பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮நாள் : 18/01/2023 திங்கட்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 திருக்குறள்: அதிகாரம் : இன்னாசெய்யாமை
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாணநன்னயஞ் செய்து விடல்.
.
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀
இன்னா செய்தவரைத் தண்டித்தல் அவரே நாணும் படியாக அவருக்கு நல்லுதவி செய்து அவருடைய தீமையையும் நன்மையையும் மறந்து விடுதலாகும்.
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
1.1984-ஆம் ஆண்டு இலவச சத்துணவு திட்டத்தை தமிழ்நாட்டில் ஆரம்பித்து வைத்தவர்?
விடை : எம்.ஜி.ராமச்சந்திரன்
2.தமிழ்த்தாய் சிலை எந்த ஊரில் நிறுவிப்பட உள்ளது?
விடை : மதுரை
3.தமிழக அரசினால் ‘இயல், இசை, நாடக மன்றம்’ என்ற அமைப்பு எப்பொழுது துவக்கப்பட்டது?
விடை : 1955
4. தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை என அழைக்கப்பட்டவர்?
விடை : மறைமலை அடிகள்
5.தமிழ்நாட்டில் அக்மார்க் நிறுவனம் அமைந்துள்ள இடம்?
விடை : விருதுநகர்
பழமொழிகள்🌼🌼🌼🌼🌼🌼🌼
🌷 HUMILITY OFTEN GAINS MORE THAN PRIDE
🌷 அடக்கம் ஆயிரம் பொன் தரும்
🌹HUNGER BREAKS STONE WALLS
🌹 பசி வந்தால் பத்து பறந்து போகும்
இரண்டொழுக்கப் பண்பாடு:🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🌷 முயற்சியும் பயிற்சியும் முன்னேற்றத்திற்கான வழி என்பதை அறிவேன்.
🌷 எனவே ஒவ்வொரு நாளும் முன்னேற்றத்திற்கான பல பயிற்சிகளை செய்து என்றென்றும் வாழ்வில் வெற்றி பெறுவேன்
நீதிக்கதை:🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
.
🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂
மாவீரன் நெப்போலியன்
*************************
#உலகத்தையே ஜெயிக்க நினைத்த பிரான்ஸ் மாவீரன் நெப்போலியன் கடைசி காலத்தில் பிரிட்டனிடம் தோல்வி அடைந்தார்..!!
#தோல்வி அடைந்த நெப்போலியனை பிரிட்டிஷ் ராணுவம் அவரை சிறை பிடித்து ஆப்பிரிக்க தனிச்சிறையில் தனிமையில் வைத்தது..!!
#சிறையில் மன உளைச்சலில் அவரின் கடைசி காலம் கழிந்தது..!!
#அவரை பார்க்க வந்த அவரின் நண்பர் ஒருவ்ர் அவரிடம் ஒரு சதுரங்க அட்டையை கொடுத்து “இது உங்களின் சிந்தனையை செயல்பட வைக்கும் தனிமையை போக்கும்” என்று கூறி அவரிடம் கொடுத்தார்..!!
#ஆனால் சிறை படுத்தி விட்டார்களே என்ற மன உளைச்சலில் இருந்த மாவீரனுக்கு சிந்தனை செயல்படாமல் அதன் மீது கவன்ம் போகவில்லை..!!
#சிறிது காலத்தில் இறந்தும் போனார்..!!
#பிற்காலத்தில் பிரான்ஸ் அருங்காட்சியகம் மாவீரன் நெப்போலியனிடம் இருந்த சதுரங்க அட்டையை ஏலம் விட அதை ஆய்வு செய்த போது அந்த அட்டையின் நடு பக்கத்தில் சிறிய அளவில் ஒரு குறீப்பு இருந்தது..!!
#அதில் அந்த சிறைச்சாலையில் இருந்து தப்பிப்பதற்க்கான வழியை அந்த குறீப்பு சொல்லி இருந்தது..!!
#ஆனால் அவரின் மன உளைச்சலும்..பதட்டமும் அவரின் சிந்தனையை செயல்படாமல் ஆக்கி வைத்து அவரின் தப்பிக்கும் வழியை மூடி மறைத்தது..!!
#உறுதியான சிமெண்ட் தரையையும், மரபெட்டியையும் தன் கூர்மையான் பற்களாலும், நகத்தாலும் குடைந்து ஓட்டை போடும் எலி..!!
#அதே மரத்தால் செய்யப்பட்ட எலிப்பொறியில் சிக்கி கொண்டால் அதற்கு ஏற்படும் மன உளைச்சலாலும், பதட்டத்தாலும் அந்த எலி பொறியை உடைக்கும் வழியை விட்டு விட்டு அந்த பொறியின் பின்னால் இருக்கும் கம்பிக்கு முன்னால் பின்னாலும் பதட்டத்துடன் சென்று சிந்தனை செய்யாமல் மனிதர்களிடம் மாட்டிக்கொண்டு விடும்..!!
#மாவீரனுக்கும் சரி..சாதாரண எலிக்கும் சரி..!!
#பதட்டமும் மன உளைச்சலும் அவர்களீன் சிந்தனையை செயல்படாமல் வைத்து முன்னேற்றத்திற்கான வழியை அடைத்து விடுகிறது..!!
🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃
இன்றைய முக்கிய செய்திகள்🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🎯இனி வெயிட்டேஜ் முறை கிடையாது; ஆசிரியர் நியமனத்தில் அரசு அதிரடி முடிவு
🎯தனியார் பள்ளி அட்மிஷன் நன்கொடை வசூலிக்க தடை.
🎯அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்: 26 காளைகளை அடக்கிய வீரருக்கு கார்
🎯மின் இணைப்புடன் ஆன்லைனில் ஆதார் எண் இணைத்தவர் தகவல்கள் அழிந்தன: மீண்டும் இணைக்க அறிவுறுத்தல்
🎯ஒரே நாடு ஒரே தேர்தலை 2024-ல் கொண்டுவர தீவிரம்: மத்திய அரசுக்கு திமுக கடும் எதிர்ப்பு
🎯பொங்கல் பண்டிகை முடிந்து ஊர் திரும்ப வசதியாக இன்று 2,605 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
🎯பிரதமர் நரேந்திர மோடி எழுதிய நூலின் தமிழ் பதிப்பை ஆளுநர் வெளியிட்டார்
🎯குடியரசு தினவிழாவையொட்டி சென்னையில் 12 இடங்களில் போக்குவரத்து மாற்றம்
🎯பொருளாதாரத்தில் இந்தியாவை 5-வது மிகப் பெரிய நாடாக மாற்றியதற்காக பிரதமர் மோடிக்கு பாராட்டு: பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
🎯மாநிலங்களவையில் தமிழக எம்பிக்களின் நடவடிக்கை: முதலிடத்தில் திமுக எம்பி கனிமொழி சோமு
🎯ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை | நெதர்லாந்து அணிக்கு 2-வது வெற்றி
🎯ஆஸி. தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறாத சர்பராஸ் கான் ரஞ்சிக் கோப்பையில் சதம் விளாசி அசத்தல்
TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
🎯 No more weightage system; Govt action decision in teacher appointment
🎯Prohibition on collection of private school admission donation.
🎯Alanganallur Jallikattu Competition inaugurated by Minister Udhayanidhi Stalin: Car for tamer of 26 bulls
🎯Aadhaar data linked online with e-connection lost: instructions for re-linking
🎯Seriousness to bring one country and one election in 2024: DMK strongly opposes the central government
🎯 2,605 special buses are operating today to facilitate return home after Pongal festival
🎯The Governor released the Tamil version of the book written by Prime Minister Narendra Modi
🎯Traffic change at 12 places in Chennai on the occasion of Republic Day
🎯Praise to PM Modi for making India the 5th largest country in terms of economy: Resolution in BJP National Executive Committee meeting
🎯Activity of Tamil Nadu MPs in the State Assembly: DMK MP Kanimozhi Somu tops the list
🎯Men's Hockey World Cup | 2nd win for the Netherlands
🎯 Aussie. Sarbaraz Khan, who was not included in the Indian team for the series, was amazing with a century in the Ranji Trophy
🌸இனிய காலை வணக்கம் ....✍
இரா . மணிகண்டன் ( முதுகலை தமிழ் ஆசிரியர்)
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.
No comments:
Post a Comment