பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋
நாள் : 12/01/2023
வியாழக்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 அதிகாரம்🍁🍁🍁
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷.
நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல்.
🌸 பொருள்:
🍀🍀🍀🍀🍀
தீமை பயக்காமல் நன்மையே தருவதானாலும் நடுவு நிலை தவறி உண்டாகும் ஆக்கத்தை அப்போதே கைவிட வேண்டும்.
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
1.சென்னை பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட வருடம்?
விடை : 1857
2.சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தின் மொத்த நீளம்?
விடை : 150 கி.மீ
3.மும்மொழித்திட்டம் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு?
விடை : 1965
4.இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடையாள அட்டை என அழைக்கப்படுவது எது?
விடை : முகப்புரை
5.இந்திய அரசியலமைப்புச்சட்டத்தின் எந்தப் பகுதி குடியுரிமை பற்றி கூறுகிறது?
விடை : பகுதி -2
பழமொழிகள் (பழமொழிகள்) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🌷 நீங்கள் விளையாடும்போது உங்கள் வேலை விளையாடும்போது வேலை செய்யுங்கள்
🌷 காலத்தே பயிர் செய்
🌹 காலம் பொன்
🌹 காலம் பொன் போன்றது
இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🌸 நேர்மையும் உண்மையும் மனிதனை உயர்த்தும் என்பதை அறிவேன்.
🌸எனவே எப்பொழுதும் நேர்மையுடனும் உண்மையுடனும் வாழ்ந்து என்றும் வாழ்வில் வெற்றி பெறுவேன்
நீதிக்கதை: 🍁🍁🍁🍁🍁🍁வறுமை :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
சோம்பலால் வறுமையில் வாடிய ஒருவன் ஒருமகனைச் சந்தித்து, தனது வறுமையைப் போக்கும்படி வேண்டினான்.
அவனது சோம்பலை உணர்ந்த அந்த மகான் அவனுக்கு அதை உணர்த்த ஒரு கதையைக் கூறினார் -
ஒரு மரங்கொத்திப் பறவை, தன் கூறிய அலகால் டொக் டொக்கென்று மரத்தைக் கொத்திக் கொண்டே அந்த மரத்தின் மேல் தாவித் தாவி ஏறியது. அதைப் பார்த்த ஒரு மனிதன், ""மூடப் பறவையே, எதற்காக மரம் முழுவதையும் கொத்திக் கொண்டிருக்கிறாய்? இது வீண் வேலையல்லவா?'' என்று கேட்டான்.
அதற்கு அந்தப் பறவை, ""மனிதனே நான் என் உணவைத் தேடுகிறேன். தேடினால் கிடைக்கும்...'' என்றது.
அவன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, தொடர்ந்து மரத்தைக் கொத்தி, மரத்தில் ஓட்டை போட்டு, அதற்குள் பதுங்கியிருந்த புழுக்களை எடுத்து உண்ண ஆரம்பித்தது.
உணவைச் சாப்பிட்டு முடித்த பிறகு, அந்த மனிதனைப் பார்த்து, ""மனிதனே, நீயும் தேடு... மரத்திலும், மண்ணிலும், நீரிலும் ஏன் எல்லா இடங்களிலும் தேடு. உனக்கும் ஏதாவது கிடைக்கும்'' என்றது.
கதையைச் சொல்லி முடித்த மகான், ""நீயும் இந்தப் பரந்த உலகில் தேடு. உனக்கும் ஏதாவது கிடைக்கும். சோம்பேறியாக இருந்தால் வறுமைதான் கிட்டும்'' என்றார்
இன்றைய முக்கிய செய்திகள் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🎯50 ஆயிரமாவது விவசாயிக்கு இலவச மின் இணைப்பு...
🎯நாளை ரேஷன் கடை உண்டு: பொங்கல் தொகுப்பு கிடைக்கும்
🎯நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் தமிழகம் 3ம் இடம் பிடித்து சாதனை...
🎯பொங்கல் பண்டிகை; நாளை முதல் சிறப்பு பஸ்கள்: 5 பேருந்து நிலையங்களை இணைக்க 340 இணைப்பு பேருந்துகள் இயக்கம்.! போக்குவரத்துத்துறை அறிவிப்பு
🎯ரூ.4,276 கோடி மதிப்பில் உள்நாட்டில் தயாரிக்கப்படும் ஏவுகணைகள் கொள்முதல் - பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்
🎯50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் விண்ணில் தோன்றும் வால் நட்சத்திரம்!
🎯தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அமெரிக்கா முழுவதும் விமான சேவை முடங்கியது
🎯பேரவையில் ஆளுநர் உரையாற்றிய விவகாரம் - ஜனாதிபதியுடன் திமுக பிரதிநிதிகள் இன்று சந்திப்பு
🎯509 சர்வதேச போட்டிகள்... 24,208 ரன்கள்... - ‘இந்திய அணியின் வாத்தி’ ராகுல் திராவிட் பிறந்தநாள் பகிர்வு
🎯கொல்கத்தாவில் இன்று 2வது ஒருநாள் தொடரை வெல்ல இந்தியா முனைப்பு பதிலடி கொடுக்குமா இலங்கை
🎯முதல் இன்னிங்சில் முன்னிலை பெற போராடுகிறது தமிழ்நாடு
இன்றைய ஆங்கிலச் செய்திகள்:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
🎯 Free electricity connection for at least 50 thousand farmers...
🎯 Ration shop available tomorrow: Pongal package available
🎯 Tamil Nadu ranked 3rd in overall development of the country...
🎯 Pongal festival; Special buses from tomorrow: 340 connecting buses to connect 5 bus stations.! Department of Transport Notification
🎯Procurement of indigenously manufactured missiles worth Rs.4,276 crore - Ministry of Defense approves
🎯 Comet appears in the sky after 50 thousand years!
🎯Airline service across the US has been grounded due to a technical glitch
🎯 Matter addressed by the Governor in the Assembly - DMK representatives meeting with the President today
🎯509 Internationals... 24,208 Runs... - 'Indian Duck' Rahul Dravid Birthday Share
🎯Will India retaliate against Sri Lanka to win the 2nd ODI series in Kolkata today?
🎯 Tamil Nadu is struggling to take the lead in the first innings
இனிய காலை வணக்கம் ....✍
இரா . மணிகண்டன் முதுகலை தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர் , புதுக்கோட்டை மாவட்டம்-622 502 அலைபேசி எண் : 9789334642.
No comments:
Post a Comment