Wednesday, November 29, 2023

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (30-11-2023)

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 30.11.2023.   வியாழக்கிழமை.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: மக்கட்பேறு

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌷🌷🌷🌷🌷

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.
                                                                                                                                                                                                                 
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

       மகன் தன் தந்தைக்குச் செய்யத் தக்க கைம்மாறு, இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்.
       

   

🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1.நீரில் கரையாத பொருள் எது?

*விடை* : கந்தகம்

2.நீரில் கரையாத வாயு எது ?

*விடை* : நைட்ரஜன்

3.பளபளப்புக்கொண்ட அலோகம் ?

*விடை* : அயோடின்

4.உலகில் அதிக வலிமை மிக்க அமிலம் ?

*விடை* :  ஃபுளுரோ சல்பியூரிக் அமிலம் HFSO3

5.இரும்பு துருபிடித்தல் என்பது ?

*விடை* : ஆக்சிஜனேற்றம்


பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌹 Union is strength
 🌹 ஒற்றுமையே வலிமை


🌷 Unity in diversity
🌷 வேற்றுமையில் ஒற்றுமை



இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

ஊக்கமும்  உழைப்பும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து ஊக்கமுடன்  உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்
.




 நீதிக்கதை
🍁🍁🍁🍁🍁🍁

திரும்பி வந்த மான்குட்டி 

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

   ஒரு காடு. மரத்தடியில் இரண்டு புள்ளிமான்கள் படுத்திருந்தன. அம்மா மான் தன் குட்டியைப் பார்த்து, “நீ எப்போதும் என் கூடவே இருக்கணும் போல. தனியாக எங்கேயும் போய்விடாதே!” என்றது.

“ஏம்மா, தனியாகப் போகக் கூடாதா?”

“நல்லவேளையாக இந்தக் காட்டில் சிங்கம், புலியெல்லாம் இல்லை. இருந்தால், நம்மை அடித்துச் சாப்பிட்டுவிடும். ஆனாலும் வேட்டைக்காரர்களால் எந்த நேரமும் ஆபத்து உண்டு.”

“எப்படி அம்மா?”


“உன்னைப் போல் குட்டியாக இருந்தபோது, நான் ஒரு வேட்டைக்காரனிடம் சிக்கிக்கொண்டு, படாதபாடு பட்டேன்.”


“ஐயோ... அப்புறம், எப்படித் தப்பி வந்தாய்?”


“ஒருநாள் நான் துள்ளிக் குதித்துச் சென்றுகொண்டிருந்தேன். என் கால்கள் அங்கே விரித்து வைத்திருந்த வலையில் சிக்கிக்கொண்டன. வேடன் வந்தான். என்னை வலையிலிருந்து விடுவித்தான். கால்களை நன்றாகக் கட்டித் தூக்கிக்கொண்டு போனான்.”

“எங்கே அம்மா?” என்று பதற்றத்துடன் கேட்டது குட்டி மான்.


“என்னை ஒரு பணக்காரரிடம் விற்றுவிட்டான். அவர் வீட்டில் இருந்த ஒரு பையனும் பெண்ணும் என்னைப் பார்த்ததும் துள்ளிக் குதித்து வந்தார்கள். என்னைக் கட்டிப் போட்டார்கள். பிரியமாக இருந்தார்கள். முள்ளங்கி, கேரட், முட்டைகோஸ், தக்காளி, வாழைப்பழம் எல்லாம் கொடுத்தார்கள். நான் எதையுமே சாப்பிடவில்லை. தண்ணீர்கூடக் குடிக்கவில்லை. நான் எதுவுமே சாப்பிடாமல் இருப்பதைப் பார்த்து வருந்தினார்கள். அப்பாவிடம் என் நிலைமையை எடுத்துச் சொன்னார்கள்.

அந்த அப்பாவும் யார் யாரையோ அழைத்து வந்து காட்டினார். என் வாய்க்குள் மூங்கில் குழாயை வைத்து அதன் வழியாகத் தண்ணீரை ஊற்றினார்கள். முள்ளங்கியையும் தக்காளியையும் நன்றாக அரைத்துத் தண்ணீரில் கலந்து பலவந்தமாக வாய்க்குள் செலுத்தினார்கள். அதனால், நான் சாகாமல் இருந்தேன். ஆனாலும் உடம்பு இளைத்தது. பத்து நாட்கள் இப்படிச் செய்து பார்த்தார்கள். பத்தாம் நாள் நான் படுத்துவிட்டேன். என் நிலைமையைப் பார்த்த அந்தப் பெண் குழந்தை, ‘அப்பா, நாங்கள் சந்தோஷமாக இருக்கத்தானே இதை வாங்கினீங்க? பாவம், இதற்கு உடம்பு சரியில்லை. செத்துப்போய்விடுமோ என்று பயமாக இருக்கிறது. காட்டில் விட்டு விடலாம்’ என்றாள். அன்று மாலையே ஒரு வண்டியில் என்னை ஏற்றி இந்தக் காட்டிலே கொண்டுவந்து விட்டுவிட்டார்கள்.”

அம்மா மான் சொன்னதைக் கேட்டதும், “பங்களா, தோட்டம், அன்பான பிள்ளைகள், தின்பதற்கு நிறைய காய்கறி, பழங்கள்... இவ்வளவு இருந்தும் இங்கே வந்துவிட்டாயே?” என்றது குட்டி மான்.

“என்ன இருந்தால் என்ன? என் அம்மா, அப்பா, சிநேகிதர்கள் எல்லாரையும் பிரிந்து இருக்க முடிய வில்லையே! எப்போதும் என்னை அங்கே கட்டிப் போட்டே வைத்தார்கள். சுதந்திரமாகத் துள்ளித் திரிய முடியவில்லை. கேவலமான வாழ்க்கை.”


இப்படி அம்மா மானும் குட்டி மானும் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தன. ‘நானாக இருந்தால், திரும்பியே வந்திருக்க மாட்டேன். இவ்வளவு வசதிகள் இருந்தும், இந்த அம்மா ஏன்தான் திரும்பி வந்ததோ?’ என்று குட்டி மான் நினைத்தது. ஒருநாள் இரவு நேரம். யாருக்கும் தெரியாமல் குட்டி மான் புறப்பட்டது. காட்டின் எல்லைக்கு வந்துவிட்டது. ‘விடிவதற்குள் மனிதர்கள் வசிக்கும் ஊருக்குள் போக வேண்டும். பங்களா ஒன்றுக்குள் புகுந்துகொள்ள வேண்டும். விடிந்ததும், அந்த வீட்டுக் குழந்தைகள் என்னைப் பார்ப்பார்கள். கட்டி அணைப்பார்கள். நிறைய தின்னத் தருவார்கள்’ என்று நினைத்தது.

அப்போது ஒரு முயல் ஓடி வந்தது. அதைப் பார்த்ததும் குட்டி மான், “முயலண்ணே, எங்கிருந்து ஓடி வருகிறாய்?” என்று கேட்டது.

“சிறிது தொலைவில் உள்ள நகரத்திலிருந்துதான். என்னையும் இன்னொரு முயலையும் வேடன் பிடித்துச் சென்று, பணக்காரர் வீட்டில் விற்றுவிட்டான். ஒரு மாதம் சந்தோஷமாக வளர்ந்தோம். அந்த வீட்டுக் குழந்தை உமா என்னிடம் அன்பாக இருந்தாள். வெளியூரிலிருந்து உறவினர்கள் வந்தார்கள். அவர்களுக்குத் தடபுடலாக விருந்து வைக்க ஏற்பாடுகள் நடந்தன. சமையல்காரர் எங்கள் அருகே வந்தார். என்னைப் பிடித்துத் தூக்கிப் பார்த்தார். பிறகு என்னோடு இருந்ததே, அந்த முயலையும் தூக்கிப் பார்த்தார். என்னைவிட அது கனமாக இருக்கிறது என்று அதைத் தூக்கிக்கொண்டு சமைக்கப் போய்விட்டார். என் உடம்பு நடுங்கியது. தப்பிக்க நினைத்தேன். ஆனாலும், உமாவைப் பிரிய மனம் வரவில்லை.

இன்று அதிகாலை உமா என்னிடம் வந்தாள். சுற்றும் முற்றும் பார்த்தாள். பிறகு என்னைத் தூக்கிக் கொண்டு வேகமாக நடந்தாள். இந்தக் காடு தெரிந்ததும் கலங்கிய கண்களுடன், ‘ஓடு, ஓடு’ என்று அனுப்பி வைத்தாள். எனக்கு அன்பான உமாவைப் பிரிய மனம் இல்லை. உயிரைக் கொடுக்கவும் மனம் இல்லை. என்ன செய்வது?”

“உண்மையா?”

“பின்னே, நான் பொய்யா சொல்கிறேன்? நம்மைப் போன்ற பிராணிகளை மனிதர்களில் பலர் பிரியமாகவும் வளர்ப்பார்கள்; பிரியமாகவும் சாப்பிடுவார்கள்.” ‘அம்மா பேச்சை மீறிச் சென்றிருந்தால், நம் உயிருக்கும் ஆபத்துதான்!’ என்று நினைத்துக் கொண்டே ஓட்டம் பிடித்தது குட்டி மான்.

இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

இந்து தமிழ் திசை நாளிதழ் செய்திகள்:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🎯  தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்த பிரதமரிடம் 41 தொழிலாளர்களும் நன்றி தெரிவித்தனர். சுரங்க பாதையில் இருந்து மீட்கப்பட்ட அனைவரும் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

🎯 தெலுங்கானாவில் இன்று சட்டப்பேரவை தேர்தல் 119 தொகுதிக்கும் ஒரே கட்டமாக நடக்கிறது.

🎯 வங்க கடலில் உருவாகும் புயல் காரணமாக டிசம்பர் 2, 3-ல் சென்னை உள்ளிட்ட 5 மாவட்டத்தில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.

🎯 புவியில் மற்றும் சுரங்கத் துறையை அதிகாரிகள் 49 பேர் இடம் மாற்றம்.

🎯 நாட்டுப்புற கலை பயிற்சி மையங்களில் டிசம்பர் 1 முதல் மாணவர் சேர்க்கை.

🎯 அடுக்குமாடி குடியிருப்பு பதிவில் புதிய நடைமுறை நாளை முதல் தமிழகம் முழுவதும் அமலாகிறது.

🎯 பி சி, எம் பி சி கல்லூரி மாணவர்களுக்கு ரூ 12 கோடியில் 5 விடுதிகள் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

🎯 தமிழகத்தில் சிறு நடுத்தர நூற்பாலைகள் மூடப்பட்டதால் 1.50 லட்சம் வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்பினர்.

🎯 விவசாய பயன்பாட்டுக்காக சுய உதவி குழு பெண்களுக்கு ட்ரோன் பயிற்சி வழங்கும் திட்டம் பிரதமர் மோடி என்று தொடங்குகிறார்.

🎯 உலக கோடீஸ்வரர் பட்டியல் 19 ஆவது இடத்தில் அதானி.

🎯ரூ 2000 மேல் டிஜிட்டல் பணப்பரிவாத்தினை புதிய கட்டுப்பாடு விதிக்க திட்டம்.

🎯 பனிப்பொழிவால் மேக்ஸ்வெல்லை கட்டுப்படுத்த முடியாமல் போனது என சொல்கிறார் சூரியகுமார் யாதவ்

🎯 வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேன் கேன் வில்லியம்சன் சதம் விலாசல்.

🎯 விஜய் ஹசாரே ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடரில் தமிழக அணி பரோடாவை 38 ரன்கள் வித்தியாசத்தில் உயர்த்தி ஹாட்ரிக்  வெற்றியை பதிவு செய்தது

🎯 இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நீட்டிப்பு.

🎯 சையது மோடி சர்வதேச பாட்மிண்டன் தொடர் முதல் சுற்றில் ஸ்ரீகாந்த் தோல்வி.


TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
The Hindu newspaper-Thursday November 30
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

 🎯 U.S blames Indian official for plot against pannun

🎯 Thirunallar gears up for 'sanii peyarchi' on December 20

🎯 Book fair draws school and college students in droves at Trichy

🎯 Water level in mettur dam stands at 66 feet.

🎯 Parents seek action against teacher for 'beating student' for scoring no marks.

🎯 Telangana goes to polls today

🎯 Free food grain scheme to continue for five more years.

🎯 Centre to provide drones to 15000 women's groups for use in agriculture.

🎯 Workers in AIIMS all undergoing check up

🎯 On final day the case fire, mediators seek extension of Israel Hamas deal.

🎯 Dravid and co.reappointed for another term.

🎯IND vs AUS T20Is | Ruturaj Gaikwad — racking up the runs in true classical style, with a touch of artistry

🎯ISL-10 | Honours even as Blasters and Chennaiyin play out a six-goal thriller

🎯 Tamil Nadu beats Baroda in a low scoring encounter.

🎯 New Zealand trials Bangladesh despite Williamson's century




இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் முதுகலைத் தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கோவில்பட்டி 
திருச்சி மாவட்டம் - 621305
அலைபேசி எண் : 9789334642.

No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...