Tuesday, November 7, 2023

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (08-11-2023)

                          பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 08.11. 2023.       செவ்வாய் கிழமை.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: கல்வி.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர்  கல்லா தவர்..   
                                                                                                                                                                                                                                     
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

கண்ணுடையவர் என்றுக் கூறப்படுபவர் கற்றவரே, கல்லாதவர் முகத்தில் இரண்டுப் புண் உடையவர் ஆவார்.
   
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1.இசைப்பாட்டு என்று அழைக்கப்படும் நூல்?

விடை  :  பரிபாடல்/ கலித்தொகை.

 2. அகவல் காப்பியம், கொங்குவேள் மாக்கதை என்று அழைக்கப்படும் நூல்?

விடை :  பெருங்கதை.           
        
3. வஞ்சி நெடும்பாட்டு என்று அழைக்கப்படும் நூல்?

விடை : பட்டினப்பாலை.

4.  பதினெண்கீழ்கணக்கு நூல்கள் பாவகை என்ன?

 விடை : வெண்பா.

5.  பதினெண்மேல்கணக்கு நூல்கள் பாவகை என்ன?

விடை    :  ஆசிரியப்பா.

பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌸 Cleanliness is next to godliness

🌸 தூய்மை கடவுள் தன்மைக்கு அடுத்த பண்பு.
🌸 Civility costs nothing

🌸 குற்றங்குறைகளால் எதையும் சாதிக்க முடியாது.


 இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

காலமறிதலும், கடின உழைப்பும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து குறித்த நேரத்தில் எனது பணிகளை செய்வேன்.
" உழைப்பே உயர்வு தரும்" என்ற பழமொழிக்கேற்ப கடுமையாக உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்.



 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

*உன்னுடன் அதிக நேரம் இருப்பவர் யார்?*

நள்ளிரவில் 100 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருந்த கார் திடிரென்று நின்றது..!!

 டிரைவர் சீட்டுக்கு பக்கத்து சீட்டில் உட்கார்ந்து தூங்கிக் கொண்டிருந்த என் நண்பரை டிரைவர் தட்டி எழுப்பினார்,

“சார் பின்னாடி போய் உட்காருங்க.

நீங்க தூங்கி தூங்கி வழியறத பார்த்தா எனக்கும் தூக்கம் வருது”.

தூங்கி கொண்டிருந்த நண்பர் பின்னால் உட்கார்ந்து,
விட்ட தூக்கத்தை தொடர ஆரம்பித்தார்.

என்னால் தான் தூங்க முடியவில்லை. டிரைவர் சொன்ன வார்த்தைகளைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன்..!!

*பல நேரங்களில் நம் செயல்பாடுகள் கூட நம் பக்கத்தில் இருப்பவரை பொறுத்துத்தான் இருக்கிறது...!!!*

 *சுறுசுறுப்பான மனிதர்கள் அருகில் இருக்கையில் மெள்ள அந்த சுறுசுறுப்பு நம்மையும் தொற்றிக் கொள்கிறது...*

 *சோம்பேறிகள் பக்கத்தில் இருக்கும்போது மெல்ல மெல்ல அந்த சோம்பேறித்தனம் ஒட்டிக்கொள்கிறது.*

 *இந்த லாஜிக்கால் தான் தூங்குபவரை பக்கத்தில் வைத்துக்கொள்ள டிரைவர்கள் விரும்புவதில்லை..*

எனவே முன்னேற விரும்பினால் நீங்களும் *யோசியுங்கள்*,

உங்கள் பக்கத்தில் இருப்பது *யார்..?*

 *உற்சாகமானவரா..? சுறுசுறுப்பானவரா..? நம்பிக்கையானவரா?  விரக்தி எண்ணம் உள்ளவரா?*

*இடித்துரைக்க, எடுத்து சொல்ல நல்ல மனிதர்களை தன் அருகில் வைத்துக் கொள்ளாததாலேயே வீழ்ந்தவர்கள் பலர்..!!*

*மிகப் பெரிய வணிக சாம்ரஜ்யங்களை ஆண்டவர்கள் தங்கள் பக்கத்தில் இருந்த தவறான நபர்களால் வீழ்ந்திருக்கிறார்கள்.*

எனவே உங்களுக்கும் உங்கள் வெற்றிக்கும் இருக்கும் தொடர்பை போலவே உங்கள் அருகில் இருப்பவருக்கும் கூட தொடர்பு இருக்கிறது.

*லட்சியம் இல்லாத வர்களை நண்பர்களாக ஏற்காதீர்கள்*.

*லட்சியமும் அதை அடையவேண்டும் என்று எப்போதும் துடிப்பவர்களாக தேடி நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள்.*

*உங்கள் அருகில் உள்ளவர்களால் நீங்கள் உற்சாகம் பெருவதைப் போலவே...!!!*

 *உங்களைப்பார்த்து மற்றவர்களும் எழுச்சி பெற வேண்டும் என்று நினையுங்கள்...!!!*

எல்லோரையும் ஊக்கப்படுத்துங்கள். உங்கள் அருகில் இருக்கும் அனைவரும் உற்சாகம் அடைந்தால் உங்களின் அருகாமையினை அனைவரும் விரும்புவார்கள்.

*கொஞ்சம் கண்ணைத்திறந்து பாருங்கள். உங்கள் பக்கத்தில் இருப்பது யார்...?*

யாராக இருந்தாலும் ஒன்று உங்களை உற்சாகப்படுத்து பவராக இருக்க வேண்டும் அல்லது உங்களால் உற்சாகம் பெறுபவராக இருக்க வேண்டும்.

*தீதும் நன்றும் பிறர்தர வாரா.*





இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯 கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு 10% போனஸ் என தமிழக அரசு உத்தரவு.

🎯 டிசம்பர் முதல் வாரத்தில் குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு.

🎯 தமிழகத்தில் அரசு வேலைக்காக காத்திருப்போர் எண்ணிக்கை 64 லட்சம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

🎯 காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான உடற்தகுதி தேர்வு 307 பேர் பங்கேற்பு.

🎯 தீபாவளிக்காக 60 சிறப்பு ரயில்கள் . நெல்லைக்கு கூடுதலாக ஒரு வந்தே பாரத் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு.

🎯 தீபாவளிக்காக சென்னையில் இருந்து கூடுதலாக 1850 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவிப்பு.

🎯 வெளிமாநில பதிவின் ஆம்னி பேருந்துகளை டிசம்பர் 16க்கு பிறகு இயக்கினால் நடவடிக்கை.

🎯 திருச்சியில் 56வது நூலக வார விழா போட்டிகள். வாசகர்கள், மாணவர்களுக்கு அழைப்பு.

🎯 திருச்சி அரசு மருத்துவமனையில் முதல் முறையாக இளம் பெண்ணின் இரைப்பையை உணவுக் குழாயாக மாற்றி சிகிச்சை.

🎯 அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை தவிர்க்க வேண்டும் என பொதுமக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்.

🎯 இன்றும், நாளையும் 11 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

🎯 வைகை அணையின் நீர்மட்டம் 68.50 அடியாக உயர்வு. 2-ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை.

🎯 சத்தீஸ்கரில் 71%  மிசோராமில் 77%  வாக்குப்பதிவு நக்ஸல் தாக்குதல்களில் 5 வீரர்கள் காயம்.

🎯 பீகாரில் ஓபிசி, எஸ்சி, எஸ்டி இட ஒதுக்கீட்டை 65 சதவீதமாக உயர்த்த விரைவில் சட்டம் இயற்றப்படும் என முதல்வர் நிதிஷ்குமார் அறிவிப்பு.

🎯 காஸா சிட்டியிலிருந்து பொதுமக்கள் வெளியேற்றம். ஒரு மாதத்தைக் கடந்தது போர்.

🎯 காஸாவில் நிரந்தரமாக இஸ்ரேல் படை.

🎯 வலியுடன் போராடி வெற்றி தந்த மேக்ஸ்வெல். ரன் 201, பந்து 128 ,பவுண்டரி 21, சிக்ஸர் 10.

🎯 அடுத்து இலக்கு சாம்பியன்ஸ் லீக் வாய்ப்பு. உலகக்கோப்பை கிரிக்கெட்டின் 40-வது ஆட்டத்தில் இன்று இங்கிலாந்து -  நெதர்லாந்து மோதல்.

🎯 மெக்ஸிகோவில் நடைபெற்ற டபிள்யூடி ஃபைனல் மகளிர் டென்னிஸ் போட்டியில் போலந்தின் இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றார்.

🎯 இங்கிலாந்தின் பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் செல்ஸி 4-1 கோல் கணக்கில் டாட்ன்ஹாமை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.



TODAY'S ENGLISH NEWS: 
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎







🌸இனிய காலை வணக்கம் ....✍     
         
இரா . மணிகண்டன் முதுகலைத்தமிழாசிரியர்  
அரசு மேல்நிலைப்பள்ளி
கோவில்பட்டி 
திருச்சி மாவட்டம் - 621305
அலைபேசி எண் : 9789334642.
                                   


No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...