Sunday, January 22, 2023

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (23-01-2023)

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 23/01/2023         திங்கட்கிழமை 
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: ஒப்புரவு அறிதல்
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷.

தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.


🌸 பொருள்:
🍀🍀🍀🍀🍀
.       ஒப்புரவாளன் தன்னால் இயன்ற முயற்சி செய்து சேர்த்த பொருள் எல்லாம் தக்கவர்க்கு உதவி செய்தற்கு.

   
   
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 

1.இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில்  காங்கிரஸின் மிதவாதத் தலைவர் என குறிப்பிடப்படுபவர் யார்?

விடை : கோபால கிருஷ்ண கோகலே

2.‘இந்தியாவின் மகாசாசனம்” என்று அழைக்கப்படுவது எது?

விடை : பகுதி III

3.பேச்சுரிமை மற்றும் கருத்து வெளியிடும் உரிமை, ஒன்று கூடும் உரிமை, அமைப்பை உருவாக்கும் உரிமை ஆகிய உரிமைகள் எந்த சரத்தின் கீழ் பாதுகாக்கப்படுகிறது?

விடை : சரத்து 19

4.கல்வியுரிமையானது ஒரு அடிப்படை உரிமையாக ___வது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தின் மூலமாக உறுதியளிக்கப்பட்டுள்ளது.?

விடை : 86-வது

5.குடவோலை முறை பற்றிய விவரங்கள் கொண்ட கல்வெட்டு எந்த இடத்தில் உள்ளது?

விடை : உத்திரமேரூர்




பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌷 A little learning is a dangerous thing
🌷 அரைகுறை படிப்பு ஆபத்தானது

🌹 A little stream will run a light mill.
🌹 சிறு துரும்பும் பல் குத்த உதவும்.



 இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

    🌸 நேர்மையும் உண்மையும் மனிதனை உயர்த்தும் என்பதை அறிவேன்.

     🌸எனவே எப்பொழுதும் நேர்மையுடனும் உண்மையுடனும் வாழ்ந்து என்றும் வாழ்வில் வெற்றி பெறுவேன்



 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁

 *தைரியமும் தன்னம்பிக்கையும் தான் வாழ்க்கைக்கு உரம்*

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

  500 ரூபாய்


200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளார் ஒரு 500 ரூபாய் நோட்டைக் காட்டி

” யாருக்கு இது பிடிக்கும்?” எனக் கேட்டார்.


... கூடியிருந்த அனவரும் தனக்கு பிடிக்குமென கையை தூக்கினர்.


பேச்சாளார் “உங்களில் ஒருவருக்கு இந்த 500 ரூபாயைத் தருகிறேன் ஆனால் அதற்கு முன்” என சொல்லி

அந்த 500 ரூபாயைக் கசக்கி சுருட்டினார். பிறகு அதை சரி செய்து

“இப்போதும் இதன் மீது உங்களுக்கு இன்னும் விருப்பம் இருக்கிறதா?” என்றார்கள்.

அனைவரும் கையைத் தூக்கினர்.


அவர் அந்த ரூபாய் நோட்டை தரையில் போட்டு காலால் நசுக்கி அந்த அழுக்கான நோட்டை காட்டி

“இன்னும் இதன் மேல் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா? என்றார்

அனைவரும் இப்போதும் கைகளை தூக்கினர்.


அவர் தொடர்ந்தார் “கேவலம் ஒரு 500 ரூபாய் தாள் பல முறை கசங்கியும் மிதிப்பட்டும் அழுக்கடைந்தும்

அதன் மதிப்பை இழக்கவில்லை. ஆனால் மனிதர்களாகிய நாம் அவமானப் படும் போதும் ,

தோல்விகளை சந்திக்கும் போதும் மனமுடைந்து போய் நம்மை நாமே தாழ்த்தி கொள்கிறோம் .

நம்முடைய மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. நீங்கள் தனித்துவமானவர்.


இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித் தன்மை இருக்கும்.

அதன் மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. வாழ்கை என்ற பயிர்க்கு

தைரியமும் தன்னம்பிக்கையும் தான் உரமும் பூச்சிக்கொள்ளிகளும்.

ஆகையால் தன்னம்பிக்கையை இழக்காமல் வாழுங்க


    இன்றைய முக்கிய செய்திகள்
    🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

    🎯குடியரசு தினத்தன்று நடைபெற உள்ள கிராமசபையில் விவாதிக்க வேண்டியது என்ன? - தமிழக அரசு விரிவான வழிகாட்டுதல் வெளியீடு

    🎯2,000 மெகாவாட் திறனில் 3 நீர்மின் நிலையம் அமைக்க மின்சார வாரியம் திட்டம்

    🎯இருமொழிக்கொள்கைதான் வேண்டும் மாநிலங்களே கல்விக்கொள்கை தயாரிப்பதுதான் சிறப்பு: அமைச்சர் பொன்முடி பேட்டி

    🎯நீட் தேர்வு குறித்த விளக்கம் அனுப்புகிறது தமிழக அரசு

    🎯 பல்நோக்கு மருத்துவமனையை பசுமைக் கட்டிடமாக உருவாக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உங்கள் ஸ்டாலின் உத்தரவு

    🎯 தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு.

    🎯அரசுப் பள்ளிகள் உலகின் சிறந்த பள்ளிகளாக மாறணும் : கெஜ்ரி., ‛ ஆசை

    🎯21 தீவுகளுக்கு நாளை பெயர்சூட்டும் விழா - பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்களை வைக்கிறார் பிரதமர் மோடி

    🎯பல்வேறு பிரிவுகளின் கீழ் சாதனை புரிந்த 11 குழந்தைகளுக்கு நாளை பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருதை வழங்குகிறார் குடியரசுத் தலைவர்!

    🎯போட்டித் தேர்வு வடிவமைப்போர் பட்டியல் வெளியானதால் சர்ச்சை

    🎯ஹாக்கி உலகக் கோப்பை 2023 தொடரில் இருந்து வெளியேறியது இந்தியா

    🎯இந்தியா ஓபன் பேட்மின்டன் ஆன் செயாங் சாம்பியன்

    🎯யு-19 உலக கோப்பை இலங்கை அணியை வீழ்த்தியது இந்தியா







    TODAY'S ENGLISH NEWS: 

    🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

    🎯What should be discussed in the Gram Sabha to be held on Republic Day? - Publication of detailed guidelines by the Government of Tamil Nadu

    🎯Electricity Board plans to set up 3 hydropower plants of 2,000 MW capacity

    🎯 Bilingual policy is the only thing that is special about the preparation of education policy by the states: Minister Ponmudi interview

    🎯Tamil Nadu government is sending explanation about NEET exam

    🎯 Your Stalin orders the authorities to make the multi-purpose hospital a green building

    🎯 Chance of rain in coastal districts of Tamil Nadu today.

    🎯Government schools should become the best schools in the world: Kejri., ‛ Desire

    🎯Naming ceremony for 21 islands tomorrow - PM Modi names Paramvir Chakra awardees

    🎯The President will present the Pradhan Mantri Rashtriya Pal Puraskar Award to 11 children who have achieved achievements under various categories tomorrow!

    🎯 Controversy due to the publication of the list of competitive exam designers

    🎯India pulled out of Hockey World Cup 2023 series

    🎯India Open Badminton Ann Cheung Champion

    🎯India beat Sri Lanka in U-19 World Cup












    இனிய காலை வணக்கம் ....✍       
               
    இரா . மணிகண்டன்  முதுகலை தமிழ் ஆசிரியர்
    அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
    கீரனூர் , புதுக்கோட்டை மாவட்டம்-622 502
     
    அலைபேசி எண் : 9789334642.

    No comments:

    Post a Comment

    தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

      தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...