Thursday, March 28, 2024

'நெட்' மதிப்பெண்கள் மூலம் பிஎச்டி சேர்க்கை யுஜிசி அறிவிப்பு

 'நெட்' மதிப்பெண்கள் மூலம் பிஎச்டி சேர்க்கை யுஜிசி அறிவிப்பு

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

புது தில்லி மார்ச் 28; 2024 - 25 கல்வி ஆண்டு முதல் தேசிய தகுதித் தேர்வு (நெட்) மதிப்பெண்கள் மூலம் முனைவர் பட்டத்துக்கான (phd) சேர்க்கை நடத்தப்படும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) தெரிவித்துள்ளது. பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள் தனித்தனியாக நுழைவுத் தேர்வுகள் நடத்துவதை தவிர்ப்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக யுஜிசி தெரிவித்துள்ளது. 

    இது தொடர்பாக யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் கூறியதாவது: 2024-25 கல்வியாண்டு முதல் நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் நெட் தேர்வு மதிப்பெண்களைக் கொண்டு பிஎச்டி பட்டத்துக்கான சேர்க்கையை மேற்கொள்ளலாம். இதன் மூலம் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் தனித்தனியாக நுழைவு தேர்வுகள் நடத்துவதை தவிர்த்து விட்டு ஒரே முறையின் கீழ் சேர்க்கை நடத்த முடியும். ஆண்டுக்கு இருமுறை நெட்தேர்வு நடத்தப்படுகிறது. இருமுறையில் ஏதேனும் ஒருமுறை பெற்ற மதிப்பெண்ணைக் கொண்டு மாணவர்கள் கல்வி நிறுவனங்களில் சேரலாம். இந்த நடைமுறை நாட்டில் நல்ல கல்விச் சூழலை மேம்படுத்துவதோடு அறிவு சார்ந்த முன்னேற்றத்திற்கும் வழி வகுக்கும் என்றார்.


         *வெள்ளிக்கிழமை 29 மார்ச் 2024 தினமணி நாளிதழ் செய்தி (பக்கம்-10)*

No comments:

Post a Comment

அமுதவயல்: Tamil online test -1

அமுதவயல்: Tamil online test -1 : தமிழ் திறனறி தேர்வு