பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
நாள் : 07.11 . 2023. செவ்வாய்க்கிழமை .
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
🌸திருக்குறள் : அதிகாரம்: அறிவுடைமை .
எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு. 🌸பொருள்:
. எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும் அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்.
🌸 பொதுஅறிவு:
1. பாரசீகர்கள் இந்தியாவிற்கு கொண்டு வந்தது?
விடை : பார்ஸி மதம்.
2. புதிய கற்கால மனிதன் எந்த நதிக்கரையில் பயிரிட்டான்?
விடை : சிந்து.
3. ரிக் வேதம் உருவான ஆண்டு?
விடை : கிமு 2000.
4. கூட்டல் இயந்திரத்தை கண்டுபிடித்தவர்?
விடை : பாஸ்கல்
5 . கடல் நீரில் இருந்து பிரித்தெடுக்கப்படும் உலோகம் ?
விடை : சோடியம் .
பழமொழிகள் (proverbs) :
🌸 Contentment is more than a Kingdom
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து .
🌸 Constant dripping wears away the stone .
எறும்பு ஊற கல்லும் தேயும்.
இரண்டொழுக்கப் பண்பாடு:
🌸 இனிய சொற்களே இன்பம் பயக்கும் . கடுஞ்சொற்கள் துன்பத்தை உண்டாக்கும் என்பதை நான் அறிவேன். 🌸 எனவே நான் ஒவ்வொருவரிடமும் எப்பொழுதும் இனிமையான சொற்களையே பேசுவேன். ஒரு போதும் கடுஞ்சொற்களை உச்சரிக்க மாட்டேன் அது பிறர் மனதை புண்படுத்தும் என்பதை உணர்ந்து செயல்படுவேன்.
நீதிக்கதை :
கற்க கசடற’ என்கிறது திருக்குறள். கவனித்தல், கல்விக்கு அத்தனை முக்கியம். கல்வி, கலைகள், பயிற்சிகள்... எதுவாகவும் இருக்கட்டும். கூர்ந்து கவனித்துக் கற்பவன் மட்டுமே அதில் மேதையாக முடியும்; சாதனை புரியவும் முடியும். அதற்கு உதாரணம், அர்ஜூனன். ‘வில்லுக்கு விஜயன்’ எனப் பெயர் எடுத்தவன்... குரு துரோணாச்சாரியாரின் அன்புக்கு பாத்திரமானவன்... அவரின் அத்யந்த சிஷ்யன். அதனாலேயே பலரின் காழ்ப்புக்கும், சிலரின் வெறுப்புக்கும் ஆளானவன். ஒருவன் திறமைசாலியாக மிளிர கவனித்தல் திறன் எவ்வளவு அவசியம் என்பதை துரோணர், மற்றவர்களுக்கு உணர்த்திய சம்பவம் ஒன்று உண்டு.
அது, துரோணருடன் வனத்தில் இருந்த ஆசிரமத்தில் தங்கியிருந்து கௌரவர்களும் பாண்டவர்களும் அப்பியாசம் (பயிற்சி பெறுதல்) பெற்றுக்கொண்டிருந்த காலம். அங்கே வேறு சில அரச குமாரர்களும் வித்தைகள் கற்க வந்திருந்தார்கள். அஸ்திரப் பயிற்சிகளை தம் மாணவர்களுக்கு குரு துரோணர் கற்றுக்கொடுக்கும் பாங்கே அலாதியானது. ஆசிரமத்திலிருந்து மாணவர்களை வெகுதூரம் அழைத்துச் செல்வார். இருந்திருந்தாற்போல் எதையாவது சொல்வார். அவர் சொன்னதை அப்படியே பின்பற்றினால், கற்றுத் தேறிவிடலாம்.
அன்றைக்கும் அப்படித்தான். தன் சிஷ்யர்களுடன் அடர்ந்த வனத்தில் நடந்துகொண்டிருந்தார் துரோணர். உச்சிப்பொழுது நெருங்கிக்கொண்டிருந்தது. மரங்களின் மேல் இருந்த பறவைகள் மனிதர்களின் பெருத்த காலடியோசையில் அதிர்ந்து பறந்து, திரும்ப வந்து அமர்ந்தன. அணில்கள் கிளைவிட்டுக் கிளைக்குத் தாவிக் குதித்து ஓடின. புதர்களில் பதுங்கியிருந்த சிறு முயல்கள் பதறி, குதித்து ஓடின. மாணவர்களுக்கு எல்லையில்லாக் களைப்பு. அன்றைக்கு ஆதவனின் வெப்பம், வனத்தின் குளுமையையும் நீர்த்துப் போகச் செய்திருந்தது. பலருக்கும் வியர்க்கத் தொடங்கியிருந்தது.
ஓர் இடத்தில் நின்றார் துரோணர். மாணவர்களும் தேங்கி நின்றார்கள். தன் பார்வையை மாணவர்களின் மேல் அலையவிட்டார். ஓர் இடத்தில் நிலைகொண்டது அவர் பார்வை. குறிப்பறிந்து, முன்னால் வந்து நின்றான் அர்ஜூனன்.
``காண்டீபா...! வெகு தாகமாக இருக்கிறது. என்ன செய்யலாம்?’’
``ஆணையிடுங்கள் குருதேவா!’’
``ஆசிரமத்தைத் தாண்டி வெகுதூரம் வந்துவிட்டோம். அங்கு போய் நீர் கொணர்வது சாத்தியமில்லாதது. நாம் வரும் வழியில் எங்கோ ஒரு நீர்நிலை இருந்ததாக நினைவு...’’
``ஆம் குருவே! இதோ அருகேதான்... ஒரு காத தூரம்கூட இருக்காது.’’
``அப்படியானால் ஒன்று செய்! அந்தத் தடாகத்துக்குப் போ! எனக்கு நீர் கொண்டு வா!’’
அர்ஜூனன் குருவைப் பணிந்து வணங்கினான். துரோணரின் நீர்க்குடுவையை எடுத்துக்கொண்டான். வந்த வழியே திரும்பி நடந்தான்.
அர்ஜூனன் கண் பார்வையில் இருந்து மறைந்ததும், துரோணர் மாணவர்களை நோக்கித் திரும்பினார்.
``பீமா! அஸ்திரப் பயிற்சியை ஆரம்பிக்கலாமா?’’
பீமன் வாயைத் திறக்கக்கூட இல்லை.
``அர்ஜூனன் இல்லாமலா?’’ கேட்டது துரியோதனன்.
துரோணர், துரியோதனனை வெறித்துப் பார்த்தார்.
``பரவாயில்லை துரியோதனா... அதனால் என்ன?’’
துரியோதனனிடம் இருந்து மறுபேச்சு வரவில்லை. துரோணருக்கு துரியோதனனின் மனநிலை நன்கு தெரியும்.
‘அர்ஜூனனுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை, நான் மற்றவர்களுக்குக் கொடுப்பதில்லை என நினைக்கிறான். என் பிரியத்துக்கு உரியவன் என்பதாலேயே, சிறப்பு கவனம் கொடுத்து அனைத்தையும் கற்றுக் கொடுப்பதாக எண்ணுகிறான். அது தவறு என்பதை உணரச் செய்ய வேண்டும்...’ யோசனையோடு அத்தனை மாணவர்களையும் பார்த்தார் துரோணர்.
தரையில் அமர்ந்தார், ஒரு குச்சியால் மணலில் ஒரு மந்திரத்தை எழுதினார்.
``இன்றைய அஸ்திரப் பிரயோகத்துக்கான மந்திரம் இதுவே... எல்லோரும் மனனம் செய்துகொள்ளுங்கள்.``
சீடர்கள் முன்னே வந்தார்கள். துரோணர் உரக்க அந்த மந்திரத்தை ஒருமுறை சொன்னார். மந்திரத்தை மாணவர்கள் உள்வாங்கிக்கொண்டார்கள். திரும்ப அவர் எழுதி வைத்ததைப் படித்து உறுதி செய்துகொண்டார்கள். குருதேவர் சற்று அவகாசம் கொடுத்தார்.
``என்ன ஆயிற்றா?’’
``முடிந்தது குரு தேவா!’’ மாணவர்களின் குரல்கள் ஒருசேர ஒலித்தன.
``துரியோதனா உன் தனுசைக் கொடு!’’
துரியோதனன் பவ்யத்தோடு தன் வில்லை நீட்டினான். துரோணர், அவராகவே அவனுடைய அம்புராத்தூளியிலிருந்து ஓர் அம்பை எடுத்தார். வில்லில் நாண் ஏற்றினார்.
``இப்போது மனதுக்குள் அந்த மந்திரத்தைச் சொல்லி பாணத்தை விட வேண்டும். என்ன நடக்கிறதென்று பாருங்கள்!’’
அங்கே நடந்தது மாயாஜாலம். துரோணர் விட்ட அம்பு, எதிரே இருந்த ஆல மரத்தை நோக்கிப் போனது. சில விநாடிகள்தான். மரத்தில் இருந்த அத்தனை இலைகளிலும், ஒன்றுவிடாமல் துளையிட்டது. சரியாக ஓர் இலையில் ஒரு துளை! பிறகு, துரோணரிடமே திரும்பி வந்தது.
மாணவர்கள் ஆச்சர்யத்தோடு பார்த்தார்கள். அந்த மந்திரத்தைத் திரும்பத் திரும்பத் தங்களுக்குள் சொல்லி மனனம் செய்துகொண்டார்கள்.
``மேலே செல்லலாமா?’’
துரியோதனன், குருவிடம் இருந்து வில்லையும் அம்பையும் வாங்கிக்கொண்டான். எல்லோரும் குருவின் பின்னே நடந்தார்கள்.
***
அப்போது, அர்ஜூனன் குடுவையில் நீரை நிரப்பிக்கொண்டு துரோணரும் மற்றவர்களும் சென்ற பாதையில் வந்துகொண்டிருந்தான். குருவும் மற்றவர்களும் இருந்த இடத்துக்கு வந்தபோது துரோணர் மணலில் கிறுக்கியிருந்த மந்திரத்தைப் பார்த்தான்; படித்தான்; தன் காண்டீபத்தை எடுத்தான்; மந்திரத்தைச் சொல்லி அம்பு தொடுத்தான். அது துரோணர் விட்டதைப்போலவே ஆல மரத்தை நோக்கிப் பறந்தது. எல்லா இலைகளிலும் சில விநாடிகளில் மற்றொரு துளையைப் போட்டுவிட்டுத் திரும்பி வந்தது.
அர்ஜூனன் திருப்தியோடு, குருவைத் தேடிப் போனான்.
***
எல்லோரும் அன்றைய பயிற்சி முடிந்து திரும்பி வந்துகொண்டிருந்தார்கள். அர்ஜூனன் கொண்டு வந்து தந்திருந்த நீர் அவர்களின் தாகத்தைத் தணித்திருந்தது. பழைய இடத்துக்கு வந்தபோது, அனைவரின் கண்களும் துரோணர் அம்புவிட்ட மரத்தில் நிலைகுத்தி நின்றன. துரியோதனனின் விழிகள் ஆச்சர்யத்தால் விரிந்தன.
``குரு தேவரே! தாங்கள், மரத்தின் இலைகளில் ஓர் துளைதானே இட்டிருந்தீர்கள்... இந்த மர இலைகளில் மற்றொரு துளையும் சேர்ந்திருக்கிறதே!’’
``இன்னுமா உனக்குப் புரியவில்லை. இது அர்ஜூனன் எய்த அம்பில் விளைந்தது.’’
``அது எப்படி? நீங்கள் இதைக் கற்றுக் கொடுத்தபோது அவன் இல்லையே!’’
``எப்படிக் கற்றாய்... நீயே சொல் அர்ஜூனா!’’ துரோணர் அர்ஜூனனை நோக்கிச் சொன்னார்.
அர்ஜூனன், மணலில் குரு எழுதிய மந்திரத்தைப் படித்ததையும், அம்பு எய்ததையும் கூறினான்.
``இப்போது புரிந்ததா? ஒரு மாணவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் அர்ஜூனன். அவனுடைய கவனித்தல் திறனுக்கு இது ஒரு சான்று. இன்றைக்கு நான் அஸ்திரப் பிரயோகத்தில் ஒன்றைக் கற்றுக்கொடுப்பேன் என்றதுமே அவன் கவனம் எல்லாம் அதிலேயே குவிந்துவிட்டது. `எப்போது... எப்போது...’ என என் பயிற்சி குறித்தே யோசித்திருக்கிறான். அந்த கவனித்தல், அவனைத் தரையைப் பார்த்தபடியே நடந்துவரச் செய்திருக்கிறது. மந்திரத்தைப் பார்த்தான்... படித்தான்... கற்றான்...’’
எந்த விஷயத்தையும் கூர்ந்து கவனித்தல் ஒருவனை மேதையாக்கும். எந்த குருவாக இருந்தாலும், தன் சிஷ்யர்களை `கவனி... கவனி... கவனித்தல் முக்கியம்’ என அடிக்காத குறையாக வலியுறுத்துவது இதன் காரணமாகத்தான். துரியோதனன் அன்றைக்கு முக்கியமான பாடத்தைக் கற்றிருந்தான்... மண்டியிட்டு வீழ்ந்து மனதார குருவை வணங்கினான்.
இன்றைய முக்கிய செய்திகள் :
இரா.மணிகண்டன் முதுகலைத் தமிழாசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி, கோவில்பட்டி ,
திருச்சிராப்பள்ளி மாவட்டம்-621305
அலைபேசி எண்: 9789334642 .
🌸திருக்குறள் : அதிகாரம்: அறிவுடைமை .
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு. 🌸பொருள்:
🍁🍁🍁🍁🍁🍁
. எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும் அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்.
🌸 பொதுஅறிவு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
Today English news:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
இனிய காலை வணக்கம் ....✍
🎯 தமிழக பள்ளி கல்வித்துறையில் 9 முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பணியிட மாற்றம். ஏழு பேருக்கு பதவி உயர்வு.
🎯 பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை. நவம்பர் 18 வேலை நாள் என தமிழக அரசு அறிவிப்பு.
🎯 தமிழகத்தில் காலியாக உள்ள மருத்துவ இடங்களுக்கு இன்று முதல் கலந்தாய்வு.
🎯 இந்திய மருத்துவம் ஹோமியோபதித் துறை அறிவிப்பு. எம்.டி யோகா, ஹோமியோபதி படிப்புக்கு நாளை விண்ணப்ப பதிவு துவக்கம்.
🎯 மதுரை காமராஜர் பல்கலைக்கழக மதிப்பெண் பட்டியலில் முறைகேடு என மாணவர்கள் புகாரால் வெடித்தது சர்ச்சை.
🎯 மாணவர்களின் சத்துணவு திட்டத்திற்கு ஓராண்டுக்கு இலவச காய்கறி வழங்க முன் வந்தார் ஆண்டாக ஊட்டச்சத்து மிக்க உணவை வழங்கி வருகிறார்.
🎯 வாக்காளர் பட்டியல் திருத்த பணி சிறப்பு முகாமில் ஆறு லட்சம் விண்ணப்பங்கள்.
🎯 தேர்தல் நிதி பத்திரங்கள் விற்பனை தொடக்கம்
🎯 தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் இருந்து 16,000 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் என அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் பேட்டி.
🎯 தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்ல சிறப்பு பஸ்களுக்கு 90 ஆயிரம் பேர் முன்பதிவு என அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தகவல்.
🎯 தமிழ்நாடு விளையாட்டு அறிவியல் சர்வதேச கருத்தரங்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
🎯 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் 3 ஆண்டு சிறை என ராமநாதபுரம் கலெக்டர் எச்சரிக்கை.
🎯16 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு.
🎯 5 மாநில தேர்தல் தொடங்குகிறது. சட்டீஸ்கர் மிசோரமில் இன்று வாக்குப்பதிவு.
🎯 தெற்கு பகுதிக்கு மக்கள் செல்ல 4 மணி நேரம் கெடு. காசநகரை சுற்றி வளைத்தது இஸ்ரேல். பலி பத்தாயிரத்தை தாண்டியது.
🎯 உலகக் கோப்பை போட்டியில் 38-வது ஆட்டத்தில் வங்கதேசத்துக்கு இரண்டாவது வெற்றி.
🎯 சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட்டின் இறுதி ஆட்டத்தில் முதல் முறையாக பஞ்சாப் சாம்பியன்
🎯 இலங்கை கிரிக்கெட் வாரியம் கலைப்பு.
🎯 உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 39 ஆவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றனர்.
🎯 பிரிட்டனில் நடைபெறும் ஃபிடே கிராண்ட் செஸ் போட்டியில் இந்தியாவின் ஆர்.வைஷாலி, விதித் குஜராத்தி ஆகியோர் முறையே மகளிர் மற்றும் ஓபன் பிரிவுகளில் பட்டம் பெற்றனர்.
🎯 ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்த பெண்களுக்கான ஆசிய சாம்பியன் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில் ஜப்பான் தோற்கடித்து 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
Today English news:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🎯 Supreme court gives nod to RSS march in Tamil Nadu; State govt. to notify route by November 15
🎯Stalin urges Centre to seek waiver on fine imposed on Tamil Nadu fishermen by the Maldives
🎯India, Bhutan to discuss new routes of regional connectivity
🎯ANIIMS celebrating graduation ceremony for the first 3 batches
🎯BHU students, alumni hold solidarity march for unity of University
🎯Centre greenlights appointments and postings of senior bureaucrats
🎯Mizoram Assembly elections voting LIVE updates | Polling begins for 40 seats
🎯Chhattisgarh Assembly polls Phase 1 LIVE updates | Voting begins; CRPF commando injured in blast
🎯Israeli troops surround Gaza City and cut off northern part of the besieged territory
🎯 Cricket world cup 2023 - Angelo Mathews ‘timed out’ | The 10 ways of getting dismissed in cricket
🎯Syed Mushtaq Ali Trophy Final 2023 | Anmolpreet’s ton helps Punjab lift the trophy
🎯Australia up against resurgent Afghanistan, eyes last-four spot
🎯AUS vs AFG | Afghan team has a great time with Sachin Tendulkar
🎯Services, Manipur to clash in National Games football final
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
இரா.மணிகண்டன் முதுகலைத் தமிழாசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி, கோவில்பட்டி ,
திருச்சிராப்பள்ளி மாவட்டம்-621305
அலைபேசி எண்: 9789334642 .
No comments:
Post a Comment