Thursday, November 2, 2023

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (03-11-2023)

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 03.11. 2023.       வெள்ளிக்கிழமை
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்:அதிகாரம்:அறிவுடைமை.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷


எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு . 
                                                                                                                                                                                                                                  
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀
எந்த ஒரு பொருள் குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமை ஆகும்.
   
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1. இந்தியாவில் பெரிய கடல் பாலம் எது?

விடை  :  அண்ணா இந்திரா காந்தி பாலம் (தமிழ்நாடு)

 2. இந்தியாவின் மிகப்பெரிய கோளரங்கம்?

விடை : பிர்லா கோளரங்கம் (கொல்கத்தா)                 
3 ) இந்தியாவின் மிக உயரமான அணை எது?

 விடை : டெஹ்ரி அணை (உத்தரகண்ட்)

4. இந்தியாவில் மிக உயர்ந்த நுழைவாயில் வழி எது?

 விடை : புலாண்ட் தர்வாஸா

5.  இந்தியாவில் வீர தீரம் மிக்க செயலுக்கான உயர்ந்த விருது எது?

விடை    : பரம்வீர் சக்ரா.

பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

 🌸Jack of all trade is master of none

🌸 பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டான்

🌸 Justice delayed is justice denied

🌸 தாமதிக்கப்பட்ட நீதி அநீதிக்கு சமம் ஆகும்







 இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

சொல்லும் செயலும் சிறந்த மனிதருக்கான எடுத்துக்காட்டு என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் சொல் வேறு செயல் வேறு என்றில்லாமல் சொல்வது போலவே நடத்தையிலும் பிறர் போற்றும் வண்ணமே நடந்து கொள்வேன்.




 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁

ஒரு கிராமத்தில் ஒரு அறிஞர் இருந்தார். அவர் ஒரு பொருளாதார மேதையா யிருந்தார். பல மன்னர்கள் தங்கள்நாட்டுப் பொருளாதாரத்தைச் சீர்படுத்த அவர் ஆலோசனையை நாடினர்.
ஒருநாள் ஊர்த்தலைவர் அவர் முன் வந்து அவரைப் பார்த்துக் கிண்டலாகச் சொன்னார்” ஐயா! அறிஞரே! நீங்கள் பெரிய அறிஞர் என்று உலகமே பாராட்டுகிறது. ஆனால் உங்கள் பையன் ஒரு அடி முட்டாளாக இருக்கிறானே! தங்கம், வெள்ளி இவற்றுள் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது என்று அவனைக் கேட்டால் அவன் வெள்ளி என்று சொல்கிறான். வெட்கக்கேடு!”
அறிஞர் மிக வருத்தமடைந்தார். பையனை அழைத்தார். கேட்டார் ”தங்கம், வெள்ளி இவை இரண்டில் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது?”
பையன் சொன்னான்”தங்கம்”
அவர் கேட்டார் ”பின் ஏன் ஊர்த்தலைவர் கேட்கும்போது வெள்ளி என்று சொன்னாய்?”
பையன் சொன்னான்” தினமும் நான் பள்ளி செல்லும்போது அவர் ஒரு கையில் தங்க நாணயமும், மறு கையில் வெள்ளி நாணயமும் வைத்துக் கொண்டு என்னை அறிஞரின் மகனே என அழைத்துச் சொல்வார் ”இவ்விரண்டில் மதிப்பு வாய்ந்ததை நீ எடுத்துக் கொள் ”.
”நான் உடனே வெள்ளியை எடுத்துக் கொள்வேன் .உடனே அவரும் சுற்றி இருப்பவர்களும் சிரித்துக் கிண்டல் செய்வார்கள்.நான் அந்த நாணயத்துடன் போய் விடுவேன்.
இது ஓராண்டாக நடக்கிறது. தினம் எனக்கு ஒரு வெள்ளி நாணயம் கிடைக்கிறது. நான் தங்கம் என்று சொல்லி எடுத்துக் கொண்டால் அன்றோடு இந்த விளையாட்டு நின்று விடும். எனக்கு நாணயம் கிடைப்பதும் நின்று போகும். எனவே தான்…” அறிஞர் திகைத்தார்!
வாழ்க்கையில் பல நேரங்களில் நாம் முட்டாள்களாக வேடம் அணிகிறோம், மற்றவர்கள் அதைப் பார்த்து மகிழ்வதற்கு. ஆனால் நாம் தோற்பதில்லை.அவர்கள் வெல்வதாக எண்ணிக் கொண்டிருப்பார்கள். ஆனால் வேறு கோணத்தில் பார்க்கும்போது நாம் வென்றிருப்போம்! எந்தக் கோணம் நமக்கு முக்கியம் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்...




இன்றைய முக்கிய செய்திகள்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯தீபாவளிக்கு 1 நாள் மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை – கல்வித்துறை அறிவிப்பு!!

🎯தமிழகத்தில் முதுநிலை மருத்துவம் படித்தபின் கட்டாய பணி ஓராண்டாக குறைப்பு

🎯கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கோரிய 11.85 லட்சம் விண்ணப்பங்கள் பரிசீலனை: தீபாவளிக்கு முன்பு ரூ.1,000 விடுவிப்பது குறித்தும் ஆலோசனை

🎯வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டுமானால் ரூ.2,000 நோட்டுகளை அஞ்சல் மூலம் அனுப்பலாம்

🎯இன்றும், 10ம் தேதியும் ரேஷன் கடை உண்டு..

🎯காற்று மாசால் டில்லிவாசிகள் அவதி: பள்ளிகளுக்கு 2 நாள் விடுமுறை

🎯துணை வேந்தர் நியமனம்:கவர்னருக்கு எதிராக தமிழக அரசு மேலும் ஒரு மனு தாக்கல்...

🎯 வார விடுமுறை நாட்களை முன்னிட்டு 600 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

🎯 தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு.

🎯 கோயம்பேடு சந்தையை இடமாற்றம் செய்யும் திட்டம் ஆய்வு நிலையில் உள்ளது அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு.

🎯 பொருளாதாரத்தில் பின்தங்கிய 7000 பேருக்கு உயர்கல்வி உதவித்தொகை: விஐடி வேந்தர் கோ.விஸ்வநாதன்.

🎯 பொதுமக்களுக்கு அரசு சேவைகள் வசதியாக கிடைக்க தமிழ்நாடு டிஜிட்டல் மயமாக்கல் வியூகம் ஆவணம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

🎯 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தாம்பரம் - நாகர்கோயில் இடையே சிறப்பு ரயில் முன்பதிவு தொடங்கியது.

🎯 மக்களின் ஆரோக்கியத்திற்கு ஏற்ற வகையில் தமிழகத்தில் 3 வகை பால் விற்பனை ஆவின் நிர்வாகம் நடவடிக்கை

🎯 தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் ரூ 49.79 கோடியில் 9 சட்டமன்ற தொகுதிகளில் முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்.

🎯 விளையாட்டு வீரர்களுக்கு எனது சிறப்பு பிரிவு உலக தரத்தில் சிகிச்சை வழங்கும் அரசு மருத்துவமனை. வருடத்துக்கு 250 ஆபரேஷன். பிற மாநிலத்தவர் சிகிச்சைக்காக சென்னை வருகை. அரசு மருத்துவர்கள் தகவல்.

🎯 அரசியல் கட்சிகள் பெற்ற நிதி விவரம் சமர்ப்பிக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு

🎯 தமிழ்நாட்டைத் தொடர்ந்து கேரள கவர்னர் மீதும் வழக்கு 8 மசோதாக்களுக்கு ஒப்புதல் தராததால் நடவடிக்கை.

🎯 18 சதவீதம் ஜிஎஸ்டி அமலுக்கு வந்தது பதிவு தபால்களுக்கு ரூ 10 கட்டணம் உயர்வு ஒவ்வொரு 20 கிராம் பார்சலுக்கும் 40 காசுகள் கூடுதல் வசூல்.

🎯 போர் தொடங்கியதிலிருந்து வழி எண்ணிக்கை 9000ஐ தாண்டியது என ஹமாஸ் அறிவிப்பு.

🎯 தொடர்ச்சியாக ஏழாவது வெற்றி. அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா. 302 ரன் வித்தியாசத்தில் இலங்கையை உயர்த்தி அமர்க்களம். விக்கெட் வேட்டையாடினார் ஷமி.

🎯 ஜோகூர் சுல்தான் கோப்பை ஹாக்கி இன்று அரையிறுதியில் இந்தியா.

🎯 நவம்பர் 24, 25,  26-ந்தேதிகளில் ஓசூரில் மோட்டார் பந்தயம்


TODAY'S ENGLISH NEWS: 
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

🎯Stalin unveils Tamil Nadu Digital Transformation Strategy

🎯Stalin unveils sports infrastructure set up across Tamil Nadu

🎯Tamil Nadu moves SC against Governor again, says causing ‘impediments’ in VC appointments to three State varsities

🎯Karnataka and Tamil Nadu should use cauvery water management authority to arrive at a distress-sharing formula, says Karnataka’s former Chief Secretary 

🎯Aspiring athletes to benefit from new multi-purpose indoor stadium built at a cost of ₹10.81 cr. at Katpadi

🎯Stalin unveils statue of late freedom fighter Anjalai Ammal

🎯Delhi govt. to launch e-bus shuttle service for govt. employees from Friday

🎯Bhutan King Wangchuck to begin eight-day India visit on November 3

🎯'A curse to be a parent in Gaza': More than 3,600 Palestinian children killed in just 3 weeks of war

🎯More than 165,000 Afghans flee Pakistan after deportation order

🎯Morning digest | India dismantles Sri Lanka to book World Cup semifinal spot; weapons, ammo, police vehicles looted in Imphal mob attack, and more

🎯Ind vs SL | Ruthless Men in Blue demolish Sri Lanka to make the semifinals

🎯Last round brings Arun triple jump gold with Games record













இனிய காலை வணக்கம் ....✍     
         
இரா . மணிகண்டன் முதுகலைத் தமிழ் ஆசிரியர்
அரசு  மேல்நிலைப்பள்ளி
கோவில்பட்டி 
திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 621305.
அலைபேசி எண் : 9789334642.

No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...