பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இளங்கலை தமிழ் இலக்கியம் B.LIT பட்டம் பயின்றவர்கள் மிகவும் அவசரமாக செய்ய வேண்டியவை:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இளங்கலை தமிழ் இலக்கியம் B.Lit பட்டம் பெற்றவர்கள் B.Ed பெற்று தமிழ்நாடு அரசு தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட TEACHER ELIGIBILITY TEST (TET) தேர்விலும் வெற்றி பெற்று தற்போது தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட இருக்கும் DIRECT RECRUITMENT BOARD OF GRADUATE TEACHER BLOCK RESOURCE TEACHER EDUCATED (BRTE) 03A/2023 என்று அறிவிப்பின்படி மேற்கண்ட பணியிடத்திற்கு இணைய வழியில் விண்ணப்பிக்கும் பொழுது B.A TAMIL மற்றும் புலவர் பட்டயம் ஆகிய இரண்டு மட்டும் உள்ளதால் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் B.Lit தமிழ் இலக்கியம் பயின்ற அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே நீங்கள் எவ்வித குழப்பம் இல்லாமல் B.A Tamil என்பதை கட்டாயம் பதிவு செய்யலாம் . புலவர் பட்டயத்தில் B.LIT தமிழ் இலக்கிய பயின்றவர்கள் பதிவு செய்யக்கூடாது. Higher Education (K1) Department மூலம் வழங்கப்பட்ட அரசாணை G.O(MS)NO:243, DATED :12-09-2023 காலம் 12-ல் B.LIT தமிழ் இலக்கியம் B.A தமிழ் இலக்கியத்திற்கு இணையானது என அரசாணைகள் இடம் பெற்றுள்ளது. இது போன்று பல்வேறு பல்கலைக்கழகங்களில் B.Lit தமிழ் இலக்கியம் B.A தமிழ் இலக்கியத்திற்கு இணையானது (equivalent ) என அரசாணை வழங்கப்பட்டுள்ளது. இதுநாள் வரை பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் இணை பட்டம் Equivalent Degree அரசாணை கோரி விண்ணப்பிக்காமல் இருந்தமையால் B.Lit தமிழ் இலக்கியம் B.A தமிழ் இலக்கியத்திற்கு இணையானது என அரசாணை எதுவும் பெறப்படவில்லை. ஆகையால் இனி வரும் காலங்களில் அரசு பணிக்கு விண்ணப்பிக்க காத்திருக்கும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் B.Lit தமிழ் இலக்கிய பயின்ற அனைத்து பட்டதாரிகளும் பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளருக்கு TAMIL NADU STATE COUNCIL FOR HIGHER EDUCATION மூலமாக எங்களுக்கு B.Lit தமிழ் இலக்கியம் B.A தமிழ் இலக்கியத்திற்கு இணையானது என அரசாணை பெற்று தரும்படி விண்ணப்பத்தினை உடனடியாக விண்ணப்பித்தால் பாரதிதாசன் பல்கலைக்கழகம் துரிதமாக செயல்பட்டு அனைத்து பட்டதாரிகளுக்கும் B.Lit தமிழ் இலக்கியம் B.A தமிழ் இலக்கியத்திற்கு இணையானது என அரசாணை பெற ஏதுவாக இருக்கும். எனவே அனைத்து B.Lit பட்டதாரிகளும் காலம் தாழ்த்தாமல் விரைந்து செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் இது பற்றிய சந்தேகங்கள் உங்களுக்கு இருப்பின் எனது அலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். WhatsApp number :9789334642. இந்த பதிவு TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் உரியது அல்ல. இனி வரும் காலங்களில் அரசு பணிக்காக காத்திருக்கும் அனைத்து பட்டதாரிகளும் செய்ய வேண்டியவை ஆகும்.
இப்படிக்கு
நட்புடன் உங்கள் நண்பன்,
இரா. மணிகண்டன் முதுகலை தமிழாசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி கோவில்பட்டி
திருச்சிராப்பள்ளி மாவட்டம்.
No comments:
Post a Comment