பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮நாள் : 20/01/2023 வெள்ளிக்கிழைமை
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
திருக்குறள்: அதிகாரம்: நடுவு நிலைமை
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀
கோடாமை சான்றோர்க் கணி
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀
முன்னே தான் சமமாக இருந்து, பின்பு பொருளைச் சீர்தூக்கும் துலாக்கோல் போல் அமைந்து, ஒரு பக்கமாக சாயாமல் நடுவுநிலைமை போற்றுவது சான்றோர்க்கு அழகாகும்
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
1.உருவ வழிபாடு ஆரம்பிக்கப்பட்ட காலம்
விடை : இதிகாச காலம்
2. கிலோ வாட் எதன் அளவு
விடை : மின்சாரம்
3.எல்லோருக்கும் பொருந்தக்கூடிய இரத்தவகை.
விடை : பிரிவு ஓ
4.ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியாவது?
விடை : எலும்பு மஜ்ஜையில்
5.ஏ.சி. மின்னோட்டத்தை டி.சி. மின்னோட்டமாக மாற்றித்தரும் சாதனம்.
விடை : மின் திருத்தி
பழமொழிகள்
இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
.
இன்றைய முக்கிய செய்திகள்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🌸இனிய காலை வணக்கம் ....✍
இரா . மணிகண்டன் ( முதுகலை தமிழ் ஆசிரியர்)
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.
🌼🌼🌼🌼🌼🌼🌼
🌷 FAILURE OF STEPPING STONE TO SUCCESS
🌷 தோல்வியே வெற்றிக்கு முதல் படி
🌹 FAITH IS THE FORCE OF LIFE
🌹 நம்பிக்கையே வாழ்க்கையின் உந்து சக்தி
இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🌷 உடல் நலமும் உள நலமும் காப்பது உயரிய வாழ்வுக்கு சிறந்தது என்பதை அறிவேன்.
🌷 எனவே உடலை உடற்பயிற்சியாலும் உள்ளத்தை தியானத்தாலும் வளப்படுத்தி என்றென்றும் வாழ்வில் வெற்றி பெறுவேன்
நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
.
🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃
அரண்மனையில், தத்ரூபமான சேவல் ஓவியம் ஒன்றை வைக்க நினைத்தார், மன்னர்.
மன்னரின் ஆசை, காட்டுத் தீ போல் ஊரெங்கும் பரவியது.
எத்தனையோ ஓவியர்கள் வந்தும், மன்னருக்கு திருப்தியான ஓவியங்களை வரையவில்லை.
மற்ற நாடுகளில் உள்ள ஓவியர்களுக்காக, ஒரு போட்டி வைத்தார். அவர்கள் வரைந்த ஓவியங்களை, மன்னரின் பார்வைக்கு வைத்தனர்.
சிறு வயதில், தனக்கு ஓவியம் கற்றுக்கொடுத்த, வயதான ஓவிய ஆசிரியரை, இப்போட்டியின் நீதிபதியாக அறிவித்தார், மன்னர்.
ஓவிய ஆசிரியரிடம், 'எல்லா ஓவியங்களையும் பார்த்து, சிறந்த சேவல் ஓவியத்தை தேர்வு செய்து விட்டீர்களா...' எனக் கேட்டார், மன்னர்.
'இதில், எந்த ஓவியமும் தகுதியானது இல்லை...' என்றவர், 'ஓவியங்கள் வைத்த அறையில், சேவல்களை விடுவோம். தன் இனத்தை சேர்ந்த வேறொரு சேவலை பார்த்ததும், சண்டை போடத் தோன்றும். எந்த ஓவியத்தை பார்த்து, சண்டை போடத் துவங்குகிறதோ, அது தான், மிகச்சிறந்த ஓவியம் என, முடிவு செய்வோம்...' என்றார், ஆசிரியர்.
அறையில் நிறைய சேவல்களை விட கட்டளையிட்டார், மன்னர். ஆனால், ஓவியத்தை பார்த்து, சேவல்கள் சண்டை போடாமல், வெளியேறின.
'சண்டை போட துாண்டும் சேவல் ஓவியத்தை, நீங்கள் ஏன் வரையக் கூடாது...' என, ஓவிய ஆசிரியரிடம் கேட்டார், மன்னர்.
'உங்கள் சித்தம். ஆனால், எனக்கு ஆறு மாதம் அவகாசம் தேவை...' என்றார், ஆசிரியர்.
'சரி... ஆறு மாதத்திற்கு பின், இதே அறையில் சந்திப்போம்...' என்றார்.
ஆறு மாதத்திற்கு பின், அதே அறையில் எல்லா ஓவியர்களும் மீண்டும் கூடினர். ஆனால், வயதான ஓவிய ஆசிரியர், கையில் எந்த ஓவியமும் எடுத்து வரவில்லை. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார், மன்னர்.
'மன்னா... இங்கேயே, அரை மணியில் வரைகிறேன். அதற்கான உபகரணங்கள் தேவை...' என்று, ஆசிரியர் கூறியதும், அனைத்தும் வந்தன.
மற்ற ஓவியங்களோடு, தான் வரைந்த ஓவியத்தையும் வைத்தார், ஆசிரியர். மீண்டும் அறைக்குள் சேவல்கள் அனுப்பப்பட்டன.
எல்லாரும் ஆவலாக காத்திருக்க, ஆசிரியர் வரைந்திருந்த ஓவியத்தை, நிஜ சேவலாக நினைத்து சண்டைக்கு போனது, ஒரு சேவல். அப்போட்டியில் வெற்றி பெற்றார், ஆசிரியர்.
வயதான ஆசிரியரிடம், 'உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன... ஏன், ஆறு மாதம் தேவைப்பட்டது... இருப்பினும், அப்போது எதுவும் வரையாமல், கடைசியில் வரைய ஏன் அரை மணி நேரம் கேட்டீர்கள்...' என கேட்டார், மன்னர்.
'ஆறு மாதமாக, கோழி, சேவல்கள் எப்படி நடக்கிறதோ, துாங்குகிறதோ மற்றும் உணவு உண்கிறதோ, அதுபோன்றே நானும் நடந்தேன், துாங்கினேன், உண்டேன். அதனுடன் ஒன்றிப்போய், கோழியாகவே மாறி விட்டேன். அதன்பின் தான் சேவல் படத்தை வரைந்தேன்...' என்றார், ஆசிரியர்.
எந்த வேலையிலும், அதில் ஒன்றிப் போவது தான் வெற்றியின் ரகசியம்...
🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃
இன்றைய முக்கிய செய்திகள்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🎯நீட் விலக்கு மசோதா | மீண்டும் விளக்கம் கேட்கிறது மத்திய அரசு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
🎯10, 11, 12-ம் வகுப்பு, கல்லூரி மாணவர்களுக்கு வெப்பினார் - ‘இந்து தமிழ் திசை’ வழங்கும் ‘தேசம் காக்கும் நேசப் பணிகள்’
🎯இயல், இசை, நாடகம் என முத்தமிழையும் வளர்க்கும் ஆட்சியாக தி.மு.க ஆட்சி உள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு !
🎯 மறு பதிப்பு செய்யப்பட்ட 108 அரிய பக்தி நூல்களை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
🎯 மாணவர்களிடம் அறிவியல் சார்ந்த ஆர்வத்தைத் தூண்டுவது அவசியம் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு
🎯அரசு பள்ளியில் ட்ரோன், செயற்கைக்கோள் ஆய்வகம்: தமிழகத்தில் முதல் முறையாக துவக்கம்
🎯51,900 குடும்பங்களுக்கு இலவச பட்டா :கின்னஸ் புத்தகத்தில் பிரதமர் நிகழ்ச்சி.
🎯துணை ஜனாதிபதியின் புதிய இல்லம் பார்வையிட்டார் ஜக்தீப் தன்கர்
🎯தியாகிகள் தினம்: அரசு புது உத்தரவு
🎯 மத்திய அரசில் 71000 பேருக்கு இன்று பணி நியமன; பிரதமர் இன்று வழங்குகிறார்.
🎯ராமர் பாலத்தை தேசிய புராதன சின்னமாக அறிவிக்க நடவடிக்கை - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
🎯அண்டர் 14 கர்நாடக அணி கேப்டனாக ராகுல் திராவிட் மகன் அன்வே திராவிட் நியமனம்
🎯ஹாக்கி உலகக் கோப்பை 2023 | வேல்ஸ் அணியை வீழ்த்தியது இந்தியா: ஆகாஷ்தீப் அசத்தல்
🎯15-வது உலகக் கோப்பை ஹாக்கி போட்டியினை காண ஒடிசா சென்றார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!
🎯ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் 3வது சுற்றில் கார்சியா: சானியா முன்னேற்றம்
TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
🎯NEET Exemption Bill | The central government is asking for an explanation again - Minister M. Subramanian's information
🎯Heated for 10th, 11th, 12th class, college students - 'Desam Kakum Nesa Mission' offered by 'Hindu Tamil Vektik'
🎯The DMK regime is a regime that fosters harmony in art, music and drama: Chief Minister M.K.Stal's speech!
🎯 Chief Minister Stalin released 108 rare devotional texts that were re-edited.
🎯 School Education Minister Anbil Mahesh Poiyamozhi announced that it is necessary to stimulate scientific interest in students
🎯Drone, satellite lab in government school: Launched for the first time in Tamil Nadu
🎯 Free belt for 51,900 families: Prime Minister's program in Guinness book.
🎯 Jagdeep Dhankar visited the new residence of the Vice President
🎯 Martyrs' Day: New Govt Order
🎯 Appointment of 71000 people in central government today; Prime Minister presents today.
🎯Proceeds to declare Ram Bridge as a National Ancient Symbol - Center Govt informs Supreme Court
🎯Rahul Dravid's son Anve Dravid appointed as Under 14 Karnataka team captain
🎯Hockey World Cup 2023 | India beat Wales: Akashdeep Asthal
🎯Minister Udayanidhi Stalin went to Odisha to watch the 15th World Cup hockey match..!
🎯Australian Open Tennis 3rd round Garcia: Sania progress
🌸இனிய காலை வணக்கம் ....✍
இரா . மணிகண்டன் ( முதுகலை தமிழ் ஆசிரியர்)
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.
No comments:
Post a Comment