பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 23.11. 2023. வியாழக்கிழமை.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
திருக்குறள்: அதிகாரம்: கல்வி.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
திருக்குறள்: அதிகாரம்: கல்வி.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀
கல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், அவ்வாறு கற்ற பிறகு கற்ற கல்விக்கு தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
1. முதலாம் உலகப் போர் நடைபெற்ற ஆண்டு?
விடை : 1914 முதல் 1918 வரை.
2. இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற ஆண்டு?
விடை : 1939 முதல் 1945 வரை..
3. தேசிய சமதர்மவாதக் கட்சியை நிறுவியவர்?
விடை : ஹிட்லர்.
4. ஆங்கிலேயரை எதிர்த்த முதல் இந்தியர்?
விடை : பூலித்தேவர்.
5. முதல் வட்டமேசை மாநாடு நடைபெற்ற ஆண்டு?
விடை : 1930 நவம்பர் .
பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🌸The pen is mightier than the sword
🌸 பேனாவின் முனை வாள் முனையிலும் வலிமையானது
🌸 Take time by the fore lock
🌸 காற்றுள்ள போதே தூற்றிக் கொள் .
இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
காலமறிதலும், கடின உழைப்பும் வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.
🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து குறித்த நேரத்தில் எனது பணிகளை செய்வேன்.
" உழைப்பே உயர்வு தரும்" என்ற பழமொழிக்கேற்ப கடுமையாக உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்.
நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁
ஒரு ஞானியின் தியானம் கலைந்தபோது ஒரு சுண்டெலி ஞானி முன் வந்தது. சுண்டெலியை பார்த்து ஞானி, உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். பூனையை கண்டு எனக்கு பயமாய் இருக்கிறது. என்னை ஒரு பூனையாக மாற்றிவிட்டால், உங்களுக்கு புன்னியம் உள்ளது என்றது எலி. ஞானி, எலியை பூனையாக மாற்றினார். இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அப்பூனை வந்தது ஞானி முன் நின்றது. பூனையை கண்ட ஞானி, இப்போது என்ன பிரச்சனை என்று வினவினார். என்னை எப்போதும் நாய் துரத்துகிறது. என்னை நாயாக மாற்றிவிட்டால் நன்றாக இருக்கும் என்றது பூனை. உடனே பூனையை, நாயாக மாற்றினார் ஞானி. சில நாட்கள் கழித்து அந்த நாய் வந்து ஞானியின் முன்பு நின்றது. இப்போது உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார் ஞானி. புலி பயம் என்னை வாட்டி எடுக்கிறது. தயவு செய்து என்னை புலியாக மாற்றிவிடுங்கள் என்றது நாய். ஞானி, நாயை புலியாக மாற்றினார். சில நாட்கள் கழித்து ஞானி முன் வந்து நின்ற புலி, இந்தக் காட்டில் வேடன் என்னை வேட்டையாட வருகிறான். தயவு செய்து என்னை வேடனாக மாற்றிவிடுஙகள் என்றது புலி. உடனே புலியை வேடனாக மாற்றினார் ஞானி. சில நாட்கள் கழித்து, வேடன் ஞானி முன் வந்து நின்றான். இப்போது உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார் ஞானி. எனக்கு மனிதர்களை கண்டால் பயமாக இருக்கிறது என்று சொல்ல ஆரம்பித்தான். உடனே இடைமறித்த ஞானி, சுண்டெலியே உன்னை எதுவாக மாற்றினால் என்ன? உன் பயம் உன்னை விட்டு போகாது. உனக்கு சுண்டெலியின் இதயம்தான் இருக்கிறது. நீ சுண்டெலியாக இருக்கத்தான் லாயக்கு என்று கூறிவிட்டார் அந்த ஞானி. ஆகையால், உள்ளத்தில் நம்பிக்கைகளையும், அச்சமற்ற தன்மையும் இல்லாதவரை நாம் எதையும் அடையவோ, சாதிக்கவோ முடியாது. உங்களைப்பற்றி நீங்கள் எப்படி எண்ணுகிறீர்களோ அப்படித்தான் ஆவீர்கள். நீங்களே உங்களை தாழ்த்திக்கொள்ளாதீர்கள். உங்களுடைய எண்ணங்கள் செயலற்று போனால், அச்சம் சோர்வு போன்றவை உடலை கூணாக்கி உள்ளத்தை மண்ணாக்கிவிடும்.
நீதி : மனதில் உள்ள பயத்தை நீக்குதல் வேண்டும்.
இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🎯 உள்ளாட்சி அமைப்புகளில் ரூ. 929 கோடியில் பணிகள் முதல்வர் ஸ்டாலின் உத்தரவு.
🎯 திருச்சியில் இன்று தொடங்கும் புத்தகத் திருவிழா.
🎯 நவம்பர் 26 இல் புதிய புயல் சின்னம் தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
🎯 பருவ மழை நோய்த் தொற்றுகள்: தயார் நிலையில் சுகாதார குழுக்கள் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்.
🎯 நவம்பர் 25, 26 இல் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்
🎯 பள்ளிகளில் 'பிராட் பேண்ட்': கல்வித்துறை அறிவுறுத்தல்.
🎯 இஸ்ரேல்- ஹமாஸ் போர் அண்டை நாடுகளுக்கு பரவி விடக்கூடாது என பிரதமர் மோடி வலியுறுத்தல்.
🎯 நீட் தேர்வு தகுதி பாடத்திட்டங்கள் என் எம் சி மாற்றியமைப்பு
🎯 நெட் தேர்வு பாடத்திட்டத்தை புதுப்பிக்க யுஜிசி முடிவு.
🎯 கனமழை உதகை மலை ரயில் நவம்பர் 25ஆம் தேதி வரை ரத்து.
🎯 கன்னடா நாட்டவருக்கான இ-விசா சேவை மீண்டும் தொடக்கம்.
🎯 இன்று முதல் டி20 இளவீரர்களுடன் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது இந்தியா .
🎯 அல்டிமேட் கோகோ 145 வீரர்கள் ஏலம்.
🎯 தேசிய ஆடவர் ஹாக்கி: குஜராத்தை வீழ்த்தியது சத்தீஸ்கர்
🎯 2023 ஆசிய பாரா வில்வத்தைச் சாம்பியன்ஷிப் ஒன்பது பதக்கங்களுடன் இந்தியா முதலிடம்
🎯 தேசிய ஸ்குவாஷ் இறுதியில் அபய், தன்வி.
TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
🎯 In local bodies Rs. 929 crore works ordered by Chief Minister Stalin.
🎯 Book festival starts today in Trichy.
🎯 New storm symbol on November 26, Tamil Nadu is likely to receive rain for three days, according to the Chennai Meteorological Department.
🎯 Monsoon Epidemics: Public Health Instruction as Health Teams on Preparedness.
🎯 Voter List Special Camp on November 25, 26
🎯 'Broadband' in Schools: Education Instruction.
🎯 PM Modi insists that Israel-Hamas war should not spread to neighboring countries.
🎯 NEET Eligibility Syllabus NMC Modification
🎯 UGC decision to update NET exam syllabus.
🎯 Heavy rain Utagai Hill train canceled till 25th November.
🎯 E-Visa service for Kannada nationals re-launched.
🎯 India will face Australia with T20 youth players from today.
🎯 Ultimate Coco 145 Player Auction.
🎯 National Men's Hockey: Chhattisgarh defeated Gujarat
🎯 India tops 2023 Asian Para Archery Championship with nine medals
🎯 Abhay, Dhanvi in national squash final.
🌸இனிய காலை வணக்கம் ....✍
இரா . மணிகண்டன் முதுகலை தமிழாசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
கோவில்பட்டி
திருச்சி மாவட்டம் - 621305
அலைபேசி எண் : 9789334642.
No comments:
Post a Comment