Sunday, November 5, 2023

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (06-11-2023)

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 06.11. 2023.  திங்கட்கிழமை.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: இறைமாட்சி
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

தூங்காமை கல்வி துணிவுடைமை அம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவற்கு . 
                                                                                                                                                                                                                                         
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

காலம் தாக்காத தன்மை, கல்வியுடைமை, துணிவுடைமை இந்த மூன்று பண்புகளும் நிலத்தை ஆளும் அரசனுக்கு நீங்காமல் இருக்க வேண்டியவை..
     
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1. மின் தூக்கியின் இயக்கம்?

விடை  :  நேர்கோட்டு இயக்கம்.

 2.  ரேடியோ மீட்டர் என்பது?

விடை : அகச்சிவப்பு கதிர் வீச்சை அறியும் கருவி.      
               
3 பைரோமீட்டர் என்பது எதை அளவீடு செய்ய பயன்படுகிறது?

விடை : உயர் வெப்பநிலை

4.ஆல்பா கதிர்கள் என்பன?

 விடை : நேர் மின்னோட்டம் தாங்கிய துகள்கள்.

5.  நீளத்தில் SI அலகு?

விடை    : மீட்டர்..

பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

 🌸No news is good news

🌸 செய்தி ஏதும் இல்லை என்பது நல்ல செய்தியே

🌸 No Pains ; No Gains

🌸 உழைப்பின்றி ஊதியம் இல்லை




 இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

காலமறிதலும், கடின உழைப்பும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                                 
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து குறித்த நேரத்தில் எனது பணிகளை செய்வேன்.
" உழைப்பே உயர்வு தரும்" என்ற பழமொழிக்கேற்ப கடுமையாக உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்.



 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁

உப்பு வியாபாரியும் கழுதையின் தந்திரமும்:

முன்னொரு காலத்தில் ஒரு உப்பு வியாபாரி இருந்தான். அவன் தினந்தோறும் ஒரு கழுதையின் மீது உப்பு மூட்டைகளை ஏற்றி ஊருக்குள் போய் வியாபாரம் செய்து வருவான். போகும் வழியில் ஒரு ஆறு இருந்தது. அந்த ஆற்றைக் கடந்துதான் ஊருக்குள் போக வேண்டும்.

ஒரு நாள் உப்பு வியாபாரி வழக்கம் போல கழுதையின் முதுகில் உப்பு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு வியாபாரத்திற்கு கிளம்பிச் சென்றான். வழியில் உள்ள ஆற்றை கழுதை கடந்த போது எதிர்பாராமல் கழுதையின் கால்கள் வழுக்கிவிட்டது. எனவே, கழுதை தடுமாறி ஆற்றுக்குள் விழுந்து விட்டது.

கழுதை தவறி விழுந்ததால் அதன் முதுகில் இருந்த உப்பு மூட்டை நனைந்து விட்டது. கழுதையை வியாபாரி மெல்ல தூக்கிவிட்டான். ஆனால், நீரில் மூழ்கியதால் உப்பு மூட்டை நனைந்தது அல்லவா? அது ஒரு சில நிமிடத்தில் அப்படியே, தண்ணீரில் கரைந்து பாதி மூட்டையாகிவிட்டது.

எனவே, கழுதை முதுகில் இருந்த உப்பு மூட்டை வெறும் சாக்குப் போல எடையில்லாதபடி ஆகிவிட்டது. ஆஹா என்ன ஆச்சரியம் இப்போது கழுதை முதுகில் சுமையே தெரியவில்லை.

கழுதைக்கு மிகுந்த சந்தோஷம். ஆனால் வியாபாரிக்கு பெரிய நஷ்டம். உப்பு வியாபாரியும் உப்பு வியாபாரம் செய்ய வழியில்லாமல் கழுதையை ஓட்டிக் கொண்டு வீட்டிற்கு திரும்பினான்.

மறுநாளும் வழக்கம் போல வியாபாரி உப்பு வியாபாரத்திற்கு கிளம்பினான். கழுதை முதுகில் இருந்த உப்பு மூட்டை கழுதைக்கு கனமாக இருந்தது. கழுதை மெல்ல நடந்து ஆற்றுப் பாலம் அருகே வந்தது. திடீரென அதற்கு முந்தைய நாள் நினைவு வந்தது. எனவே, மெல்ல தடுமாறுவது போல செய்து சட்டென்று ஆற்றுக்குள் விழுந்தது.

அடுத்த நிமிடம் கழுதை முதுகில் இருந்த உப்பு மூட்டை நீரில் கரைந்து விட்டது. இன்றும் கழுதைக்கு முதுகில் சுமை இல்லாது போய்விட்டது.

கழுதை தனது தந்திரத்தால் தொடர்ந்து இதையே செய்த வந்தது. இதனால் தினமும் வியாபாரத்திற்குப் போக முடியாமல் வியாபாரி தொடர்ந்து சிரமம் கொண்டான்.

ஒரு நாள் வியாபாரி வழக்கம் போல கழுதையின் முதுகில் உப்பு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு வியாபாரத்திற்கு கிளம்பிச் சென்றான். செல்லும் வழியில் கழுதை கொண்டுவருகின்ற உப்பு எப்படி காணமல் போன்கின்றன என்று யோசித்துக்கொண்டே கழுதையின் நடவடிக்கைகளை கவனித்தான்.

கழுதை வேண்டுமென்றே ஆற்றுக்குள் விழுந்தது. அவனுக்கு மெல்ல மெல்ல கழுதையின் தந்திரம் புரிந்தது. எனவே, அதற்கு ஒரு நல்ல பாடம் கற்பிக்க நினைத்தான்.

அன்று கழுதை முதுகில் வழக்கம் போல உப்பு மூட்டையை ஏற்றவில்லை வியாபாரி. மாறாக, பஞ்சு நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை கழுதை முதுகில் ஏற்றினான். கழுதை வழக்கம் போல ஆற்று பாலத்தின் அருகே வந்தது. எதிர்பாராமல் கால் தடுமாறுவது போல தடுமாறி ஆற்றிற்குள் விழுந்தது.

மூட்டையில் இருந்த பஞ்சு நீரில் நனைந்தது. அடக் கஷ்டமே! கழுதையின் முதுகில் இருந்த பஞ்சு மூட்டை முன்பைவிட அதிகமாக கனத்தது. கழுதையும் மிகவும் கஷ்டப்பட்டு ஆற்றைக் கடந்து கரைக்கு வந்து சேர்ந்தது.

தனது ஏமாற்று வேலை இவ்வளவு நாள் தன்னைக் காப்பாற்றிவந்த வியாபாரிக்குத் தெரிந்து விட்டத்தை எண்ணி வெட்கப்பட்டது. இனி நேர்மையாக நடக்க முடிவெடுத்தது.

நீதி: நாமும். நம்மை நம்பியவர், நம்பாதவர் யாரையும் ஏமாற்றக் கூடாது. அப்படி செய்தால் ஒரு நாள் நம் செயல் அவர்களுக்குத் தெரியவரும். அன்று அவமானம் அடையும் நிலை வரும். அதற்கான தண்டனையும் நமக்குக் கிடைக்கும்.



இன்றைய முக்கிய செய்திகள்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯 தலைமை ஆசிரியர்களை பணி இறக்கம் செய்யக்கூடாது என பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்.

🎯 கலைத் திருவிழா போட்டிகள் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்.

🎯 ஆசிரியர் பணி வரன்முறை நடவடிக்கைகளில் தாமதம் கூடாது என தொடக்கக் கல்வித் துறை அறிவிப்பு.

🎯 ஊதிய உயர்வு கோரிக்கை: மருத்துவர்கள் போராட்ட அறிவிப்பு

🎯 தீபாவளிக்காக நவம்பர் 9 முதல் கூடுதல் பேருந்துகள் இயக்கம்.

🎯 தீபாவளிக்காக அரசுப் பேருந்துகளில் 82 ஆயிரம் பேர் முன்பதிவு.

🎯 திருச்சி மாவட்டத்தில் இன்று முதல் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி முகாம்.

🎯 வைகை அணையின் நீர்மட்டம் உயர்வு ஐந்து மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.

🎯 துறையூரில் பெரிய ஏரி நிரம்பியது.

🎯 திருச்செந்தூர் கோயிலில் நவம்பர் 13- இல் கந்தர் சஷ்டி விழா தொடக்கம். நவம்பர் 18-ல் சூரசம்காரம்.

🎯 தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் பலத்த மழை மழைக்கு வாய்ப்பு.

🎯 கேரளத்தின் மூன்று மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை.

🎯 மிசோரம் சத்தீஸ்கரில் நாளை வாக்குப்பதிவு பிரச்சாரம் நிறைவு.

🎯 காசா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் 40 பேர் உயிரிழப்பு.

🎯 அடுத்த தேர்தலுக்குள் துணை பிரதமரிடம் தலைமை பொறுப்பை ஒப்படைக்க திட்டம் சிங்கப்பூர் பிரதமர் லீ அறிவிப்பு.

🎯 கோலி சாதனை சதம்; சடேஜா அசத்தல் சுழல். இந்தியாவுக்கு 8-வது தொடர் வெற்றி.

🎯 கிராண்ட் மாஸ்டர் பட்டம் நெருங்கும் வைஷாலி.

🎯 ஆசிய ஹாக்கி: இந்திய மகளிர் சாம்பியன்.

🎯 பிரான்சில் நடைபெற்ற பாரிஸ் மாஸ்டர் ஆடவர்  டென்னிஸ் போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரான செர்பியாவின் நோவா ஜோகோவிச் ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் பட்டம் வென்றார்.

🎯 உலகக்கோப்பை கிரிக்கெட்டின் 38வது ஆட்டத்தில் இலங்கை வங்கதேச அணிகள் இன்று மோதல்.

TODAY'S ENGLISH NEWS: 
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

🎯 Tamil Nadu CM’s video address not telecast in Sri Lanka; report hints at GoI’s objection

🎯Regulator gives nod for hard cost of ₹876 crore for emission system at Vallur Power Station

🎯Caste atrocity blamed for 16-year-old Dalit boy’s death in Pudukottai

🎯ICT Academy mulls host of AVGC initiatives to tap into T.N. students’ potential in gaming sector

🎯Severe or worse air quality in Delhi for 4th day on trot

🎯Primary schools to remain shut till November 10 as air pollution spikes; entry of trucks restricted

🎯India-Nepal border forces' talks to begin in Delhi tomorrow

🎯Campaigning ends in Mizoram and for 20 seats in Chhattisgarh

🎯Morning Digest | PM Modi, Kharge lead Mizoram poll campaign on final day; Centre puts ₹4,000 cr. on hold as A.P. alters PMAY name, and more

🎯Warplanes strike Gaza refugee camp as Israel rejects U.S. push for a pause in fighting

🎯Cricket World Cup 2023 IND vs SA | Kohli’s ton, Jadeja’s five-for drive the Indian juggernaut

🎯Cricket World Cup 2023 | Captain Williamson: ever the selfless cricketer and team player

🎯Araujo's late goal gives Barcelona 1-0 win at Real Sociedad

🎯Women’s Asian Champions Trophy final | India dethrones Japan with a commanding display, regains the title it won in 2016

🎯Women’s Asian Champions Trophy: India moves past Korea, meets Japan in the final












🌸இனிய காலை வணக்கம் ....✍       
           

இரா . மணிகண்டன் முதுகலைத்தமிழாசிரியர் 
அரசு மேல்நிலைப்பள்ளி, கோவில்பட்டி,
திருச்சி மாவட்டம் - 621305
அலைபேசி எண் : 9789334642.

                                   


No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...