Monday, January 23, 2023

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (24-01-2023)

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 24.01.2023.    செவ்வாய்க் கிழமை  .
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: இடன் அறிதல் 
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌷🌷🌷🌷🌷

நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற
                                                                                                                                                                                                                 
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

       ஆழமுள்ள நீரில் முதலை மற்ற உயிர்களை வெல்லும், ஆனால் நீரிலிருந்து விலகிவந்தால் அந்த முதலையையும் மற்ற உயிர்கள் வென்றுவிடும்.
       
   

🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1.புதுக்கோட்டை குடுமியான் மலையில் காணப்படும் கல்வெட்டுகள்?

*விடை* : பல்லவர் கால கல்வெட்டுகள்

2. கோழி தனது குஞ்சுகளை பொரிக்க எத்தனை நாட்கள் எடுத்துக் கொள்ளும்?

*விடை* : 21 நாட்கள்

3. உடலில் நோயை எதிர்த்து செயல்படுவது எது?

*விடை* : வெள்ளை அணுக்கள்

4. திட கார்பன்-டை-ஆக்சைடு எனப்படுவது எது?

*விடை* : உலர் பனிக்கட்டி

5. கால தூதுவர்கள் என்று அழைக்கப்படும் ஹார்மோன்கள் எவை?

*விடை* : மெலட்டோனின்


பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌹 Union is strength
 🌹 ஒற்றுமையே வலிமை


🌷 Unity in diversity
🌷 வேற்றுமையில் ஒற்றுமை



இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

ஊக்கமும்  உழைப்பும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து ஊக்கமுடன்  உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்
.



 நீதிக்கதை
🍁🍁🍁🍁🍁🍁

*கெடுவார், கேடு நினைப்பார்!*

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

      ஓர் காட்டில் கெட்ட சுபாவமுள்ள தேள் ஒன்று வசித்து வந்தது. அந்தக் காட்டின் நடுவில் ஒரு நீரோடை இருந்தது.அந்தத் தேளுக்கு இக்கரையில் இருந்து அக்கரைக்கு போக வேண்டி இருந்தது.

அக்கரைக்குப் போவதற்காக அந்த நீரோடையில் இருக்கும் பெரிய மீன்கள், நண்டு, தவளை போன்றவைகளிடம் தேள் உதவி கேட்டது, ஆனால் அந்த பொல்லாத தேள் தமக்குக் கொட்டிவிடும் என்று அவை மறுத்து விட்டன.

எப்படி நீரோடையைக் கடப்பது என்று தேள்யோசித்துக்கொண்டு இருந்தபோது அந்த நீரோடையில் ஆமை ஒன்று வந்து கொண்டிருந்தது. ஆமையைக் கண்ட தேள்.

ஆமையாரே! நான் அக்கரைக்குச் செல்லவேண்டும் என்னை அங்கு கொண்டு போய் விட்டு விடுவீரா? என்று கேட்டது.

நானும் அக்கரைக்குத்தான் போகிறேன், என் முதுகில் ஏறிக்கொள்ளும் உம்மை நான் அக்கரையில் விட்டுவிடுகிறேன்! என்றது ஆமை,தேளும் ஆமையின் முதுகில் ஏறிக்கொண்டது

ஆமை நீரில் நீந்திச்செல்ல அரம்பித்தது

சிறிது தூரம் தான் ஆமை சென்றிருக்கும் தேளுக்கு ஒரு யோசனை வந்தது ,நான் பல பேரைக் கொட்டியிருக்கிறேன்.அவர்கள் வலியால் துடித்ததையும் பார்த்திருக்கின்றேன்.ஆனால நான் ஒரு நாளும், ஆமைக்கு கொட்டவில்லை ,இந்த ஆமையைக் கொட்டினால் எப்படித் துடிக்கும்? இதை விட்டால் வேறு சந்தர்ப்பம் கிடையாது .என்று ஆமைக்கு கொட்டிப் பார்க்க நினைத்தது

தேள் ஆமையின் முதுகில் கொட்டியது .அனால் ஆமை பேசாமல் போய்க்கொண்டிருந்த்து. உடனே தேள் ஆமையைப் பார்த்து

ஆமையாரே! உமது முதுகு கடினமாக இருக்கிறதே. உமது உடம்பில் வலியே வருவதில்லையா? என்று கேட்டது.

தேளின் கெட்ட எண்ணத்தைப் புரிந்துகொள்ளாத ஆமை , எனது முதுகு கடினமான ஓட்டினால் மூடப்பட்டுள்ளது அதனால் எனக்கு அந்த இடத்தில் வலியே வருவதில்லை, அனால் எனது கழுத்துப்பக்கம் மென்மையாக இருக்கும் . இதில் தான் எனக்கு வலிகள் காயங்கள் ஏற்படும் என்று சொன்னது ஆமை.

ஓகோ ;அப்படியா?என்று கேட்ட தேள் ,மெதுவாக ஆமையின் கழுத்துப் பகுதியை நோக்கிச் சென்றது . கழுத்தில் இருந்து தலைப்பகுதிக்குச் சென்ற தேள் ஆமைக்கு கொட்ட ஆரம்பித்த்து .

தலையில் ஏதோ குத்தியதால் விடுக்கென்று தலையை உள்ளே இழுத்துக் கொண்டது ஆமை . தேள் நீரோடையில் விழுந்து விட்டது.

தனக்கு உதவி செய்த ஆமைக்கு கேடுவிளைவிக்க நினைத்த தேள் .தண்ணீரில் மூழ்கி இறந்தது .ஆமை கரையை நோக்கி நீந்திச் சென்றது.

ஒருவர் எவ்வித பலனையும் எதிர்பாராமல் எமக்கு உதவி செய்தாராயின்,அவரின் உதவியை நாம், எம் வாழ் நாளில் என்றுமே மறந்துவிடலாகாது. அவருக்கு நன்றியுடையவனாக இருத்தல் வேண்டும்.மாறாக அவருக்கு கேடு செய்ய நினைப்போமாயின், அது எம்மையே வந்து சேரும்

இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯பிளஸ் 2 பொது தேர்வுக்கான வினாத்தாள் தயாரிப்பு நிறைவு..

🎯 அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு இடம் மாறுதல் கவுன்சிலிங்

🎯பள்ளிகளில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் தலைமையாசிரியர்கள் தேசியக்கொடியேற்ற வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

🎯நாட்டிலேயே முதல்முறை | குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை - புதுச்சேரியில் துவக்கம்

🎯தமிழகத்தில் 60 ரயில் நிலையங்கள் மறு சீரமைப்பு: தெற்கு ரயில்வே மெகா திட்டம் 

🎯 பிராந்திய மொழிகளில் தீர்ப்பு முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு.

🎯காற்றுவேக மாறுபாடு - தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு

🎯 கடற்படையில் இணைந்தது ஐ என் எஸ் 
வாஹீர் நீர்மூழ்கி கப்பல்

🎯அந்தமான் நிகோபாரில் உள்ள 21 தீவுகளுக்கு ‘பரம்வீர் சக்ரா’ விருதாளர்கள் பெயர் - பிரதமர் மோடி பெருமிதம்

🎯“அரசியலில் இருந்து விலக விரும்புகிறேன்” - மகாராஷ்ட்டிர ஆளுநர் அறிவிப்பு

🎯கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்களில் ஆள்குறைப்பு அமெரிக்காவில் 80 ஆயிரம் இந்தியர் வேலையிழந்து தவிப்பு

🎯“வணக்கம் சென்னை” - ரஞ்சிக் கோப்பையில் விளையாட சென்னை வந்த ஜடேஜா ட்வீட்

🎯ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தமிழ்நாடு-சவுராஷ்டிரா மோதல்: சென்னையில் இன்று தொடக்கம்

🎯ஆஸி. ஓபன் டென்னிஸ் சபலென்கா, டோனா முன்னேற்றம்: இன்று முதல் காலிறுதி


TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

🎯Preparation of question paper for Plus 2 general examination is complete..

🎯 Transfer counseling for teachers of government aided schools

🎯 School education department orders that the headmasters should hoist the national flag during the Republic Day celebrations in schools

First time in the country Rs.1,000 per month stipend for female heads of households - Launched in Puducherry

🎯Renovation of 60 Railway Stations in Tamil Nadu: Southern Railway Mega Project

🎯 Verdict in regional languages CM Stalin's welcome.

🎯 Variation in wind speed - Chance of rain in South Tamil Nadu today

🎯 INS joined Navy
Waheer Submarine

21 islands in Andaman and Nicobar named 'Paramveer Chakra' awardees - PM Modi proud

🎯“I want to quit politics” - Maharashtra Governor announcement

🎯 Downsizing in Google, Microsoft, 80 thousand Indians lost their jobs in America

🎯 “Hello Chennai” - Tweet of Jadeja who came to Chennai to play Ranji Trophy

🎯Ranji Cup Cricket Tamil Nadu-Saurashtra Clash: Starts Today in Chennai

🎯 Aussie. Open Tennis Sabalenka, Donna Advance: First quarter-final today
 





இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.

No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...