பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 30/10/2023 திங்கட்கிழமை
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
திருக்குறள்: அதிகாரம்: அறிவுடைமை
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷.
அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனு மிலர்.
🌸 பொருள்:
🍀🍀🍀🍀🍀
அறிவுடையவர் (வேறொன்றும் இல்லாதிருப்பினும்) எல்லாம் உடையவரே ஆவர், அறிவில்லாதவர் வேறு என்ன உடையவராக இருப்பினும் ஒன்றும் இல்லாதவரே ஆவர்.
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
1.X–கதிர் என்பது?
விடை : மின்காந்த அலை
2.புற்றுநோய் செல்களை அழிக்க உதவும் கதிர்வீச்சு?
விடை : பீட்டா கதிர்வீச்சு
3.நரம்பு மண்டலத்தின் அலகு?
விடை : நியூரான்
4.வைட்டமின் B2-வின் வேதிப் பெயர்?
விடை : ரிபோபிளேவின்
5.லோக் சபாவில் மொத்த இடங்கள் எத்தனை?
விடை : 545
பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🌷Lucky man needs no counsel
🌷அதிர்ஷ்டக்காரனுக்கு ஆலோசனை தேவை இல்லை.
🌹The greater the ambition the greater the low
🌹பேராசை பெருநட்டம்.
இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🌸 நேர்மையும் உண்மையும் மனிதனை உயர்த்தும் என்பதை அறிவேன்.
🌸எனவே எப்பொழுதும் நேர்மையுடனும் உண்மையுடனும் வாழ்ந்து என்றும் வாழ்வில் வெற்றி பெறுவேன்
நீதிக்கதை:🍁🍁🍁🍁🍁🍁
காட்டு ராஜா சிங்கத்தின் குகை வாசலில், ஏகப்பட்ட மிருகங்களின் கூட்டம். காட்டு ராஜா, வேட்டையாடச் சென்றபோது, கால்விரலில் அடிபட்டு, விரல் துண்டாகி விட்டதென்று அறிந்து துக்கம் விசாரிக்கத்தான் காட்டுப் பிரஜைகளான மிருகங்கள் கூடியிருந்தன. ஒவ்வொரு மிருகமாக வரிசையில் நின்று, குகையின் உள்ளே சென்று, சிங்க ராஜாவைப் பார்த்து விட்டுத் திரும்பின.
சிங்கராஜா காலில் பலமான கட்டுடன், கட்டிலில் படுத்துக் கிடந்தது. அருகே சிங்கராணி, வழியும் கண்ரும் சிந்திய மூக்குமாக அமர்ந்து இருந்தது.
ஒவ்வொரு மிருகமாக வரிசையாகச் சென்று கொண்டிருந்தபோது, வரிசையின் இடையே வந்து, புகுந்து கொண்ட குள்ளநரி, சிங்கராஜாவின் அருகே சென்றதும் பெருமூச்சு விட்டபடி “ஊம் நடப்பது எல்லாம் நன்மைக்கே” என்றது. சிங்கராஜாவுக்கு கடுங்கோபம் வந்துவிட்டது.
நமது காலிலுள்ள ஒரு விரலே போய்விட்டது. இந்தக் குள்ளநரி, நடப்பதெல்லாம் நன்மைக்கே, என்று கூறுகிறதே. “பிடி அதை அடைத்துவை, குகைச்சிறையில்!” எனக் கட்டளை இட்டது சிங்கராஜா.
சிப்பாய்க் குரங்குகள் பாய்ந்து, நரியைப் பிடித்து இழுத்துச் சென்றன.
“ஒவ்வொரு காரியமும் நமது நன்மைக்குத்தான் நடக்கிறது என்ற உண்மையைத்தானே சொன்னேன்” என்று புலம்பியபடி சென்றது குள்ளநரி.
சிங்கராஜாவின் காலிலுள்ள புண் குணமாவதற்கு, மூன்று மாதகாலம் கடந்தது. காலில் ஒருவிரல் இல்லாமையால், சிங்கராஜா கம்பீரமாக நடக்க இயலாமல், நொண்டி நொண்டி நடந்தது. அதனால் மிருகங்கள் எல்லாம் மறைமுகமாக “நொண்டி ராஜா” என அழைத்தன.
இப்படிச் சிங்கராஜாவை எல்லாரும் கேலி செய்வதைக் கேட்டு, சிங்கராணிக்கு மிகுந்த வருத்தம். என்ன செய்வது? இந்தப் பட்டத்தைச் சூட்டியது எந்த மிருகம் என்பது தெரிந்தால், இளவரசன் சிங்கக்குட்டியிடம் தண்டனை கொடுக்கச் சொல்லலாமே என நினைத்தது.
உண்மையில் இப்படி பெயர் வைத்தது, குறும்புக்கார முயல் என்பது எவருக்கும் தெரியாது.
சிறையில் அடைபட்டிருந்த குள்ளநரிக்கு, சைவ உணவே தினசரி ஒரு வேளை தரப்பட்டது. காட்டுக்கிழங்கையும், கனிகளையும், பார்த்தாலே குள்ளநரிக்கு குமட்டிக் கொண்டு வரும், என்ன செய்வது? வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்காமல், வார்த்தையைக் கொட்டிவிட்டு, வாழ்க்கையைக் கெடுத்துக் கொண்டோமே, என ஏக்கப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தது குள்ளநரி.
வெகுநாட்களாகியும் குணமாகாமல் காலை நொண்டிக் கொண்டே ஒரு நாள் காட்டில், வெகுதூரம் வேட்டைக்கு வந்துவிட்ட சிங்கம், ஒரு இடத்தில் திறந்து வைக்கப்பட்டிருந்த ஒரு கூண்டுக்குள், ஆட்டுக்குட்டி ஒன்று இருந்ததைக் கண்டது. ஆவலுடன் ஆட்டுக்குட்டியின் மீது பாய்ந்து, கடித்துக் குதறித் தின்றது.
தின்று முடிந்து, ஏப்பம் விட்டபடி திரும்பிய சிங்கம் அந்த இரும்புக் கூண்டில் கம்பிக்கதவால் மூடப்பட்டிருந்ததைக் கண்டு, திகைத்தது. மடத்தனமாக கூண்டுக்குள் அகப்பட்டுக் கொண்டோமே என்று நினைத்து வேதனைப்பட்டது. ஆத்திரத்தில் கர்ஜனை செய்தது. அப்போது கூண்டில் அடைப்பட்ட சிங்கத்தை, தங்கள் வண்டியில் கட்டி இழுத்துச் சென்ற காவலர்கள், “நம் இளவரசர் கேட்டபடி அவர் விளையாடுவதற்கு ஒரு சிங்கம் கிடைத்துவிட்டது. இதைப் பார்த்தால் மிகவும் மகிழ்ச்சியடைவார். இளவரசரின் மகிழ்ச்சியைக் கண்டு மன்னர் நமக்குப் பரிசுகள் கொடுப்பார்”, என்றெல்லாம் பேசிக்கொண்டே அரண்மனையை அடைந்தனர்.
கூண்டிலிருந்த சிங்கத்தை இறக்கியபோதுதான் அது நொண்டி நொண்டி நடந்ததை அறிந்தனர்.
இதைக்கண்டு வருந்திய அவர்கள், “இது ஊனமுற்ற சிங்கம். இதை நம் இளவரசர் விளையாடப் பழக்கப்படுத்த முடியாது. “எனவே, இதைக் காட்டில் கொண்டு போய் விட்டுவிடுவதே நல்லது” என்று கூறியபடி சிங்கத்தை மீண்டும் காட்டுக்குள் கொண்டு சென்று விட்டுவிட்டுத் திரும்பினர் காவலர்கள். சிங்கத்திற்கு மகிழ்ச்சி பொங்கியது.
“நமது கால் விரல், இல்லாததால்தான் நம்மை விட்டு விட்டார்கள். “நடப்பது எல்லாம் நன்மைக்கே” என்று அன்றைக்கு நரி சொன்னபோது, ஆத்திரப்பட்டு அதைக் கூண்டில் அடைத்தோம். ஆனால் அது சொன்னது சரியென்று இப்போதுதான் உணர முடிகிறது” என்றெல்லாம் நினைத்தபடி தனது குகைக்குச் சென்ற சிங்கம், தனது மனைவியிடமும் குட்டிகளிடமும் நடந்ததைச் சொன்னது.
உடனடியாக, சிப்பாய்க் குரங்குகளை அழைத்து, “சிறையைத் திறந்து குள்ளநரியை வெளியில் அனுப்புங்கள்” என்று உத்தரவிட்டது. அதன்படி சிறையை விட்டு, வெளிவந்த குள்ளநரியை வரவேற்ற சிங்கராஜா, “அறிவுக் கடலே, இன்று முதல் நீங்கள்தான் எனது மந்திரி, நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று அன்று நீங்கள் சொன்னது உண்மையாகி விட்டது. யார் எதைச் சொன்னாலும் அவசரப்படாமல் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டேன் என்று மகிழ்ந்தது.
*நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று நினைத்தால் துன்பம் தரக்கூடிய செயல் எதுவும் இல்லை*
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
இன்றைய முக்கிய செய்திகள்🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🎯 தமிழக எல்லைகளில் கண்காணிப்பை தீவிர படுத்த டிஜிபி உத்தரவு.
🎯 காவிரி ஆற்றில் பாலங்கள் வலுவிழக்கும் அபாயம். மணல் அல்ல நிரந்தர தடை விதிக்க வேண்டுகோள்.
🎯 திருச்சியில் புதிய ஓய்வூதிய திட்ட ஒழிப்பு இயக்க ஆயத்த மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.
🎯 போராட்டம் நடத்த ஜாக்டோ ஜியோ ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.
🎯 தேசிய கராத்தே போட்டியில் தமிழக அணி சாம்பியன்.
🎯 திருச்சி மாவட்டத்தில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நவம்பர் 1-ல் கிராம சபை கூட்டம்.
🎯 கலை, அறிவியல் பாடங்களுக்கு நுழைவுத் தேர்வு வந்தால் இரு மொழி கொள்கைக்கு ஆபத்து என அமைச்சர் பொன்முடி தகவல்
🎯 அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பணி மூப்பு ஊதிய முரண்பாடுகள் குறித்த பரிந்துரைகளை அனுப்புமாறு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
🎯 டெங்கு: அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தனி வார்டு.
🎯 விதை பண்ணை அமைக்க 'உழவன் செயலியில்' விண்ணப்பிக்கலாம்.
🎯 சேலம் சென்னை விமான சேவை மீண்டும் தொடக்கம்.
🎯 மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தாமதம் புதுவை அரசுக்கு தேசிய மருத்துவ ஆணையம் நோட்டீஸ்.
🎯 13 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு.
🎯 பிரதமர் என்று குஜராத் பயணம் ரூ.5,950 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
🎯 இந்தியா - கஜகஸ்தான் 13 நாள் கூட்டு ராணுவ பயிற்சி.
🎯 சத்தீஸ்கர் முதல் கட்ட தேர்தலில் 46 கோடீஸ்வர வேட்பாளர்கள்.ரூ. 40 கோடி சொத்துடன் ஆம் ஆத்மி வேட்பாளர் முதலிடம்.
🎯 பாதுகாப்பு படைகள் குறித்து அதிருப்தி: மன்னிப்பு கூறினார் இஸ்ரேல் பிரதமர். ஐ.நா. நிவாரணப் பொருள் கிடங்குகளில் கொள்ளை.
🎯 6 வெற்றிகளுடன் இந்திய ஆதிக்கம். இங்கிலாந்து 100 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி.
🎯 ஹாட்ரிக் வெற்றி முனைப்பில் இலங்கை. இன்று ஆப்கானிஸ்தானை சந்திக்கிறது.
🎯 எலைட் கோப்பை டென்னிஸ்: பியாட்ரிஸ் மாயா சாம்பியன்.
🎯 29ஆவது ஃபிடே மகளிர் கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டியில் இந்தியாவின் ஆர். வைஷாலி 4-வது சுற்றில் முன்னாள் சாம்பியனை முறியடித்தார்.
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
🎯T.N. CM Stalin writes to Union Minister Jaishankar to secure release of 37 fishermen from Sri Lankan custody
🎯Over 5,800 have been infected with dengue, says Minister
🎯ED ropes in ISRO, IIT-Kanpur to probe illegal sand mining in Tamil nadu
🎯Government preparing to release Vision India 2047 document
🎯Studies for Chennai’s Third Master Plan to be ready by November, says CMDA
🎯Israel-Hamas war, Day 24 LIVE updates | Gaza receives largest aid shipment as deaths cross 8,000 and Israel widens military offensive
🎯IND vs ENG | India becomes No. 2 in World Cup wins
🎯Cricket World Cup 2023 AFG vs SL | Afghanistan holds edge over Sri Lanka
🎯J&K administration felicitates kin of first Indian woman to win two gold medals in single Asian Para Games
இனிய காலை வணக்கம் ....✍
இரா . மணிகண்டன் முதுகலை தமிழ் ஆசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
கோவில்பட்டி ,
திருச்சிராப்பள்ளி மாவட்டம்-621305.
அலைபேசி எண் : 9789334642.