பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮நாள் : 14.12. 2020. புதன்கிழமை.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
திருக்குறள்: அதிகாரம்: இன்னா செய்யாமை.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
இன்னாசெய் தாரை ஒருத்தல் அவர் நாண
நன்னயஞ் செய்து விடல்.
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀
இன்னா செய்தவரை தண்டிப்பதற்கு சரியான வழி , அவர் வெட்கித் தலைகுனியும் படியாக அவருக்கு நன்மை செய்வதுதான்.
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
1. இயற்கை ஓவியம் என அறியப்படும் நூல் ?
விடை : பத்துப்பாட்டு.
2. இயற்கை இன்பக்கலம் என அறியப்படும் நூல்?
விடை : கலித்தொகை.
3. தமிழ் வேதம் என அறியப்படும் நூல்?
விடை : நாலாயிர திவ்ய பிரபந்தம்.
4. குட்டித் தொல்காப்பியம் என்று அறியப்படும் நூல்?
விடை : தொன்னூல் விளக்கம்.
5. குட்டி திருவாசகம் என அறியப்படும் நூல்?
விடை : திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி.
பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🌸 It is easier to destroy than to create
🌸 அழிப்பது சுலபம், ஆக்குவது கடினம்
🌸 It takes two to make quarrel
🌸 இரு கை தட்டினால் தான் ஓசை .
இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
முயற்சியும், தொடர் பயிற்சியும் வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன். 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் தேர்விற்காக கடுமையாக முயற்சி செய்தும் , தொடர்ந்து பல பயிற்சிகளை மேற்கொண்டும் அதிக மதிப்பெண்களை பெறுவதற்கு தன்னை உயர்த்திக் கொள்வேன்.
நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁
சாக்ரடீஸிடம் ஒரு மாணவன் வந்தான். ''ஐயா, மாணவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும்?'' என்று கேட்டான்.
அதற்கு சாக்ரடீஸ், ''மாணவன் என்பவன், கொக்கைப்போல இருக்க வேண்டும். கோழியைப் போல இருக்க வேண்டும். உப்பைப் போல இருக்க வேண்டும். உன்னைப்போல இருக்க வேண்டும்'' என்றார்.
மாணவனுக்கு ஒன்றும் புரியவில்லை. ''கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்'' என்றான்.
''கொக்கு, ஒற்றைக் காலில் நீண்டநேரம் பொறுமையாக நிற்கும். மீன்கள் வந்தவுடன் விரைந்து செயல்பட்டுப் பிடித்துவிடும். அதுபோல, ஒரு மாணவன் சரியான வாய்ப்புக் கிடைக்கும்போது அதைப் பயன்படுத்தி, அரிய செயல்களைச் செய்ய வேண்டும்'' என்றார்.
''கோழியைப்போல இருக்க வேண்டும் என்றீர்களே அதற்கு என்ன அர்த்தம்?'' என்று கேட்டான் மாணவன்.
ஆசிரியர் மாணவர் கதை
''கோழி என்ன செய்யும்? குப்பையைக் கிளறும். ஆனால், அந்தக் குப்பைகளை விட்டுவிட்டு தனக்குத் தேவையான உணவை மட்டும் எடுத்துக்கொள்ளும். அதுபோல, மாணவர்கள் தாம் சந்திக்கும் தீமைகளைத் தூரம் தள்ளி, நன்மைகளை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்'' என்றார் சாக்ரடீஸ்.
''அடுத்தது, உப்பைப்போல இருக்க வேண்டும் என்றீர்களே...''
''ஆமாம். உப்பை எந்த உணவோடு கலக்கினாலும், அது இருக்கிறது என்று கூற முடியும். ஆனால், கலக்கிய உணவில் உப்பு கண்ணுக்குத் தெரியாது. அதன் சுவையை மட்டுமே உணர முடியும். அதுபோல, மாணவர்கள் எந்தத் துறையில் இறங்கினாலும் அதில் சிறப்பான தனித்தன்மையை வெளிப்படுத்தி, தனது மறைவுக்குப் பின்னும் அதை இவர்தான் செய்தார் என்று கூறும்படி விளங்க வேண்டும்'' என்றார்.
''எல்லாம் சரி, உன்னைப் போல இருக்க வேண்டும் என்றீர்களே... அதற்கு என்ன அர்த்தம்?'' என்று கேட்டான்.
''மாணவன் என்பவன் தனக்குள் எழக்கூடிய சந்தேகங்களை, எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் ஆசிரியரிடம் கேட்டுத் தெளிவு பெற வேண்டும். அதற்காகத்தான் உன்னைப்போல இருக்க வேண்டும் எனச் சொன்னேன்'' என்று புன்னகைத்தார் சாக்ரடீஸ்.
அந்த மாணவன் மகிழ்ச்சியுடன் அவரை வணங்கினான்.
இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🎯பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல் இல்லை - மத்திய அமைச்சர் தகவல்
🎯பல்கலை. வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநரை நீக்கும் மசோதா - கேரள சட்டப்பேரவையில் நிறைவேற்றம்
🎯கலை, அறிவியல் படிப்புக்கான பருவத்தேர்வு நடத்தக்கூடாது; கல்லூரிகளுக்கு உத்தரவு
🎯 இன்று அமைச்சராக உதயநிதி ஸ்டாலின்
🎯கலப்பு மணம் புரிந்தவர்களுக்கு பணி முன்னுரிமை நிராகரிப்பு
🎯ரூ.10 லட்சம் கோடி வாராக்கடன் தள்ளுபடி பார்லி.,யில் நிர்மலா சீதாராமன் தகவல்.
🎯‘மத்திய பல்கலை.களில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கான 3,011 பேராசிரியப் பதவிகள் நிரப்பப்படவில்லை’
🎯இந்திய எல்லையில் நிலைமை சீராக உள்ளது: மோதலுக்குப் பிறகு சீனா விளக்கம்
🎯ரூ.20 லட்சம் பரிசுத் தொகையுடன் சென்னை மாரத்தான்
🎯பார்வையற்றோருக்கான டி20 உலகக் கோப்பை | தொடர்ச்சியாக மூன்று போட்டிகளை வென்ற இந்தியா
🎯இந்தியா – வங்கதேசம் டெஸ்டில் இன்று மோதல்
TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
🎯Old pension scheme no longer in force - Union Minister informs
🎯University. Bill to remove Governor from Chancellorship - Passed in Kerala Legislative Assembly
🎯 no term examination for arts and science studies; Order to Colleges
🎯 Udayanidhi Stalin as Minister today
🎯Job priority rejection for people of mixed marriage
🎯 Nirmala Sitharaman's information on Rs. 10 lakh crore loan waiver parley.
🎯'3,011 professorial posts for SC, ST, OBC category unfilled in Central Universities'
🎯Situation stable on Indian border: China explains after standoff
🎯Chennai Marathon with prize money of Rs.20 lakhs
🎯T20 World Cup for the Blind | India won three matches in a row
🎯India-Bangladesh Test clash today
🌸இனிய காலை வணக்கம் ....✍
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🙏🙏🙏🙏
இரா . மணிகண்டன் முகலைத் தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம்-622502
அலைபேசி எண்: 9789334642 .
🌸இனிய காலை வணக்கம் ....✍
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🙏🙏🙏🙏
இரா . மணிகண்டன் முகலைத் தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம்-622502
அலைபேசி எண்: 9789334642 .
No comments:
Post a Comment