Wednesday, August 30, 2023

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (31-08-2023)

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 31/08/2023         வியாழக்கிழமை
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: ஊக்கமுடைமை
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷. 
   
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு.                                                              

                                                                  🌸 பொருள்:
🍀🍀🍀🍀🍀

      நீர்ப்பூக்களின் தாளின் நீளம் அவை நின்ற நீரின் அளவினவாகும், மக்களின் ஊக்கத்தை அளவினதாகும் வாழ்க்கையின் உயர்வு.
   


🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 

1.அசோகர் அரியணை ஏறிய ஆண்டு? 

விடை : கி.மு.273

2.வங்கப் பிரிவினை மற்றும் சுதேசி இயக்கம் நடைப்பெற்ற ஆண்டு?
 
விடை :  1905 

3.எண்ணிலடங்கா புள்ளிகளின் தொகுப்பை ________________ என்கிறோம்? 

விடை : கோடு 

4.திடப்பொருள் நேரடியாக வாயு நிலைக்கு மாறும் நிகழ்ச்சி? 

விடை : பதங்கமாதல்


5.NOKIA-ன் தலைமையகம் உள்ள நாடு?

விடை : ஃபின்லாந்து



பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌷Blood is thicker than water
🌷தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும். 


🌹What won’t bend at five will not bend at fifty 
🌹ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது


 இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

    🌸மனமும் அறிவும் மனிதனுக்கு அழகு என்பதை அறிவேன்.

     🌸எனவே தன்மான உணர்வையும், அறிவையும் நல்வழியில் நெறிப்படுத்தி என்றும் வாழ்வில் வெற்றி பெறுவேன்



 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁

#ஒரு நாள் ஒரு விவசாயி தன் கையில் கட்டியிருந்த கைக்கடிகாரத்தை மோட்டார் கொட்டகையில் தொலைத்து விட்டார்.


அது அவரது திருமணத்தின் போது மனைவி அவருக்கு ஆசையாக பரிசளித்த கைக்கடிகாரம். அவர் அந்த இடத்தை சுற்றி தேடி பார்த்துவிட்டார். அவருக்கு அந்த கைக்கடிகாரம் கிடைக்கவில்லை.


நிலத்தில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டு இருந்தனர். அவர்களை அழைத்து, "என் கைகடிகாரம் தொலைந்துவிட்டது. அதை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு நல்ல பரிசு ஒன்று கொடுப்பேன்" என்றார்.


சிறுவர்கள் ஆர்வமுடன் மோட்டார் கொட்டகைக்குள் சென்று தேட ஆரம்பித்தனர்.


சிறிது நேரத்தில் அவர்கள் வெளியே வந்து, "எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை" என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டனர்.


ஒரு சிறுவன் மட்டும் மீண்டும் வந்து, "எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடுங்கள். நான் தேடி தருகிறேன்" என்றான்.


விவசாயியும், "சரி! நீ போய் தேடிப்பார்" என்றார்.


மோட்டார் கொட்டகைக்குள் சென்ற சிறுவன் சிறிது நேரத்தில் கைகடிகாரத்துடன் வெளியே வந்தான்.


அதை பார்த்த விவசாயி ஆச்சரியத்துடன், "எப்படி உன்னால் மட்டும் கண்டுபிடிக்க முடிந்தது?" என்று கேட்டார்.


"நான் உள்ளே சென்று தரையில் அமைதியாக உட்கார்ந்து காதுகளை கூர்மையாக்கி கேட்டேன். எந்த திசையில் இருந்து டிக் டிக் சத்தம் வருகிறது என்று. பிறகு சுலபமாக கண்டுபிடித்து எடுத்து வந்தேன்" என்றான்.


நீதி: #அமைதியானமனநிலையில்எந்தஒருகாரியத்தைசெய்தாலும்அதுவெற்றிகரமாகமுடியும்....


#மனதைசாந்தப்படுத்தபழகிக்கொள்ளுங்கள்_வாழும்காலத்தைவரமாக்கிக்கொள்ளுங்கள்...


இன்றைய முக்கிய செய்திகள்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯 தமிழகத்தில் 25க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டணம் உயர்கிறது.

🎯 சூரியனின் வெளிப்புற பகுதியை ஆராய அனுப்பப்படும் ஆதித்யா விண்கலத்தின் ஏவுதல் ஒத்திகை வெற்றி.

🎯 உலகக் கோப்பை செஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம். பிரக்ஞானந்தாவுக்கு பிரம்மாண்ட வரவேற்பு. முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூம் 30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார்.

🎯 'இண்டியா' கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் இன்று மும்பை பயணம். முக்கிய முடிவுகள் தொடர்பாக பேசுகிறார் ‌.

🎯 பள்ளி காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு செப்டம்பர் 15 முதல் 27 வரை நடைபெறும்.

🎯 செப்டம்பர் பத்தில் 'நான் முதல்வன்' மதிப்பீட்டு தேர்வு நுழைவுச்சீட்டு இணையதளத்தில் வெளியீடு.

🎯 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.

🎯 பஞ்சப்பூரில் ரூ.162 கோடியில் மொத்த காய்கறி சந்தை அமைக்க திட்ட அறிக்கை தயார். திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் மேயர் மு. அன்பழகன் தகவல்.

🎯 போக்சோ கமிட்டி குழுவினருடன் காவல் ஆணையர் ஆலோசனை.

🎯 வெப்பமயமாதல் இல்லாத எரிபொருளை உருவாக்குவதில் இந்தியா முதலிடம் வகிக்கும் என விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை நம்பிக்கை.

🎯 பள்ளி குழந்தைகளுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடினார் பிரதமர் நரேந்திர மோடி.

🎯 புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் அரசு பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடிய ஆட்சியர்.

🎯 நிலவில் லேண்டெர் கலனை படம்பிடித்தது ரோவர் வாகனம். இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என அறிவியல் ஆர்வலர்கள் கருத்து. ரோவர் வாகனம் தன்னிடம் உள்ள நேவிகேஷன் கேமரா மூலம் லேண்டரை நேற்று காலை 7:35 மணி அளவில் படம் பிடித்து புவிக்கு அனுப்பி உள்ளது.

🎯 மத்திய அரசின் கட்டண குறிப்புடன் மாநில அரசு மானியம் இணைகிறது. புதுவையில் சிவப்பு ரேஷன் கார்டுக்கு கேஸ் சிலிண்டர் விலை ரூ.500 வரை குறைகிறது. மஞ்சள் அட்டைதாரர்களுக்கு ரூ.350 குறையும்.

🎯 கர்நாடகாவில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கும் திட்டத்தை தொடங்கினார் ராகுல். 100 நாள் ஆட்சியில் 5 கோரிக்கைகளையும் நிறைவேற்றி விட்டதாக பெருமிதம்.

🎯 ஐவர் ஹாக்கியில் இந்திய அணி அபார வெற்றி.

🎯 எம் சி சி முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி. ஐஓசி ரயில்வே ஆட்டம் டிரா.

🎯 அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினால் கார்லோஸ் அல்கரஸ்.

🎯 முன்னணி வீரர்கள் காயங்களால் சிக்கித் தவிக்கும் இலங்கை வங்கதேசம் அணிகள் இன்று மோதல்.

🎯 ஆசியக் கோப்பை கிரிக்கெட் இப்திகார் அகமது, பாபர் அஸம் சதம் விலாசல்.




TODAY'S ENGLISH NEWS: 

🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

🎯 Karnataka starts releasing water on Kaveri water management authority directives.

🎯 China doubles down on new map, tells India to keep calm and not to over interpret.

🎯 Aadhaar- based payment plan for Mahatma Gandhi National rural employment guarantee scheme put off again.

🎯 Chandrayaan-3 missions Vikram lander as captured by the navigation camera aboard Pragyan rover on Wednesday.

🎯 Water level in mettur dam stands at 50.675 feet.

🎯 Project cost of integrated vegetable market complex at panjapur revised.

🎯 Former chief economic advisor head new panel to study IGST related issues.

🎯 Karnataka government launches gruha Lakshmi scheme.

🎯 Chief Minister gives 30 laks check to Praggnanandha.

🎯 Aadhaar- based weg payment plan put off.

🎯 Australian government reviews children's custody after death of Indian origin mother.

🎯 PM should speak on Chinese incursions says Rahul Gandhi.

🎯 Sumooth operation of 'LAM' critical to Aditya L1 success.

🎯 Coronagraph of Aditya L1 will send 1440 images of sun.

🎯 G20 mast help deal with glaring in inequities revealed by the pandemic, says WHO envoy.

🎯 Teenage sensation Praggnanandha the toast of Chennai.

🎯 Babar and Iftikhar lead Pakistan annihilation of Nepal in opener.

🎯Gauff powers past Andreeva; no sweat for Alcatraz.














இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன்  முதுகலை தமிழ் ஆசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
கோவில்பட்டி
திருச்சிராப்பள்ளி மாவட்டம்-621305.
 
அலைபேசி எண் : 9789334642.

No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...