Thursday, November 30, 2023

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் ( 01-12-2023)

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 01.12. 2023.  வெள்ளிக்கிழமை.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: கல்வி.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்
கெழுமையும் ஏமாப் புடைத்து
.                                                                                                                                                                                                                                         
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

ஒரு பிறப்பில் தான் கற்ற கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டுமல்லாமல் அவனுக்கு ஏழு பிறப்பிலும் உதவும் தன்மை உடையது.
   
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1. உ.வே.சா எத்தனை நூல்களை பதிப்பித்தார்?

விடை  :  87 நூல்கள்.

 2. சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது திருக்குறள் என்று கூறியவர்?

விடை :  அரசில் கிழார்.  
                 
3. வெண்கலம் எதனால் ஆன கலப்புலோகம்?

விடை : காப்பர் மற்றும் டின்..

4.  கம்பியில்லா தந்தி கண்டுபிடித்தவர் யார்?

 விடை : குலீல்மோ மார்கோனி.

5.  நெப்போலியன் சகாப்தத்தின் முடிவைக் குறிக்கும் போர்?

விடை    :  வாட்டர்லூ

பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🌸God helps those who help themselves

🌸 தனக்கு உதவுவோருக்கு உதவுவான் இறைவன்

🌸 God is love

🌸 அன்பே கடவுள்


 இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

காலமறிதலும், கடின உழைப்பும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து குறித்த நேரத்தில் எனது பணிகளை செய்வேன்.
" உழைப்பே உயர்வு தரும்" என்ற பழமொழிக்கேற்ப கடுமையாக உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்.




 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

ஒரு சமயம் சுவாமி விவேகானந்தர் லண்டன் மாநகருக்குச் சென்றிருந்தார். அங்கு அவரது நண்பர் ஒருவரின் பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். அந்தப் பண்ணை வீடு மிகப் பெரிய நிலப்பரப்பில், இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் இருந்தது. அங்கே நிறைய மாடுகள் வளர்க்கப்பட்டன.

ஒரு நாள் மாலை, பண்ணை மைதானத்தில் விவேகானந்தர் நடந்து சென்று கொண்டிருந்தார். அவருடன் நண்பரும், நண்பரின் மனைவியும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, சற்றும் எதிர்பாராதவிதமாக ஒரு மாடு அவர்களை நோக்கி சீறிப் பாய்ந்து வந்தது. அதன் மூர்க்கத்தனமான ஓட்டத்தைப் பார்த்து பயந்து போன நண்பரின் மனைவி, அப்படியே மயங்கி விழுந்துவிட்டார்.

நண்பர் மனைவியைத் தூக்க முயன்றார். அப்போது மாடு அவர்களை நெருங்கிவிட்டது. நண்பருக்குக் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை.
இன்னும் சில நொடிகள் அங்கே இருந்தால் மாட்டின் கொம்புகளுக்கு இரையாக நேரிடும் என்பதை உணர்ந்த நண்பர், தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எழுந்து வேறு திசையில் ஓடினார். ஆனால், விவேகானந்தர் அப்படி இப்படி அசையாமல் ஆணி அடித்தது போல் அந்த இடத்திலேயே நின்றுவிட்டார்.
பாய்ந்து வந்த மாடு கீழே விழுந்து கிடந்த நண்பரின் மனைவியையும் விவேகானந்தரையும் விட்டு விட்டு, ஓடிக்கொண்டிருந்த நண்பரைத் துரத்தியது. அதிர்ஷ்டவசமாக ஒரு கட்டடத்திற்குள் புகுந்து தப்பினார் நண்பர். அதன் பிறகே பண்ணை ஊழியர்கள் ஓடி வந்து மாட்டைப் பிடித்துக் கட்டிப்போட்டனர்.
விவேகானந்தர் அதன் பிறகே அந்த இடத்தை விட்டு அசைந்தார். அங்கு வந்த நண்பருக்கோ ஒரே வியப்பு. அப்போது நண்பரின் மனைவியும் மயக்கம் தெளிந்து எழுந்தார்.

“சிறிது கூட பயமே இல்லாமல் அந்த ஆபத்தான நேரத்திலும் ஒரே இடத்தில் உறுதியாக உங்களால் எப்படி நிற்க முடிந்தது?” என்று கேட்டார் நண்பர்.
அதைக் கேட்டு மெல்லப் புன்னகைத்த விவேகானந்தர், “நான் வித்தியாசமாக எதையும் செய்து விடவில்லை. வருவது வரட்டும்; சமாளிப்போம் என்ற ஒரு வித மன உறுதியுடன் நின்றுவிட்டேன். ஓடுபவரைக் கண்டால் துரத்திச் செல்வது மிருகங்களுக்கு உரிய குணம். அதனால்தான் மாடு என்னை விட்டுவிட்டு, ஓடிக்கொண்டிருக்கும் உங்களைத் துரத்தியது,” என்று முடித்தார்.

உயிருக்கு ஆபத்தான நேரத்தில் கூட, அதைக் கண்டு பயந்து ஓடாமல், வருவது வரட்டும் என்ற மன உறுதி பெற்றிருந்த சுவாமி விவேகானந்தரைப் பார்த்துப் பெரிதும் வியந்தார் நண்பர்.



இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

 🎯 சென்னை புறநகர் மாவட்டங்களில் கனமழையால் சாலைகளில் வெள்ளம். வங்கக் கடலில் டிசம்பர் 3-ல் புயல் உருவாகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் விரைந்து செல்ல உத்தரவிட்டுள்ளார்.

🎯 மக்கள் மருந்தகம் எண்ணிக்கை25000 ஆக அதிகரிக்கிறது. திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்.

🎯 செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தி மனித தலையீடு இல்லாமல் பதிவுத்துறை சேவை. புதிய ஸ்டார் 3.0 மென்பொருள் குறித்து அமைச்சர் தகவல்

🎯 மழைக்காலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை பள்ளிக்கல்வித்துறை மாற்று நடவடிக்கை.

🎯 கலைத் திருவிழா போட்டி வெற்றி பெறுபவர்கள் வெளிநாடு செல்ல வாய்ப்பு.

🎯 அரியலூர் மாவட்டத்தில் நாளை மருத்துவ காப்பீட்டு திட்ட பதிவு சிறப்பு முகாம்.

🎯 மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என புதுக்கோட்டை நகர் மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.

🎯 வினா வங்கி புத்தகம் ஜனவரியில் வழங்கப்படும் என பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்.

🎯 பேரவை செயலருக்கு 3 ஆண்டு பணி நீட்டிப்பு . முதன்மைச் செயலாளராக பதிவு உயர்வு

🎯 அதிகாரத்தில் இருப்பவர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டம் வலிமையானதாக இருக்க வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து.

🎯 தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் ஒரு நாள் போட்டி தொடருக்கு கே எல் ராகுல் கேப்டன். டி 20 தொடரில் சூரியகுமார் யாதவ் இந்திய அணியை வழி நடத்துவார்.

🎯 குஜராத் அணிக்கு வில்லியம்சனை கேப்டனாக நியமித்திருக்கலாம் என டிவில்லியஸ் கருத்து

🎯4_வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் இன்று மோதல். டி 20 கிரிக்கெட் தொடரை கைப்பற்றுமா இந்தியா?

🎯 நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ அபார சதம். இரண்டாவது இன்னிங்ஸில் வங்க தேசம் 212 ரன்கள் குவிப்பு.

🎯 டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி முதல் முறையாக தகுதி பெற்ற உகாண்டா.

🎯 தேசிய சீனியர் அட்யா பட்டியா போட்டி தமிழக அணிகளுக்கு வெண்கலம்.





TODAY'S ENGLISH NEWS: 
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

.🎯 Hit job is not our policy says India on US charges

🎯2 electrocuted during heavy rain in Chennai.

🎯 Sambhav coverage area shrinks by over 50% in Trichy district says officials

🎯 Opportunities growing in nuclear energy field scientist tells students

🎯 IMD says cyclone likely in bay, predicts heavy rain in Delta districts till December 4.

🎯 Sand mining case effect: government officials now need Prior nod for producing official documents during enquiry.

🎯 National medical commissions comes to rescue of displaced medical students in Manipur.

🎯 UP Government declains opposition demand for a caste census.

🎯 India set to launch x-ray polarimeter satellite says ISRO

🎯 Gasa truce extend by one day as hostage talks continue

🎯 India has another shot at series win even as Australia looks to stay alive

🎯 Shanto's unbeaten ton  puts Bangladesh in control







🌸இனிய காலை வணக்கம் ....✍     
         
இரா . மணிகண்டன் முதுகலைத்தமிழாசிரியர்  
அரசு மேல்நிலைப்பள்ளி
கோவில்பட்டி 
திருச்சி மாவட்டம் - 621305
அலைபேசி எண் : 9789334642.
                                   


No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...