Wednesday, November 1, 2023

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (02-11-2023)

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 02.11. 2023.       வியாழக்கிழமை
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்:  பயனில சொல்லாமை.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல்
மக்கட் பதடி யெனல்.                                                                                                                                                                                                                                         
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀
பயனில்லாத சொற்களைப் பலமுறையும் சொல்லுகின்ற ஒருவனை மனிதன் என்று சொல்லக்கூடாது. மக்களுள் பதர் என்று சொல்லவேண்டும்.
   
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1.  விக்கிரமாதித்யன் என்ற பட்டப் பெயர் உடைய மன்னர்?

விடை  :  சமுத்திரகுப்தர்.

 2.இந்திய பாராளுமன்றத்தில் " இந்திய குடியுரிமைச் சட்டம்" இயற்றப்பட்ட ஆண்டு?

விடை : 1947.            
       
3 ) கல்லில் வடித்த காவியம் என்று அழைக்கப்படுவது?

 விடை : மோதி மசூதி

4. பாண்டியர்களின் ஓவியக்கலை வளர்ச்சியை பறைசாற்றுவது?

 விடை : சித்தன்னவாசல்

5.  இந்தியாவின் நீளமான அணை எது?

விடை    : ஹிராகுட் அணை.

பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
 🌸Good beginning makes a good ending

🌸 நல்ல தொடக்கம் நல்ல முடிவைத் தரும்
🌸 Man proposes ; God disposes

🌸 தான் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும்.





 இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
காலமறிதலும், கடின உழைப்பும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து குறித்த நேரத்தில் எனது பணிகளை செய்வேன்.
" உழைப்பே உயர்வு தரும்" என்ற பழமொழிக்கேற்ப கடுமையாக உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்.



 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

எவ்வளவு வெயிட்?

-----------------------------

வாத்தியார் வகுப்பறைக்குள் நுழைந்தார்.



மேஜை மீதிருந்த கண்ணாடி டம்ப்ளரை எடுத்து தூக்கிக் காட்டினார்.



“இது எவ்வளவு வெயிட் இருக்கும்?”



100 கிராம், 50 கிராம் என்று மாணவர்கள் ஆளாளுக்கு ஒரு எடையை சொன்னார்கள்.



“இதோட சரியான எடை எனக்கும் தெரியாது. ஆனா என்னோட கேள்வி அதுவல்ல”



வாத்தியார் தொடர்ந்தார். “இதை அப்படியே நான் கையிலே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா என்ன ஆகும்?”



“ஒண்ணுமே ஆகாது சார்”



”வெரிகுட். ஆனா ஒரு மணி நேரம் இப்படியே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா…?”



“உங்க கை வலிக்கும் சார்”



“ஒருநாள் முழுக்க இப்படியே வெச்சிருந்தேன்னா…”



“உங்க கை அப்படியே மரத்துடும் சார்”



“வெரி வெரி குட். ஒரு மணி நேரத்துலே என் கை வலிக்கறதுக்கும், ஒரு நாளிலே மரத்துப் போகிற அளவுக்கு மாறுறதுக்கு இந்த தம்ப்ளரோட வெயிட் கூடிக்கிட்டே போகுமா என்ன?”



“இல்லை சார். அது வந்து…”



“எனக்கு கை வலிக்காம, மரத்துடாம ஆகணும்னா நான் என்ன பண்ணனும்?”



“கிளாஸை உடனே கீழே வெச்சுடணும் சார்”



”எக்ஸாக்ட்லி. இந்த கிளாஸ்தான் பிரச்சினை. ஒரு பிரச்சினை நமக்கு வந்ததுன்னா அதை அப்படியே மண்டைக்கு ஏத்தி ஒரு மணி நேரம் வெச்சிருந்தோம்னா வலிக்க ஆரம்பிக்கும். ஒரு நாள் முழுக்க அப்படியே வெச்சிருந்தா மூளை செயலிழந்து மரத்துடும். அதனாலே உங்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்துடிச்சின்னா தூக்கி ஒரு ஓரமா கடாசிடுங்க. அதுவே சரியாயிடும். சரியா?”



# இது தான் மனவியல் ரீதியிலான தீர்வு.







இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


🎯சென்னையில் நவம்பர் 4ம் தேதி முதல் வாகனங்களுக்கு வேக கட்டுப்பாடு அமல்: பெருநகர காவல் ஆணையரகம் அறிவிப்பு

🎯வன்னியர்கள் இடஒதுக்கீடு தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

🎯ரூ.101.50 அதிகரித்தது வர்த்தக சிலிண்டர் விலை ரூ.2000 ஆக உயர்வு: டீக்கடை, ஓட்டல்களில் விலை உயரும் வாய்ப்பு;

🎯தீபாவளியன்று பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி: தமிழக அரசு உத்தரவு

🎯இந்தியாவில் 7.4 கோடி டன் உணவு ஆண்டுதோறும் வீணடிக்கப்படுகிறது

🎯தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தாம்பரம் - நாகர்கோவில் சிறப்பு ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

🎯இரு நாட்டு நட்புறவை வலுப்படுத்தும் நோக்கில் இந்தியா - வங்கதேசம் இடையே ரயில் சேவை

🎯கர்நாடகாவில் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் இலவச மின்சாரம், குடிநீர்: முதல்வர் சித்தராமையா அறிவிப்பு

🎯காசா பகுதியில் இதுவரை 8,525 பேர் இறப்பு: இஸ்ரேல் தாக்குதலில் 7 பிணைக் கைதிகள் உயிரிழப்பு

🎯ஆப்கானியர்கள் வெளியேற கூடுதல் அவகாசம் வேண்டும்: பாகிஸ்தானுக்கு தலிபான் கோரிக்கை

🎯சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இங்கிலாந்து வீரர் டேவிட் வில்லி ஓய்வு

🎯ODI WC 2023 | தென் ஆப்பிரிக்கா 190 ரன்களில் அபார வெற்றி: நியூஸிலாந்து ஹாட்-ட்ரிக் தோல்வி

🎯“அன்று வான்கடேவில் ரசிகன்.. பின்னாளில் சாம்பியன்” - தனது சிலை திறப்பு விழாவில் சச்சின் நெகிழ்ச்சி






TODAY'S ENGLISH NEWS: 
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
.

🎯 Tamil Nadu Higher Education Minister Ponmudy to boycott MKU convocation over Governor’s refusal to award honorary doctorate to Sankaraiah

🎯Colleges still on a learning curve to integrate skill-training component under Naan Mudhalvan Scheme 

🎯Southern Railway asks Station Masters not to communicate with Loco Pilots unnecessarily over walkie-talkie

🎯Opposition MPs want Parliamentary panel on IT to ‘examine’ alert sent out by Apple

🎯Conference on liquid crystals today at Andhra University.

🎯Delhi HC orders Kendriya Vidyalaya Sangathan to provide 4% reservation for disabled persons in recruitment

🎯IIT-D student ends life; third such case in three months

🎯Israel-Hamas war, Day 27 LIVE updates | At least 195 killed in refugee camp strike, says Hamas

🎯Fitness-freak Marcus Stoinis travelling with Indian chef during World Cup

🎯ICC World Cup 2023: Australia’s Glenn Maxwell falls off golf cart, to miss England clash

🎯Cricket World Cup 2023 IND vs SL | India looks to seal its seemingly pre-ordained semifinal berth














🌸இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் முதுகலைத்தமிழாசிரியர் 
அரசு மேல்நிலைப்பள்ளி
கோவில்பட்டி 
திருச்சி மாவட்டம் - 621305
அலைபேசி எண் : 9789334642.
                                   


No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...