Sunday, January 1, 2023

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (02-01-2023)

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 02.01.2023.    திங்கட்கிழமை.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: காலம் அறிதல் 

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌷🌷🌷🌷🌷

ஞாலங் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்.

                                                                                                                 
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

   (செயலை முடிப்பதற்கு ஏற்ற) காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால், உலகமே வேண்டும் எனக் கருதினாலும் கைகூடும்.
       

   

🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1. சிறுநீரகத்தின் மேற்புறத்தில் அமைந்துள்ள சுரப்பியின் பெயர் என்ன?

*விடை* : அட்ரீனல் சுரப்பி

2. உடல் வெப்பநிலையை சமநிலையில் பராமரிக்க உதவும் ஹார்மோன் எது?

*விடை* : தைராய்டு ஹார்மோன்

3. இதய சுழற்சி எத்தனை வினாடிகளில் முடிவடையும்?

*விடை* : எட்டு வினாடிகளில்

4. ரத்த சிவப்பணுக்கள் அல்லது எரித்ரோசைடுகளின் வாழ்நாள் என்ன?

*விடை* : 120 நாட்கள்

5. ஒரு குதிரை திறனின் அளவு என்ன?

*விடை* : 746 வாட்


பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌹 Failure is the stepping stone to success
🌹 தோல்வியே வெற்றிக்கு முதல் படி


🌷 Face is the index of the mind
🌷 அகத்தின் அழகு முகத்தில் தெரியும்


இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

ஊக்கமும்  உழைப்பும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து ஊக்கமுடன்  உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்
.




 நீதிக்கதை
🍁🍁🍁🍁🍁🍁

*கழுகுகுஞ்சும் கோழிக்குஞ்சும்..!*

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

   விவசாயி ஒருவன் தனது நிலத்திற்கு அருகே இருந்த உயரமான பாறையில் இருந்து ஒரு கழுகு முட்டையினை வீட்டிற்கு எடுத்து வந்தான் . அக்கழுகு முட்டையினை தன் வீட்டில், கோழி முட்டைகளோடு வைத்து அடைகாக்க செய்தான்.



      சில நாட்களுக்குப் பின்னர் கோழிக்குஞ்சுகளோடு கழுகு குஞ்சும் பொறித்தது. எல்லா கோழிக்குஞ்சுகள் கூடவும் சகஜமாக பழகி, தாய்க்கோழியோடு இரையினை தேடி உண்டு கொண்டிருந்தது.


     ஒரு நாள் இரை மேய்ந்து கொண்டிருந்த கழுகு குஞ்சுயிடம், ஒரு கோழிக்குஞ்சு வானத்தில் மேகத்திற்கு மேல் பறந்துகொண்டிருந்த ஒரு கழுகினை காட்டி, “அச்சோ..! அந்த கழுகினை பார்..! எவ்வளவு உயரத்தில் பறக்கின்றது.. நம்மால் அதைப்போல் பறக்க முடியாது.” என்று கவலையோடு கூறியது. இதைக் கேட்ட அந்த கழுகு குஞ்சியும், “ஆமாம்.. நம்மால் அவ்வளவு உயரத்தில் பறக்க முடியாது..” என்றது.


    கழுகு குஞ்சுயிடம் அந்த மேகத்தை தாண்டி பறக்கும் வலிமை இருந்தபோதிலும் கோழிக்குஞ்சுகளோடு பழகியதால் தன் வலிமையை உணராது போனது.


     இதைப் போலத்தான் நன்கு படிக்கக் கூடிய மாணவர்கள் கூட படிப்பே வராத மாணவர்களோடு சேர்ந்து இலக்கை நிர்ணயிக்க முடியாமல் தோற்றுப் போய் விடுகிறார்கள்.


     ஆதலால் நம் லட்சியத்திற்கு உறுதுணையாக இருக்கும் நட்புகளோடு சேர்ந்தால் வாழ்வு வளம் பெறும். “பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும்” அதேநேரத்தில்   நாம் நம் சேர்க்கையை பொறுத்தே, நமது வாழ்வு நிர்ணயிக்கப்படுகிறது என்பதை உணரலாம்.



இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯தமிழக அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு

🎯பிளஸ் 2வுக்கு தனி தேர்வர்கள் விண்ணப்பிக்க நாளை கடைசி

🎯ஐஏஎஸ் அதிகாரிகள் 46 பேருக்கு பதவி உயர்வு

🎯வர்த்தகப் பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை ரூ.25 அதிகரிப்பு

🎯ஜன 02, 05:45 ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

🎯 இந்தியாவில் நாளை அறிவியல் மாநாடு. பிரதமர்  உரையாற்றுகிறார்.

🎯ஜன., 9ம் தேதி சித்தா நாள் கொண்டாட யு.ஜி.சி., உத்தரவு

🎯இந்திய விமானப் படையின் மேற்கு பிரிவு தலைவராக ஏர் மார்ஷல் பங்கஜ் மோகன் சின்ஹா பொறுப்பேற்பு

🎯600 ஆண்டு கால வரலாற்றில் பதவியை ராஜினாமா செய்த முன்னாள் போப் 16-ம் பெனடிக்ட் 95 வயதில் மறைவு

🎯2023 உலகக் கோப்பை தொடருக்கு பிசிசிஐ பலே திட்டம்: 20 வீரர்கள் தேர்வு?

🎯 பிரிமியர் லீக் ஆர்சனல் அதிரடி வெற்றி.

🎯 தேசிய ஆடவர் குத்துச்சண்டை: கௌரவ் ஹுஸாமுதீன் வெற்றி.


TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

 🎯Tamil government officials, teachers 4 percent increase in salary

🎯Tomorrow is the last day for individual candidates to apply for Plus 2

46 IAS officers promoted

🎯Gas cylinder price for commercial use increased by Rs.25

🎯Jan 02, 05:45 The gate of Heaven was opened at Srirangam Renganath Temple.

🎯 Scientific conference tomorrow in India. Prime Minister addresses.

🎯UGC order to celebrate Siddha Day on 9th Jan

🎯Air Marshal Pankaj Mohan Sinha assumed charge as the Chief of the Western Wing of the Indian Air Force

🎯Former Pope Benedict XVI dies at 95, 600-year-old pope to resign

🎯BCCI Ballet Plan for 2023 World Cup Series: 20 Players Picked?

🎯 Premier League Arsenal action win.

🎯 National Men's Boxing: Gaurav Hussamuddin wins.





இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.

No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...