பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮நாள் : 03.01.2023. செவ்வாய்க்கிழமை.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
திருக்குறள்: அதிகாரம்: வாய்மை
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்.
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀
ஒருவன் தன் உள்ளம் அறியப் பொய் இல்லாமல் நடப்பானானால் அத்தகையவன் உலகத்தாரின் உள்ளங்களில் எல்லாம் இருப்பவனாவான்.
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
1.. "தண்ணீர் தண்ணீர்" எனும் நாடக நூலின் ஆசிரியர் யார்?
*விடை* : கோமல் சுவாமிநாதன்
2. கம்பராமாயணத்தில் உத்தரகாண்டத்தைப் பாடியவர் யார்?
*விடை* : ஒட்டக்கூத்தர்
3. "ஆத்திச்சூடி வெண்பா" நூலை இயற்றியவர் யார்?
*விடை* : அசலாம்பிகையார்
4. "பராபரக் கண்ணி" - பாடியவர் யார்?
*விடை* : தாயுமாணவர்
5. "புத்தரது ஆதிவேதம்" - என்ற நூலை எழுதியவர் யார்?
*விடை* : அயோத்தி தாசர்
பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🌹 All covt, all loss
🌹பேராசை பெரு நஷ்டம்
🌷 Art is long and life is short
🌷 கல்வி கரையில, கற்பவை நாள் சில
இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
காலமறிதலும், கடின உழைப்பும் வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.
🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து குறித்த நேரத்தில் எனது பணிகளை செய்வேன்.
" உழைப்பே உயர்வு தரும்" என்ற பழமொழிக்கேற்ப கடுமையாக உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்.
நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁
கோடாரி உத்தி
மரம் வெட்டும் வேலை பார்க்கும் ஒரு தொழிலாளி அந்த நிறுவனத்தின் முதலாளியைப் பார்க்கப் போனான். ""என்ன வேண்டும்?'' என்று அவர் கேட்டார். ""எனக்கு நியாயம் வேண்டும்'' என்றான் தொழிலாளி. ""ஏன் உனக்கு அநீதி இழைக்கப்படுகிறதா?'' என முதலாளி கேட்டார். ""ஆமாம். 5 ஆண்டுகளாக நான் இங்கே மரம் வெட்டிக் கொண்டிருக்கிறேன். ஆனால் நான் வாங்கும் சம்பளத்தைவிட 2 மடங்கு சம்பளத்தை 6 மாதத்திற்கு முன்பு வந்த ஒரு தொழிலாளிக்குக் கொடுத்திருக்கிறீர்கள். இது என்ன நியாயம்?'' என்று கேட்டான். ""அவன் ஒரு நாளில் நிறைய மரம் வெட்டுகிறான். உன்னால் அப்படி வெட்ட முடியவில்லை. நாங்கள் வேலைத் திறத்தையே பார்க்கிறோம். வேலை செய்த ஆண்டுகளை அல்ல. நீயும் நிறைய மரம் வெட்டு. சம்பளம் தருகிறோம்'' என்றார் முதலாளி. ""எப்படி நிறைய மரம் வெட்டுவது? என்ன முயன்றாலும் முடியவில்லையே'' என்றான் தொழிலாளி. ""நீ புதிதாக வந்த தொழிலாளியைப் பார். எப்படி அதிக மரம் வெட்டுவது என்று அவனை கேள்'' என்றார் முதலாளி. முதலாளியின் ஆலோசனையை ஏற்று அந்த பழைய தொழிலாளி, புதிய முதலாளியை சந்தித்தான். என்னால் அதிக மரங்களை வெட்ட முடியவில்லை. உன்னால் எப்படி முடிகிறது? அந்த ரகசியத்தை எனக்குச் சொல்வாயா? என்று பழைய தொழிலாளி கேட்டான். இதில் ரகசியம் ஒன்றும் இல்லை. ஒவ்வொரு மரத்தை வெட்டிய பிறகும் நான் 2 நிமிடம் வேலையை நிறுத்துகிறேன். அப்போது மரம் வெட்டும் கோடாரியை நான் கூர்மைப்படுத்திக் கொள்கிறேன். அதற்குப் பின் அடுத்த மரத்தை வெட்டப் போகிறேன் என்று பதில் சொன்னான் புதிய தொழிலாளி. பழைய தொழிலாளியும் அப்படியே செய்தான். நிறைய மரங்களை வெட்டினான். நிறைய சம்பளம் பெற்றான்.
நீதி: எந்தத் தொழிலை நீங்கள் செய்கிறீர்களோ அதற்காக புதிய உத்திகளுடன் உங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🎯பொங்கல் பரிசு தொகுப்புக்கு இன்று முதல் `டோக்கன்' விநியோகம் - ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று வழங்குவர்
🎯ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசுத் தொகையை அட்டைதாரரின் வங்கி கணக்கில் செலுத்தாதது ஏன்? - உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்
🎯தமிழகம் முழுவதும் ஜனவரி 4-ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்: பொது சுகாதாரத்துறை இயக்குநர் தகவல்
🎯மின் வருவாயை பெருக்க கூடுதல் பிரிவு அலுவலகங்கள் - தமிழக மின்வாரியம் நடவடிக்கை
🎯சர்வதேச புத்தக கண்காட்சி தமிழ்நாடு பாடநூல் கழகத்துக்கு ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு: தமிழக அரசு உத்தரவு
🎯தொடர் விடுமுறை வருவதால் 12ம் தேதி முதல் பொங்கலுக்கு சிறப்பு பஸ்கள்: அதிகாரிகளுடன் அமைச்சர் நாளை ஆலோசனை
🎯ஜி20 தலைமை பொறுப்பில் பன்முகத்தன்மையை பறைசாற்றுவோம் - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நம்பிக்கை
🎯நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஆன்லைன் விளையாட்டின் வரைவு விதிகள் வெளியீடு: வரும் 17ம் தேதி வரை மக்கள் கருத்து கூறலாம்
🎯உலகப் பொருளாதாரம் இந்தாண்டு மந்தநிலையில் இருக்கும்: ஐஎம்எப் எச்சரிக்கை
🎯கொரோனாவுக்கு உலக அளவில் 6,698,981 பேர் பலி
🎯பாட்மிண்டனில் தங்கம் வென்றார் ரித்விக்
🎯முதல் டி20 போட்டியில் இன்று இந்தியா - இலங்கை பலப்பரீட்சை: இரவு 7.00 மணிக்கு தொடக்கம்
🎯ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: தமிழகம் - மும்பை மோதல்
TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
🎯Token distribution for Pongal gift package from today - ration shop staff will go door to door
🎯Why 1000 rupees Pongal prize amount not paid into cardholder's bank account? - State of Tamil Nadu explanation in High Court
🎯Polio Drip Camp on January 4 across Tamil Nadu: Information from Director of Public Health
🎯Additional divisional offices to increase electricity revenue - Tamil Nadu Power Board action
🎯Allocation of Rs.6 Crores to Tamil Nadu Textbook Association for International Book Fair: Tamil Nadu Govt
🎯Special buses for Pongal from 12th due to continuous holidays: Minister will discuss with officials tomorrow
🎯We will promote diversity in G20 leadership - External Affairs Minister Jaishankar Hope
🎯Draft rules for uniform online game released across the country: People can comment till 17th
🎯World economy will be in recession this year: IMF warning
🎯Corona has killed 6,698,981 people worldwide
🎯 Rithvik won gold in Badminton
🎯First T20 today India vs Sri Lanka Multi Test: 7.00 pm start
🎯Ranji Cup Cricket: Tamil Nadu vs Mumbai Clash
இனிய காலை வணக்கம் ....✍
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.
No comments:
Post a Comment