid commercial taxes.

🎯 Tamil Nadu Assembly | 335 life prisoners including nine Muslims released prematurely: CM Stalin

🎯School Education Department takes steps to re-admit tribal children from Nattakkal in Kil Kotagiri to school

🎯Israel-Hamas war day 5 LIVE updates | President Biden, Netanyahu discuss U.S. military support for Israel over phone

🎯Net direct tax collections up 21.8% to ₹9.57 lakh crore

🎯China to host Belt and Road forum in Beijing October 17-18

🎯Delhi HC seeks action taken report on filming of girls at IIT-D washroom

🎯IIT-Madras offshore campus in Zanzibar to be opened in November: Union Education Minister

🎯Teenage sensation Lamine Yamal out of Spain squad after injury with Barcelona

🎯India and Afghanistan should have shared Asian Games gold, says Afghan pacer Fareed Malik

🎯Ind vs Afg | Rohit’s Men in Blue primed to have a smooth passage against Afghanistan

🎯England vs Bangladesh HIGHLIGHTS, World Cup 2023: Malan, Topley shine as ENG thrashes BAN by 137 runs

🎯 Sri Lanka vs Pakistan | Shafique, Rizwan’s tons trump Mendis and Samarawickrama’s.


இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன், முதுகலைத்தமிழாசிரியர்,  
அரசு  மேல்நிலைப்பள்ளி,
கோவில்பட்டி ,
திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 621305.
அலைபேசி எண் : 9789334642.

No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...