Monday, January 9, 2023

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (10-01-2023)

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 10/01/2023      செவ்வாய்க்கிழைமை
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்:  கல்வி 
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

ஒருமைக்கண் தான்னற்ற கல்வி ஒருவற்
கெழுமையும் ஏமாப் புடைத்து.                                                                                                                                                                 
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

ஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் அவனுக்கு ஏழுபிறப்பிறப்பிலும் உதவும் தன்மை உடையது


    
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1.வந்தே மாதரம் பாடலை எழுதியவார்? 

விடை : பங்கிம் சந்திர சட்டர்ஜி

2.புதுக்கோட்டை குடுமியான் மலையில் காணப்படும் கல்வெட்டுகள்? 

விடை : பல்லவர் கால கல்வெட்டுகள்

3.நிக்கல் கிடைக்கும் ஒரே இந்திய மாநிலம் எது ? 

விடை : ஒடிசா

4.காவிரி நதி தமிழ் நாட்டில் நுழையும் இடம் எது ? 

விடை : ஒக்கேனக்கல்

5. மதுரையில் சென்னை உயர்நீதிமன்றக் கிளை எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டது?

விடை : 2004

 பழமொழிகள்
🌼🌼🌼🌼🌼🌼🌼

🌷 A little learning is a dangerous thing
🌷அரைகுறை அறிவு ஆபத்தில் முடியும்.

🌹 Knowledge is power
🌹அறிவே ஆற்றல்.



இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🌷 ஊக்கமும் ஆக்கமும் உயர்வுக்கு வழி என்பதை அறிவேன். 

🌷 எனவே ஒவ்வொரு நாளும் ஊக்கத்தோடு செயல்பட்டு பல புதிய படைப்புகளையும் சாதனைகளையும் செய்து என்றென்றும் வாழ்வில் வெற்றி பெறுவேன்


 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
.
🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂


"நன்மை தீமை இரண்டையும் ஏற்றுக்கொள்"


ஒரு வயதான விவசாயி தன் வயலில் பாடுபட்டு உழைத்து அதில் வரும் சொற்பமான வருமானத்தில் வாழ்ந்துகொண்டிருந்தார். ஒரு நாள் அவர் வளர்த்து வந்த குதிரை காணாமல் போய்விட்டது. தகவலைக் கேள்விப்பட்ட அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள்  "என்ன ஒரு துரதிர்ஷட நிலை?" என்று பரிதாபமாக விசாரித்தனர்.

"இருக்கலாம்" என்று ஒரே வார்த்தையில் அவர்களின் ஆறுதலுக்கு விவசாயி பதிலளித்தார்.

அடுத்த நாள் தொலைந்து போன குதிரை தன்னுடன் மூன்று குதிரைகளை  உடன் அழைத்து வந்தது. இதை ஆச்சர்யமாக பார்த்த அக்கம்பக்கத்தினர், "நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி , இப்போ  நாலு குதிரை உனக்கு கிடைச்சிடுச்சு" என்றனர்.

தனக்குக் கிடைத்த அதிர்ஷ்டத்தைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல்  மறுபடியும் "இருக்கலாம்" என்று கூறி முடித்தார்.

ஒரு வாரத்துக்குப் பிறகு, விவசாயியின் மகன் குதிரையை வேகமாக ஓட்டிச்சென்று தவறுதலாக கீழே விழுந்து காலை உடைத்துக்கொண்டான். "என்னப்பா, உனக்கு ஒரு நல்லது நடந்தா  அடுத்து ஒரு கெட்டது நடக்குதே. உன் பையன் எழுந்து நடக்க  ஆறு மாசத்துக்கும் மேல் ஆகும் போல, ரொம்ப கஷ்டமான நிலைமை" என்று கூறி ஆதங்கப்பட்டனர்.

விவசாயி பெரிதாக வருந்தாமல் "இருக்கலாம்" என்று அதே பதிலைக் கூறினார்.

ஒரே வாரத்தில் நாட்டில் போர் வந்துவிட்டது. வீட்டில் இருக்கும் எல்லா இளைஞர்களும் கட்டாயம் போரில் கலந்துகொள்ள வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது. வீடு வீடாக ராணுவத்தினர் புகுந்து இளைஞர்களை அழைத்துச் சென்றனர். ஆனால், அந்த ஏழை விவசாயியின் மகனுக்குக் கால் உடைந்து இருந்ததால் அவனை மட்டும் அழைத்துச் செல்லவில்லை.

இதைக் கண்டு ஊர் மக்கள் அந்த விவசாயியின் அதிர்ஷ்டத்தைக் கண்டு புகழ்ந்தனர்.

இப்போதும் அந்த விவசாயி " இருக்கலாம்" என்று கூறினார்.

அவர் ஏன் எல்லாச் சூழ்நிலையிலும் ஒரே மாதிரியான சமமான மனநிலையில் இருந்தார் ?
காரணம் உண்டு. 

அந்த விவசாயி வாழ்வின் இயல்புகளைப் புரிந்துகொண்டவர். நாள்களில் நல்ல நாள் , கெட்ட நாள் என்று எதுவும் இல்லை. ஒவ்வொரு நாளும் நமக்கு மறைமுகமாகப் பல பாடங்களை உணர்த்திக்கொண்டிருக்கின்றது. நல்லது கெட்டது இரண்டும் நாணயத்தின் இருபக்கங்கள். கஷ்டமான சூழ்நிலைகளில், இது நிரந்தரம் அல்ல நாளை என்று ஒன்று இருப்பதை மறக்கவேண்டாம்.

சந்தோஷமான சூழ்நிலையில் தலை கால் புரியாமல் ஆடக்கூடாது. யாருக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். எதையும் தலைக்கு எடுத்துச் செல்லாமல், எதைப்பற்றியும் விமர்சிக்காமல் இருப்பது நலம். சுகம் - துக்கம் இவை இரண்டும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை என்பதை உணர்ந்தாலே போதுமானது


🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃


இன்றைய முக்கிய செய்திகள்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯தேசிய வாக்காளர் தினம்: பள்ளி மாணவர்களுக்கு விநாடி-வினா போட்டி

🎯 நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தல்.

🎯 வரும் 13ஆம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர் 

🎯அரசு தயாரித்த உரையை முழுமையாக படிக்காமல் புறக்கணித்த ஆளுநருக்கு எதிராக பேரவையில் தீர்மானம்: சட்டமன்ற மரபுகளை மீறிவிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

🎯 தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக ஏப்ரல் முதல் 442 தாழ்தள பேருந்துகள் என உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்.

🎯புதுமைப் பெண் திட்டம் | மாணவிகளின் எண்ணிக்கை 2 லட்சத்துக்கும் மேல் உயர வாய்ப்பு: ஆளுநர் உரையில் தகவல் 

🎯ஒரே நாளில் 56 லட்சம் பேருக்கு ரூ.1,000 பட்டுவாடா.

🎯 பொங்கல் பண்டிகை ஜனவரி 17 முதல் கோயம்பேட்டில் சிறப்பு சந்தை.

🎯 ஜனவரி இறுதியில் புதிய நாடாளுமன்ற கட்டடப் பணி நிறைவடையும்.

🎯நகரமயமாக்கலால் மண்ணில் புதையும் ஜோஷிமத் நகரம்

🎯வட மாநிலங்களில் கடும் குளிர் 5வது நாளாக மக்கள் பாதிப்பு.

🎯“உலகின் திறமை மிக்க மனித வளத்தின் தலைநகரமாக இந்தியா திகழ்கிறது” என பிரதமர் மோடி கருத்து.

🎯முதல் ஒருநாள் போட்டி, இந்தியா-இலங்கை இன்று பலப்பரீட்சை: பிற்பகல் 1.30க்கு தொடக்கம்

🎯தென் ஆப்ரிக்காவில் உள்ளூர் டி20 தொடர்‘எஸ்ஏ20’ இன்று தொடக்கம் 6 அணிகள் பங்கேற்பு

🎯 இன்று முதல் மலேசியா ஓபன் பாட்மிண்டன் சிந்து பங்கேற்கிறார்.

🎯 ஒருநாள் தொடரிலிருந்து பும்ரா விலகல்.



TODAY'S  ENGLISH NEWS: 
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

🎯National Voter's Day: Second-Quiz Competition for School Students

🎯 Urge to approve the NEET Exemption Bill.

🎯 Legislature session till 13th

🎯Assembly resolution against governor who ignored the speech prepared by the government without reading it in full: CM M.K.Stalin accused of violating legislative traditions

🎯 Govt informs High Court that 442 low-floor buses for differently-abled persons in Tamil Nadu from April.

🎯Innovation Girl Program | The number of girl students is likely to rise above 2 lakh: Governor's speech informs

🎯Rs.1,000 distributed to 56 lakh people in one day.

🎯 Pongal festival special market in Coimbatore from 17th January.

🎯 The new parliament building will be completed by the end of January.

🎯City of Joshimath buried under the soil due to urbanization

🎯 Severe cold has affected people for the 5th day in northern states.

🎯 Prime Minister Modi's opinion that "India is the capital of talented human resources of the world".

🎯First ODI, India-Sri Lanka Today Multi Test: 1.30 pm start

🎯Local T20 series 'SA20' in South Africa starts today with 6 teams participating

🎯 Sindhu will participate in Malaysia Open Badminton from today.

🎯 Bumrah withdrawal from ODI series.






🌸இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் ( முதுகலை தமிழ் ஆசிரியர்)
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.

No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...