பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮நாள் : 13.01. 2023. வெள்ளிக்கிழமை
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
திருக்குறள்: அதிகாரம்: பயனில சொல்லாமை.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல்
மக்கட் பதடி யெனல்.
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀
பயனில்லாத சொற்களைப் பலமுறையும் சொல்லுகின்ற ஒருவனை மனிதன் என்று சொல்லக்கூடாது. மக்களுள் பதர் என்று சொல்லவேண்டும்.
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
1. விக்கிரமாதித்யன் என்ற பட்டப் பெயர் உடைய மன்னர்?
விடை : சமுத்திரகுப்தர்.
2.இந்திய பாராளுமன்றத்தில் " இந்திய குடியுரிமைச் சட்டம்" இயற்றப்பட்ட ஆண்டு?
விடை : 1947.
3 ) கல்லில் வடித்த காவியம் என்று அழைக்கப்படுவது?
விடை : மோதி மசூதி
4. பாண்டியர்களின் ஓவியக்கலை வளர்ச்சியை பறைசாற்றுவது?
விடை : சித்தன்னவாசல்
5. இந்தியாவின் நீளமான அணை எது?
விடை : ஹிராகுட் அணை.
பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🌸Good beginning makes a good ending
🌸 நல்ல தொடக்கம் நல்ல முடிவைத் தரும்
🌸 Man proposes ; God disposes
🌸 தான் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும்.
இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
காலமறிதலும், கடின உழைப்பும் வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.
🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து குறித்த நேரத்தில் எனது பணிகளை செய்வேன்.
" உழைப்பே உயர்வு தரும்" என்ற பழமொழிக்கேற்ப கடுமையாக உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்.
நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
எவ்வளவு வெயிட்?
-----------------------------
வாத்தியார் வகுப்பறைக்குள் நுழைந்தார்.
மேஜை மீதிருந்த கண்ணாடி டம்ப்ளரை எடுத்து தூக்கிக் காட்டினார்.
“இது எவ்வளவு வெயிட் இருக்கும்?”
100 கிராம், 50 கிராம் என்று மாணவர்கள் ஆளாளுக்கு ஒரு எடையை சொன்னார்கள்.
“இதோட சரியான எடை எனக்கும் தெரியாது. ஆனா என்னோட கேள்வி அதுவல்ல”
வாத்தியார் தொடர்ந்தார். “இதை அப்படியே நான் கையிலே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா என்ன ஆகும்?”
“ஒண்ணுமே ஆகாது சார்”
”வெரிகுட். ஆனா ஒரு மணி நேரம் இப்படியே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா…?”
“உங்க கை வலிக்கும் சார்”
“ஒருநாள் முழுக்க இப்படியே வெச்சிருந்தேன்னா…”
“உங்க கை அப்படியே மரத்துடும் சார்”
“வெரி வெரி குட். ஒரு மணி நேரத்துலே என் கை வலிக்கறதுக்கும், ஒரு நாளிலே மரத்துப் போகிற அளவுக்கு மாறுறதுக்கு இந்த தம்ப்ளரோட வெயிட் கூடிக்கிட்டே போகுமா என்ன?”
“இல்லை சார். அது வந்து…”
“எனக்கு கை வலிக்காம, மரத்துடாம ஆகணும்னா நான் என்ன பண்ணனும்?”
“கிளாஸை உடனே கீழே வெச்சுடணும் சார்”
”எக்ஸாக்ட்லி. இந்த கிளாஸ்தான் பிரச்சினை. ஒரு பிரச்சினை நமக்கு வந்ததுன்னா அதை அப்படியே மண்டைக்கு ஏத்தி ஒரு மணி நேரம் வெச்சிருந்தோம்னா வலிக்க ஆரம்பிக்கும். ஒரு நாள் முழுக்க அப்படியே வெச்சிருந்தா மூளை செயலிழந்து மரத்துடும். அதனாலே உங்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்துடிச்சின்னா தூக்கி ஒரு ஓரமா கடாசிடுங்க. அதுவே சரியாயிடும். சரியா?”
# இது தான் மனவியல் ரீதியிலான தீர்வு.
இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🎯மாணவர்கள் கலைத் திறனை வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டும் - பள்ளிக்கல்வித் துறை விழாவில் முதல்வர் அறிவுறுத்தல்
🎯பள்ளி, கல்லூரிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை.
🎯போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ.7 கோடி ஊக்கத் தொகை - தமிழக அரசு அறிவிப்பு
🎯சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம் | முழு விவரம்
🎯மதுரையில் ஏப்.1 முதல் 24 மணி நேர விமான சேவை: விமான போக்குவரத்துத் துறை நடவடிக்கை
🎯பெண்களுக்கான கட்டணம் இல்லாத பேருந்து திட்டத்தில் தினசரி 40 லட்சம் பயணங்கள்: அமைச்சர் சிவசங்கர்
🎯ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை டெல்லி பயணம்
🎯சட்டசபை கூட்டம் இன்று நிறைவு...
🎯மைனஸ் 4 டிகிரி செல்ஷியஸ் :வட மாநிலங்களுக்கு எச்சரிக்கை...
🎯இளைஞர்கள் தான் நாட்டின் உந்து சக்தி: பெங்களூரு விழாவில் பிரதமர் மோடி பேச்சு
🎯இந்தியாவில் 4வது முறையாக உலக கோப்பை ஹாக்கி: ஒடிஷாவில் இன்று ஆரம்பம்
🎯2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி தொடரை வென்றது இந்தியா
🎯உலகக் கோப்பை கபடி போட்டியை தமிழகத்தில் நடத்த நடவடிக்கை - சட்டப்பேரவையில் அமைச்சர் உதயநிதி தகவல்
TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
.
🎯Students should pursue artistic skills throughout life - Principal instructs at School Education Department function
🎯 4 days holiday for schools and colleges.
🎯Incentive amount of Rs.7 crore for transport employees - Tamil Nadu Government announcement
🎯Sethu Samudra Project should be implemented: Pass resolution in Legislative Assembly Full details
🎯24-hour flight service in Madurai from April 1: Civil Aviation Department action
🎯40 lakh daily trips under fare-free bus scheme for women: Minister Sivashankar
Governor RN Ravi will visit Delhi tomorrow
🎯Assembly meeting ends today...
🎯Minus 4 degrees Celsius: Warning for northern states...
🎯Youth is the driving force of the country: PM Modi's speech at Bengaluru function
🎯4th Hockey World Cup in India: Starts today in Odisha
🎯India won the series in the 2nd ODI
🎯Proceeds to hold World Cup Kabaddi Tournament in Tamil Nadu - Minister Udayanidhi informed in Legislative Assembly
🌸இனிய காலை வணக்கம் ....✍
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
வலையூர்
திருச்சி மாவட்டம் - 621005
அலைபேசி எண் : 9789334642.
No comments:
Post a Comment